இயேசுவும் யோவான் ஸ்நானகனும்
இயேசு தமது பன்னிரண்டு சீடர்களுக்கு அறிவுரை கூறிமுடித்த பின்பு, அவர் அங்கிருந்து பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்கும் கலிலேயாவிலுள்ள பட்டணங்களுக்குச் சென்றார். ஏசா 61:1-3அப் 10:38லூக் 4:15-21லூக் 8:1மத் 9:351 தெச 4:22 தெச 3:102 தெச 3:6
யோவான் சிறையில் இருக்கையில், கிறிஸ்துவின் கிரியைகளைப்பற்றிக் கேள்விப்பட்டான். அப்போது அவன் தன் சீடர்களை அனுப்பி, மத் 14:3மாற் 6:17லூக் 7:18-35மத் 4:12மத் 9:14அப் 19:1-3யோவா 4:1யோவா 3:24-28 “வரப்போகிறவர் நீர்தானா அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா?” என்று அவரிடம் கேட்கும்படி சொன்னான். யோவா 11:27மல்கி 3:1உபா 18:15-18எபி 10:37மீகா 5:2ஆமோ 9:11-12ஆதி 3:15யோவா 6:14
அதற்கு இயேசு, “நீங்கள் திரும்பிப்போய், கண்டதையும், கேட்டதையும் யோவானுக்கு அறிவியுங்கள்: பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கிறார்கள், குஷ்ட வியாதியுடையோர் குணமடைகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், இறந்தவர் உயிருடன் எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. ஏசா 35:4-6ஏசா 61:1-3ஏசா 42:6-7லூக் 4:18ஏசா 29:18யோவா 14:11-12லூக் 7:21-22யாக் 2:5 என் நிமித்தம் இடறி விழாதவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றார். 1 கொரி 2:14ஏசா 8:14-15மத் 26:31யோவா 6:66யோவா 6:60-61லூக் 11:27-28லூக் 4:23-29மத் 24:10
யோவானின் சீடர்கள் இயேசுவைவிட்டுப் போகும்போது, அவர் கூடியிருந்த மக்களைப் பார்த்து, யோவானைப் பற்றிப் பேசத்தொடங்கினார்: “பாலைவனத்திலே எதைப்பார்க்கப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? யாக் 1:6யோவா 5:35லூக் 8:18எபே 4:14ஆதி 49:4லூக் 7:24-30மாற் 1:3-52 கொரி 1:17-18 இல்லையென்றால் எதைப்பார்க்கப் போனீர்கள்? சிறப்பான உடை உடுத்திய ஒரு மனிதனையா? இல்லை, சிறப்பான உடைகளை உடுத்தியிருப்பவர்கள் அரசரின் அரண்மனைகளில் அல்லவா இருக்கிறார்கள். மத் 3:42இராஜா 1:82 கொரி 11:27ஏசா 20:2சகரி 13:41 கொரி 4:11வெளி 11:3 அப்படியானால், எதைப் பார்ப்பதற்கு அங்கே போனீர்கள்? இறைவாக்கினனையா? ஆம், ஒரு இறைவாக்கினனைவிட மேலானவனையே என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். லூக் 1:76மத் 14:5லூக் 1:15-17மத் 17:12-13மத் 21:24-26மாற் 9:11-13மத் 11:13-14
“ ‘உமக்கு முன்பாக நான் என்னுடைய தூதனை அனுப்புவேன்; மல்கி 3:1ஏசா 40:3மல்கி 4:5மாற் 1:2லூக் 7:26-27யோவா 1:23மத் 3:3
அவன் உமக்கு முன்பாக உமது வழியை ஆயத்தப்படுத்துவான்,’ 1
என்று இவனைப் பற்றியே இது எழுதப்பட்டுள்ளது.
“நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்: மனிதர்களாய்ப் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைவிடப் பெரியவன் ஒருவனும் இல்லை; ஆனால், பரலோக அரசில் சிறியவனாயிருக்கிறவன், அவனைவிடப் பெரியவனாயிருக்கிறான். லூக் 7:28எபே 3:8யோவா 1:15மத் 3:11மத் 5:191 கொரி 15:91 பேது 1:10எபி 11:40 யோவான் ஸ்நானகனின் நாட்கள் தொடங்கி, இந்நாள்வரையிலும் பரலோக அரசு வன்முறைக்கு உள்ளாகிறது. வன்முறையாளர் அதைக் கைப்பற்றிக்கொள்கின்றனர். லூக் 16:16லூக் 13:24எபே 6:11-13பிலி 2:12யோவா 6:27லூக் 7:29-30மத் 21:23-32 ஏனெனில் யோவான் வரை எல்லா இறைவாக்கினராலும், மோசேயின் சட்டத்தினாலும் இறைவாக்கு உரைக்கப்பட்டுள்ளது. மத் 5:17-18ரோம 3:21அப் 13:27அப் 3:22-24லூக் 24:44லூக் 24:27மல்கி 4:6யோவா 5:46-47 வரவேண்டியிருந்த எலியா இவனே. நீங்கள் இதை ஏற்றுக்கொள்ள விரும்பினால் ஏற்றுக்கொள்ளுங்கள். மல்கி 4:5மாற் 9:11-13மத் 17:10-13லூக் 1:17யோவா 1:21-231 கொரி 3:2எசேக் 2:5யோவா 16:12 கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும். மத் 13:9லூக் 8:8மாற் 4:23மத் 13:43மாற் 4:9லூக் 14:35வெளி 2:7வெளி 3:13
“இந்தத் தலைமுறையை நான் யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தைகூடும் இடங்களில் உட்கார்ந்திருந்து, விளையாடுவதற்கு மற்றவர்களைச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறவர்கள்: லூக் 7:31-35புலம் 2:13லூக் 13:18மத் 12:34மத் 23:36மாற் 4:30மத் 24:34
“ ‘நாங்கள் உங்களுக்காகப் புல்லாங்குழல் ஊதினோம், ஏசா 28:9-13ஏசா 30:29எரே 9:17-20எரே 31:4மத் 9:151 கொரி 9:19-231 இராஜா 1:40லூக் 15:25
நீங்கள் நடனமாடவில்லை;
ஒப்பாரி பாடினோம்,
நீங்கள் துக்கங்கொண்டாடவில்லை,’
என்று சொல்லுகிற பிள்ளைகளுக்கே ஒப்பிடுவேன்.
“ஏனெனில் யோவான் சிறப்பான உணவைச் சாப்பிடாதவனும், குடிக்காதவனுமாக வந்தான்; அவர்களோ, ‘அவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது’ என்கிறார்கள். லூக் 1:15மத் 3:4யோவா 10:20மத் 10:25எரே 15:17யோவா 8:48ஓசி 9:7யோவா 7:20 மானிடமகனோ 2 விருந்து உணவைச் சாப்பிடுகிறவராகவும், குடிக்கிறவராகவும் வந்தார். அவரைப் பார்த்து, ‘இவனோ உணவுப்பிரியன், மதுபானப்பிரியன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்று சொல்கிறீர்கள். ஆனால் ஞானம் சரியானது என்று அதை ஏற்று நடக்கிறவர்களின் செயல்களாலேதான் அது நிரூபிக்கப்படுகிறது” என்றார். லூக் 7:34-36மத் 9:10-11லூக் 15:1-2லூக் 19:7லூக் 5:29-30லூக் 14:11 கொரி 1:24-29லூக் 7:29
மனந்திரும்பாத பட்டணங்கள்
சில பட்டணங்களில் இயேசு அநேக அற்புதங்களைச் செய்தும், அப்பட்டணத்து மக்கள் மனந்திரும்பவில்லை. அதனால் அவர் அந்தப் பட்டணங்களைக் கடிந்துகொள்ளத் தொடங்கினார். லூக் 10:13-152 தீமோ 2:25-26எரே 8:6ஏசா 1:2-5வெளி 9:20-21வெளி 2:21மத் 21:28-32சங் 81:11-13 “கோராசினே, உனக்கு ஐயோ! பெத்சாயிதாவே, உனக்கு ஐயோ! உங்களில் செய்யப்பட்ட அற்புதங்கள் தீருவிலும், சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே மனந்திரும்பி இருப்பார்கள்; துக்கவுடை உடுத்தி, சாம்பலிலும் உட்கார்ந்திருப்பார்கள். எசேக் 3:6-7அப் 12:20யோவா 12:21யோபு 42:6லூக் 9:10மத் 15:21மாற் 6:45யோவா 1:44 ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளிலே தீருவுக்கும் சீதோனுக்கும் நடக்கப்போவதைப் பார்க்கிலும், உங்களுக்கு நடக்கப்போவது கடினமானதாயிருக்கும். மத் 11:24எபி 10:26-31மத் 10:151 யோவா 4:17லூக் 12:47-48மத் 12:36ஆமோ 1:9-10எசேக் 26:1-21 கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லவே இல்லை, நீ பாதாளம்வரை 3 கீழே தாழ்த்தப்படுவாய். உன்னிலே செய்யப்பட்ட அற்புதங்கள் சோதோமிலே செய்யப்பட்டிருந்தால், இந்நாள்வரை அது அழியாது இருந்திருக்கும். ஏசா 14:13-15யோவா 4:46-54ஆதி 13:13மத் 4:13வெளி 11:82 பேது 2:4-9அப் 2:27எசேக் 16:48-50 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளிலே சோதோம் நாட்டுக்கு நடக்கப்போவதைப் பார்க்கிலும், உங்களுக்கு நடக்கப்போவது கடினமானதாயிருக்கும்” என்றார். மத் 10:15மத் 11:22மாற் 6:11புலம் 4:6லூக் 10:12
களைப்புற்றோருக்கு ஆறுதல்
அவ்வேளையில் இயேசு சொன்னதாவது: “பிதாவே, பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் இந்தக் காரியங்களை மறைத்து, குழந்தைகளுக்கு நீர் அவற்றை வெளிப்படுத்தியபடியால், உம்மைத் துதிக்கிறேன். ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாய் காணப்பட்டது. மத் 21:16சங் 8:2மத் 16:17லூக் 10:21-241 கொரி 1:18-29மத் 18:3-4ரோம 11:8-101 கொரி 2:6-8 ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாயிருந்தது. 2 தீமோ 1:9எபே 3:11ஏசா 46:10எபே 1:11எபே 1:9யோபு 33:13லூக் 10:21ரோம 11:33-36
“என் பிதாவினால் எல்லாம் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிதாவைத் தவிர வேறொருவனும் மகனை அறியான், மகனைத் தவிர வேறொருவனும் பிதாவை அறியான்; யாருக்கெல்லாம் பிதாவை வெளிப்படுத்த மகன் தெரிந்துகொள்கிறாரோ, அவர்களைத்தவிர, வேறொருவரும் பிதா இன்னாரென்று அறியார்கள். யோவா 14:6-9மத் 28:18லூக் 10:222 யோவா 1:9யோவா 17:25-261 யோவா 2:23யோவா 10:151 யோவா 5:19-20
“வருத்தத்துடன் மனப்பாரங்களை சுமந்து களைப்புற்றிருக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத் 11:29யோவா 7:37யோவா 6:37கலா 5:1ஏசா 55:1-3வெளி 22:17ஏசா 48:17-18எரே 6:16 எனது நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாவிலே ஆறுதல் பெறுவீர்கள். ஏனெனில், நான் தயவும் இருதயத்தில் தாழ்மையும் உடையவராய் இருக்கிறேன். எரே 6:161 யோவா 2:6பிலி 2:7-8யோவா 13:15லூக் 6:46-48மத் 7:241 பேது 2:21-23யோவா 15:10-14 எனது நுகம் இலகுவானது, எனது சுமை எளிதானது.” 1 யோவா 5:3யோவா 16:33பிலி 4:132 கொரி 12:9-10கலா 5:1மீகா 6:82 கொரி 1:4-52 கொரி 4:17