இடைவெளி: ஞானம் எங்கே காணப்படுகிறது
வெள்ளிக்குச் சுரங்கமும் 1 பேது 1:7ஏசா 48:10மல்கி 3:2-3நீதி 17:31 நாளாக 29:2-51 இராஜா 10:211 இராஜா 7:48-50ஆதி 2:11-12
தங்கத்திற்கு சுத்திகரிக்கும் இடமும் உண்டு.
இரும்பு பூமியிலிருந்து எடுக்கப்படுகிறது, உபா 8:9ஆதி 4:22எண் 31:221 நாளாக 22:14
செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படுகிறது.
மனிதன் இருளுக்கு முடிவுண்டாக்கி, பிரச 1:13ஆப 2:13யோபு 10:21-22யோபு 12:22யோபு 38:16-17லூக் 16:8மத் 6:33நீதி 2:4
உலோக மூலப்பொருட்களைக் காரிருளிலும்
ஆழமான குழிகளிலும் தேடுகிறான்.
அவன் மிகத் தொலைவில் சுரங்க வாசலை வெட்டுகிறான்,
காலடிகளே படாத,
மனித நடமாட்டம் இல்லாத ஆழத்தில் ஊசலாடித் தொங்குகிறான்.
உணவு கொடுக்கும் பூமி ஏசா 28:25-29எசேக் 28:13-14ஆதி 1:11-12ஆதி 1:29சங் 104:14-15
அதின் கீழ்ப்பகுதியிலுள்ளவை நெருப்பினால் உருமாறுகிறது.
அதின் பாறைகளிலிருந்து நீலக்கற்கள் விளைகின்றன, யாத் 24:10யோபு 28:16ஏசா 54:11வெளி 21:19உன்னத 5:14
அதின் தூசி தங்கத்துகள்களை உடையதாயிருக்கின்றது.
இரைதேடும் ஒரு பறவைகூட அந்த மறைவான பாதையை அறியாது; யோபு 11:6யோபு 28:21-23யோபு 38:19யோபு 38:24ரோம 11:33
பருந்தின் கண்ணும் அதைக் காண்பதில்லை.
கொடிய மிருகங்கள் அங்கு அடியெடுத்து வைப்பதுமில்லை;
சிங்கம் அங்கு திரிவதுமில்லை.
மனிதனின் கையே கடினமான பாறையைத் தாக்கி, நாகூ 1:4-6
மலைகளின் அடிவாரங்களை வேரோடே புரட்டுகிறான்.
அவன் கன்மலையில் வாய்க்கால்களை வெட்டுகிறான்; ஆப 3:9நீதி 14:23நீதி 24:4
அவனுடைய கண்கள் அதின் பொக்கிஷங்களையெல்லாம் காண்கின்றன.
ஆறுகளின் உற்பத்தியிடங்களை ஆராய்ந்து, 1 கொரி 4:5ஏசா 45:2-3ஏசா 37:25ஏசா 44:27யோபு 26:8
மறைந்திருக்கும் பொருட்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறான்.
ஆனால் ஞானம் காணப்படுவது எங்கே? யாக் 1:5யோபு 28:20நீதி 2:4-6நீதி 3:191 கொரி 1:19-20கொலோ 2:3பிரச 7:23-25யாக் 1:17
விளங்கும் ஆற்றல் குடியிருப்பது எங்கே?
மனிதன் அதின் மதிப்பைப் புரிந்துகொள்வதில்லை; நீதி 3:14-15நீதி 8:11நீதி 8:18-19பிரச 8:16-17ஏசா 53:8யோபு 28:15-19யோபு 28:21-22மத் 13:44-46
உயிர்வாழ்வோரின் நாட்டில் அதைக் காணமுடியாது.
“அது என்னிடம் இல்லை” என ஆழம் சொல்கிறது; ரோம 11:33-34
“அது என்னுடன் இல்லை” என கடலும் கூறுகிறது.
சுத்தத் தங்கத்தைக் கொடுத்து, அதை வாங்கமுடியாது, நீதி 16:16நீதி 3:13-15நீதி 8:10-11நீதி 8:19யோபு 28:18நீதி 8:17
அதின் மதிப்பை வெள்ளியால் நிறுக்கவும் முடியாது.
ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் எசேக் 28:13ஏசா 13:12சங் 45:91 நாளாக 29:4யாத் 28:20
அதற்கு ஈடல்ல.
பொன்னும் பளிங்கும் அதற்கு இணையாகாது, வெளி 22:1எசேக் 1:22நீதி 16:16வெளி 21:11வெளி 4:6
தங்க நகைகளைக் கொடுத்தும் அதைப் பெற்றுக்கொள்ள முடியாது.
பவளத்தையும் மரகதத்தையும் ஒரு பொருட்டாக எண்ண முடியாது; நீதி 3:15நீதி 31:10எசேக் 27:16புலம் 4:71 தீமோ 2:9மத் 13:45-46மத் 7:6நீதி 8:11
ஞானத்தின் விலை மாணிக்கக் கற்களைவிட உயர்வானது.
எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; யாத் 28:17யாத் 39:10எசேக் 28:13நீதி 8:19வெளி 21:20
சுத்தப் பொன்னால் அதை வாங்கமுடியாது.
அப்படியானால் ஞானம் எங்கிருந்து வருகிறது? யோபு 28:12யாக் 1:17யாக் 1:5யோபு 28:28யோபு 28:231 கொரி 2:6-15பிரச 7:23-24நீதி 2:6
விளங்கும் ஆற்றல் எங்கே குடியிருக்கிறது?
அது உயிருள்ள அனைவருக்கும், சங் 49:3-41 கொரி 2:7-10கொலோ 2:3மத் 11:25மத் 13:35மத் 13:17
ஆகாயத்துப் பறவைகளுக்குங்கூட மறைக்கப்பட்டும் இருக்கிறது.
“இதைப் பற்றிய வதந்தி மட்டுமே எங்கள் காதுகளுக்கு எட்டின” யோபு 26:6சங் 83:10-12யோபு 28:14
என்று அழிவும் சாவும் சொல்கின்றன.
அதின் வழி இறைவனுக்குத் தெரியும்; நீதி 8:22-311 கொரி 1:30யூதா 1:25ரோம 11:33நீதி 2:6சங் 147:5அப் 15:18லூக் 10:21-22
அதின் குடியிருப்பை அவர் மட்டுமே அறிவார்.
ஏனெனில் பூமியின் கடைமுனைகளை அவர் பார்க்கிறார், நீதி 15:3சகரி 4:102 நாளாக 16:9சங் 33:13-14வெளி 5:6
வானத்தின் கீழுள்ள ஒவ்வொன்றையும் அவர் காண்கிறார்.
அவர் காற்றின் பலத்தை நிலைநாட்டி, சங் 135:7ஏசா 40:12யோபு 12:15
தண்ணீர்களை அளந்தபோதும்,
மழைக்கு ஒரு நியமத்தை விதித்தபோதும், யோபு 38:25யோபு 37:3சகரி 10:1ஆமோ 4:7எரே 14:22யோபு 36:26யோபு 36:32யோபு 37:11
இடிமுழக்கத்தோடு கூடிய மின்னலுக்கு ஒரு பாதையை வகுத்தபோதும்,
அவர் ஞானத்தைப் பார்த்து மதிப்பிட்டார்; சங் 19:1நீதி 8:22-29
அதை உறுதிப்படுத்தி சோதித்தறிந்தார்.
இறைவன் மனிதனிடம், சங் 111:10நீதி 1:7நீதி 9:10நீதி 3:7பிரச 12:13உபா 4:6யாக் 3:13-17சங் 34:14
“யெகோவாவுக்கு பயந்து நடத்தலே ஞானம்,
தீமைக்கு விலகி நடப்பதே விளங்கும் ஆற்றல்” என்று சொன்னார்.