“நான் என் வாழ்வை வெறுக்கிறேன்; யோபு 7:111 இராஜா 19:4எண் 11:15யோபு 9:21யோனா 4:8யோபு 5:15-16யோபு 5:20ஏசா 38:15
அதினால் எனது குற்றச்சாட்டைத் தாராளமாகச் சொல்வேன்,
எனது ஆத்துமக் கசப்பைப் பேசுவேன்.
நான் இறைவனிடம், நீர் என்னைக் குற்றவாளியாகத் தீர்க்காதிரும், சங் 139:23-24யோபு 9:29சங் 143:21 கொரி 11:31-32யோபு 34:31-32யோபு 8:5-6புலம் 3:40-42புலம் 5:16-17
எனக்கெதிராக என்ன குற்றச்சாட்டு உண்டு என எனக்குச் சொல்லும் எனக் கேட்பேன்.
கொடியவர்களின் சூழ்ச்சிகளைப் புன்முறுவலுடன் பார்த்துக்கொண்டு, ஏசா 64:8யோபு 14:15சங் 138:8எரே 12:1-31 பேது 4:19யோபு 21:16யோபு 22:18யோபு 34:18-19
உமது கைகளினால் நீர் படைத்த
என்னை ஒடுக்குவது உமக்குப் பிரியமாயிருக்கிறதோ?
உமக்கு மானிடக் கண்கள் உண்டோ? 1 சாமு 16:7யோபு 9:32லூக் 16:15வெளி 1:14
நீர் மனிதன் பார்ப்பதுபோல் பார்க்கிறீரோ?
உமது நாட்கள் மனிதனின் நாட்களைப்போலவும், 2 பேது 3:8சங் 90:2-4எபி 1:12சங் 102:24-27யோபு 36:26சங் 102:12
உமது வருடங்கள் பலவானுடைய வருடங்களைப்போலவும் இருக்கிறதோ?
அதினால்தானோ நீர் எனது தவறுதல்களைத் தேடுகிறீர்? யோபு 14:16எரே 2:34சங் 10:15சங் 44:21செப்ப 1:121 கொரி 4:5யோவா 2:24-25யோபு 10:14-17
எனது பாவங்களைத் துருவி ஆராய்கிறீர்?
நான் குற்றமற்றவன் என்பது உமக்குத் தெரியும், உபா 32:39தானி 3:15யோவா 10:28-30யோபு 42:7சங் 139:1-21 தெச 2:10ஓசி 2:10யோவா 21:17
உமது கையினின்று என்னை விடுவிக்க ஒருவராலும் முடியாது என்றும் தெரியும்.
“உமது கரங்களே என்னை உருவாக்கிப் படைத்தன. சங் 119:73ஏசா 43:7யோபு 10:3எரே 18:3-10ஆதி 6:6-7
இப்பொழுது திரும்பி என்னை நீர் அழிப்பீரோ?
களிமண்ணைப்போல நீர் என்னை உருவாக்கியதை நினைத்துக்கொள்ளும். ஆதி 2:7ஏசா 64:8ஆதி 3:19பிரச 12:7ஏசா 45:9எரே 18:6சங் 25:6-7ரோம 9:21
இப்பொழுது திரும்பவும் என்னைத் தூசிக்கே போகப்பண்ணுவீரோ?
நீர் என்னைப் பால்போல வார்த்து சங் 139:14-16
வெண்ணெய்க் கட்டிபோல உறையச் செய்தீரல்லவோ?
தோலையும் சதையையும் எனக்கு உடுத்தி, எசேக் 37:4-8எபே 4:16யோபு 40:17-182 கொரி 5:2-3
எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை பின்னினீர் அல்லவோ?
நீரே எனக்கு வாழ்வு கொடுத்து, எனக்கு இரக்கம் காட்டினீர், அப் 17:28யோபு 33:4அப் 17:25ஆதி 19:19மத் 6:25
உமது தயவினால் என் ஆவியைக் காத்திருந்தீர்.
“ஆனாலும் நீர் உமது இருதயத்தில் மறைத்து வைத்தது இதுவே, யோபு 23:13உபா 32:39பிரச 8:6-7எபே 3:11ஏசா 45:15ஏசா 45:7ஏசா 46:9-11யோபு 23:9
இது உமது மனதில் இருந்தது என்பதை நான் அறிவேன்.
நான் பாவம்செய்தால், நீர் என்னைக் கவனித்து, யோபு 7:21சங் 130:3யாத் 34:7யோபு 13:26-27யோபு 9:28எண் 14:18சங் 139:1யோபு 14:16
என் குற்றங்களைத் தண்டிக்காமல் விடமாட்டீர் என நான் அறிந்திருக்கிறேன்.
நான் குற்றவாளியாய் இருந்தால் எனக்கு ஐயோ கேடு! ஏசா 3:11யோபு 9:15யோபு 9:20-21யோபு 10:7ஏசா 6:5மல்கி 3:18சங் 25:18யாத் 3:7
நான் குற்றமற்றவனாய் இருந்தாலும் என்னால் தலைதூக்க முடியாது.
ஏனெனில், நான் அவமானத்தால் நிறைந்து,
வேதனையில் அமிழ்ந்து போயிருக்கிறேன்.
நான் தலைநிமிர்ந்து நின்றால், சிங்கத்தைப்போல் என்னைப் பிடித்து, ஏசா 38:13புலம் 3:10யோபு 5:9ஆமோ 3:8உபா 28:59ஓசி 13:7-8எண் 16:29-30
திகிலூட்டும் வல்லமையைக் காண்பிக்கிறீர்.
நீர் எனக்கெதிராக புதிய சாட்சிகளைக் கொண்டுவந்து, யோபு 16:8ரூத் 1:21எரே 48:11யோபு 16:11-16யோபு 19:6-11சங் 55:19செப்ப 1:12
என்மேலுள்ள உமது கோபத்தை அதிகரிக்கிறீர்,
அலைமேல் அலையாக உமது படைகள் எனக்கு விரோதமாய் வருகின்றன.
“அப்படியானால் ஏன் என்னைக் கர்ப்பத்தில் இருந்து வெளியே கொண்டுவந்தீர்? எரே 20:14-18எரே 15:10யோபு 11:20யோபு 14:10யோபு 3:10-11மத் 26:24
யாரும் என்னைப் பார்க்குமுன் நான் இறந்திருக்கலாமே.
நான் உருவாகாமலேயே இருந்திருக்கலாம்; சங் 58:8
கருவறையிலிருந்து கல்லறைக்கே போயிருக்கலாம்!
என் வாழ்நாட்கள் முடிகிறது, யோபு 14:1சங் 39:13யோபு 13:21யோபு 7:16-21யோபு 7:6-7யோபு 8:9யோபு 9:25-26சங் 103:15-16
நான் மகிழ்ந்திருக்கும்படி சில மணித்துளிகள் நீர் விலகியிரும்.
பின்னர், மந்தாரமும் மரண இருளும் சூழ்ந்த, 2 சாமு 12:23யோபு 16:22யோபு 3:5யோபு 7:8-102 சாமு 14:14யோபு 14:10-14சங் 23:4யோபு 3:13
போனால் திரும்பி வரமுடியாத நாட்டிற்குப் போவேன்.
மரண இருள்சூழ்ந்த அந்நாட்டில் ஒழுங்கில்லை, சங் 88:12எரே 13:16எரே 2:6யோபு 3:5யோபு 34:22யோபு 38:17லூக் 16:26சங் 23:4
ஒளியும் இருளாய்த் தோன்றும்.”