எசேக்கியேல் 30

Ezekiel 30
அத்தியாயம் 30

எகிப்திற்கான புலம்பல்

யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ, ஆபத்துநாள் வருகிறதென்று அலறுங்கள். ஏசா 13:6எசேக் 21:12ஏசா 15:2யோவே 1:11யோவே 1:5ஏசா 14:31ஏசா 16:7ஏசா 23:1 நாள் அருகில் இருக்கிறது; ஆம், யெகோவாவுடைய நாள் அருகில் இருக்கிறது; அது மந்தாரமான நாள், அது அந்நியஜாதிகளுக்கு வரும் காலம். ஒபதி 1:15யோவே 2:1-2எசேக் 30:18எசேக் 34:12எசேக் 7:12எசேக் 7:7ஏசா 24:21-23யோவே 1:15 வாள் எகிப்திலே வரும்; எகிப்திலே கொலை செய்யப்படுகிறவர்கள் விழும்போது எத்தியோப்பியாவிலே மகாவேதனை உண்டாயிருக்கும்; அதின் ஏராளமான மக்களைப் பிடித்துக்கொண்டுபோவார்கள்; அதின் அஸ்திபாரங்கள் பாழாக்கப்படும். எசேக் 29:19எசேக் 29:8யாத் 15:14-16எசேக் 29:12எசேக் 30:9-10ஏசா 16:7ஏசா 19:16-17ஏசா 19:2 எத்தியோப்பியர்களும், பூத்தியர்களும், லூதியர்களும், கலந்த கூட்டமாகிய அனைவரும், லிபியர்களும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் மக்களும் அவர்களுடன் கூட வாளால் விழுவார்கள். எரே 25:20எசேக் 27:10எரே 25:24ஏசா 18:1ஏசா 20:4எரே 44:27எரே 46:9எரே 50:37 எகிப்தை ஆதரிக்கிறவர்களும் விழுவார்கள்; அதினுடைய பலத்தின் முக்கியமும் தாழ்ந்துபோகும் என்று யெகோவா சொல்லுகிறார்; அதிலே மிக்தோல் முதல் செவெனேவரைக்கும் வாளினால் விழுவார்களென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக் 29:10ஏசா 20:3-6ஏசா 31:3யோபு 9:13நாகூ 3:9 பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போவார்கள்; அழிக்கப்பட்ட பட்டணங்களில் அவர்கள் பட்டணங்களும் அழிக்கப்படும். எசேக் 29:12எரே 25:18-26எசேக் 32:18-32எரே 46:1-28 நான் எகிப்திலே தீக்கொளுத்தும்போதும், உனக்குத் துணைநின்ற யாவரும் முறிக்கப்படும்போதும், நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள். எசேக் 29:6ஆமோ 1:10ஆமோ 1:12ஆமோ 1:14ஆமோ 1:4ஆமோ 1:7எசேக் 22:31எசேக் 29:16 இருமாப்புள்ள எத்தியோப்பியரைத் தத்தளிக்கச்செய்து அந்த நாளிலே என்னுடைய கட்டளையினால் தூதுவர்கள் கப்பல்களிலே போவார்கள்; அப்பொழுது எகிப்தின் நாளிலே உண்டானதுபோல அவர்களுக்குள்ளே மகா வேதனை உண்டாயிருக்கும்; இதோ, அது வருகிறது. ஏசா 18:1-2எசேக் 32:9-10ஏசா 23:5ஆமோ 4:2எசேக் 26:16எசேக் 27:35எசேக் 30:4-6எசேக் 33:33 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக் கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியச்செய்வேன். எசேக் 29:19எசேக் 29:4-5எசேக் 30:24-25எசேக் 32:11-16 இவனும் இவனோடு கூடத் தேசங்களில் மகா பலசாலிகளான இவனுடைய மக்களும் தேசத்தை அழிப்பதற்காக தூண்டப்பட்டு வந்து, தங்களுடைய வாள்களை எகிப்திற்கு விரோதமாக உருவி, கொலை செய்யப்பட்டு இறந்தவர்களாலே தேசத்தை நிரப்புவார்கள். எசேக் 28:7உபா 28:50எசேக் 31:12எசேக் 32:12எசேக் 35:8எசேக் 39:11-20எசேக் 39:4ஆப 1:6-9 அப்பொழுது நான் நதிகளை வற்றிப்போகச்செய்து, தேசத்தைப் பொல்லாதவர்களின் கையிலே விற்று, தேசத்தையும் அதிலுள்ள யாவையும் அந்நிய தேசத்தாரின் கையால் பாழாக்கிப்போடுவேன்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன். எசேக் 29:31 கொரி 10:26எசேக் 28:10எசேக் 29:9-10எசேக் 31:12ஏசா 19:4-10ஏசா 44:27நியாயாதி 2:14 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அசுத்தமான சிலைகளை அழித்து, நோப்பின் சிலைகளை ஒழியச்செய்வேன்; இனி எகிப்துதேசத்தில் ஒரு அதிபதியும் இருக்கமாட்டான்; நான் எகிப்துதேசத்தில் பயமுண்டாக்கி, சகரி 10:11எரே 2:16எரே 46:14யாத் 12:12எசேக் 29:14-15ஓசி 9:6ஏசா 19:1-16எரே 43:12 பத்ரோசைப் பாழாக்கி, சோவானிலே தீக்கொளுத்தி, நோ பட்டணத்தைத் தண்டித்து, எசேக் 29:14எரே 46:25சங் 78:12சங் 78:43ஏசா 19:11நாகூ 3:8எண் 13:22ஏசா 11:11 எகிப்தின் பெலனாகிய சீனின்மேல் என்னுடைய கடுங்கோபத்தை ஊற்றி, நோ பட்டணத்தின் ஏராளமான மக்களை வெட்டிப்போடுவேன். நாகூ 1:6சங் 11:6வெளி 16:1 எகிப்தில் தீக்கொளுத்துவேன்; சீன் மகா வேதனை அடையும்; நோ பட்டணம் தகர்ந்து இடிந்துபோகும்; நோப்புக்கு அனுதினமும் நெருக்கங்கள் உண்டாகும். எசேக் 28:18எசேக் 30:8-9 ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர்கள் வாளால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள். ஆதி 41:45 எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும்போதும், அதினுடைய பெலத்தின் முக்கியம் அதிலே ஓயும்போதும், இருள் அதை மூடும்; தகபானேசிலே பகல் இருண்டுபோகும்; அதின் மகள்கள் சிறைப்பட்டுப்போவார்கள். எசேக் 30:3எசேக் 29:15ஏசா 10:27எரே 2:16யாத் 10:15எசேக் 31:18எசேக் 32:18-32ஏசா 13:10 இப்படி எகிப்திலே நியாயத்தீர்ப்புகளைச் செய்வேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார். எசேக் 30:14வெளி 17:1எசேக் 25:11எசேக் 5:15எசேக் 5:8எண் 33:4சங் 9:16ரோம 2:5 பதினோராம் வருடம் முதலாம் மாதம் ஏழாம் நாளிலே, யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எசேக் 26:1எசேக் 29:17எசேக் 29:1எசேக் 1:2எசேக் 31:1 மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாவதற்காகக் கட்டப்படுவதில்லை; அது வாளைப் பிடிக்கும் அளவுக்கு பெலன்பெற பத்தை வைத்துக் கட்டப்படுவதுமில்லை. எரே 30:13எரே 46:11எரே 48:25சங் 37:17எசேக் 30:24சங் 10:15ஏசா 1:6எரே 51:8-9 ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு விரோதமாக வந்து, பெலனுள்ளதும் முறிந்ததுமாகிய அவனுடைய புயங்களை முறித்துப்போடுவேன்; வாளை நான் அவன் கையிலிருந்து விழச்செய்து, சங் 37:172இராஜா 24:7எசேக் 29:3எரே 37:7எசேக் 34:16எரே 46:1-12எரே 46:21-25 எகிப்தியர்களைத் தேசங்களுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களில் தூற்றிவிடுவேன். எசேக் 30:17-18எசேக் 30:26எசேக் 29:12-13 பாபிலோன் ராஜாவின் கைகளைப் பெலப்படுத்தி, அவனுடைய கையிலே என்னுடைய வாளைக் கொடுத்து, பார்வோனின் கைகளை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலை செய்யப்பட்டு தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான். எசேக் 30:25செப்ப 2:12ஏசா 45:1ஏசா 45:5நெகே 6:9உபா 32:41-42எசேக் 26:15எசேக் 30:10 பாபிலோன் ராஜாவின் கைகளைப் பெலப்படுத்துவேன்; பார்வோனின் கைகளோ விழுந்துபோகும்; என்னுடைய வாளை நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கும்போதும், அவன் அதை எகிப்து தேசத்தின்மேல் நீட்டும்போதும், நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள். எசேக் 29:16எசேக் 29:21எசேக் 30:19எசேக் 30:26எசேக் 32:15எசேக் 38:16எசேக் 38:23எசேக் 39:21-22 நான் எகிப்தியர்களைத் தேசங்களுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களில் தூற்றிப்போடுவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள். தானி 11:42எசேக் 29:12எசேக் 30:17-18எசேக் 30:23எசேக் 6:13