சுத்தமும் அசுத்தமும்
ஒரு நாள் பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியரில் சிலரும் எருசலேமிலிருந்து ஒன்றாய் வந்து, இயேசுவைச் சுற்றி நின்றார்கள். மத் 15:1-20மாற் 3:22லூக் 11:53-54லூக் 5:17 இயேசுவின் சீடர்களில் சிலர் முறைப்படி கை கழுவாமல், அசுத்தமான கைகளினால் உணவு சாப்பிடுவதை அவர்கள் கண்டார்கள். அப் 10:28மத் 7:3-5ரோம 14:14அப் 10:14-15அப் 11:8தானி 6:4-5மத் 23:23-25 பரிசேயரும், யூதர் எல்லோரும் முன்னோரின் பாரம்பரிய முறைப்படி, கைகளைக் கழுவினாலன்றி சாப்பிடமாட்டார்கள். கலா 1:14மாற் 7:13கொலோ 2:21-23கொலோ 2:81 பேது 1:18மத் 15:2-6மாற் 7:5மாற் 7:7-10 சந்தைகூடும் இடங்களிலிருந்து வரும்போது தங்களைக் கழுவாமல் அவர்கள் சாப்பிடுவதில்லை. அது தவிர குவளைகள், கிண்ணங்கள், வெண்கலப் பாத்திரங்கள் ஆகியவற்றைக் கழுவுவது போன்ற அநேக பாரம்பரிய முறைகளையும் கைக்கொண்டார்கள். எபி 9:10லூக் 11:38-39மத் 23:25ஏசா 1:16யாக் 4:8எரே 4:14யோவா 2:61 யோவா 1:7
எனவே பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியரும் இயேசுவிடம், “உமது சீடர்கள் முன்னோரின் பாரம்பரிய முறைப்படி நடந்து கொள்ளாதிருப்பது ஏன்? அவர்கள் ‘அசுத்தமான’ கைகளினால் உணவு சாப்பிடுகிறார்களே” என்றார்கள். 2 தெச 3:6அப் 21:21அப் 21:24கலா 1:14மத் 15:2மாற் 2:16-18ரோம 4:122 தெச 3:11
அதற்கு இயேசு பதிலாக, “வேஷக்காரராகிய உங்களைக்குறித்து சரியாகவே இறைவாக்கினன் ஏசாயா இறைவாக்குரைத்தான்; அவர் எழுதியிருக்கிறதாவது: ஏசா 29:13தீத் 1:16மத் 15:7-9எசேக் 33:312 தீமோ 3:5மத் 23:13-15யாக் 2:14-17யோவா 5:42
“ ‘இந்த மக்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்.
ஆனால் அவர்கள் இருதயமோ என்னைவிட்டுத் தூரமாயிருக்கிறது.
அவர்கள் வீணாகவே என்னை ஆராதிக்கிறார்கள்; ஏசா 29:13மத் 15:9கொலோ 2:22யாக் 1:26மத் 6:71 தீமோ 4:1-3தீத் 3:91 சாமு 12:21
அவர்களுடைய போதனைகளோ, மனிதர்களின் ஒழுங்குவிதிகளே.’ 1
நீங்களோ, இறைவனுடைய கட்டளைகளைக் கைவிட்டு, மனிதரின் பாரம்பரிய முறைகளையே பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார். மாற் 7:3-4ஏசா 1:12
மேலும், அவர் அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் உங்கள் பாரம்பரிய முறைகளைக் கைக்கொள்வதற்காக 2, இறைவனின் கட்டளைகளைப் புறக்கணிப்பதில் மிகவும் புத்திசாலிகள். ஏசா 29:13கலா 2:21எரே 44:16-17ஏசா 24:5மத் 15:3-6சங் 119:126மாற் 7:13மாற் 7:3 ஏனெனில் மோசே, ‘உனது தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், 3 தனது தகப்பனையோ தாயையோ சபித்தால் அவன் கொல்லப்படவேண்டும்’ 4 என்றும் சொல்லியிருக்கிறார். யாத் 21:17யாத் 20:12உபா 5:16லேவி 20:9மத் 15:4மாற் 10:19உபா 27:16நீதி 20:20 ஆனால் நீங்களோ, ஒருவன் தன் தாய் தகப்பனைப் பார்த்து, ‘என்னிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய உதவியை காணிக்கையாக 5 இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டேன்’ என்று அவன் சொன்னால், அதுபோதும் என்கிறீர்கள். மத் 23:181 தீமோ 5:4-8மத் 15:5 அதற்குப் பின்பு தன் தகப்பனுக்கோ, தாய்க்கோ எந்த உதவியையும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்விதமாய், நீங்கள் கைக்கொண்டுவரும் பாரம்பரிய முறையினால், இறைவனுடைய வார்த்தையை செல்லாததாக்குகிறீர்கள். அத்துடன், நீங்கள் இவ்விதமான பல காரியங்களையும் செய்கிறீர்கள்” என்றார். மாற் 7:9தீத் 1:14ஏசா 8:20மத் 5:17-20ஓசி 8:12எரே 8:8-9மத் 15:6எசேக் 18:14
மேலும், இயேசு மக்கள் கூட்டத்தைத் தன்னிடம் அழைத்துச் சொன்னதாவது: “நீங்கள் ஒவ்வொருவரும் எனக்குச் செவிகொடுத்து, இதை விளங்கிக்கொள்ளுங்கள். மத் 15:10நீதி 8:5அப் 8:30ஏசா 6:91 இராஜா 18:211 இராஜா 22:28லூக் 12:54-57சங் 94:8 மனிதனுக்கு வெளியே இருப்பது எதுவும், அவனுக்குள்ளே போவதினால் அவன் அசுத்தமாவதில்லை. ஆனால், மனிதனுக்குள்ளேயிருந்து வெளியே வருகிறவைகளே, அவனை அசுத்தப்படுத்துகின்றன. நீதி 4:23லேவி 11:42-47தீத் 1:15எபி 13:9மத் 12:34எபி 9:10மாற் 7:18-23ரோம 14:17 கேட்கிறதற்குக் காதுகளுள்ளவன் கேட்கட்டும்” என்று கூறினார். 6
பின் மக்கள் கூட்டத்தைவிட்டு, அவர் புறப்பட்டு வீட்டிற்குள் சென்றார். அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரிடத்தில், அவர் சொன்ன இந்த உவமையின் கருத்து என்ன? என்று கேட்டார்கள். மத் 15:15மத் 13:36மாற் 9:28மத் 13:10மாற் 4:10மாற் 4:34 அவர் அவர்களிடம், “நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்களோ? ஒரு மனிதனுக்கு வெளியே இருந்து அவனுக்கு உள்ளே போகிறவை, அவனை அசுத்தப்படுத்துவதில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? மத் 15:16-17எபி 5:11ஏசா 28:9-10லூக் 24:25மத் 16:111 கொரி 3:2எரே 5:4-5யோவா 3:10 ஏனெனில், அது அவனுடைய இருதயத்திற்குள் போகாமல், அவனுடைய வயிற்றுக்குள் போய், அவனது உடலைவிட்டு வெளியேறுகிறது” என்றார். இப்படிச் சொல்லி, இயேசு எல்லா உணவுப் பொருட்களும் சுத்தமானது என்று அறிவித்தார். மத் 15:171 கொரி 6:13அப் 10:15அப் 11:9கொலோ 2:16கொலோ 2:21-22லூக் 11:41ரோம 14:1-12
இயேசு தொடர்ந்து: “ஒரு மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருகிறவைகள் அவரை ‘அசுத்தப்படுத்தும்.’ யாக் 3:6யாக் 1:14-15யாக் 4:1மாற் 7:15மத் 12:34-37சங் 41:6மீகா 2:1எபி 7:6 ஏனெனில், மனிதருடைய இருதயங்களிலிருந்தே முறைகேடான பாலுறவு, களவு, கொலை, எரே 17:9யாக் 4:1-3ரோம 8:7-8கலா 5:19-21மத் 15:19அப் 8:22எசேக் 38:10யாக் 2:4 விபசாரம், பேராசை, அநியாயம், வஞ்சகம், காமவெறி, பொறாமை, அவதூறு, கர்வம், மதிகேடு போன்ற தீய சிந்தனைகள் வருகின்றன; மத் 20:151 பேது 2:151 பேது 5:52 கொரி 10:5பிரச 7:25மத் 6:23ஒபதி 1:3-41 சாமு 18:8-9 தீமையான இவை யாவும் உள்ளத்திலிருந்து வருகின்றன. இவையே, மனிதரை அசுத்தப்படுத்துகின்றன” என்றார். மாற் 7:151 கொரி 3:17தீத் 1:15யூதா 1:8மாற் 7:18
சீரோபேனிக்கியாப் பெண்ணின் விசுவாசம்
இயேசு அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, தீரு பட்டணத்தின் சுற்றுப் புறத்திற்குச் சென்றார். அவர் ஒரு வீட்டிற்குள் போய், தான் அங்கு இருப்பதை ஒருவரும் அறியாதிருக்க வேண்டும் என்று விரும்பினார்; ஆனால், அவர் அங்கிருப்பதை மறைக்க முடியவில்லை. மத் 15:21-28மத் 11:21எசேக் 28:2மாற் 6:31-32மாற் 3:7-81 தீமோ 5:25மத் 9:28எசேக் 28:21-22 ஒரு பெண் இயேசுவைக்குறித்து கேள்விப்பட்ட உடனே, அவரிடத்தில் வந்து அவருடைய பாதத்தில் விழுந்தாள். அவளது மகளை ஒரு அசுத்த ஆவி பிடித்திருந்தது. மத் 15:22அப் 10:25-26மாற் 1:40மாற் 5:22-23மாற் 5:33மாற் 9:17-23லூக் 17:16வெளி 22:8-9 அவள் சீரோபேனிக்கியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட, ஒரு கிரேக்கப் பெண். தனது மகளிடத்திலிருக்கும் அந்தப் பிசாசைத் துரத்திவிடும்படி, அவள் இயேசுவைக் கெஞ்சிக் கேட்டாள். மத் 15:22கொலோ 3:11கலா 3:28ஏசா 49:12
இயேசு அவளிடம், “முதலில் பிள்ளைகள், அவர்களுக்கு வேண்டியதைச் சாப்பிடட்டும். ஏனெனில் பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது சரியல்ல” என்றார். மத் 15:23-28மத் 7:6அப் 22:21எபே 2:12மத் 10:5ரோம 15:8
அதற்கு அவள், “ஆம், ஆண்டவரே, ஆனால் மேஜையின்கீழ் இருக்கும் நாய்க்குட்டிகள், பிள்ளைகள் சிந்தும் அப்பத்துண்டுகளைத் தின்னுமே” என்று பதிலளித்தாள். ரோம 10:12ரோம 3:29அப் 11:17-18ஏசா 45:22லூக் 15:30-32லூக் 7:6-8எபே 2:12-14எபே 3:8
அப்பொழுது இயேசு அவளிடம், “உனது இந்தப் பதிலே போதும், நீ போகலாம்; அந்தப் பிசாசு உன் மகளை விட்டுப் போய்விட்டது” என்றார். மத் 5:3ஏசா 66:2மத் 8:9-131 யோவா 3:8ஏசா 57:15-16
அப்படியே அவள் வீட்டிற்குப்போய், தனது மகள் படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டாள். பிசாசு அவளைவிட்டுப் போயிருந்தது. 1 யோவா 3:8யோவா 4:50-52
செவிடும் ஊமையுமான மனிதன் சுகமடைதல்
அதற்குப் பின்பு இயேசு, தீருவின் சுற்றுப் புறத்தை விட்டுப் புறப்பட்டு, சீதோன் வழியாகப்போய், தெக்கப்போலி 7 பகுதியிலுள்ள கலிலேயாக் கடல் பகுதியை அடைந்தார். மாற் 5:20மத் 15:29-31மத் 4:25மாற் 7:24மத் 11:21மத் 4:18 அங்கே சிலர் அவரிடத்தில் செவிடனும், ஊமையுமாயிருந்த ஒருவனைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். அவன்மேல் இயேசு தமது கைகளை வைக்க வேண்டுமென்று அவர்கள் அவரைக் கெஞ்சிக் கேட்டார்கள். லூக் 11:14மாற் 5:23மத் 9:32-33
இயேசு மக்கள் கூட்டத்திலிருந்து அவனைத் தனிமையான ஒரு இடத்திற்கு கூட்டிக்கொண்டுபோய், அவனுடைய காதுகளுக்குள் தமது விரல்களை வைத்தார். அதற்குப் பின்பு அவர் உமிழ்ந்து, அவனது நாவைத் தொட்டார். மாற் 8:23யோவா 9:6-7மாற் 5:401 இராஜா 17:19-222இராஜா 4:33-342இராஜா 4:4-6 அவர் ஆழ்ந்த பெருமூச்சுடன் வானத்தை நோக்கிப்பார்த்து, “எப்பத்தா!” என்றார். “திறக்கப்படுவாயாக” என்பதே அதன் அர்த்தமாகும். யோவா 11:41மாற் 5:41அப் 9:34அப் 9:40யோவா 11:33மாற் 6:41யோவா 11:43மாற் 8:12 உடனே, அவனுடைய காதுகள் திறவுண்டன. அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் தெளிவாய் பேசத் தொடங்கினான். ஏசா 35:5-6ஏசா 32:3-4மத் 11:5மாற் 2:12சங் 33:9
இதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று, இயேசு அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஆனால் அவர் சொல்லவேண்டாம் என்று எவ்வளவு அதிகமாய்ச் சொன்னாரோ, அவ்வளவு அதிகமாய் அந்தச் செய்தியை அவர்கள் பரப்பினார்கள். மத் 8:4மாற் 1:44-45மாற் 3:12மாற் 5:43மாற் 8:26 மக்களோ வியப்படைந்து மலைத்துப்போனார்கள். அவர்கள், “இயேசு எல்லாவற்றையும் நன்றாகச் செய்தார்; அவர் செவிடர்களைக் கேட்கவும், ஊமையர்களைப் பேசவும் செய்கிறாரே” என்றார்கள். மாற் 6:51யாத் 4:10-11மாற் 4:41மாற் 5:42ஆதி 1:31மாற் 2:12சங் 139:14அப் 14:11