மத்தேயு 18

Matthew 18

பரலோக அரசில் யார் பெரியவன்

அந்த வேளையில் சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பரலோக அரசில் யார் பெரியவன்?” என்று கேட்டார்கள். மாற் 9:33-37லூக் 9:46-48மத் 20:20-28லூக் 22:24-27பிலி 2:3மத் 23:11மாற் 10:35-45மாற் 10:14-15

அவர் ஒரு சிறுபிள்ளையை தன்னிடமாக அழைத்து, அவர்கள் நடுவில் நிறுத்தினார். மத் 19:13-141 இராஜா 3:7மாற் 9:36-37எரே 1:7 அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நீங்கள் மனமாற்றம் அடைந்து சிறுபிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் ஒருபோதும் பரலோக அரசிற்குள் செல்லமாட்டீர்கள். மாற் 10:14-151 பேது 2:2மத் 19:141 கொரி 14:20லூக் 18:16-17சங் 131:2யோவா 3:5யோவா 3:3 ஆதலால், இந்தச் சிறுபிள்ளையைப்போல் தன்னைத் தாழ்த்துகிறவனே பரலோக அரசில் பெரியவனாய் இருக்கிறான்” என்றார். யாக் 4:10மாற் 10:43லூக் 14:11லூக் 9:48மத் 20:26-27மத் 23:11-121 பேது 5:5ஏசா 57:15 “இப்படி ஒரு சிறுபிள்ளையை என் பெயரில் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னையும் ஏற்றுக்கொள்ளுகிறான். மத் 25:40யோவா 13:20மாற் 9:37கலா 4:14லூக் 17:1-2லூக் 9:48மத் 10:40-42மத் 25:45

பாவம் செய்யப்பண்ணுதல்

“என்னில் விசுவாசம் வைத்துள்ள, இந்தச் சிறியவர்களில் எவரையாவது பாவத்தில் விழப்பண்ணினால், அவனுடைய கழுத்திலே பெரிய திரிகைக் கல்லொன்றைக் கட்டி, கடலின் ஆழத்தில் அவன் தள்ளப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும். மாற் 9:42லூக் 17:1-2மத் 18:102 தெச 1:6-9மத் 18:14ரோம 15:1-3சங் 105:151 கொரி 8:9-13 மக்களைப் பாவத்தில் விழப்பண்ணும், காரியங்களின் நிமித்தம், உலகத்திற்கு ஐயோ! இப்படிப்பட்ட காரியங்கள் வரவேண்டியதே. ஆனால் யார் மூலம் அது வருகிறதோ அந்த மனிதனுக்கு ஐயோ! லூக் 17:11 கொரி 11:19மத் 26:241 தீமோ 4:1-3யூதா 1:42 தீமோ 3:1-5யூதா 1:11-13வெளி 2:14-15 உனது கையோ அல்லது காலோ உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் உடையவனாய் நித்திய நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஊனமாகவோ முடமாகவோ நித்திய வாழ்விற்குள் செல்வது உனக்குச் சிறந்தது. மத் 5:29-30பிலி 3:8-9லூக் 18:22-23ரோம 13:12எசேக் 18:31லூக் 14:26-27மத் 25:46வெளி 14:10 உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. இரண்டு கண்களுடையவனாய் நரகத்தின் நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் ஒரு கண்ணுடன் நித்திய வாழ்விற்குள் செல்வது சிறந்தது. அப் 14:22மத் 18:8மத் 5:22மத் 5:29வெளி 21:27எபி 4:11லூக் 9:24-25மத் 16:26

வழிதப்பிய ஆட்டைப்பற்றிய உவமைக் கதை

“நீங்கள் இந்தச் சிறியவர்களில் ஒருவனையும் அலட்சியம் பண்ணாதபடி கவனமாய் இருங்கள். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன், பரலோகத்திலுள்ள அவர்களுக்குரிய இறைத்தூதர்கள் எனது பரலோக பிதாவின் முகத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சங் 91:11எபி 1:14சங் 34:7லூக் 16:222இராஜா 6:16-17அப் 12:7-11மத் 1:20மத் 18:14 ஏனெனில் மானிடமகன் வழிதப்பிப் போனவர்களை இரட்சிக்கவே வந்தார். 1

“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருந்தாலும், அவற்றில் ஒன்று வழிதவறிப் போனால், அந்தத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு, வழி தவறியதைத் தேடிப் போகமாட்டானோ? எசேக் 34:12லூக் 15:4-7எசேக் 34:16எசேக் 34:28ஏசா 53:61 பேது 2:25எசேக் 34:6எரே 50:6 நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, வழிதவறிப் போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைவிட, அந்த ஒரு ஆட்டைக் குறித்து அதிகமாக சந்தோஷப்படுகிறான். லூக் 15:5-10செப்ப 3:17சங் 147:11யாக் 2:13யோவா 4:34-36லூக் 15:23-24மீகா 7:18ஏசா 53:11 அதுபோலவே இந்தச் சிறியவர்களில் ஒருவனும் வழிதவறிப் போவது உங்கள் பரலோக பிதாவின் விருப்பமல்ல. யோவா 17:122 பேது 3:9யோவா 6:39-40ஏசா 40:11யோவா 10:27-30சகரி 13:7யோவா 21:15லூக் 12:32

பாவம் செய்யும் சகோதரர்கள்

“உன் சகோதர சகோதரிகளுள் ஒருவர் உனக்கு எதிராகப் பாவம்செய்தால், நீ போய் அவருடைய குற்றத்தை அவருக்குச் சுட்டிக்காட்டு. உங்கள் இருவருக்கும் இடையில் மட்டுமே அது செய்யப்படட்டும். அவர் உனக்குச் செவிகொடுத்தால், நீ உனது சகோதரன் அல்லது சகோதரியை இழக்காமல் காத்துக்கொள்வாய். லேவி 19:17கலா 6:1லூக் 17:3-42 தெச 3:15கொலோ 3:13யாக் 5:19-20நீதி 25:9-10ரோம 12:21 ஆனால் அவர் உனக்குச் செவிகொடாவிட்டால், ‘எல்லா காரியங்களும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் மூலம் உறுதி செய்யப்படும்படி,’ வேறு ஒருவரையோ இருவரையோ உன்னுடன்கூட கூட்டிக்கொண்டுபோ. 2 உபா 19:152 கொரி 13:1யோவா 8:171 தீமோ 5:19எபி 10:28உபா 17:6எண் 35:301 இராஜா 21:13 அவர் அவர்களுக்கும் செவிகொடுக்க மறுத்தால், அதைத் திருச்சபைக்குக் கூறு; அவர் திருச்சபைக்கும் செவிகொடுக்க மறுத்தால், அவரை இறைவனை அறியாதவரைப் போலவும் வரி வசூலிக்கிறவரைப் போலவும் நடத்து. 2 தெச 3:61 கொரி 5:92 தெச 3:14-151 கொரி 5:3-52 யோவா 1:10-11எபே 5:11-123 யோவா 1:9-10எபே 4:17-19

“மேலும் நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் எதைப் பூமியில் கட்டுகிறீர்களோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். நீங்கள் பூமியில் எதைக் கட்டவிழ்க்கிறீர்களோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும். மத் 16:192 கொரி 2:10யோவா 20:231 கொரி 5:4-5வெளி 3:7-8அப் 15:23-31

“மீண்டும் நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் கேட்கும் எதைக் குறித்தாவது பூமியிலே உங்களில் இருவர் ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது உங்களுக்காகச் செய்யப்படும். மத் 7:71 யோவா 5:14-16மாற் 11:24யோவா 14:13-14யோவா 16:23பிலி 1:19யாக் 5:14-16மத் 21:22 ஏனெனில் எங்கே இரண்டு அல்லது மூன்றுபேர் என் பெயரில் ஒன்றாய்கூடி இருக்கிறார்களோ, அங்கே நான் அவர்களுடன் இருக்கிறேன்” என்றார். 1 கொரி 5:4வெளி 21:3மத் 28:20சகரி 2:5யோவா 20:26யோவா 20:19வெளி 2:1யாத் 20:24

இரக்கமற்ற வேலையாள்

அதற்குப் பின்பு பேதுரு இயேசுவிடம் வந்து அவரிடம், “ஆண்டவரே, என் சகோதரன் எனக்கெதிராகப் பாவம் செய்யும்போது, அவனை நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழுமுறை வரைக்குமோ?” எனக் கேட்டான். லூக் 17:3-4மத் 18:15

இயேசு மறுமொழியாக, “ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது முறைக்கும் அதிகமாக” என்று நான் உனக்குச் சொல்கிறேன் என்றார். கொலோ 3:13மாற் 11:25எபே 4:31மத் 6:14-15ஆதி 4:24எபே 4:26ரோம 12:211 தீமோ 2:8

“பரலோக அரசானது ஒரு அரசன் தனது வேலைக்காரர்களுடன் கணக்குப் பார்க்க வந்ததுபோல் இருக்கிறது. மத் 13:24ரோம 14:12மத் 3:2மத் 13:44-45லூக் 16:1-2லூக் 19:12-27மத் 13:471 கொரி 4:5 அவன் கணக்குப் பார்க்கத் தொடங்கியபோது, பத்து கோடி பொற்காசுகள் 3 கடன்பட்ட ஒருவன் கொண்டுவரப்பட்டான். சங் 130:3-4சங் 38:4எஸ்றா 9:6லூக் 13:4லூக் 16:5சங் 40:121 நாளாக 29:7லூக் 16:7 அவனோ அதைச் செலுத்தமுடியாத நிலையில் இருந்தான். அதனால் அவனையும், அவனது மனைவியையும், பிள்ளைகளையும், அவனிடத்தில் உள்ளவை எல்லாவற்றையும் விற்றுக் கடனைத் திருப்பிச் செலுத்தும்படி, அவனுடைய எஜமான் உத்தரவிட்டான். நெகே 5:52இராஜா 4:1லேவி 25:39லூக் 7:42நெகே 5:8யாத் 21:2ஏசா 50:1

“வேலைக்காரனோ அவனுக்கு முன்னால் மண்டியிட்டு, ‘என்னிடத்தில் பொறுமையாய் இரும், நான் எல்லாவற்றையும் திரும்பக் கொடுப்பேன்’ என்று கெஞ்சிக்கேட்டான். லூக் 7:43மத் 18:29மத் 8:2ரோம 10:3 வேலைக்காரனின் எஜமான் அவனில் அனுதாபப்பட்டு, அவனுடைய கடனை ரத்து செய்து, அவனைப் போகவிட்டான். சங் 145:8சங் 86:15ஓசி 11:8நெகே 9:17நியாயாதி 10:16சங் 78:38சங் 86:5

“ஆனால் அந்த வேலைக்காரன் வெளியே போனபோது, தன்னிடத்தில் நூறு வெள்ளிக்காசுகளை கடன்பட்டிருந்த தன் உடன்வேலைக்காரனைக் கண்டான். அவன் அவனைப் பிடித்து தொண்டையை நெரித்து, ‘நீ என்னிடத்தில் கடன்பட்டதைத் திருப்பிக் கொடு’ என வற்புறுத்திக் கேட்டான். எசேக் 45:9மத் 20:2உபா 15:2ஏசா 58:3நெகே 10:31நெகே 5:10-11நெகே 5:7

“அவனுடைய உடன்வேலைக்காரன் காலில் விழுந்து, ‘என்னிடத்தில் பொறுமையாய் இரும், நான் உமக்குத் திருப்பிக் கொடுப்பேன்’ எனக் கெஞ்சிக்கேட்டான். மத் 18:26மத் 6:12பிலே 1:18-19

“ஆனால் அவனோ அதற்கு மறுத்து, அந்தக் கடனைக் கட்டித் தீர்க்கும் வரைக்கும், அவனைச் சிறையில் அடைத்தான். 1 இராஜா 21:27-291 இராஜா 22:27 நடந்தவற்றைக் கண்ட மற்ற வேலைக்காரர் மிகவும் துக்கப்பட்டு, எல்லாவற்றையும் தங்கள் அரசனிடம் போய்ச் சொன்னார்கள். ரோம 12:15எபி 13:3மாற் 3:5ஆதி 37:2எபி 13:17எரே 9:1லூக் 14:21லூக் 19:41

“அப்பொழுது அரசன் அந்த வேலைக்காரனைக் கூப்பிட்டு, அவனைப் பார்த்து, ‘கொடுமையான வேலைக்காரனே, நீ என்னிடம் கெஞ்சிக் கேட்டபடியினால், நான் உனது கடனையெல்லாம் மன்னித்தேன். லூக் 19:22ரோம 3:19மத் 25:26 நான் உனக்கு இரக்கம் காட்டியது போல, நீயும் உனது உடன்வேலைக்காரனுக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டுமல்லவா?’ என்று கேட்டான். கொலோ 3:13எபே 4:32மத் 6:12லூக் 6:35-36மத் 5:44-45 அவனுடைய எஜமான் கோபங்கொண்டு, அவனது கடன் முழுவதையும் கொடுத்துத் தீர்க்கும்வரை அவனைச் சித்திரவதை செய்யப்படும்படி சிறைக் காவலரிடம் ஒப்புக்கொடுத்தான். யாக் 2:13மத் 5:25-26லூக் 12:58-592 தெச 1:8-9மத் 18:30வெளி 14:10-11

“நீங்களும் உங்கள் சகோதரன் அல்லது சகோதரியை மனப்பூர்வமாய் மன்னிக்காவிட்டால், இவ்வாறே எனது பரலோக பிதாவும் உங்களை நடத்துவார்” என்றார். மத் 6:14-15யாக் 2:13லூக் 6:37-38மாற் 11:25மத் 6:12நீதி 21:2நீதி 21:13மத் 7:1-2