ஏசாயா 34

Isaiah 34
அத்தியாயம் 34

தேசங்களுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு

தேசங்களே, கேட்கிறதற்கு அருகில் வாருங்கள்; மக்களே, கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்பதாக. 1 கொரி 10:26ஏசா 1:2ஏசா 41:1ஏசா 43:9உபா 32:1ஏசா 33:13எரே 22:29மீகா 6:1-2 சகல தேசங்களின்மேலும் யெகோவாவுடைய கடுங்கோபமும், அவைகளுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களை அழிவிற்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார். எரே 25:15-29செப்ப 3:8ஆமோ 1:1-2ஏசா 13:5ஏசா 30:25ஏசா 30:27-30யோவே 3:9-14சகரி 14:12-16 அவர்களிலே கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியப்பட்டுக்கிடப்பார்கள்; அவர்களுடைய சடலங்கள் நாற்றமெடுக்கும்; அவர்களுடைய இரத்தத்தினாலே மலைகளும் கரைந்துபோகும். யோவே 2:20எசேக் 39:4ஏசா 34:72இராஜா 9:35-37ஆமோ 4:10எசேக் 14:19எசேக் 32:5-6எசேக் 35:6 வானத்தின் சர்வ சேனையும் கரைந்து, வானங்கள் புத்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சைச்செடியின் இலைகள் உதிர்வதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிர்வதுபோலவும் உதிர்ந்து விழும். வெளி 6:13-14மத் 24:29எசேக் 32:7-8யோவே 3:152 பேது 3:7-12மாற் 13:24-25சங் 102:25-26எரே 4:23-24 வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது; இதோ, ஏதோமின்மேலும், நான் அழிவிற்கு நியமித்த மக்களின்மேலும், அது நியாயம்செய்ய இறங்கும். எரே 46:10ஆமோ 1:11-12ஏசா 63:1மல்கி 1:4எசேக் 25:12-14எரே 49:7-22உபா 29:18-21உபா 32:14 போஸ்றா பட்டணத்திலே யெகோவாவுக்கு ஒரு யாகமும், ஏதோம் தேசத்திலே மகா அழிவும் உண்டு; யெகோவாவுடைய பட்டயம் இரத்தத்தால் திருப்தியாகி, கொழுப்பினால் பூரிக்கின்றது; ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய சிறுநீரகங்களின் கொழுப்பினாலும் திருப்தியாகும். ஏசா 63:1எரே 49:13உபா 32:14எசேக் 21:4-5எசேக் 39:17-20ஏசா 34:5ஏசா 63:3எரே 50:27 அவைகளுடன் காண்டாமிருகங்களும், காளைகளின் கூட்டமும்வந்து மடியும்; அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு, அவர்களுடைய மண், மிருகங்களுடைய கொழுப்பினால் கொழுத்துப்போகும். எண் 23:22சங் 68:30எரே 50:27உபா 33:17எரே 46:21எரே 50:11யோபு 39:9-10எண் 24:8 அது யெகோவா பழிவாங்கும் நாள், சீயோனுடைய வழக்கினிமித்தம் பதிலளிக்கும் வருடம். ஏசா 63:4ஏசா 61:2ஏசா 35:4எரே 46:10சங் 94:1உபா 32:35ஏசா 26:21ஏசா 49:26 அதின் ஆறுகள் பிசினாகவும், அதின் மண் கந்தகமாகவும் மாறி, அதின் நிலம் எரிகிற கீலாய்ப்போகும். உபா 29:23சங் 11:6ஆதி 19:28யோபு 18:15யூதா 1:7லூக் 17:29வெளி 19:20வெளி 21:8 இரவும் பகலும் அது அணையாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும்; சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை. வெளி 19:3ஏசா 13:20ஏசா 66:24மல்கி 1:3-4எசேக் 29:11ஏசா 1:31வெளி 14:10-11வெளி 18:18 நாரையும் முள்ளம்பன்றியும் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும், ஆந்தையும் காக்கையும் அதிலே குடியிருக்கும்; அதின்மேல் வெட்டவெளியின் அளவுநூலையும், வெறுமையின் தூக்குநூலையும் பிடிப்பார். 2இராஜா 21:13புலம் 2:8செப்ப 2:14வெளி 18:22 சாமு 8:2ஏசா 14:23ஏசா 13:20-22ஏசா 24:10 அரசாட்சிசெய்ய அதின் மேன்மக்களை அழைத்தால், அங்கே அவர்களில் ஒருவரும் இருக்கமாட்டார்கள்; அதின் பிரபுக்கள் அனைவரும் இல்லாமற்போவார்கள். ஏசா 3:6-81 கொரி 13:21 கொரி 8:42 கொரி 12:11பிரச 10:16-17ஏசா 41:11-12ஏசா 41:24எரே 27:20 அதின் அரண்மனைகளில் முட்செடிகளும், அதின் கோட்டைகளில் முட்புதர்களும் முட்பூண்டுகளும் முளைக்கும்; அது வலுசர்ப்பங்களின் குடியிருப்பும், ஆந்தைகளின் மாளிகையுமாயிருக்கும். எரே 10:22எரே 9:11மல்கி 1:3சங் 44:19ஓசி 9:6ஏசா 13:21-22ஏசா 32:13-14ஏசா 35:7 அங்கே காட்டுமிருகங்களும் நரிகளும் ஒன்றையொன்று சந்தித்து, காட்டாட்டைக் காட்டாடு கூப்பிடும்; அங்கே ஆந்தைகளும் தங்கி, இளைப்பாறும் இடத்தைக் கண்டடையும். ஏசா 13:21-22 அங்கே இராஜாளிக்கழுகு கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சுபொரித்து, அவைகளைத் தன் நிழலிலே கூட்டிக்கொள்ளும்; அங்கே பருந்துகளும் ஜோடிஜோடியாகச் சேரும். உபா 14:13 யெகோவாவுடைய புத்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் இணை இல்லாமல் இருக்காது; அவருடைய வாய் இதைச் சொன்னது; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும். சங் 33:9யோசு 1:8மத் 5:18ஏசா 30:8சங் 33:6நீதி 23:12யோவா 10:35லூக் 21:33 அவரே அவைகளுக்குச் சீட்டுப்போட்டார்; அவருடைய கையே அதை அவைகளுக்கு அளவுநூலால் பகிர்ந்து கொடுத்தது; அவைகள் என்றைக்கும் அதைச் சொந்தமாக்கிக்கொண்டு தலைமுறை தலைமுறையாக அதிலே வசிக்கும். ஏசா 34:10அப் 17:26ஏசா 13:20-22ஏசா 17:14எரே 13:25யோசு 18:8சங் 78:55அப் 13:19