லூக்கா 7

Luke 7

நூற்றுக்குத் தலைவனின் விசுவாசம்

கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு இவற்றையெல்லாம் இயேசு சொல்லி முடித்தபின்பு, அவர் கப்பர்நகூமுக்கு சென்றார். மத் 8:5-13லூக் 7:1-10மத் 7:28-29 அங்கே நூற்றுக்குத் தலைவனின் வேலைக்காரன் ஒருவன் வியாதியுற்று மரணத் தருவாயில் இருந்தான்; இந்த வேலைக்காரன் தன்னுடைய எஜமானுக்கு மதிப்புக்குரியவனாய் இருந்தான். 2இராஜா 5:2-3ஆதி 24:27யோவா 4:46-47கொலோ 3:22ஆதி 24:2-14ஆதி 24:35-49ஆதி 35:8ஆதி 39:4-6 நூற்றுக்குத் தலைவன் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டான். எனவே அவன் யூதர்களின் தலைவர்கள் சிலரை அவரிடம் அனுப்பி, அவர் வந்து தனது வேலைக்காரனைக் குணமாக்க வேண்டுமென்று அவரைக் கேட்டுக்கொண்டான். மத் 8:5யோவா 4:47லூக் 9:38பிலே 1:10லூக் 8:41 அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, அவரை மிகவும் வேண்டிக்கொண்டு, “நீர் இதை அந்த அதிபதிக்குச் செய்வதற்கு அவன் தகுதியுடையவன். லூக் 7:6-7மத் 10:11மத் 10:37-38வெளி 3:4லூக் 20:35மத் 10:13 ஏனெனில், அவன் நமது மக்களை நேசிக்கிறான்; நமக்கொரு ஜெப ஆலயத்தையும் கட்டிக் கொடுத்திருக்கிறான்” என்றார்கள். 2 நாளாக 2:11-121 நாளாக 29:3-91 யோவா 3:141 யோவா 3:18-191 யோவா 5:1-31 இராஜா 5:1எஸ்றா 7:27-28கலா 5:6 எனவே இயேசு அவர்களுடன் சென்றார். மாற் 5:24ஆதி 32:10யாக் 4:6லூக் 8:49மத் 3:11அப் 10:38லூக் 15:19-21லூக் 5:8

அவனுடைய வீட்டிற்குச் சமீபமாய் அவர் வந்துகொண்டிருக்கையில் அந்த நூற்றுக்குத் தலைவன் தனது நண்பர்களை அவரிடத்தில் அனுப்பிச் சொல்லும்படி சொன்னதாவது: “ஆண்டவரே, சிரமம் வேண்டாம், நீர் என் வீட்டிற்கு வருவதற்கு நான் தகுதியற்றவன். ஆகையால் உம்மிடம் வருவதற்கும் நான் என்னைத் தகுதியுள்ளவனாகக் கருதவில்லை. ஆனால் நீர் ஒரு வார்த்தை சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் குணமடைவான். சங் 107:20சங் 33:9லூக் 4:36மாற் 1:27உபா 32:39லூக் 5:131 சாமு 2:6யாத் 15:26 நானும் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழேயும் படைவீரர்கள் இருக்கிறார்கள். நான் ஒருவனை, ‘போ’ என்றால், போகிறான்; ஒருவனை, ‘வா’ என்றால், வருகிறான். நான் எனது வேலைக்காரனிடம் இதைச் செய் என்றால், அவன் செய்கிறான்” என்றான். 1 தீமோ 6:1-2அப் 10:7-8அப் 22:25-26அப் 23:17கொலோ 3:22அப் 23:23அப் 23:26அப் 24:23

இயேசு இதைக் கேட்டபோது, அந்த நூற்றுக்கு அதிபதியைக் குறித்து வியப்படைந்தார். அவர் தம்மைப் பின்பற்றி வந்த மக்கள் கூட்டத்தினரைத் திரும்பிப்பார்த்து, “நான் உங்களுக்குச் சொல்கிறேன், இப்படிப்பட்ட பெரிதான விசுவாசத்தை இஸ்ரயேலரிடத்திலும் நான் கண்டதில்லை” என்றார். மத் 15:28மத் 8:10ரோம 3:1-3மத் 9:33ரோம 9:4-5சங் 147:19-20 அப்பொழுது இயேசுவிடம் அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பி சென்றபோது, அந்த வேலைக்காரன் சுகமடைந்திருப்பதைக் கண்டார்கள். யோவா 4:50-53மத் 8:13மத் 15:28மாற் 9:23

விதவையின் மகன்

இதற்குப் பின்பு, இயேசு நாயீன் என்னும் பட்டணத்திற்குச் சென்றார். அவருடைய சீடர்களும் பெருங்கூட்டமாயிருந்த மக்களும் அவருடன் சென்றார்கள். அப் 10:38 அவர் பட்டணத்து வாசலுக்கு சமீபமாய் வந்தபோது, இறந்துபோன ஒருவனை அடக்கம்பண்ணும்படி சிலர் சுமந்துகொண்டு வந்தார்கள். இவன் தன் தாய்க்கு ஒரே மகன், அவளோ ஒரு விதவை. பட்டணத்திலிருந்தும் மக்கள் பெருங்கூட்டமாய் அவளுடன் வந்தார்கள். லூக் 8:42லூக் 8:521 இராஜா 17:121 இராஜா 17:181 இராஜா 17:91 தீமோ 5:4-52இராஜா 4:162இராஜா 4:20 கர்த்தர் அவளைக் கண்டபோது, அவள்மேல் மனதுருகி, “அழாதே” என்று சொன்னார். ஏசா 63:9சங் 103:13எபி 4:15புலம் 3:32-33சங் 86:15எரே 31:20லூக் 8:52சங் 86:5

பின்பு அவர் போய் பாடையைத் தொட்டார். அதை சுமந்து சென்றவர்கள் நின்றார்கள். அவர், “வாலிபனே, எழுந்திரு என்று உனக்கு சொல்லுகிறேன்!” என்றார். யோவா 11:43-44யோவா 5:25அப் 9:40-41யோவா 11:251 இராஜா 17:21யோவா 5:28-29லூக் 8:54-55யோவா 5:21 இறந்தவன் எழுந்து பேசத் தொடங்கினான்; இயேசு அவனைத் திரும்பவும் அவனுடைய தாயிடம் ஒப்படைத்தார். 2இராஜா 13:211 இராஜா 17:23-242இராஜா 4:32-37

அவர்கள் எல்லோரும் பயபக்தியுடன் இறைவனைத் துதித்தார்கள். “ஒரு பெரிய இறைவாக்கினர் நம்மிடையே தோன்றியிருக்கிறார். தம்முடைய மக்களுக்கு உதவிசெய்யும்படி இறைவன் வந்திருக்கிறார்” என்றார்கள். மத் 9:8எரே 33:9லூக் 1:68லூக் 7:39யாத் 4:31லூக் 1:65லூக் 2:20லூக் 5:26 இயேசு செய்ததைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா முழுவதிலும், அதைச் சுற்றியுள்ள நாட்டுப்புறத்திலும் பரவியது. லூக் 7:14மத் 4:24மத் 9:26மத் 9:31மாற் 1:28மாற் 6:14

இயேசுவும் யோவான் ஸ்நானகனும்

யோவானின் சீடர்கள் இவை எல்லாவற்றையும் யோவானுக்குச் சொன்னார்கள். யோவான் தன்னுடைய சீடர்களில் இருவரைக் கூப்பிட்டு, யோவா 3:26மத் 11:2-19 “வரப்போகிற கிறிஸ்து நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா?” என்று கேட்கும்படி, கர்த்தரிடம் அவர்களை அனுப்பினான். ஏசா 9:6-7யோவா 4:25அப் 10:7-8தானி 9:24-26உபா 18:15-18ஆதி 22:18ஆதி 3:15ஆதி 49:10

அவர்கள் இயேசுவிடம் வந்து, “வரப்போகிறவர் நீர்தானா அல்லது நாங்கள் வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா? என்று கேட்கும்படி, யோவான் ஸ்நானகன் எங்களை உம்மிடம் அனுப்பியிருக்கிறார்” என்றார்கள். லூக் 7:19

அதே வேளையிலே வியாதிப்பட்டவர்கள், நோயுற்றிருந்தவர்கள், தீய ஆவியால் பிடிக்கப்பட்டிருந்தவர்கள் ஆகிய பலரை இயேசு குணமாக்கினார்; பார்வையற்றோராய் இருந்த பலருக்கும் அவர் பார்வையைக் கொடுத்தார். மாற் 3:101 கொரி 11:30-321 இராஜா 8:37எபி 12:6யாக் 5:14-15மத் 4:23மாற் 5:29மாற் 5:34 எனவே அவர் யோவானின் சீடர்களிடம், “நீங்கள் திரும்பிப்போய், கண்டதையும் கேட்டதையும் யோவானுக்கு அறிவியுங்கள்: பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கிறார்கள், குஷ்ட வியாதியுடையோர் குணமடைகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், இறந்தவர் உயிருடன் எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. ஏசா 35:5-6ஏசா 61:1-3லூக் 4:18ஏசா 29:18-19யாக் 2:5அப் 14:8-10அப் 26:18லூக் 7:14-15 என் நிமித்தம் இடறி விழாதவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றார். 1 பேது 2:7-8ஏசா 8:14-15மத் 11:6ரோம 9:32-33மத் 13:57-581 கொரி 1:21-281 கொரி 2:14யோவா 6:60-66

யோவானின் தூதர்கள் புறப்பட்டுப் போனதும், கூடியிருந்த மக்களுடன் இயேசு யோவானைப் பற்றிப் பேசத்தொடங்கினார்: “பாலைவனத்திலே எதைப்பார்க்கப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? எபே 4:14யோவா 1:23லூக் 1:80லூக் 3:22 கொரி 1:17-202 பேது 2:172 பேது 3:17யாக் 1:6-8 இல்லையானால், எதைப்பார்க்கப் போனீர்கள்? சிறப்பான உடை உடுத்திய ஒரு மனிதனையா? இல்லை, விலை உயர்ந்த உடையை உடுத்தி, ஆடம்பரமாக வாழ்பவர்கள் மாளிகைகளிலே இருக்கிறார்கள். 1 இராஜா 10:52இராஜா 1:82 சாமு 19:35எஸ்த 1:11எஸ்த 1:3எஸ்த 4:2எஸ்த 8:15ஏசா 59:17 அப்படியானால், எதைப் பார்ப்பதற்கு அங்கே போனீர்கள்? இறைவாக்கினனையா? ஆம், ஒரு இறைவாக்கினனைவிட மேலானவனையே என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். லூக் 1:76யோவா 5:35லூக் 20:6யோவா 3:26-30லூக் 16:16மத் 11:9-14

“ ‘உமக்கு முன்பாக என்னுடைய தூதனை அனுப்புவேன், மல்கி 3:1லூக் 1:76மாற் 1:2யோவா 1:23லூக் 1:15-17மல்கி 4:5-6மத் 11:10ஏசா 40:3

அவன் உமக்கு முன்பாக உமது வழியை ஆயத்தப்படுத்துவான்.’ 1

நான் உங்களுக்குச் சொல்கிறேன், பெண்களிடத்தில் மனிதர்களாய்ப் பிறந்தவர்களில் யோவானைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் இல்லை; ஆனால் இறைவனுடைய அரசில் சிறியவனாயிருக்கிறவன், அவனைவிடப் பெரியவனாயிருக்கிறான்” என்றார். எபி 11:39-40மத் 11:11மத் 13:16-17கொலோ 1:25-271 பேது 1:10-12எபே 3:8-9லூக் 10:23-24லூக் 9:48

வரி வசூலிப்போர் உட்பட, எல்லா மக்களும் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டபோது, இறைவன் நீதியுள்ளவர் என்று அங்கீகரித்தார்கள்; ஏனெனில், அவர்கள் யோவானிடம் திருமுழுக்கு பெற்றிருந்தார்கள். லூக் 3:12லூக் 7:35அப் 18:25அப் 19:3மத் 21:31-32மத் 3:5-6சங் 51:4வெளி 15:3 ஆனால் பரிசேயரும் மோசேயின் சட்ட வல்லுநர்களும் யோவானிடம் திருமுழுக்கு பெறாததினால், தங்களுக்கான இறைவனுடைய நோக்கத்தைப் புறக்கணித்தார்கள். லூக் 13:342 கொரி 6:1எரே 8:8மத் 22:35அப் 20:27எபே 1:11கலா 2:21ரோம 10:21

பின்னும் கர்த்தர் சொன்னது, “இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இந்த மக்களை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அவர்கள் யாரைப்போல் இருக்கிறார்கள்? மத் 11:16-19புலம் 2:13மாற் 4:30 அவர்கள் சந்தைகூடும் இடங்களில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் கூப்பிட்டு, மத் 11:16-19எரே 5:3-5நீதி 17:16ஏசா 28:9-13ஏசா 29:11-12சகரி 8:5

“ ‘நாங்கள் உங்களுக்காகப் புல்லாங்குழல் ஊதினோம்,

நீங்கள் நடனமாடவில்லை;

நாங்கள் ஒப்பாரி பாடினோம்,

நீங்கள் அழவில்லை,’

என்று சொல்கிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

யோவான் ஸ்நானகன் சிறப்பான உணவைச் சாப்பிடாதவனும், திராட்சை இரசம் குடிக்காதவனுமாக வந்தான். நீங்களோ, ‘அவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது’ என்கிறீர்கள். லூக் 1:15மாற் 1:6அப் 2:13எரே 16:8-10யோவா 10:20யோவா 8:48யோவா 8:52மத் 3:4 மானிடமகனோ விருந்து உணவைச் சாப்பிடுகிறவராகவும், குடிக்கிறவராகவும் வந்தார். நீங்களோ, ‘இவனோ உணவுப்பிரியன், மதுபானப்பிரியன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்று சொல்கிறீர்கள். லூக் 15:2லூக் 7:36யோவா 12:2லூக் 14:1லூக் 19:7மத் 9:11யோவா 2:2லூக் 11:37 ஆனால் ஞானம் சரியானது என்று அதை ஏற்று நடக்கிறவர்களின் செயல்களாலேதான் அது நிரூபிக்கப்படுகிறது” என்றார். நீதி 8:32-36மத் 11:191 கொரி 2:14-15ஓசி 14:9நீதி 17:16லூக் 7:29

பாவியான பெண் இயேசுவுக்கு பரிமளதைலம் பூசுதல்

பரிசேயரில் ஒருவன் தன்னுடன் விருந்து சாப்பிடும்படி இயேசுவை அழைத்திருந்தான். எனவே இயேசு பரிசேயனுடைய வீட்டிற்குப்போய் பந்தியில் உட்கார்ந்திருந்தார். மாற் 14:3-9மத் 26:5-6லூக் 14:1யோவா 11:2-16லூக் 11:37லூக் 7:34 அந்தப் பட்டணத்தில் பாவியாகிய ஒரு பெண் இருந்தாள். இயேசு அந்தப் பரிசேயனுடைய வீட்டில் விருந்து சாப்பிடுகிறார் என்று அவள் கேள்விப்பட்டு, விலை உயர்ந்த நறுமணத்தைலம் உள்ள, வெள்ளைக்கல் குடுவையுடன் அங்கு வந்தாள். மாற் 14:3-9மத் 26:6-13லூக் 5:30லூக் 7:37-39மத் 21:311 பேது 4:181 தீமோ 1:9யோவா 12:1-8 இயேசுவுக்குப் பின்னால் வந்து அவள் அழுதுகொண்டே நின்றாள். மேலும் அவருடைய பாதங்களை தன் கண்ணீரால் நனைத்து, தனது தலைமுடியினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தமிட்டு, பரிமளதைலத்தை ஊற்றினாள். சங் 126:5-6சங் 51:17ஆதி 18:4பிரச 9:8ஏசா 61:3லூக் 7:44-46சங் 6:6-82 கொரி 7:10-11

இயேசுவை விருந்துக்கு அழைத்த பரிசேயன் இதைக் கண்டபோது, “இவர் ஒரு இறைவாக்கினராய் இருந்தால், தன்னைத் தொடுவது யார் என்றும், இவள் எப்படிப்பட்ட பெண் என்றும், இவள் ஒரு பாவி என்பதையும் அறிந்திருப்பாரே” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். லூக் 7:16லூக் 15:2ஏசா 65:5மாற் 7:21நீதி 23:72இராஜா 5:20யோவா 4:19யோவா 7:12

இயேசு அவனைப் பார்த்து, “சீமோனே, நான் உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்” என்றார். எசேக் 33:31யோவா 13:13யோவா 16:19யோவா 16:30யோவா 3:2லூக் 18:18லூக் 20:20-21லூக் 5:22

அவன், “போதகரே சொல்லும்” என்றான்.

அப்பொழுது இயேசு, “வட்டிக்குக் கடன்கொடுக்கும் ஒருவனிடம் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள். ஒருவன் அவனுக்கு ஐந்நூறு வெள்ளிக்காசும் 2 மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்க வேண்டியிருந்தது. லூக் 7:47மத் 18:28மத் 6:12ரோம 5:201 யோவா 1:8-10லூக் 11:4ரோம 3:231 தீமோ 1:15-16 இரண்டு பேரிடமும் திருப்பிக் கொடுக்க பணம் இருக்கவில்லை. எனவே அவன், அவர்கள் இருவருடைய கடன்களையுமே தள்ளுபடி செய்துவிட்டான். அப்படியானால், அவர்களில் யார் அவனிடம் அதிக அன்பாயிருப்பான்?” என்று கேட்டார். அப் 13:38-39கொலோ 3:13தானி 9:18-19எபே 1:7எபே 4:32கலா 3:10ஏசா 43:25ஏசா 44:22

அதற்கு சீமோன், “அதிக கடன் தள்ளுபடி செய்யப்பட்டவனே என்று எண்ணுகிறேன்” என்றான். சங் 116:16-181 கொரி 15:9-101 தீமோ 1:13-162 கொரி 5:14-15லூக் 10:38லூக் 7:47மாற் 12:34

இயேசு அவனிடம், “நீ சரியாகச் சொன்னாய்” என்றார்.

பின்பு அவர், அந்தப் பெண்ணின் பக்கமாகத் திரும்பி, சீமோனுக்குச் சொன்னதாவது: “நீ இந்தப் பெண்ணைப் பார்க்கிறாய் அல்லவா? நான் உனது வீட்டிற்குள் வந்தேன், நீ என் கால்களைக் கழுவ தண்ணீர் தரவில்லை. ஆனால் இவள் தன்னுடைய கண்ணீரினால் என் பாதங்களை நனைத்து, தன் தலைமுடியினால் அவற்றைத் துடைத்தாள். 1 தீமோ 5:10ஆதி 18:4ஆதி 19:2நியாயாதி 19:21ஆதி 43:241 சாமு 25:41யாக் 2:6 நீ எனக்கு முத்தம் கொடுக்கவில்லை, ஆனால் இந்தப் பெண் நான் இங்கு உள்ளே வந்ததிலிருந்து, என் பாதங்களை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறாள். 2 சாமு 15:5ரோம 16:161 தெச 5:262 சாமு 19:391 கொரி 16:20ஆதி 33:4மத் 26:48ஆதி 29:11 நீ என்னுடைய தலைக்கு எண்ணெய் வைக்கவில்லை, ஆனால் இவள் என் பாதங்களில் நறுமண தைலத்தை ஊற்றினாள். சங் 23:5பிரச 9:8மத் 6:172 சாமு 14:2தானி 10:3சங் 104:15ரூத் 3:3ஆமோ 6:6 எனவே நான் உனக்குச் சொல்கிறேன், இவளுடைய அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவள் என்னிடத்தில் அதிகமாக அன்பு கூர்ந்தாளே. ஆனால் சிறிதளவாய் மன்னிப்பைப் பெற்றவன், சிறிதளவாகவே அன்பு காட்டுகிறான்” என்றார். 1 யோவா 4:191 யோவா 3:18கலா 5:6ஏசா 1:18ரோம 5:20யோவா 21:15-17எபே 6:24ஏசா 55:7

அதற்குப் பின்பு இயேசு அவளிடம், “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். மத் 9:2மாற் 2:5லூக் 5:20

அங்கு இருந்த மற்ற விருந்தாளிகள், “பாவங்களை மன்னிக்கின்ற இவன் யார்?” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். லூக் 5:20-21மத் 9:3மாற் 2:7

இயேசு அந்தப் பெண்ணிடம், “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது; சமாதானத்தோடே போ” என்றார். மாற் 5:34லூக் 8:48லூக் 18:42மத் 9:22மாற் 10:52எபே 2:8-10ரோம 5:1-2யாக் 2:14-26