இறைவனின் சித்தத்தின்படி கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாயிருக்கும்படி அழைக்கப்பட்ட பவுலும், நமது சகோதரனாகிய சொஸ்தெனேயும் எழுதுகிறதாவது, ரோம 1:1எபே 1:12 கொரி 1:1அப் 18:17அப் 22:21கொலோ 1:11 கொரி 9:1-21 தீமோ 1:1
கொரிந்துவில் இருக்கும் இறைவனுடைய திருச்சபைக்கு, கிறிஸ்து இயேசுவில் பரிசுத்தமாக்கப்பட்டும் பரிசுத்தமாயிருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிற அனைவருக்கும், உங்களுக்கும் எங்களுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரைச் சொல்லி ஒன்றிணைந்து எல்லா இடங்களிலும் ஆராதிக்கிற அனைவருக்கும் எழுதுகிறதாவது: ரோம 1:71 கொரி 6:9-111 கொரி 1:30அப் 26:181 பேது 1:15-161 தெச 4:7எபி 13:122 கொரி 4:5
நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. ரோம 1:71 பேது 1:22 கொரி 1:2எபே 1:2
நன்றி செலுத்துதல்
கிறிஸ்து இயேசுவில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின் காரணமாக, நான் எப்பொழுதும் உங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ரோம 1:8யோவா 14:261 தீமோ 1:14யோவா 14:14யோவா 14:16யோவா 15:26ரோம 6:171 கொரி 1:3 நீங்கள் கிறிஸ்துவுக்குள் எல்லாவிதத்திலும், எல்லாப் பேச்சுத்திறனிலும், எல்லா அறிவிலும், எல்லாவகையிலும் செல்வச் சிறப்புடையவர்களாய் விளங்குகிறீர்கள். 2 கொரி 9:112 கொரி 8:7கொலோ 2:3பிலி 1:9ரோம 15:141 கொரி 12:8யாக் 3:132 பேது 3:18 ஏனெனில், கிறிஸ்துவைப்பற்றிய எங்களுடைய சாட்சி உங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2 தீமோ 1:8வெளி 1:21 தீமோ 2:61 கொரி 2:1-22 கொரி 12:12அப் 20:24வெளி 19:10ரோம 15:19 ஆகவே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் நீங்கள், ஆவிக்குரிய வரம் யாதொன்றிலும் குறைவுபடாதிருக்கிறீர்கள். பிலி 3:202 பேது 3:121 யோவா 3:2எபி 9:281 பேது 4:13யூதா 1:21லூக் 17:30ரோம 8:19 இறைவன் கடைசிமட்டும் உங்களைப் பலமுள்ளவர்களாய்க் காத்துக்கொள்வார். அதனால் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து திரும்பவரும் நாளில், நீங்கள் எந்தவித குற்றமும் சாட்டப்படாதவர்களாய் இருப்பீர்கள். 1 தெச 5:23-241 தெச 3:13கொலோ 1:22பிலி 1:6யூதா 1:24-252 தெச 3:3எபே 5:27ரோம 16:25 தமது மகனும், நமது கர்த்தருமாகிய இயேசுகிறிஸ்துவுடன் ஐக்கியமாய் இருப்பதற்கு, உங்களை அழைத்திருக்கும் இறைவன் உண்மையுள்ளவர். 2 தெச 3:3எபி 10:23உபா 7:91 யோவா 1:31 கொரி 10:13உபா 32:4ரோம 8:28ஏசா 49:7
திருச்சபையில் பிரிவினை
பிரியமானவர்களே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில் உங்களிடம் நான் வேண்டிக்கொள்கிறதாவது: நீங்கள் ஒருவரோடொருவர் ஒத்துப்போகிறவர்களாய் இருந்தால், உங்கள் மத்தியில் பிரிவினைகள் இருக்காது. அத்துடன் நீங்களும், உங்கள் மனதிலும் சிந்தனையிலும் முழுமையாக ஒருமைப்பட்டும் இருப்பீர்கள். பிலி 2:1-4எபே 4:1-71 கொரி 12:25ரோம 12:16யாக் 3:13-182 கொரி 13:11எபே 4:31-32சங் 133:1 பிரியமானவர்களே, உங்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் உண்டென்று குலோவேயாளின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் எனக்கு அறிவித்தார்கள். 1 தீமோ 6:42 தீமோ 2:23-25கலா 5:26நீதி 18:61 கொரி 3:31 சாமு 25:14-172 கொரி 12:20கலா 5:15 உங்களில் ஒருவன், “நான் பவுலைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னொருவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னும் ஒருவன், “நான் கேபாவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னும் ஒருவன், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான். இவற்றையே இங்கு நான் குறிப்பிடுகிறேன். மத் 23:9-101 கொரி 3:21-23யோவா 1:421 கொரி 3:4-61 கொரி 15:51 கொரி 15:501 கொரி 16:121 கொரி 4:6
கிறிஸ்து பிளவுப்பட்டுள்ளாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? நீங்கள் பவுலின் பெயரினாலா திருமுழுக்கைப் பெற்றீர்கள்? எபே 4:52 கொரி 11:4அப் 2:381 கொரி 10:2அப் 10:48அப் 19:52 கொரி 5:14-15கலா 1:7 கிறிஸ்புவையும் காயுவையும் தவிர, உங்களில் யாருக்காகிலும் நான் திருமுழுக்கு கொடுக்கவில்லையே. அதற்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அப் 18:8ரோம 16:231 கொரி 1:41 கொரி 14:181 தெச 5:182 கொரி 2:143 யோவா 1:1-4கொலோ 3:15 ஆகவே, என் பெயரால் திருமுழுக்கு பெற்றதாக உங்களில் ஒருவனாகிலும் சொல்லமுடியாது. 2 கொரி 11:2யோவா 3:28-29யோவா 7:18 ஆம், நான் ஸ்தேவானின் வீட்டாருக்கும் திருமுழுக்கு கொடுத்தேன். அதற்கு மேலாக, வேறுயாருக்கும் நான் திருமுழுக்கு கொடுத்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. 1 கொரி 16:151 கொரி 16:17அப் 16:15அப் 16:33 கிறிஸ்து என்னைத் திருமுழுக்கு கொடுக்க அனுப்பவில்லை, நற்செய்தியைப் பிரசங்கிக்கவே அனுப்பினார். கிறிஸ்துவின் சிலுவை அதன் வல்லமையை இழந்து போகாதிருக்கும்படி, மனித ஞானத்தின் அடிப்படையிலான வார்த்தைகளை உபயோகிக்காமல் பிரசங்கிக்கவே அவர் என்னை அனுப்பினார். 1 கொரி 2:11 கொரி 2:132 பேது 1:161 கொரி 2:4-52 கொரி 10:102 கொரி 4:2யோவா 4:22 கொரி 10:3-4
இறைவனின் வல்லமையும் ஞானமும் கிறிஸ்துவே
அழிவின் பாதையில் போகிறவர்களுக்கு சிலுவையின் செய்தி மூடத்தனமாகவே தோன்றுகிறது. ஆனால் இரட்சிக்கப்படுகின்ற நமக்கோ அது இறைவனின் வல்லமையாய் இருக்கின்றது. 1 கொரி 2:14ரோம 1:162 தெச 2:101 கொரி 1:23-252 கொரி 4:31 கொரி 1:212 கொரி 2:15-161 கொரி 3:19 ஆகவேதான், ஏசா 29:14எரே 8:91 கொரி 3:19யோபு 5:12-13ஏசா 19:11ஏசா 19:3
“நான் ஞானிகளின் ஞானத்தை அழித்து;
அறிவாளிகளின் அறிவாற்றலை பயனற்றதாக்குவேன்” 1
என்பதாக எழுதப்பட்டிருக்கிறது.
ஞானி எங்கே? வேத ஆசிரியர் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? உலக ஞானத்தை இறைவன் மூடத்தனமாக்கவில்லையோ? ரோம 1:221 கொரி 3:19யோபு 12:171 கொரி 1:19ஏசா 44:25யோபு 12:241 கொரி 2:62 சாமு 15:31 உலகம் தம் ஞானத்தால் இறைவனை அறியமுடியாதபடி, இறைவன் தமது ஞானத்தில் இதைச் செய்திருக்கிறார். எனவே மூடத்தனமாய்த் தோன்றுகிற எங்கள் பிரசங்கத்தினால் விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க இறைவன் விருப்பங்கொண்டார். லூக் 10:21மத் 11:25ரோம 1:20-221 கொரி 1:24எபே 3:10தானி 2:20ரோம 1:28ரோம 11:33 யூதர்கள் அற்புத அடையாளங்கள் வேண்டுமென்று கேட்கிறார்கள்; கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள். மத் 16:1-4அப் 17:18-21யோவா 2:18லூக் 11:16மத் 12:38-39மாற் 8:11லூக் 11:20யோவா 4:28 ஆனால் நாங்களோ, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்: இது யூதருக்கு இடறச்செய்யும் தடையாயும், யூதரல்லாதவருக்கு மூடத்தனமாயும் இருக்கிறது. 1 கொரி 2:141 கொரி 2:21 பேது 2:8கலா 5:11ஏசா 8:14-151 கொரி 1:18லூக் 2:34மத் 11:6 ஆனால், யூதரிலும் கிரேக்கரிலும் இறைவனால் அழைக்கப்பட்டவர்களுக்கு, கிறிஸ்துவே இறைவனின் வல்லமையும், இறைவனின் ஞானமுமாக இருக்கிறார். 1 கொரி 1:30கொலோ 2:31 கொரி 1:181 கொரி 1:9ரோம 1:16ரோம 8:28-30ரோம 1:4லூக் 7:35 ஏனெனில் இறைவனின் மூடத்தனமோ மனித ஞானத்திலும் மிகுந்த ஞானமுள்ளதாயிருக்கிறது; இறைவனின் பெலவீனமோ மனித பெலத்திலும் மிகுந்த பெலனுள்ளதாயிருக்கிறது. ரோம 11:33-361 கொரி 1:18சகரி 4:6-72 கொரி 13:41 கொரி 1:27-29நியாயாதி 7:2-8சகரி 12:7-81 இராஜா 20:14-22
பிரியமானவர்களே, நீங்கள் அழைக்கப்பட்டபொழுது எப்படி இருந்தீர்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மனித மதிப்பீட்டின்படி, உங்களில் ஞானிகள் அநேகரில்லை; செல்வாக்குடையவர்கள் அநேகரில்லை; உயர்குடிப் பிறந்தவர்களாய் அநேகரில்லை. யாக் 2:51 கொரி 3:18-20யாக் 1:9-111 கொரி 2:8மத் 11:25-261 கொரி 1:20லூக் 10:21லூக் 18:24-25 ஆனால் இறைவனோ, ஞானிகளை வெட்கப்படுத்தும்படி, உலகின் மூடத்தனமானவற்றைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவர்களை வெட்கப்படுத்தும்படி, உலகின் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். யாக் 2:5மத் 11:251 கொரி 1:20சங் 8:2லூக் 21:15ஏசா 29:142 கொரி 10:4-5அப் 4:11-21 உலகம் பொருட்டாகக் கருதுபவற்றை அவமாக்கும்படி, உலகத்தில் தாழ்ந்தவற்றையும், மக்களால் கீழ்த்தரமாக எண்ணப்பட்டவைகளையும், உலகத்தில் ஒன்றும் இல்லாதவைகளையும் அவர் தெரிந்துகொண்டார். யோபு 34:24ரோம 4:17ஏசா 2:11யோபு 34:19-20ஏசா 2:17ஏசா 41:12தானி 2:34-35ஏசா 17:13-14 இதனால், அவருக்கு முன்பாக ஒருவராலும் பெருமைபாராட்ட முடியாது. ரோம 3:27எபே 2:9எரே 9:231 கொரி 1:311 கொரி 4:7ரோம 15:17ரோம 3:191 கொரி 5:6 இறைவனாலேயே நீங்கள் கிறிஸ்து இயேசுவில் இருக்கிறீர்கள். கிறிஸ்துவே இறைவனிடமிருந்து நமக்காக வந்த ஞானம். அவரே நம்முடைய நீதியும், பரிசுத்தமும், மீட்புமாயிருக்கிறார். எபே 1:7பிலி 3:9ரோம 8:11 கொரி 1:21 கொரி 6:11கொலோ 1:14எபே 2:10யோவா 14:6 ஆகவே எழுதியிருக்கிறபடி, “பெருமைபாராட்ட விரும்புகிறவன், கர்த்தரிலேயே பெருமை பாராட்டட்டும்.” 2 எரே 9:23-242 கொரி 10:17பிலி 3:3சங் 105:3ஏசா 41:161 நாளாக 16:10ஏசா 45:25எரே 4:2