மாற்கு 3

Mark 3

இயேசு யூதருடைய ஓய்வுநாளில் குணப்படுத்துதல்

இயேசு மறுபடியும் ஜெப ஆலயத்திற்குள் சென்றார். அங்கு சுருங்கிய கையுடைய ஒருவன் இருந்தான். மத் 12:9-14லூக் 6:6-11மாற் 1:211 இராஜா 13:4யோவா 5:3 சிலர் இயேசுவைக் குற்றப்படுத்துவதற்கான காரணத்தைத் தேடி, ஓய்வுநாளிலே அவர் அவனைக் குணமாக்குவாரோ என்று கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சங் 37:32லூக் 14:1லூக் 6:7லூக் 20:20தானி 6:4லூக் 11:53-54ஏசா 29:20-21எரே 20:10 இயேசு சுருங்கிய கையுடையவனிடம், “எல்லோருக்கும் முன்பாக நீ எழுந்து நில்” என்றார். பிலி 1:28-301 கொரி 15:581 பேது 4:1தானி 6:10கலா 6:9ஏசா 42:4யோவா 9:4லூக் 6:8

அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளிலே மோசேயின் சட்டத்தின்படி செய்யத் தகுந்தது எது: நன்மை செய்வதா அல்லது தீமை செய்வதா, ஒருவனின் உயிரைக் காப்பாற்றுவதா அல்லது கொல்லுவதா?” என்று கேட்டார். அவர்களோ, ஒன்றும் பேசாமல் இருந்தார்கள். லூக் 6:9மத் 12:10-12லூக் 14:1-5ஓசி 6:6லூக் 13:13-17மாற் 2:27-28மாற் 9:34

அவர்களுடைய பிடிவாத இருதயத்தின் நிமித்தம் வருந்தி, சுற்றியிருந்த அவர்களை இயேசு கோபத்துடன் பார்த்து அவனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவன் அப்படியே தன் கையை நீட்டினான், அது முற்றிலுமாக குணமடைந்தது. லூக் 6:10எபே 4:181 இராஜா 13:6ரோம 11:25மத் 12:13மத் 13:14-15ரோம 11:7-102 கொரி 3:14 அப்பொழுது பரிசேயர்கள் வெளியே போய், இயேசுவைக் கொலை செய்யும்படி, ஏரோதியர்களுடனே 1 சதி செய்தார்கள். மத் 22:16மாற் 12:13மத் 12:14யோவா 11:53லூக் 20:19-20லூக் 6:11மாற் 8:15சங் 109:3-4

மக்கள் கூட்டம் இயேசுவைப் பின்பற்றுதல்

இயேசு தம்முடைய சீடர்களுடனே புறப்பட்டு, கடற்கரைக்குச் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். லூக் 6:17மத் 4:25மத் 12:15யோவா 11:53-54யோசு 20:7லூக் 23:5லூக் 6:12மத் 10:23 இயேசு செய்தவற்றை எல்லாம் கேள்விப்பட்டு, அநேக மக்கள் யூதேயா, எருசலேம், இதுமேயா ஆகிய இடங்களிலிருந்தும், யோர்தான் ஆற்றுக்கு அப்பாலுள்ள பகுதியிலிருந்தும், தீரு, சீதோன் பட்டணங்களின் சுற்றுப்புறங்களிலிருந்தும், இயேசுவினிடத்திற்கு வந்தார்கள். எசேக் 35:15எசேக் 36:5ஏசா 34:5மத் 11:21எசேக் 26:1-21ஏசா 23:1-18யோசு 13:8-14யோசு 19:28-29 மக்கள் பெருங்கூட்டமாய் கூடியிருந்தபடியால், அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு, தமக்கென்று ஒரு படகை ஆயத்தம்பண்ணும்படி, இயேசு தமது சீடருக்குச் சொன்னார். யோவா 6:15மாற் 5:30 அநேகரை இயேசு குணமாக்கியபடியால், வியாதிப்பட்டிருந்தவர்கள் அவரைத் தொடுவதற்கு முன்னே நெருக்கிக் கொண்டுவந்தார்கள். மத் 14:36மாற் 6:56அப் 19:11-12மத் 4:23அப் 5:15லூக் 7:2ஆதி 12:17எபி 12:6 தீய ஆவி பிடித்திருந்தவர்கள் இயேசுவைக் கண்டபோது, அவருக்கு முன்பாகக் கீழே விழுந்து, “நீர் இறைவனின் மகன்” என்று சத்தமிட்டார்கள். லூக் 4:41லூக் 8:28மாற் 1:23-24யாக் 2:19மத் 4:3மத் 8:29அப் 16:17மத் 4:6 ஆனால் இயேசுவோ தான் யாரென ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று தீய ஆவிகளுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார். மத் 12:16மாற் 1:25மாற் 1:34மத் 8:4அப் 16:18

இயேசு அப்போஸ்தலர்களை நியமித்தல்

பின்பு இயேசு ஒரு மலையின்மேல் ஏறிப்போய், தாம் விரும்பியவர்களை தம்மிடம் வரும்படி அழைத்தார்; அவர்கள் அவரிடத்தில் வந்தார்கள். லூக் 6:12-16லூக் 9:1மத் 10:1-4மத் 5:1மாற் 6:7 இயேசு பன்னிரண்டு பேரை நியமித்து, அவர்களை அப்போஸ்தலர் என அழைத்தார்; தம்முடனேகூட இருக்கும்படியாகவும், நற்செய்தியை அறிவிக்கும்படி தாம் அவர்களை அனுப்பும்படியாகவும், அப் 1:8யோவா 15:16லூக் 9:1-6அப் 1:24-25கலா 1:1லூக் 10:1-11கலா 1:15-20லூக் 24:47 பிசாசுகளைத் துரத்தும் அதிகாரம் உடையவர்களாகவும் அவர்களை நியமித்தார்.

இயேசு நியமித்தப் பன்னிரண்டு பேரும் இவர்களே. யோவா 1:42அப் 1:131 கொரி 1:121 கொரி 3:221 கொரி 9:52 பேது 1:1கலா 2:7-9மத் 10:2-4

அவர் பேதுரு எனப் பெயரிட்ட சீமோன்,

செபெதேயுவின் மகன் யாக்கோபு, அவனுடைய சகோதரன் யோவான் இவர்கள் இருவருக்கும் பொவனெர்கேஸ் என்று பெயரிட்டார், “இடிமுழக்கத்தின் மகன்கள்” என்பதே அதன் அர்த்தமாகும். எபி 4:12எரே 23:29மாற் 14:33மாற் 5:37அப் 12:1ஏசா 58:1யோவா 21:2யோவா 21:20-25

அந்திரேயா, அப் 1:13மாற் 2:14யாக் 1:1மத் 9:91 கொரி 15:71 கொரி 9:5அப் 15:13அப் 21:18

பிலிப்பு,

பர்தொலொமேயு,

மத்தேயு,

தோமா,

அல்பேயுவின் மகன் யாக்கோபு,

ததேயு,

கானானியனாகிய சீமோன்,

இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத். அப் 1:16-25யோவா 12:4-6யோவா 13:2யோவா 13:26-30யோவா 6:64யோவா 6:71மத் 26:14-16மத் 26:47

இயேசுவும் பெயல்செபூலும்

பின்பு இயேசு, ஒரு வீட்டுக்குச் சென்றார்; மக்கள் மீண்டும் பெருங்கூட்டமாய் வந்ததினால், அவரும் அவருடைய சீடர்களும் சாப்பிடக்கூட இயலாதிருந்தார்கள். மாற் 6:31யோவா 4:31-34லூக் 6:17மாற் 3:7மாற் 3:9மாற் 7:17மாற் 9:28 இயேசுவின் குடும்பத்தார் இதைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, “அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது” என்று சொல்லி, அவரைப் பிடிக்கப் போனார்கள். அப் 26:24யோவா 10:20யோவா 7:3-10மாற் 3:312 கொரி 5:132இராஜா 9:11ஓசி 9:7எரே 29:26

எருசலேமிலிருந்து வந்த மோசேயின் சட்ட ஆசிரியர்கள், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது! பிசாசுகளின் தலைவனாலேயே இவன் பிசாசுகளைத் துரத்துகிறான்” என்றார்கள். மத் 10:25மத் 15:1மத் 12:24மத் 9:34யோவா 7:20யோவா 8:48யோவா 8:52லூக் 11:15

எனவே இயேசு அவர்களை அழைத்து, அவர்களோடு உவமைகள் மூலமாய் பேசினார், “சாத்தானைத் துரத்த சாத்தானால் எப்படி முடியும்? லூக் 11:17-23மத் 12:25-30மத் 13:34மத் 4:10மாற் 4:2சங் 49:4 ஒரு அரசு தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுமானால், அந்த அரசு நிலைபெறாது. சகரி 11:141 கொரி 1:10-132 சாமு 20:12 சாமு 20:6எசேக் 37:22ஏசா 19:2-31 இராஜா 12:16-20எபே 4:3-6 ஒரு குடும்பம் தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுமானால், அந்தக் குடும்பம் நிலைபெறாது. யாக் 3:16கலா 5:15சங் 133:1ஆதி 37:4ஆதி 13:7-8 எனவே சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழுந்து பிளவுபட்டால், அவனால் நிலைத்து நிற்கமுடியாது; அவனுடைய முடிவு வந்துவிடும். முதலில் ஒரு பலமுள்ளவனைக் கட்டிப்போடாமல், அந்த பலமுள்ளவனுடைய வீட்டிற்குள் புகுந்து, அவனுடைய உடைமைகளை எவராலும் அள்ளிக்கொண்டு போகமுடியாது. அவனைக் கட்டிப்போட்ட பின்பே, அவனுடைய வீட்டைக் கொள்ளையிடமுடியும். ஏசா 49:24-26மத் 12:29லூக் 11:21-23எபே 6:10-13வெளி 20:1-31 யோவா 4:4ஏசா 53:12ஏசா 27:1 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், மனிதர்களுடைய எல்லாப் பாவங்களும், அவர்கள் பேசும் எல்லா அவதூறுகளும், அவர்களுக்கு மன்னிக்கப்படும். லூக் 12:10மத் 12:31-321 யோவா 5:16மாற் 3:28-30எபி 6:4-8எபி 10:26-31 ஆனால் பரிசுத்த ஆவியானவரை எதிர்த்து அவதூறு பேசுகிறவர்களுக்கு, ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டாது; நித்தியமான பாவத்தைச் செய்த குற்றவாளியாகிறார்கள். லூக் 12:10மத் 12:31-322 தெச 1:9மத் 25:46யூதா 1:13மாற் 12:40யூதா 1:7

“தீய ஆவி அவரைப் பிடித்திருக்கிறது” என்று அவர்கள் தம்மைப் பற்றி சொன்னதினாலேயே இயேசு இப்படிச் சொன்னார். யோவா 10:20மாற் 3:22

அப்பொழுது இயேசுவின் தாயும் அவருடைய சகோதரர்களும் அங்கு வந்தார்கள். அவர்கள் வெளியே நின்று, இயேசுவை அழைத்துவர ஆளனுப்பினார்கள். லூக் 8:19-21மத் 12:46-50 மக்கள் பெருங்கூட்டமாய் அவரைச் சுற்றியிருந்தார்கள். அப்போது, போனவர்கள் அவரிடம், “உமது தாயும், உமது சகோதரர்களும் உம்மைத் தேடிவந்து வெளியே நிற்கிறார்கள்” என்றார்கள்.

அதற்கு இயேசு அவர்களிடம், “என் தாயும் என் சகோதரர்களும் யார்?” என்றார். உபா 33:9மாற் 3:21மாற் 6:32 கொரி 5:16யோவா 2:4யோவா 7:3-5லூக் 2:49

பின்பு, இயேசு தம்மைச் சூழ்ந்து உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து, “இதோ, என் தாயும், என் சகோதரர்களும் இவர்களே! மத் 12:49-50லூக் 11:27-28ரோம 8:29மத் 25:40-45எபி 2:11-12யோவா 20:17மத் 28:10சங் 22:22 இறைவனுடைய விருப்பத்தைச் செய்கிறவர்களே, என் சகோதரனும் சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்றார். 1 யோவா 2:17மத் 7:211 யோவா 3:22-23யோவா 7:17யாக் 1:25