இருதயத்தின் திட்டங்கள் மனிதனுடையவை, நீதி 19:21நீதி 16:9லூக் 21:14-15பிலி 2:13நீதி 20:24மத் 10:19-20லூக் 12:11-12எரே 10:23
ஆனால் யெகோவா அவர்களுடைய நாவுகளில் சரியான பதிலைத் தருகிறார்.
மனிதர்களுடைய வழிகளெல்லாம் அவர்கள் பார்வைக்கு சுத்தமானதாய் காணப்படும், நீதி 21:21 சாமு 16:7லூக் 16:15நீதி 30:12எரே 17:10நீதி 24:12சங் 36:2நீதி 16:25
ஆனால் யெகோவா உள்நோக்கங்களை ஆராய்ந்து பார்க்கிறார்.
உன் செயல்களையெல்லாம் யெகோவாவுக்கு ஒப்புக்கொடு, சங் 37:4-5நீதி 3:6சங் 55:22பிலி 4:61 பேது 5:7யோபு 22:28யோபு 5:8லூக் 12:22
அப்பொழுது அவர் உனது திட்டங்களை உறுதிப்படுத்துவார்.
யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றவே எல்லாவற்றையும் செய்கிறார்; 2 பேது 2:9ஏசா 43:21ரோம 9:22ஏசா 43:71 பேது 2:8வெளி 4:112 பேது 2:3யோபு 21:30
பேரழிவின் நாட்களுக்காக கொடியவர்களையும் வைத்திருக்கிறார்.
இருதயத்தில் பெருமையுள்ள எல்லோரையும் யெகோவா அருவருக்கிறார்; நீதி 6:16-17நீதி 11:21நீதி 8:13ரோம 2:8-9யாக் 4:6யோபு 40:12ஏசா 3:11யாத் 20:7
அவர்கள் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள் என்பது நிச்சயம்.
அன்பினாலும் உண்மையினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; நீதி 14:162 கொரி 7:1யோபு 28:28தானி 4:27லூக் 11:41நீதி 14:27நீதி 8:13யோபு 1:1-8
யெகோவாவுக்குப் பயந்து நடப்பது தீமையைவிட்டு விலகச் செய்யும்.
ஒருவனுடைய வழி யெகோவாவுக்கு பிரியமானதாயிருந்தால், ரோம 8:311 யோவா 3:222 நாளாக 17:10கொலோ 1:10எரே 15:11எபி 13:21ஆதி 33:4ஆதி 32:28
அவனுடைய எதிரிகளும் அவனோடு சமாதானமாகும்படிச் செய்வார்.
அநியாயமாய்ப் பெறும் அதிக இலாபத்தைவிட, நீதி 15:16சங் 37:161 தீமோ 6:6-9எரே 17:11நீதி 21:6-7மீகா 6:10
நீதியாய்ப் பெறும் கொஞ்சமே சிறந்தது.
மனிதர் தம் வழியை இருதயத்தில் திட்டமிடுகிறார்கள்; நீதி 19:21சங் 37:23நீதி 16:1நீதி 20:24எரே 10:23நீதி 21:30ஏசா 46:10
ஆனால் அவர்களுடைய காலடிகளை யெகோவாவே தீர்மானிக்கிறார்.
அரசனின் பேச்சு இறைவாக்குப் போலிருக்கிறது; ஏசா 32:1-2ஆதி 44:15ஆதி 44:51 இராஜா 3:282 சாமு 23:3-4ஆமோ 5:7உபா 17:18-20ஓசி 10:4
அவனுடைய தீர்ப்புகள் நீதிக்குத் துரோகம் செய்யக்கூடாது.
நீதியான அளவுகோலும் தராசும் யெகோவாவினுடையது; நீதி 11:1நீதி 20:10நீதி 20:23உபா 25:13-15எசேக் 45:10ஓசி 12:7லேவி 19:35-36ஆமோ 8:5
பையில் இருக்கும் எல்லா படிக்கற்களும் அவரால் உண்டானது.
அநியாயம் செய்வதை அரசர்கள் அருவருக்கிறார்கள், நீதி 25:5நீதி 29:14லூக் 12:48நீதி 28:9உபா 25:16நீதி 20:18சங் 99:4வெளி 19:11
ஏனெனில் நீதியினாலேயே சிங்காசனம் நிறுவப்பட்டது.
நீதியான உதடுகளின் வார்த்தைகள் அரசர்களுக்கு மகிழ்ச்சி; நீதி 14:35நீதி 22:11சங் 101:5-7
உண்மை பேசுபவர்களை அவர்கள் விரும்புகிறார்கள்.
அரசனின் கடுங்கோபமோ மரண தூதனைப் போன்றது, நீதி 20:2நீதி 19:12பிரச 10:42 கொரி 5:202இராஜா 6:31-33அப் 12:20தானி 3:13-25லூக் 12:4-5
ஆனால் ஞானிகள் அதை சாந்தப்படுத்துவார்கள்.
அரசனின் முகம் மலர்ச்சியடையும்போது, அது நல்வாழ்வைக் கொடுக்கிறது; சங் 72:6யோபு 29:23-24அப் 2:28ஓசி 6:3நீதி 19:12சங் 21:6சங் 30:5சங் 4:6
அவருடைய தயவு வசந்தகால மழை மேகம் போன்றது.
தங்கத்தைவிட ஞானத்தைப் பெறுவதும் மத் 16:26நீதி 8:10-11நீதி 8:19லூக் 12:21பிரச 7:12நீதி 3:15-18நீதி 4:7யோபு 28:13-28
வெள்ளியைவிட மெய்யறிவைப் பெறுவதும் எவ்வளவு சிறந்தது!
நீதிமான்களின் பெரும்பாதை தீமைக்கு விலகிப்போகிறது; ஏசா 35:8நீதி 10:9நீதி 19:16யூதா 1:21நீதி 4:24-27வெளி 3:10தீத் 2:10-14அப் 10:35
தங்கள் வழியைக் காத்துக்கொள்கிறவர்கள் தங்கள் வாழ்வைக் காத்துக்கொள்கிறார்கள்.
அழிவுக்கு முன்னால் அகந்தை வருகிறது; நீதி 11:2ஏசா 2:11-12நீதி 18:12ஒபதி 1:3-4நீதி 29:231 தீமோ 3:6நீதி 17:19ரோம 11:20
வீழ்ச்சிக்கு முன்னால் மனமேட்டிமை வருகிறது.
பெருமையுள்ளவர்களுடன் கொள்ளைப்பொருட்களைப் பகிர்ந்து கொள்வதைவிட, மத் 5:3ஏசா 57:15சங் 138:6யாத் 15:9சங் 34:18ஏசா 53:12லூக் 1:51-53லூக் 18:13-14
சிறுமைப்பட்டவர்களுடன் மனத்தாழ்மையுடன் இருப்பதே சிறந்தது.
அறிவுரைகளை ஏற்றுக்கொள்பவர்கள் வாழ்வடைவார்கள், எரே 17:7-8ஏசா 26:3-4ஏசா 30:18சங் 2:12சங் 34:8தானி 6:23நீதி 19:8சங் 146:5
யெகோவாவிடம் நம்பிக்கையாயிருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
இருதயத்தில் ஞானமுள்ளவர்கள் பகுத்தறிவுள்ளவர்கள்; நீதி 16:23-24ஏசா 50:4நீதி 15:7நீதி 27:9யாக் 3:17யோவா 7:46லூக் 4:221 இராஜா 3:12
இனிமையான வார்த்தைகள் மக்களை கற்றுக்கொள்ளத் தூண்டும்.
விவேகத்தை உடையவர்களுக்கு அது வாழ்வின் ஊற்றைப் போலிருக்கிறது, நீதி 13:14யோவா 5:24யோவா 6:63மத் 15:14நீதி 10:11நீதி 18:4யோவா 6:68மத் 23:16-26
ஆனால் மூடத்தனம் மூடர்களுக்குத் தண்டனையைக் கொடுக்கிறது.
ஞானமுள்ள இருதயத்திலிருந்து ஞானமுள்ள வார்த்தைகள் வெளிப்படும், நீதி 15:28மத் 12:34-35கொலோ 3:16நீதி 22:17-18சங் 37:30-31சங் 45:1
அவர்களுடைய உதட்டின் பேச்சு அறிவுரைகளைக் கேட்கத் தூண்டும்.
கருணையான வார்த்தைகள் தேன்கூட்டைப்போல் நீதி 12:18நீதி 24:13-14நீதி 25:11-12நீதி 4:22நீதி 23:16நீதி 3:8சங் 119:103நீதி 27:9
ஆத்துமாவுக்கு இனிமையாயும், எலும்புகளுக்கு சுகமாயுமிருக்கும்.
மனிதனுக்கு சரியெனத் தோன்றும் வழி ஒன்று உண்டு; நீதி 14:122 கொரி 13:5நீதி 12:15நீதி 12:26ஏசா 28:15-19யோவா 7:47-49அப் 26:9யோவா 9:40
முடிவில் அது மரணத்திற்கே வழிநடத்தும்.
தொழிலாளிகளின் பசியே அவர்கள் வேலைசெய்யக் காரணமாயிருக்கிறது, பிரச 6:7நீதி 14:232 தெச 3:8-12நீதி 9:121 தெச 4:11-12
அவர்களைத் தொடர்ந்து வேலைசெய்யத் தூண்டும்.
இழிவானவர்கள் தீமையைச் சூழ்ச்சி செய்கிறார்கள், யாக் 3:6நீதி 6:141 சாமு 25:17ஏசா 5:18நீதி 6:12சங் 17:14-15சங் 52:2-4சங் 57:4
அவர்களுடைய பேச்சோ சுட்டுப் பொசுக்கும் நெருப்பைப் போலிருக்கும்.
வஞ்சகர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள், நீதி 17:9யாக் 3:14-16நீதி 15:18நீதி 18:8ரோம 1:29நீதி 6:141 தீமோ 6:3-5ஆதி 3:1-13
கோள் சொல்கிறவர்கள் நெருங்கிய நண்பர்களையும் பிரித்துவிடுகிறார்கள்.
வன்முறையாளர்கள் தங்கள் அயலாரை ஏமாற்றி, நீதி 2:12-152 பேது 3:17நீதி 12:26நீதி 1:10-14நீதி 3:311 சாமு 19:111 சாமு 19:171 சாமு 22:7-9
தீயவழியில் அவர்களை நடத்துகிறார்கள்.
கண்களை மூடிக்கொண்டு வஞ்சகத்தைத் திட்டமிடுகிறார்கள்; மத் 13:15நீதி 6:12-14ஏசா 6:10யோவா 3:20மத் 14:7-8மத் 27:23-26மீகா 7:3நீதி 10:10
தங்கள் உதடுகளைத் திறவாமல் தீமை செய்யவே தேடுகிறார்கள்.
நரைமுடி மேன்மையின் மகுடம், நீதி 20:29லேவி 19:32நீதி 3:1-21 சாமு 12:2-5நீதி 17:6பிரச 4:13ஆதி 47:7-10லூக் 1:6
அது நீதியின் வாழ்க்கையினால் பெற்றுக்கொண்டது.
பொறுமையுள்ளவன் ஒரு போர்வீரனைவிட சிறந்தவன்; யாக் 1:19நீதி 15:18நீதி 25:28நீதி 14:29நீதி 19:11ரோம 12:21சங் 103:8எபே 5:1
தன் கோபத்தை அடக்குகிறவன் ஒரு பட்டணத்தைக் கைப்பற்றுகிறவனைவிடச் சிறந்தவன்.
சீட்டு மடியிலே போடப்படும், நீதி 18:18அப் 1:26யோனா 1:71 சாமு 14:41-42நீதி 29:26யோசு 18:5யோசு 7:14நெகே 11:1
ஆனால் அதைத் தீர்மானிப்பது யெகோவா.