ஆதியாகமம் 37

Genesis 37
அத்தியாயம் 37

யோசேப்பு கண்ட கனவுகள்

யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான். ஆதி 17:8ஆதி 23:4ஆதி 28:4ஆதி 36:7எபி 11:9-16 யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரர்களுடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் மகன்களோடு இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான். ஆதி 35:25-261 கொரி 11:181 சாமு 2:22-24ஆதி 35:221 கொரி 1:111 கொரி 5:1ஆதி 10:1ஆதி 30:4 இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் மகன்கள் எல்லோரையும்விட அவனை அதிகமாக நேசித்து, அவனுக்குப் பலவர்ண அங்கியைச் செய்வித்தான். ஆதி 37:32யோவா 3:352 சாமு 13:18ஆதி 37:23யோவா 13:22-23எசேக் 16:16ஆதி 44:20-30சங் 45:13-14 அவனுடைய சகோதரர்கள் எல்லோரையும்விட அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாக நேசிக்கிறதை அவனுடைய சகோதரர்கள் கண்டபோது, அவனோடு ஆதரவாகப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள். ஆதி 27:411 யோவா 3:121 யோவா 4:201 யோவா 2:11சங் 69:41 சாமு 17:28ஆதி 37:5ஆதி 4:5 யோசேப்பு ஒரு கனவு கண்டு, அதைத் தன் சகோதரர்களுக்குத் தெரிவித்தான்; அதனால் அவனை இன்னும் அதிகமாகப் பகைத்தார்கள். ஆதி 28:12ஆதி 42:9தானி 4:5யோவா 17:14ஆமோ 3:7ஆதி 37:4எண் 12:61 இராஜா 3:5 அவன் அவர்களை நோக்கி: “நான் கண்ட கனவைக் கேளுங்கள்: ஆதி 44:18நியாயாதி 9:7 நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்களுடைய அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது” என்றான். ஆதி 42:6ஆதி 44:14ஆதி 43:26ஆதி 42:9கொலோ 1:18ஆதி 44:19பிலி 2:10 அப்பொழுது அவனுடைய சகோதரர்கள் அவனைப் பார்த்து: “நீ எங்கள்மேல் ஆளுகை செய்வாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ”? என்று சொல்லி, அவனை அவனுடைய கனவுகளினாலும், அவனுடைய வார்த்தைகளினாலும் இன்னும் அதிகமாகப் பகைத்தார்கள். 1 சாமு 10:27அப் 7:35ஆதி 49:261 சாமு 17:28அப் 4:27-28யாத் 2:14ஆதி 37:4எபி 10:29 அவன் வேறொரு கனவு கண்டு, தன் சகோதரர்களை நோக்கி: “நான் இன்னும் ஒரு கனவைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது” என்றான். அப் 7:9-14ஆதி 46:29தானி 8:10ஆதி 37:7ஆதி 37:10ஆதி 41:25ஆதி 41:32ஆதி 43:28 இதை அவன் தன்னுடைய தகப்பனுக்கும், சகோதரர்களுக்கும் சொன்னபோது, அவனுடைய தகப்பன் அவனைப் பார்த்து: “நீ கண்ட இந்தக் கனவு என்ன? நானும் உன்னுடைய தாயாரும், சகோதரர்களும் தரைவரைக்கும் குனிந்து உன்னை வணங்கவருவோமோ” என்று அவனைக் கடிந்துகொண்டான். ஆதி 27:29ஆதி 37:7ஏசா 60:14பிலி 2:10-11 அவனுடைய சகோதரர்கள் அவன்மேல் பொறாமைகொண்டார்கள்; அவனுடைய தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான். அப் 7:9லூக் 2:19லூக் 2:51தானி 7:28அப் 13:45பிரச 4:4கலா 5:21ஆதி 26:14-16

யோசேப்பு தன் சகோதரர்களால் விற்கப்படுதல்

பின்பு, அவனுடைய சகோதரர்கள் சீகேமிலே தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப் போனார்கள். ஆதி 33:18ஆதி 34:25-31ஆதி 37:1 அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: “உன் சகோதரர்கள் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்திற்கு அனுப்பப் போகிறேன், வா” என்றான். அவன்: “இதோ, போகிறேன்” என்றான். எபே 6:1-31 சாமு 17:17-201 சாமு 3:161 சாமு 3:4-61 சாமு 3:8ஆதி 22:1ஆதி 27:1ஆதி 27:18 அப்பொழுது அவன்: “நீ போய், உன் சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான். ஆதி 35:27லூக் 19:42சங் 125:51 இராஜா 2:331 சாமு 17:17-182 சாமு 18:32ஆதி 13:18ஆதி 23:2 அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே அலைந்து திரிவதைக் கண்டு, “என்ன தேடுகிறாய்”? என்று அவனைக் கேட்டான். நியாயாதி 4:22யோவா 4:272இராஜா 6:19ஆதி 21:14யோவா 1:38யோவா 18:4யோவா 18:7யோவா 20:15 அதற்கு அவன்: “என் சகோதரர்களைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும்” என்றான். லூக் 19:10உன்னத 1:7 அந்த மனிதன்: “அவர்கள் இந்த இடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்வதைக்கேட்டேன்” என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரர்களைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான். 2இராஜா 6:13 அவன் தூரத்தில் வருவதை அவர்கள் கண்டு, அவன் தங்களுக்கு அருகில் வருவதற்குமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைசெய்து, அப் 23:121 சாமு 19:1மாற் 14:1சங் 37:12சங் 37:32யோவா 11:53சங் 31:13லூக் 20:14-15 ஒருவரை ஒருவர் நோக்கி: “இதோ, கனவுகாண்கிறவன் வருகிறான், ஆதி 28:12ஆதி 37:11ஆதி 37:5ஆதி 49:23 நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு கொடியமிருகம் அவனைக் கொன்றது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய கனவுகள் எப்படி நிறைவேறுமென்று பார்ப்போம்” என்றார்கள். தீத் 3:3நீதி 27:42இராஜா 2:24மத் 2:2-16நீதி 1:11-121 இராஜா 13:241 சாமு 26:2அப் 4:16-18 ரூபன் அதைக்கேட்டு, அவனை அவர்களுடைய கைக்குத் தப்புவித்து, அவனை அவனுடைய தகப்பனிடத்திற்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாகி, ஆதி 42:22ஆதி 35:22ஆதி 9:5யோசு 10:28மத் 10:28 அவர்களை நோக்கி: “அவனைக் கொல்லவேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தக்கூடாது; நீங்கள் அவன்மேல் கைகளை வைக்காமல், அவனை வனாந்திரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள்” என்று சொல்லி, இந்த விதமாக ரூபன் அவனை அவர்களிடமிருந்து தப்புவித்தான். அப் 12:1உபா 13:9யாத் 24:11ஆதி 22:12ஆதி 42:22மத் 27:24 யோசேப்பு தன் சகோதரர்களிடத்தில் சேர்ந்தபோது யோசேப்பு அணிந்துகொண்டிருந்த பலவர்ண அங்கியை அவர்கள் கழற்றி, ஆதி 37:3ஆதி 37:31-33ஆதி 42:21மத் 27:28சங் 22:18 அவனைத் தூக்கி, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது. எரே 38:6சங் 130:1-2சகரி 9:11புலம் 3:52-55புலம் 4:20சங் 35:7சங் 40:2சங் 88:6 பின்பு, அவர்கள் சாப்பிடுவதற்காக உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்திற்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள். ஆதி 37:28ஆதி 43:11எரே 8:22ஆதி 16:11-12எரே 46:11ஆதி 25:1-4ஆதி 25:16-18ஆதி 31:23 அப்பொழுது யூதா தன் சகோதரர்களை நோக்கி: “நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவனுடைய இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன? ஆதி 37:20ஆதி 4:102 சாமு 1:16உபா 17:8எசேக் 24:7ஆதி 25:32எரே 41:8யோபு 16:18 அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாமலிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய சரீரமாக இருக்கிறானே” என்றான். அவனுடைய சகோதரர்கள் அவன் சொல்லுக்கு சம்மதித்தார்கள். ஆதி 42:21மத் 16:261 சாமு 18:171 தீமோ 1:102 சாமு 11:14-172 சாமு 12:9யாத் 21:16யாத் 21:21 அந்த வியாபாரிகளான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு 1 விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள். அப் 7:9சங் 105:17ஆதி 25:2ஆதி 45:4-5ஆதி 37:25ஆதி 37:36நியாயாதி 6:1-3மத் 26:15 பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்திற்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, ஆதி 37:34யோபு 1:20அப் 14:14ஆதி 44:13யோவே 2:13எண் 14:62இராஜா 19:1ஆதி 34:13 தன் சகோதரரிடத்திற்குத் திரும்பி வந்து: “இளைஞன் இல்லையே, ஐயோ, நான் எங்கே போவேன் என்றான். ஆதி 42:13ஆதி 42:32எரே 31:15ஆதி 37:20ஆதி 42:35-36 அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே நனைத்து, ஆதி 37:23ஆதி 37:3நீதி 28:13 அதைத் தங்கள் தகப்பனிடத்திற்கு அனுப்பி: “இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய மகனின் அங்கியோ, அல்லவோ, பாரும்” என்று சொல்லச்சொன்னார்கள். லூக் 15:30ஆதி 37:3ஆதி 44:20-23 யாக்கோபு அதைக் கண்டு, “இது என் மகனுடைய அங்கிதான், ஒரு கொடியமிருகம் அவனைக் கொன்றுபோட்டது, யோசேப்பு கிழிக்கப்பட்டுப் போனான்” என்று புலம்பி, ஆதி 37:20ஆதி 44:281 இராஜா 13:242இராஜா 2:24யோவா 13:7நீதி 14:15 தன் ஆடைகளைக் கிழித்து, தன் இடுப்பில் சணல் ஆடையைக் கட்டிக்கொண்டு, அநேகநாட்கள் தன் மகனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான். ஆதி 37:292 சாமு 3:311 நாளாக 21:161 இராஜா 20:311 இராஜா 21:272இராஜா 19:12 சாமு 1:11அப் 14:14 அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடம்கொடாமல், “நான் துக்கத்தோடு என் மகனிடத்திற்கு பாதாளத்தில் இறங்குவேன்” என்றான். இந்த விதமாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான். ஆதி 42:382 சாமு 12:17யோபு 2:11ஆதி 31:43ஆதி 35:22-26ஆதி 42:31ஆதி 44:29-31ஆதி 45:28 அந்த மீதியானியர்கள் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் அதிகாரியும் மெய்க்காப்பாளர்களுக்கு தலைவனுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள். ஆதி 37:28ஆதி 40:42இராஜா 25:8ஆதி 25:1-2ஆதி 39:1-23ஏசா 56:3எஸ்த 1:10