யோபு 17

Job 17
அத்தியாயம் 17

என் ஆவி உடைகிறது 1, என் ஆயுசு நாட்கள் முடிகிறது; ஏசா 38:10-14சங் 88:3-5ஏசா 57:16யோபு 17:13-14யோபு 19:17யோபு 42:16யோபு 6:11

கல்லறை எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.

கேலி செய்கிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? 1 சாமு 1:6-7யோபு 12:4யோபு 16:20மத் 27:39-44யோபு 13:9யோபு 21:3சங் 25:13சங் 35:14-16

அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.

தேவரீர் என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டு, எபி 7:22ஏசா 38:14நீதி 11:15ஆதி 43:9ஆதி 44:32சங் 119:122யோபு 9:33நீதி 22:26

எனக்காகப் பிணைக்கப்படுவீராக;

வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?

நீர் அவர்கள் இருதயத்திற்கு ஞானத்தை மறைத்தீர்; மத் 11:25மத் 13:111 கொரி 1:202 சாமு 17:14ஏசா 19:14ரோம 11:82 நாளாக 25:162 சாமு 15:31

ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.

எவன் தன் நண்பனுக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, சங் 12:2-3நீதி 20:19நீதி 29:51 இராஜா 11:12உபா 28:65யாத் 20:5யோபு 11:20யோபு 32:21-22

அவனுடைய பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.

மக்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; யோபு 30:9சங் 44:141 இராஜா 9:7ஆதி 31:27ஏசா 5:12

அவர்கள் முகத்திற்குமுன் நான் விரும்பத்தகாதவனானேன்.

இதற்காக என் கண்கள் வருத்தத்தினால் இருளடைந்தது; யோபு 16:16சங் 6:7சங் 31:9-10பிரச 6:12யோபு 16:8புலம் 5:17சங் 109:23

என் உறுப்புகளெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.

சன்மார்க்கர் இதற்காக அதிர்ச்சியடைவார்கள்; பிரச 5:8ஆப 1:13அப் 13:46யோபு 22:19யோபு 34:30சங் 73:12-15ரோம 11:33

குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.

நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்; நீதி 4:18ஏசா 1:15-16யோபு 22:302 கொரி 12:9-10நீதி 14:16சங் 84:7ஆதி 20:5ஏசா 40:29-31

சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.

இப்போதும் நீங்கள் எல்லோரும் போய்வாருங்கள்; யோபு 42:7யோபு 6:291 கொரி 1:201 கொரி 6:5யோபு 12:2யோபு 15:9யோபு 17:4யோபு 32:9

உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணவில்லை.

என் நாட்கள் முடிந்தது; யோபு 7:6ஏசா 38:10நீதி 16:92 கொரி 1:15-17ஏசா 8:10யாக் 4:13-15புலம் 3:37பிரச 9:10

என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது.

அவைகள் இரவைப் பகலாக்கியது; உபா 28:67யோபு 24:14-16யோபு 7:13-14யோபு 7:3-4

இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று நினைக்கத்தோன்றியது.

அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், யோபு 10:21-22ஏசா 57:2யோபு 14:14யோபு 17:1யோபு 3:13யோபு 30:23புலம் 3:25-26சங் 139:8

பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்;

இருளில் என் படுக்கையைப் போடுவேன்.

அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; சங் 16:101 கொரி 15:421 கொரி 15:53-54அப் 13:34-37அப் 2:27-31ஏசா 14:11யோபு 13:28யோபு 21:26

புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.

என் நம்பிக்கை இப்போது எங்கே? யோபு 13:15யோபு 19:10யோபு 4:6யோபு 6:11யோபு 7:6

நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?

அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; யோபு 3:17-19யோனா 2:62 கொரி 1:9எசேக் 37:11ஏசா 38:17-18யோபு 18:13-14யோபு 33:18-28சங் 143:7

அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான்.