யோபு 15

Job 15
அத்தியாயம் 15

எலிப்பாஸின் வார்த்தைகள்

அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக: யோபு 2:11யோபு 42:7யோபு 22:1யோபு 4:1யோபு 42:9

ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, யோபு 6:26யோபு 8:2ஓசி 12:1யாக் 3:13யோபு 11:2-3யோபு 13:2

தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி,

பயனில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கம் செய்யலாமோ? கொலோ 4:6மத் 12:36-371 தீமோ 6:4-5யோபு 13:4-5யோபு 16:2-3யோபு 26:1-3மல்கி 3:13-15

நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, ரோம 3:311 நாளாக 10:13-14ஆமோ 6:10கலா 2:21ஓசி 7:14யோபு 27:10யோபு 4:5-6யோபு 5:8

தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறைத்துக்கொண்டீர்.

உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது; யாக் 1:26எரே 9:3-5யாக் 3:5-8எரே 9:8லூக் 6:45சங் 50:19-20சங் 52:2-4யோபு 5:13

நீர் தந்திரமுள்ளவர்களின் சொல்லைத் தெரிந்துகொண்டீர்.

நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று முடிவு செய்கிறது; லூக் 19:22யோபு 9:20மத் 12:37யோபு 33:8-12யோபு 34:5-9யோபு 35:2-3யோபு 40:8யோபு 42:3

உம்முடைய உதடுகளே உமக்கு விரோதமாகச் சாட்சியிடுகிறது.

மனிதரில் முந்திப் பிறந்தவர் நீர் தானோ? சங் 90:2யோபு 12:12யோபு 38:4-41நீதி 8:22-25ஆதி 4:1யோபு 15:10

மலைகளுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ?

நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, ரோம 11:34எரே 23:181 கொரி 2:161 கொரி 2:9-11ஆமோ 3:7உபா 29:29யோவா 15:15யோபு 11:6

ஞானத்தை உம்மிடமாகச் சேர்த்துக்கொண்டீரோ?

நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? யோபு 13:22 கொரி 11:52 கொரி 10:72 கொரி 11:21-30யோபு 12:3யோபு 26:3-4

எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ?

உம்முடைய தகப்பனைவிட அதிக வயதுள்ள நரைத்தோரும் மிகுந்த வயதானோரும் எங்களுக்குள் இருக்கிறார்களே. யோபு 32:6-7யோபு 12:12யோபு 8:8-10உபா 32:7யோபு 12:20நீதி 16:31

தேவன் அருளிய ஆறுதல்களும், 2 கொரி 1:3-5யோபு 13:21 இராஜா 22:242 கொரி 7:6யோபு 11:13-19யோபு 15:8யோபு 36:16யோபு 5:8-26

உம்முடன் சொல்லப்படுகிற மென்மையான பேச்சும் உமக்கு இழிவான காரியமாயிருக்கிறதோ?

உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? மாற் 7:21-22சங் 35:19அப் 5:3-4அப் 8:22யாக் 1:14-15யோபு 11:13யோபு 17:2நீதி 6:13

உம்முடைய கண்கள் கோபத்துடன் பார்க்கிறது என்ன?

தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படச்செய்கிறீர். யாக் 3:2-6யோபு 15:25-27யாக் 1:26யோபு 10:3யோபு 12:6யோபு 9:4மல்கி 3:13சங் 34:13

மனிதனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், பிரச 7:20யோபு 14:4நீதி 20:9ரோம 7:18யோபு 25:4-61 யோவா 1:8-101 இராஜா 8:46சங் 14:3

பெண்ணிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?

இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; யோபு 25:5யோபு 4:18ஏசா 6:2-5யோபு 5:1

வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.

அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனிதன் எத்தனை அதிகமாக அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்? யோபு 34:7நீதி 19:28சங் 53:3ரோம 3:9-19தீத் 3:3யோபு 20:12யோபு 4:19யோபு 42:6

உமக்குக் காரியத்தைத் தெரியவைப்பேன் என்னைக் கேளும்; யோபு 13:5-6யோபு 33:1யோபு 34:2யோபு 36:2யோபு 5:27

நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன்.

ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே நான் சொல்லுவேன். யோபு 8:8ஏசா 38:19யோபு 15:10சங் 71:18சங் 78:3-6

அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; யோவே 3:17உபா 32:8ஆதி 10:25ஆதி 10:32

அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை.

துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுகிறான்; யாக் 5:1-6யோபு 27:13யோபு 24:1லூக் 12:19-21பிரச 9:3சங் 90:12சங் 90:3-4ரோம 8:22

பலவந்தம் செய்கிறவனுக்கு அவனுடைய வருடங்களின் எண்ணிக்கை மறைக்கப்பட்டிருக்கிறது.

பயங்கரமான சத்தம் அவனுடைய காதுகளில் தொனிக்கிறது; யோபு 18:111 தெச 5:3லேவி 26:361 கொரி 10:10யோபு 1:13-19யோபு 20:22-25யோபு 20:5-7யோபு 27:20

அவன் சமாதானமாயிருக்கும்போது பாழாக்குகிறவன் அவன்மேல் வருவான்.

இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், யோபு 20:24-252இராஜா 6:33ஏசா 8:21-22யோபு 19:29யோபு 27:14யோபு 6:11யோபு 9:16மத் 27:5

ஒளிந்திருக்கிறவர்களின் பட்டயத்திற்கு அவன் பயப்படுகிறான்.

அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்து திரிகிறான்; யோபு 18:12சங் 109:10சங் 59:15ஆமோ 5:20பிரச 11:8ஆதி 4:12எபி 10:27எபி 11:37-38

இருளானநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்.

இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கச்செய்து, நீதி 24:34நீதி 6:11ஏசா 13:3யோபு 6:2-4மத் 26:37-38நீதி 1:27சங் 119:143ரோம 2:9

போர்வீரனான ராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும்.

அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி, தானி 5:23யோபு 9:4சங் 52:7சங் 73:91 சாமு 6:6யோபு 36:9மல்கி 3:13சங் 73:11

சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான்.

கடினக்கழுத்துடனும், பருத்த குமிழுள்ள தன் கேடயங்களுடனும் அவருக்கு எதிராக ஓடுகிறான். 2 நாளாக 32:13-172 நாளாக 28:22ஆதி 49:8யோபு 16:12சங் 18:40

அவனுடைய முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; சங் 17:10ஏசா 6:10எரே 5:28சங் 73:7உபா 32:15யோபு 17:10சங் 78:31

அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது.

ஆனாலும் பாழான பட்டணங்களிலும், யோபு 3:14எரே 51:37ஏசா 5:8-10எரே 26:18எரே 9:11யோபு 18:15மீகா 3:12மீகா 7:18

குடிபோன கற்குவியலான வீடுகளிலும் குடியிருப்பான்.

அவன் செல்வந்தனாவதுமில்லை, யோபு 27:16-17யாக் 1:11யாக் 5:1-3யோபு 20:22-28யோபு 22:15-20லூக் 12:19-21லூக் 16:19-22லூக் 16:2

அவனுடைய செல்வம் நிலைப்பதுமில்லை;

அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை.

இருளுக்கு அவன் தப்புவதில்லை; யோபு 4:9யோபு 15:22யோபு 18:5-6யோபு 20:26மத் 25:412 பேது 2:172 தெச 1:8-9எசேக் 15:4-7

நெருப்புத்தணல் அவனுடைய கிளையைக் காய்ந்துபோகச் செய்யும்;

அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான்;

வழிதப்பினவன் மாயையை நம்பக்கூடாது; ஏசா 59:4கலா 6:3கலா 6:7-8ஓசி 8:7சங் 62:10எபே 5:6ஏசா 44:20யோபு 12:16

நம்பினால் மாயையே அவனுடைய பலனாயிருக்கும்.

அது அவனுடைய நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாகப் பலிக்கும்; பிரச 7:17சங் 55:23ஓசி 9:16யோபு 22:16எசேக் 17:8-10ஓசி 14:5-7ஏசா 27:11யோபு 14:7-9

அவனுடைய செடிகள் பச்சையாக இருப்பதில்லை.

பிஞ்சுகள் உதிர்ந்துபோகிற திராட்சைச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்து போகிற ஒலிவமரத்தைப் போலவும் அவன் இருப்பான். உபா 28:39-40ஏசா 33:9வெளி 6:13

மாயக்காரரின் கூட்டம் வெறுமையாகப்போகும்; யோபு 8:13யோபு 27:8யோபு 8:22மீகா 7:21 சாமு 12:31 சாமு 8:3ஆமோ 5:11-12ஏசா 33:14-15

லஞ்சம் வாங்கினவர்களின் கூடாரங்களை நெருப்பு எரிக்கும்.

அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறான்; சங் 7:14ஓசி 10:13ஏசா 59:4-5யாக் 1:15கலா 6:7-8

அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும்” என்றான்.