ஆவிகளைச் சோதித்தறியுங்கள்
பிரியமானவர்களே, உலகத்தில் அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்துப்பாருங்கள். 1 தெச 5:212 பேது 2:11 தீமோ 4:12 யோவா 1:7நீதி 14:15மத் 24:4-5எரே 29:8-9மத் 7:15-16 தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாம் என்றால்: சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை செய்கிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. யோவா 1:141 கொரி 12:31 தீமோ 3:161 யோவா 4:31 யோவா 5:1யோவா 16:13-151 யோவா 2:23 சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை செய்யாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. 1 யோவா 2:222 யோவா 1:71 யோவா 2:182 தெச 2:3-8 பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை வென்றீர்கள்; ஏனென்றால், உலகத்தில் இருக்கிறவனைவிட உங்களுக்குள் இருக்கிறவர் பெரியவர். ரோம 8:311 யோவா 5:4ரோம 8:371 யோவா 4:161 கொரி 2:12ரோம 8:10-111 யோவா 5:19எபே 6:12-13 அவர்கள் உலகத்திற்குரியவர்கள், ஆகவே, உலகத்திற்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும். யோவா 8:232 பேது 2:2-3யோவா 17:14யோவா 17:16யோவா 3:312 தீமோ 4:3வெளி 12:9ஏசா 30:10-11 நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாகாதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி எதுவென்றும் ஏமாற்றும் ஆவி எதுவென்றும் அறிந்திருக்கிறோம். யோவா 14:17யோவா 10:271 கொரி 2:12-14யோவா 15:261 யோவா 4:1யோவா 8:45-50யோவா 18:371 யோவா 4:4
தேவனுடைய அன்பும், நம்முடைய அன்பும்
பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாக இருப்போம்; ஏனென்றால், அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். 1 யோவா 4:201 யோவா 4:81 பேது 1:221 யோவா 2:10கலா 5:221 தெச 4:9-102 தீமோ 1:71 யோவா 4:12 அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார். 1 யோவா 4:161 யோவா 4:7சங் 86:152 கொரி 13:11சங் 86:5எபே 2:4யாத் 34:6-71 யோவா 1:5 தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இந்த உலகத்திற்கு அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. யோவா 3:161 யோவா 5:11ரோம 8:321 யோவா 4:10யோவா 6:57யோவா 11:25-26யோவா 10:10யோவா 10:28-30 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற பாவநிவாரணபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. எபே 2:4-5ரோம 5:8-101 யோவா 4:191 யோவா 2:2யோவா 15:161 யோவா 4:8-9யோவா 3:161 யோவா 3:1 பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாக நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிலொருவர் அன்புகூரக் கடனாளிகளாக இருக்கிறோம். யோவா 15:12-13கொலோ 3:13யோவா 13:341 யோவா 3:23லூக் 10:371 யோவா 3:16-172 கொரி 8:8-9எபே 4:31 தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிலொருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். யோவா 1:181 யோவா 2:51 யோவா 4:17-181 தீமோ 6:161 யோவா 4:201 யோவா 3:24யாத் 33:201 யோவா 4:6 அவர் தம்முடைய ஆவியானவரை நமக்குக் கொடுத்ததினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம். 1 யோவா 3:24எபே 2:20-221 கொரி 3:16-17கலா 5:22-251 கொரி 2:121 யோவா 4:15-16ரோம 8:9-17யோவா 14:20-26 பிதாவானவர் குமாரனை உலக இரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் பார்த்து சாட்சியிடுகிறோம். 1 யோவா 4:10யோவா 3:16-17யோவா 1:14யோவா 4:421 யோவா 2:1-2யோவா 1:29யோவா 15:26-271 யோவா 5:9 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைசெய்கிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். ரோம 10:9மத் 10:321 யோவா 5:51 யோவா 3:241 யோவா 4:2பிலி 2:111 யோவா 4:121 யோவா 5:1 தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். 1 யோவா 3:24சங் 36:7-91 யோவா 3:11 யோவா 4:8-10சங் 18:1-31 யோவா 4:12-131 யோவா 3:16சங் 31:19 நியாயத்தீர்ப்புநாளிலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இந்த உலகத்தில் இருக்கிறோம். 1 யோவா 2:281 யோவா 4:121 யோவா 2:5ரோம 8:291 யோவா 3:31 யோவா 3:19-21யோவா 15:201 யோவா 3:1 அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தை வெளியே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் இல்லை. 2 தீமோ 1:7ரோம 8:151 யோவா 4:12லூக் 1:74-75எபி 12:28யாக் 2:19சங் 119:120சங் 73:19 அவர் முதலாவது நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு செலுத்துகிறோம். 1 யோவா 4:10யோவா 3:16யோவா 15:16தீத் 3:3-52 கொரி 5:14-15லூக் 7:47எபே 2:3-5கலா 5:22 தேவனிடத்தில் அன்பு கூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு செலுத்துவான்? 1 யோவா 3:171 யோவா 2:91 யோவா 4:121 யோவா 2:41 யோவா 2:111 பேது 1:81 யோவா 1:6 தேவனிடத்தில் அன்புசெலுத்துகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கட்டளையை அவராலே பெற்றிருக்கிறோம். மத் 22:37-39லேவி 19:181 யோவா 3:11கலா 5:141 பேது 3:81 தெச 4:9யோவா 13:34-35யோவா 15:12