அப்போஸ்தலருடைய நடபடிகள் 3

Acts 3
அத்தியாயம் 3

பேதுரு முடவனைக் குணமாக்குதல்

ஒருநாள், ஜெபவேளையாகிய பிற்பகல் மூன்று மணியளவில் பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குப் போனார்கள். சங் 55:17அப் 10:3அப் 4:13லூக் 1:10லூக் 24:53அப் 5:25அப் 8:14தானி 6:10 அப்பொழுது பிறவியிலேயே சப்பாணியாகப் பிறந்த ஒரு மனிதனை சுமந்துகொண்டுவந்தார்கள்; ஆலயத்திற்குள் வருகிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, அனுதினமும் அவனை அலங்காரவாசல் என்னப்பட்ட தேவாலய வாசலருகில் வைப்பார்கள். அப் 14:8யோவா 9:8லூக் 16:20அப் 10:31லூக் 18:35அப் 10:4அப் 4:22யோவா 1:9-30 அவன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற பேதுருவையும், யோவானையும் பார்த்து பிச்சை கேட்டான். பேதுருவும், யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். அப் 14:9-10யோவா 11:40அப் 3:12லூக் 4:20யோவா 5:6அப் 11:6 அவன் அவர்களிடத்தில் ஏதாவது கிடைக்கும் என்று நினைத்து, அவர்களை நோக்கிப்பார்த்தான். அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை; என்னிடத்தில் இருப்பதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி, அப் 3:16அப் 10:38அப் 4:10அப் 9:342 கொரி 8:9அப் 16:18மாற் 16:17யாக் 2:5 தன் வலது கையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கணுக்களும் பெலன் கொண்டது. மாற் 1:31மாற் 9:27அப் 9:41மாற் 5:41லூக் 13:13 அவன் குதித்து, எழுந்து, நின்று, நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைப் புகழ்ந்துகொண்டு, அவர்களோடு தேவாலயத்திற்குள் போனான். அப் 14:10ஏசா 35:6சங் 107:20-22சங் 103:1-2யோவா 5:14லூக் 17:15-18லூக் 6:23யோவா 5:8-9 அவன் நடக்கிறதையும், தேவனைப் புகழ்கிறதையும், மக்களெல்லோரும் கண்டு: அப் 4:16அப் 4:21லூக் 13:17அப் 14:11மாற் 2:11-12 ஆலயத்தின் அலங்கார வாசலருகில் பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்கு நடந்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டு பிரமித்தார்கள். அப் 3:2யோவா 5:20யோவா 9:3லூக் 9:43அப் 2:12அப் 2:7அப் 4:14-16அப் 4:21-22

பேதுரு மக்களோடு பேசுதல்

சுகமாக்கப்பட்ட சப்பாணி பேதுரு மற்றும் யோவானோடு இருக்கும்போது, மக்களெல்லோரும் திகைத்து, சாலொமோன் மண்டபம் என்னும் மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள். அப் 5:12யோவா 10:23லூக் 8:38அப் 2:6லூக் 22:8 பேதுரு மக்களைப் பார்த்து: இஸ்ரவேலர்களே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்களுடைய சுயசக்தியினாலாவது, சுயபக்தியினாலாவது, இவனை நடக்க செய்தோமென்று நீங்கள் எங்களை உற்றுப்பார்க்கிறதென்ன? 2 கொரி 3:5யோவா 3:27-28அப் 14:11-15ஆதி 41:16அப் 10:25-26அப் 2:22தானி 2:28-30ரோம 9:4 ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலை செய்ய தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள். அப் 7:32மத் 22:32யாத் 3:6எபி 2:9யோவா 18:40யோவா 19:12யோவா 19:15லூக் 23:16-23 பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலை செய்யவேண்டுமென்று கேட்டு, மாற் 1:24அப் 7:521 பேது 3:18அப் 4:27அப் 22:14யாக் 5:6லூக் 23:18-19சகரி 9:9 ஜீவாதிபதியாகிய இயேசுவைக் கொலைசெய்தீர்கள்; தேவன் அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம். அப் 2:24அப் 2:32வெளி 21:61 கொரி 15:45அப் 13:30-32எபி 2:10யோவா 1:4யோவா 5:26 அவருடைய நாமத்தில் வைத்திருக்கும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே உங்களுக்கு அறிமுகமான இவனை பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய நம்பிக்கை உங்களெல்லோருக்கும் முன்பாக, இவனுடைய முழுசரீரத்திற்கும் இந்த சுகத்தைக் கொடுத்தது. மத் 21:21-22அப் 14:9அப் 3:6மாற் 16:17-18அப் 16:18அப் 4:10லூக் 17:5-6மத் 9:22 சகோதரர்களே நீங்களும் உங்களுடைய அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று எனக்குத் தெரியும் லூக் 23:34அப் 13:271 கொரி 2:8யோவா 16:31 தீமோ 1:132 கொரி 3:14அப் 26:9யோவா 7:26-27 கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்னவைகளை இவ்விதமாக நிறைவேற்றினார். ஏசா 53:1-12அப் 2:23அப் 26:22-23ஏசா 50:6லூக் 24:26-27சகரி 12:101 கொரி 15:3-41 பேது 1:10-11 ஆகவே, கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் நாட்கள் வரும்படிக்கும், முன்பே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடம் அனுப்பவும், அப் 2:38ஏசா 44:22ஏசா 43:25ஏசா 1:16-20மத் 13:15மத் 18:3சங் 51:92 தெச 1:7 உங்களுடைய குற்றங்கள் மன்னிக்கப்படவும் நீங்கள் மனந்திரும்பி குணப்படுங்கள். 2 தெச 2:22 தெச 2:8லூக் 19:11வெளி 1:7மத் 24:30-36வெளி 19:11-16அப் 17:31எபி 9:28 உலகம் உண்டானதுமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் எல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்ன எல்லாம் நிறைவேறிமுடியும் நாட்கள் வரும்வரை அவர் பரலோகத்தில் இருக்கவேண்டும். ரோம 8:21ஏசா 1:26அப் 1:11மல்கி 4:5-6மாற் 9:11-13மத் 17:11-12லூக் 1:70வெளி 22:6 மோசே முற்பிதாக்களைப்பார்த்து: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்களுடைய சகோதரர்களிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுங்கள். உபா 18:15-19அப் 7:37கலா 4:4யோவா 1:17எபி 5:9எபி 1:1-2எபி 2:9-17ஏசா 55:3-4 அந்தத் தீர்க்கதரிசியின் சொல்லைக் கேளாதவன் எவனோ, அவன் மக்கள் மத்தியில் இல்லாதபடிக்கு அழிக்கப்படுவான் என்றான். உபா 18:19யோவா 12:48எபி 10:28-30எபி 10:39எபி 12:25வெளி 20:152 தெச 1:7-9அப் 13:38-41 சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் சொன்னார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னமே அறிவித்தார்கள். அப் 3:21லூக் 24:271 சாமு 3:201 சாமு 2:18சங் 99:61 சாமு 3:1அப் 13:20ரோம 3:21 நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் பிள்ளைகளாக இருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடு செய்த உடன்படிக்கைக்கும் பிள்ளைகளாக இருக்கிறீர்கள். ஆதி 22:18கலா 3:81 நாளாக 16:17அப் 2:39ரோம 9:4-5ஆதி 12:3சங் 105:8-15கலா 3:16 அவர் உங்களெல்லோரையும் உங்களுடைய பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான். மத் 1:211 யோவா 3:5-8அப் 3:22யூதா 1:24அப் 13:46-47அப் 3:25எபே 5:26-27எசேக் 11:19-20