1 இராஜாக்கள் 22

1 Kings 22
அத்தியாயம் 22

மிகாயா ஆகாபிற்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைத்தல்

சீரியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் மூன்று வருடங்கள் யுத்தமில்லாமல் இருந்தது. 1 இராஜா 20:34 மூன்றாம் வருடத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவிடம் போயிருக்கும்போது, 1 இராஜா 15:241 இராஜா 22:11 இராஜா 22:411 இராஜா 22:442 நாளாக 18:1-272இராஜா 8:18மத் 12:40மத் 16:21 இஸ்ரவேலின் ராஜா தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா? நாம் அதைச் சீரியா ராஜாவின் கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல், சும்மாயிருப்பானேன் என்று சொல்லி, உபா 4:431 இராஜா 4:13யோசு 21:382 சாமு 19:10நியாயாதி 16:2யோசு 20:8 யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்செய்ய என்னோடு கூட வருகிறீரா என்று கேட்டான். யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: நான்தான் நீர், என்னுடைய மக்கள் உம்முடைய மக்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான். 2இராஜா 3:7எபே 5:111 கொரி 15:332 நாளாக 18:32 நாளாக 19:22 யோவா 1:11நீதி 13:20சங் 139:21-22 பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: யெகோவாவுடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான். நீதி 3:5-62 நாளாக 18:4-52இராஜா 3:11எரே 21:2எரே 42:2-6எசேக் 20:1-3எண் 27:211 நாளாக 10:13 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்செய்யப்போகலாமா, போக வேண்டாமா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள். 1 இராஜா 18:19எரே 23:14-17எசேக் 13:22எசேக் 13:7-161 இராஜா 22:151 இராஜா 22:22-232 நாளாக 18:142 பேது 2:1-3 பின்பு யோசபாத்: நாம் விசாரித்து அறிவதற்கு இவர்களைத் தவிர யெகோவாவுடைய தீர்க்கதரிசி வேறே யாராவது இங்கே இல்லையா என்று கேட்டான். 2 நாளாக 18:6-72இராஜா 3:11-13 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: யெகோவாவிடம் விசாரித்து அறிவதற்கு இம்லாவின் மகனாகிய மிகாயா என்னும் இன்னும் ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத், ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான். ஆமோ 5:10யோவா 17:14யோவா 3:19-21யோவா 7:7கலா 4:16எரே 38:4யோவா 15:18-19மீகா 2:7 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா அதிகாரிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் மகனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான். 1 இராஜா 22:26-272 நாளாக 18:82இராஜா 9:32தானி 1:18ஏசா 39:7 இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் வாசலுக்கு முன்பாக இருக்கும் திறந்த வெளியிலே ராஜஉடை அணிந்துகொண்டவர்களாக, அவரவர் தம்தம் சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தார்கள்; எல்லாத் தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 1 இராஜா 18:291 இராஜா 22:301 இராஜா 22:62 நாளாக 18:9-11அப் 12:21அப் 25:23எஸ்த 5:1எஸ்த 6:8-9 கேனானாவின் மகனாகிய சிதேக்கியா தனக்கு இரும்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியர்களைத் தள்ளி அழித்துப்போடுவீர் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். சகரி 1:18-21உபா 33:172 கொரி 11:13-152 தீமோ 3:8அப் 19:13-16எசேக் 13:6-9எசேக் 22:27-28எரே 23:17 எல்லாத் தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் நீர் போம், உமக்கு வாய்க்கும்; யெகோவா அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள். 1 இராஜா 22:32-361 இராஜா 22:6-152 நாளாக 35:22 மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடன் பேசி: இதோ, தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகள் எல்லாம் ராஜாவிற்கு நன்மையாக இருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான். 1 கொரி 2:14-16ஆமோ 7:13-17ஓசி 7:3ஏசா 30:10-11மீகா 2:11மீகா 2:6-7சங் 10:11சங் 11:1 அதற்கு மிகாயா: யெகோவா என்னிடம் சொல்வதையே சொல்லுவேன் என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். எண் 24:132 நாளாக 18:12-13எசேக் 3:17-19எரே 26:2-3எண் 22:18எண் 22:381 இராஜா 18:101 இராஜா 18:15

அவன் ராஜாவிடம் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்செய்யப் போகலாமா, போகவேண்டாமா என்று கேட்டான். அதற்கு அவன்: நீர் போம், உமக்கு வாய்க்கும்; யெகோவா அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார்; என்றான். 1 இராஜா 18:272 நாளாக 18:142இராஜா 3:13பிரச 11:9நியாயாதி 10:14மத் 26:45 ராஜா அவனைப் பார்த்து: நீ யெகோவாவுடைய நாமத்தில் உண்மையைத்தவிர வேறொன்றையும் என்னிடம் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைமுறை உன்னை ஆணையிடச் செய்யவேண்டும் என்று சொன்னான். 1 சாமு 14:242 நாளாக 18:15அப் 19:13எரே 42:3-6யோசு 6:26மத் 22:16-17மத் 26:63மாற் 5:7 அப்பொழுது மிகாயா: இஸ்ரவேலர்கள் எல்லோரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது யெகோவா: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடு திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான். எண் 27:17மத் 9:361 இராஜா 22:34-362 நாளாக 18:16-17அப் 10:11-17எசேக் 34:4-6எரே 50:17எரே 50:6 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று நான் உம்மோடு சொல்லவில்லையா என்றான். 1 இராஜா 22:8லூக் 11:45நீதி 10:24நீதி 27:22நீதி 29:1

அப்பொழுது மிகாயா சொன்னது: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளும்; யெகோவா தம்முடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவரின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன். யோபு 2:1யோபு 1:6தானி 7:9-10ஏசா 6:1-3மத் 18:10சங் 103:20-212 நாளாக 18:18-22எசேக் 1:26-28 அப்பொழுது யெகோவா: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படி, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள். எசேக் 14:9யோபு 12:16எரே 4:10 அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, யெகோவாவுக்கு முன்பாக நின்று; நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது. 1 இராஜா 22:23யோபு 1:6-7யோபு 2:1 எதினால் என்று யெகோவா அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லோரின் வாயிலும் பொய்யின் ஆவியாக இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கச்செய்வாய்; போய் அப்படிச் செய் என்றார். நியாயாதி 9:231 சாமு 16:141 சாமு 19:91 இராஜா 22:201 சாமு 18:102 தெச 2:9-12எசேக் 14:9யோபு 1:8-11 ஆதலால் யெகோவா பொய்யின் ஆவியை உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லோருடைய வாயிலும் கட்டளையிட்டார்; யெகோவா உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான். எசேக் 14:9ஏசா 6:9-10மத் 24:24-252 நாளாக 25:16ஏசா 3:11ஏசா 44:201 இராஜா 20:42உபா 2:30 அப்பொழுது கேனானாவின் மகனாகிய சிதேக்கியா அருகில் வந்து, மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, யெகோவாவுடைய ஆவி எந்த வழியாக என்னைவிட்டு உன்னோடு பேசும்படி வந்தது என்றான். அப் 23:2புலம் 3:30மீகா 5:11 இராஜா 22:112 நாளாக 18:23-24ஏசா 50:5-6எரே 28:10-11எரே 29:26-27 அதற்கு மிகாயா: நீ ஒளிந்துகொள்ள உள் அறையிலே பதுங்கும் அந்த நாளிலே அதைக் காண்பாய் என்றான். 1 இராஜா 20:302 பேது 2:1வெளி 19:20ஆமோ 7:17ஏசா 9:14-16எரே 23:15எரே 28:16-17எரே 29:21-22 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்தின் தலைவனாகிய ஆமோனிடத்திற்கும், ராஜாவின் மகனாகிய யோவாசிடத்திற்கும் திரும்பக் கொண்டுபோய், இவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடு வரும்வரை, இவனுக்கு கொஞ்சம் அப்பத்தையும் கொஞ்சம் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான். 2 நாளாக 16:102 நாளாக 18:25-27வெளி 2:101 தெச 5:2-3அப் 16:23-24அப் 26:10அப் 5:18உபா 16:3 அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடு திரும்பி வருகிறது உண்டானால், யெகோவா என்னைக்கொண்டு பேசவில்லை என்று சொல்லி; மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள் என்றான். மீகா 1:2எண் 16:29அப் 13:10-11மாற் 12:371 இராஜா 18:21-241 இராஜா 18:36-372 நாளாக 18:272இராஜா 1:10

ராமோத் கீலேயாத்திலே ஆகாப் கொல்லப்படுதல்

பின்பு இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள். 1 இராஜா 22:2-92 நாளாக 18:28 இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: நான் வேஷம்மாறி யுத்தத்தில் நுழைவேன்; நீரோ ராஜஉடை அணிந்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி, யுத்தத்தில் நுழைந்தான். 2 நாளாக 35:221 சாமு 28:8எரே 23:241 இராஜா 14:21 இராஜா 20:381 இராஜா 22:102 நாளாக 18:292 சாமு 14:2 சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் முப்பத்திரண்டு தலைவர்களையும் நோக்கி: நீங்கள் சிறியவர்களோடும் பெரியவர்களோடும் யுத்தம்செய்யாமல் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடுமாத்திரம் யுத்தம் செய்யுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான். 1 இராஜா 20:242 நாளாக 18:30எரே 16:61 இராஜா 20:11 இராஜா 20:161 இராஜா 20:33-421 சாமு 30:2ஆதி 19:11 எனவே, இரதங்களின் தலைவர்கள் யோசபாத்தைக் காணும்போது, இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்செய்ய அவனுக்கு நேராக வந்தார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரலிட்டான். யோனா 2:1-2நீதி 13:202 நாளாக 18:31யாத் 14:10சங் 116:1-2சங் 130:1-4சங் 50:15சங் 91:15 இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர்கள் கண்டு அவனைவிட்டு விலகிப்போனார்கள். சங் 76:101 இராஜா 22:31 ஒருவன் தெரியாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள் பட்டது; அப்பொழுது அவன் தன்னுடைய ரத ஓட்டியைப் பார்த்து; நீ திருப்பி என்னை இராணுவத்திற்கு மறுபுறம் கொண்டுபோ; எனக்குக் காயம்பட்டது என்றான். 2 நாளாக 35:23மீகா 6:131 சாமு 17:49வெளி 9:92 நாளாக 18:302இராஜா 9:242 சாமு 15:11 அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியர்களுக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்துபோனான்; காயத்தின் இரத்தம் இரதத்தின் தட்டிலே வடிந்தது. 1 இராஜா 22:281 இராஜா 20:42 பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம்தம் தேசத்திற்கும் போகலாம் என்று இராணுவத்தில் அறிவிக்கப்பட்டது. 2இராஜா 14:121 இராஜா 12:161 இராஜா 12:241 இராஜா 22:171 இராஜா 22:311 சாமு 4:102 சாமு 19:8நியாயாதி 21:24 அப்படியே ராஜா இறந்தபின்பு சமாரியாவுக்குக் கொண்டுவரப்பட்டான்; ராஜாவை சமாரியாவில் அடக்கம்செய்தார்கள். அந்த இரதத்தையும் அவனுடைய கவசத்தையும் சமாரியாவின் குளத்திலே கழுவுகிறபோது யெகோவா சொல்லியிருந்த வார்த்தையின்படியே, நாய்கள் அவனுடைய இரத்தத்தை நக்கினது. 1 இராஜா 21:19மத் 24:35ஏசா 44:25-26ஏசா 48:3-5எரே 44:21-23யோசு 23:14-15சகரி 1:4-6 ஆகாபின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவைகளும், அவன் கட்டின அரண்மனையின் வரலாறும், அவன் கட்டின எல்லாப் பட்டணங்களின் வரலாறும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. ஆமோ 3:151 இராஜா 10:181 இராஜா 10:221 இராஜா 14:191 இராஜா 15:231 இராஜா 15:311 இராஜா 16:201 இராஜா 16:27 ஆகாப் மரணமடைந்து முன்னோர்களோடு அடக்கம் செய்யப்பட்டபின்பு, அவனுடைய மகனாகிய அகசியா அவனுடைய இடத்தில் ராஜாவானான். 1 இராஜா 11:211 இராஜா 14:311 இராஜா 2:101 இராஜா 22:512 நாளாக 20:352இராஜா 1:172இராஜா 1:22 சாமு 7:12

யூதாவின் ராஜாவாகிய யோசபாத்

ஆசாவின் மகனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் அரசாட்சி செய்த நான்காம் வருடத்தில் யூதாவின்மேல் ராஜாவானான். 2 நாளாக 20:311 நாளாக 3:101 இராஜா 22:22 நாளாக 17:1 யோசபாத் ராஜாவாகிறபோது முப்பத்தைந்து வயதாக இருந்து, இருபத்தைந்து வருடங்கள் எருசலேமில் அரசாட்சிசெய்தான்; சில்கியின் மகளாகிய அவனுடைய தாயின்பெயர் அசுபாள். 1 இராஜா 14:211 இராஜா 15:101 இராஜா 15:22இராஜா 1:172இராஜா 8:16 அவன் தன்னுடைய தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதைவிட்டு விலகாமல் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் மேடைகள் இடிக்கப்படவில்லை; மக்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தார்கள். 1 இராஜா 15:142இராஜா 12:3நீதி 4:271 இராஜா 14:231 இராஜா 15:111 இராஜா 15:51 சாமு 12:20-212 நாளாக 14:11 யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவோடு சமாதானமாக இருந்தான். 1 இராஜா 22:22 நாளாக 19:22இராஜா 8:182 நாளாக 21:62 கொரி 6:14 யோசபாத்தின் மற்ற செயல்பாடுகளும், அவன் காட்டிய வல்லமையும், அவன் செய்த யுத்தமும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. 1 இராஜா 11:411 இராஜா 14:292 நாளாக 20:34 தன்னுடைய தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாக விட்டிருந்த ஆண் விபசாரக்காரர்களையும் அவனுடைய தேசத்திலிருந்து அற்றுப்போகச்செய்தான். 1 இராஜா 14:241 இராஜா 15:12உபா 23:17ஆதி 19:5யூதா 1:71 கொரி 6:91 தீமோ 1:10நியாயாதி 19:22 அப்பொழுது ஏதோமில் ராஜா இல்லை; பிரதிராஜா ஒருவன் இருந்தான். 2இராஜா 3:92 சாமு 8:142இராஜா 8:20ஆதி 27:40ஆதி 25:23ஆதி 36:31-43சங் 108:9-10 பொன்னுக்காக ஓப்பீருக்குப் போகும்படி, யோசபாத் தர்ஷீஸ் கப்பல்களைச் செய்தான்; ஆனால் அவைகள் போகவில்லை; அவைகள் எசியோன் கேபேரிலே உடைந்துபோனது. 1 இராஜா 10:221 இராஜா 9:261 இராஜா 9:282 நாளாக 20:212 நாளாக 20:35-372 நாளாக 25:72 நாளாக 9:21ஏசா 2:16 அப்பொழுது ஆகாபின் மகனாகிய அகசியா யோசபாத்தை நோக்கி: என்னுடைய வேலைக்காரர்கள் உம்முடைய வேலைக்காரர்களோடு கப்பல்களில் போகட்டும் என்றான்; அதற்கு யோசபாத் சம்மதிக்கவில்லை. யோசபாத் மரணமடைந்து, தாவீதின் நகரத்தில் தன்னுடைய முன்னோர்களோடு அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய யோராம் அவனுடைய இடத்தில் ராஜாவானான். 2 நாளாக 21:11 இராஜா 11:431 இராஜா 14:311 இராஜா 15:241 இராஜா 2:101 இராஜா 22:402 நாளாக 21:5-72இராஜா 8:16-18

இஸ்ரவேலின் ராஜாவாகிய அகசியா

ஆகாபின் மகனாகிய அகசியா யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினேழாம் வருடத்திலே சமாரியாவில் ராஜாவாகி, இஸ்ரவேலின்மேல் இரண்டு வருடங்கள் அரசாட்சிசெய்து, 1 இராஜா 15:251 இராஜா 22:402இராஜா 1:17 யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தன்னுடைய தகப்பன் வழியிலும், தன்னுடைய தாயின் வழியிலும், இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த நேபாத்தின் மகன் யெரொபெயாமின் வழியிலும் நடந்து, 1 இராஜா 15:261 இராஜா 21:251 இராஜா 12:28-331 இராஜா 14:9-161 இராஜா 15:341 இராஜா 16:30-332 நாளாக 22:32இராஜா 1:2-7 பாகாலை வணங்கி, அதைப் பணிந்துகொண்டு, தன்னுடைய தகப்பன் செய்தபடியெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்குக் கோபமூட்டினான். 1 இராஜா 16:30-321 இராஜா 16:71 இராஜா 21:292இராஜா 1:22இராஜா 3:2எசேக் 18:14-18எசேக் 8:3ஏசா 65:3