“இவை எல்லாவற்றையும் என் கண் கண்டிருக்கின்றது, யோபு 5:9-161 யோவா 1:3யோபு 12:9-25யோபு 15:17-18யோபு 4:12யோபு 42:3-6யோபு 5:27யோபு 8:8-10
என் காது கேட்டு அறிந்திருக்கிறது.
உங்களுக்குத் தெரிந்தவையெல்லாம் எனக்கும் தெரியும்; யோபு 12:32 கொரி 11:16-182 கொரி 12:11யோபு 42:71 கொரி 8:1-22 கொரி 11:4-5யோபு 34:35யோபு 35:16
நான் உங்களைவிட தாழ்ந்தவனல்ல.
ஆனால் நான் எல்லாம் வல்லவரோடு பேசவும், ஏசா 41:21ஏசா 1:18-20யோபு 13:22யோபு 31:35யோபு 9:3எரே 12:1-2யோபு 11:5யோபு 13:15
இறைவனோடு என் வழக்கை வாதாடவும் விரும்புகிறேன்.
எப்படியும் நீங்கள் என்னைப் பொய்களால் மழுப்புகிறீர்கள்; சங் 119:69எரே 23:32எரே 6:14எரே 8:22யோபு 16:2மாற் 5:26எசேக் 34:4ஓசி 5:13
நீங்கள் எல்லோரும் ஒன்றுக்கும் உதவாத மருத்துவர்கள்.
நீங்கள் பேசாமல் மட்டும் இருப்பீர்களானால், நீதி 17:28யாக் 1:19பிரச 5:3யோபு 13:13ஆமோ 5:13யோபு 11:3யோபு 16:3யோபு 18:2
அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.
இப்பொழுது என் விவாதத்தைக் கேளுங்கள்; யோபு 34:2நியாயாதி 9:7யோபு 21:2-3யோபு 33:1-3நீதி 8:6-7
என் உதடுகளின் முறையிடுதலுக்குச் செவிகொடுங்கள்.
இறைவனின் சார்பாக கொடுமையாய்ப் பேசுவீர்களோ? யோபு 36:4யோபு 27:42 கொரி 4:2யோவா 16:2யோபு 11:2-4யோபு 17:5யோபு 32:21-22யோபு 4:7
அவருக்காக நீங்கள் வஞ்சகமாய்ப் பேசுவீர்களோ?
அவருக்கு நீங்கள் பட்சபாதம் காட்டுவீர்களோ? யாத் 23:2-3நீதி 24:23யோபு 32:21யோபு 34:19லேவி 19:15மல்கி 2:9
இறைவனுக்காக வழக்கை வாதாடுவீர்களோ?
அவர் உங்களைச் சோதித்தால், உங்களுக்கு நலமாகுமோ? கலா 6:7-8எரே 17:10சங் 44:21ஏசா 28:22யோபு 12:16யோபு 17:2யோபு 34:36சங் 139:23
மனிதரை ஏமாற்றுவதுபோல் அவரை ஏமாற்ற முடியமோ?
நீங்கள் இரகசியமாய் பட்சபாதம் காட்டினாலும், யாக் 2:9சங் 50:21-22சங் 82:2யோபு 42:7-8
அவர் நிச்சயமாக உங்களைக் கண்டிப்பார்.
அவருடைய மகத்துவம் உங்களுக்குத் திகிலூட்டாதோ? யோபு 31:23சங் 119:120யாத் 15:16ஏசா 8:13எரே 10:10எரே 5:22யோபு 13:21மத் 10:28
அவருடைய பயங்கரம் உங்கள்மேல் வராதோ?
உங்கள் கொள்கைகள் சாம்பலை ஒத்த பழமொழிகள்; 2 கொரி 5:1யாத் 17:14ஆதி 18:27ஆதி 2:7ஏசா 26:14யோபு 18:17யோபு 4:19நீதி 10:7
உங்கள் எதிர்வாதங்களும் களிமண்ணுக்கு ஒப்பானது.
“பேசாமல் இருங்கள், என்னைப் பேசவிடுங்கள்; யோபு 7:11யோபு 10:1யோபு 13:5யோபு 21:3யோபு 6:9-10யோபு 7:15-16
அதின்பின் எனக்கு வருவது வரட்டும்.
ஏன் நான் என்னையே இடரில் மாட்டி, நியாயாதி 12:3சங் 119:1091 சாமு 19:51 சாமு 28:21பிரச 4:5யோபு 18:4ஏசா 49:26ஏசா 9:20
உயிரைக் கையில் பிடித்துக்கொள்ள வேண்டும்.
அவர் என்னைக் கொன்றாலும், நான் இன்னும் அவரிலேயே நம்பிக்கையாயிருப்பேன்; சங் 23:4யோபு 19:25-28யோபு 23:10ரோம 8:38-391 யோவா 3:20யோபு 27:5யோபு 23:4-7நீதி 14:32
ஆனாலும் என் வழிகளை அவர்முன் குற்றமற்றவை என வாதாடுவேன்.
இது என் விடுதலைக்குக் காரணமாகும், ஏசா 12:1-2ஏசா 33:14சங் 118:21அப் 13:47யாத் 15:2எரே 3:23யோபு 27:8-10யோபு 36:13
இறைவனற்றவன் அவர்முன் சேரமாட்டான்.
நான் பேசப்போவதைக் கவனமாய்க் கேளுங்கள்; யோபு 13:6யோபு 21:2யோபு 33:1
நான் சொல்வதை உங்கள் செவி ஏற்றுக்கொள்ளட்டும்.
எனது வழக்கு ஆயத்தம், யோபு 23:4யோபு 9:2-32 கொரி 1:12ஏசா 43:26யோபு 16:21யோபு 40:7-8யோபு 9:20ரோம 8:33-34
நான் குற்றமற்றவனென நிரூபிக்கப்படுவேன் என்பது எனக்குத் தெரியும்.
எனக்கெதிராகக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவர யாரால் முடியும்? ஏசா 50:7-8எரே 20:9யோபு 10:8யோபு 13:13யோபு 19:5யோபு 33:32யோபு 33:5-7யோபு 7:11
அப்படியானால், நான் மவுனமாயிருந்தே சாவேன்.
“இறைவனே, இந்த இரண்டு காரியங்களை மட்டும் கொடுத்தருளும், ஆதி 3:8-10யோபு 9:34-35சங் 139:12வெளி 6:15-16
அப்பொழுது நான் உம்மிடமிருந்து மறைந்து கொள்ளமாட்டேன்:
உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும், யோபு 33:7யோபு 9:34சங் 39:10யோபு 10:20யோபு 13:11யோபு 22:15-17சங் 119:120
உமது பயங்கரங்களால் என்னைத் திகிலடையச் செய்யாதீர்.
அதின்பின் என்னைக் கூப்பிடும்; நான் பதில் சொல்வேன், யோபு 14:15யோபு 38:3யோபு 40:4-5யோபு 42:3-6யோபு 9:16யோபு 9:32
அல்லது என்னைப் பேசவிட்டு நீர் பதில் கொடும்.
அநேக பிழைகளையும் பாவங்களையும் நான் செய்திருக்கிறேன்? யோபு 36:8-9சங் 139:23சங் 44:20-21யோபு 22:5
என் குற்றத்தையும், என் பாவத்தையும் எனக்குக் காட்டும்.
நீர் ஏன் உமது முகத்தை மறைத்து, யோபு 19:11புலம் 2:5சங் 13:1உபா 32:20ஏசா 8:17யோபு 33:10சங் 44:24சங் 88:14
என்னை உமது பகைவனாகக் கருதுகிறீர்?
காற்றில் பறக்கும் சருகை வேதனைப்படுத்துவீரோ? யோபு 21:18லேவி 26:361 சாமு 24:14ஏசா 17:13யோபு 14:3மத் 12:20
பதரைப் பின்னால் துரத்திச்செல்வீரோ?
ஏனெனில் எனக்கெதிராகக் கசப்பானவற்றை நீர் எழுதுகிறீர்; சங் 25:7யோவா 5:14எரே 31:19யோவா 5:5யோபு 20:11யோபு 3:20நீதி 5:11-13சங் 88:3-18
என் வாலிப காலத்தின் பாவங்களை எனக்குப் அறுக்கச்செய்கிறீர்.
நீர் எனது கால்களில் விலங்குகளை மாட்டுகிறீர், யோபு 33:112 நாளாக 16:10-12அப் 16:24யோபு 10:6யோபு 14:16யோபு 16:9யோபு 2:7நீதி 7:22
அடிச்சுவடுகளில் அடையாளமிட்டு
என் வழிகளையெல்லாம் கூர்ந்து கவனிக்கிறீர்.
“ஆகவே அழுகிப்போன ஒன்றைப் போலவும், சங் 39:11யோபு 4:19ஓசி 5:12யோபு 30:17-19யோபு 30:29-30எண் 12:12
பூச்சி அரித்த உடையைப்போலவும் மனிதன் உருக்குலைந்து போகிறான்.