ஆதியாகமம் 4

Genesis 4

காயீனும் ஆபேலும்

ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் உறவுகொண்டான்; அவள் கர்ப்பவதியாகி காயீனைப் பெற்று, “நான் யெகோவாவின் உதவியால் ஒரு மகனைப் பெற்றேன்” என்றாள். 1 யோவா 3:12ஆதி 3:15ஆதி 4:25ஆதி 5:29எண் 31:17 பின்பு அவள் காயீனின் சகோதரனான ஆபேலைப் பெற்றாள். 1 யோவா 3:121 யோவா 3:15லூக் 11:511 யோவா 3:10ஆதி 47:3யோவா 8:44யாத் 3:1சங் 78:70-72

ஆபேல் மந்தை மேய்த்தான், காயீன் விவசாயம் செய்தான். சிறிது காலத்தின்பின் காயீன் தன் நிலத்தின் விளைச்சலில் சிலவற்றை யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். எண் 18:12லேவி 2:1-111 இராஜா 17:7நெகே 13:6 ஆபேலும் தன் மந்தையின் கொழுத்தத் தலையீற்றுகளில் சிலவற்றைக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். யெகோவா ஆபேலையும் அவன் காணிக்கையையும் தயவுடன் ஏற்றுக்கொண்டார், எபி 11:4நீதி 3:9யாத் 13:12எண் 18:171 பேது 1:19-202 நாளாக 7:1எபி 9:22லேவி 3:16-17 ஆனால் காயீனையும் அவன் காணிக்கையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காயீன் கடுங்கோபங்கொண்டான், கோபத்தால் அவன் முகம் சோர்ந்திருந்தது. எபி 11:4யோபு 5:2அப் 13:45ஏசா 3:10-11லூக் 15:28-30மத் 20:15சங் 20:3ஆதி 31:2

அப்பொழுது யெகோவா காயீனிடம், “நீ ஏன் கோபமாய் இருக்கிறாய்? உன் முகம் ஏன் சோர்ந்திருக்கிறது? ஏசா 1:18யோபு 5:2லூக் 15:31-32எரே 2:31மத் 20:15மீகா 6:3-5எரே 2:5யோவா 4:8-11 நீ சரியானதைச் செய்தால், நீ உயர்வு பெறுவாய் அல்லவா? நீ சரியானதைச் செய்யாவிட்டால், உன் கதவடியில் பதுங்கிக் கிடக்கும் பாவம் உன்னைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுமே; நீயோ அதை மேற்கொள்ளவேண்டும்” என்றார். யாக் 1:15ரோம 2:6-10ஏசா 3:10-11ரோம 6:16எபி 11:4எண் 32:23ரோம 12:1ரோம 7:8-9

அதன்பின்பு காயீன் தன் சகோதரன் ஆபேலிடம், “நாம் வயல்வெளிக்குப் போவோம்” என்றான். அவர்கள் வயலில் இருக்கையில் காயீன் தன் சகோதரன் ஆபேலைத் தாக்கிக் கொன்றான். மத் 23:351 யோவா 3:12-15யூதா 1:11நீதி 26:24-26லூக் 11:512 சாமு 14:6எபி 12:24சங் 24:3-6

அப்பொழுது யெகோவா காயீனிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார். நீதி 28:13யோவா 8:44சங் 9:12சங் 10:13-14அப் 5:4-9ஆதி 37:32ஆதி 3:9-11யோபு 22:13-14

அதற்குக் காயீன், “எனக்குத் தெரியாது; நான் என் சகோதரனுக்குக் காவல்காரனோ?” என்று கேட்டான்.

அதற்கு யெகோவா, “நீ என்ன செய்துவிட்டாய்? கேள், உன் சகோதரனின் இரத்தம் நிலத்தில் இருந்து என்னை நோக்கிக் கதறுகிறது! எபி 12:24எபி 11:4சங் 72:14ஏசா 5:7யாக் 5:4சங் 9:12எண் 35:33வெளி 6:9-10 இப்பொழுது நீ சபிக்கப்பட்டிருக்கிறாய், உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலிருந்து வாங்க தன் வாயைத் திறந்த, இந்த நிலத்திலிருந்து நீ துரத்தப்பட்டும் இருக்கிறாய். கலா 3:10யோபு 16:18உபா 28:15-20ஆதி 3:14உபா 27:16-26உபா 29:19-21ஆதி 4:14ஏசா 26:21 நீ நிலத்தைப் பண்படுத்திப் பயிரிடும்போது அது உனக்கு விளைச்சலைத் தராது. நீ பூமியில் நிம்மதியின்றி அலைந்து திரிகிறவனாய் இருப்பாய்” என்றார். ஓசி 9:17லேவி 26:20லேவி 26:36உபா 28:23-24உபா 28:65-66ஆதி 3:17-18ஆதி 4:14எரே 20:3-4

அதற்கு காயீன் யெகோவாவிடம், “இந்த தண்டனை என்னால் தாங்க முடியாததாய் இருக்கிறது. யோபு 15:22வெளி 16:9வெளி 16:11வெளி 16:21 இன்று நீர் என்னை இவ்விடத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது முன்னிலையிலிருந்து மறைக்கப்பட்டு, பூமியில் நிம்மதியின்றி அலைந்து திரிகிறவனாவேன்; என்னைக் காண்கிற எவனும் என்னைக் கொன்றுபோடுவானே” என்றான். எண் 35:19யோபு 15:20-24சங் 143:72 தெச 1:9உபா 28:65நீதி 28:1ஆதி 4:15-16ஆதி 9:5-6

அதற்கு யெகோவா, “அப்படியல்ல; காயீனைக் கொல்பவன் எவனிடமும் ஏழுமடங்கு பழிவாங்கப்படும்” என்று அவனுக்குச் சொன்னார். பின்பு யெகோவா அவனைக் காண்பவர்கள் அவனைக் கொன்றுவிடாதபடி, அவன்மேல் ஓர் அடையாளத்தை வைத்தார். எசேக் 9:4சங் 79:12எசேக் 9:6ஆதி 4:24வெளி 14:11வெளி 14:91 இராஜா 16:7ஓசி 1:4 அப்பொழுது காயீன் யெகோவாவின் முன்னிலையிலிருந்து சென்று, ஏதேனுக்குக் கிழக்கேயுள்ள நோத் 1 என்னும் நாட்டில் குடியிருந்தான். 2இராஜா 13:232இராஜா 24:20யாத் 20:18ஆதி 3:8ஆதி 4:14எரே 23:39எரே 52:3யோபு 2:7

பின்பு காயீன் தன் மனைவியுடன் உறவுகொண்டான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள். பின்பு காயீன் ஒரு பட்டணத்தைக் கட்டிக்கொண்டிருந்தான்; அதற்கு தன் மகனின் பெயரின்படி ஏனோக் என்று பெயரிட்டான். தானி 4:30பிரச 2:4-11சங் 49:112 சாமு 18:18ஆதி 11:4ஆதி 5:18ஆதி 5:22லூக் 17:28-29 ஏனோக்கிற்கு ஈராத் பிறந்தான், ஈராத் மெகுயயேலின் தகப்பனும், மெகுயயேல் மெத்தூசயேலின் தகப்பனும், மெத்தூசயேல் லாமேக்கின் தகப்பனும் ஆனார்கள். ஆதி 36:2ஆதி 5:21

லாமேக் இரு பெண்களைத் திருமணம் செய்தான். ஒருத்தியின் பெயர் ஆதாள், மற்றவள் சில்லாள். ஆதி 2:24ஆதி 2:18மத் 19:4-6மத் 19:8 ஆதாள் யாபாலைப் பெற்றாள்; முதன்முதலில் கூடாரங்களில் வசித்து, மந்தை மேய்த்தவன் அவனே. 1 நாளாக 2:50-521 நாளாக 4:4-5ஆதி 25:27ஆதி 4:2ஆதி 4:21எபி 11:9எரே 35:9-10யோவா 8:44 அவனுடைய சகோதரனின் பெயர் யூபால்; அவன் முதன்முதலில் வீணை, புல்லாங்குழல் ஆகிய இசைக்கருவிகளை இசைத்தவன் ஆனான். ஆமோ 6:5ஆதி 31:27ஏசா 5:12யோபு 21:12ரோம 4:11-12 சில்லாளும், தூபால்காயீன் என்னும் ஒரு மகனைப் பெற்றாள்; அவன் வெண்கலம், இரும்பு ஆகியவற்றால் கருவிகளைச் செய்யும் தொழிலாளி ஆனான். தூபால்காயீனுடைய சகோதரி நாமாள். 2 நாளாக 2:7உபா 33:25உபா 8:9யாத் 25:3எண் 31:22

லாமேக் தன் இரு மனைவிகளிடம் சொன்னதாவது: யாத் 20:13லேவி 19:18எண் 23:18நியாயாதி 9:7

“ஆதாளே, சில்லாளே, எனக்குச் செவிகொடுங்கள்;

லாமேக்கின் மனைவிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்.

என்னைக் காயப்படுத்தியபடியால் ஒரு மனிதனைக் கொன்றேன்,

எனக்குத் தீங்கு செய்தபடியாலேயே அந்த வாலிபனைக் கொன்றேன்.

காயீனைக் கொல்பவனிடம் ஏழுமடங்கு பழிவாங்கப்படும் என்றால், மத் 18:22ஆதி 4:15

லாமேக்கிற்காக எழுபத்தேழு மடங்கு பழிவாங்கப்படும்.”

ஆதாம் மீண்டும் தன் மனைவியுடன் உறவுகொண்டான், அவள் ஒரு மகனைப் பெற்றாள், “காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக இறைவன் வேறொரு பிள்ளையைக் கொடுத்தார்” என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பெயரிட்டாள். ஆதி 4:8லூக் 3:381 நாளாக 1:1ஆதி 4:1-3ஆதி 4:10-11ஆதி 5:3-4 சேத்தும் ஒரு மகனைப் பெற்றான்; அவன் தன் மகனுக்கு ஏனோஸ் என்று பெயரிட்டான். சங் 116:171 இராஜா 18:24யோவே 2:32செப்ப 3:9ஆதி 12:8ஆதி 26:25எரே 33:16லூக் 3:38

அக்காலத்தில் மக்கள் யெகோவாவின் பெயரைக் கூப்பிட்டு அவரை ஆராதிக்க ஆரம்பித்தார்கள்.