“யோபே, என் நியாயங்களைக் கேளும்; யோபு 13:6யோபு 34:2மாற் 4:9சங் 49:1-3
என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும்.
இதோ, என் வாயை இப்போது திறந்தேன்; யோபு 3:1யோபு 31:30மத் 5:2சங் 78:2
என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும்.
என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; யோபு 27:41 தெச 2:3-4நீதி 20:15யோபு 15:2யோபு 36:3-4யோபு 38:2யோபு 6:28நீதி 15:2
நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாக பேசும்.
தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; யோபு 32:8ஆதி 2:7யோபு 27:31 கொரி 15:45யோபு 10:12சங் 33:6ரோம 8:2யோபு 10:3
சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.
உம்மால் முடிந்தால் எனக்கு மறுமொழி கொடும்; யோபு 33:32-33அப் 10:26யோபு 13:18யோபு 23:4-5யோபு 32:1யோபு 32:12யோபு 32:14சங் 50:21
நீர் ஆயத்தப்பட்டு எனக்கு முன்பாக நில்லும்.
இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; யோபு 4:192 கொரி 5:1யோபு 10:92 கொரி 5:20யாத் 4:16ஆதி 2:7ஆதி 3:19ஆதி 30:2
நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.
இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; யோபு 13:21யோபு 9:34சங் 32:4சங் 88:16
என் கை உம்மேல் பாரமாயிருக்காது.
நான் என் காதாலே கேட்க நீர் சொன்னதும், உபா 13:14எரே 29:23
நான் கேள்விப்பட்ட உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்:
நான் மீறுதல் இல்லாத சுத்தமுள்ளவன், யோபு 10:7யோபு 16:17யோபு 11:4யோபு 9:21யோபு 29:14எரே 2:35யோபு 13:18யோபு 13:23
நான் குற்றமற்றவன், என்னில் பாவமில்லை.
இதோ, என்னில் அவர் குற்றம் கண்டுபிடிக்கப்பார்க்கிறார், யோபு 13:24-25யோபு 19:11யோபு 10:15-17யோபு 14:16யோபு 16:9யோபு 30:21யோபு 31:35யோபு 34:5
என்னைத் தமக்கு எதிரியாக நினைத்துக்கொள்ளுகிறார்.
அவர் என் கால்களைத் தொழுவத்திலே அடைத்து, யோபு 13:27யோபு 31:4அப் 16:24தானி 4:35எரே 20:2யோபு 14:16சங் 105:18
என் நடைகளையெல்லாம் காவல் வைக்கிறார் என்று சொன்னீர்.
இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்கு மறுமொழியாகச் சொல்லுகிறேன்; எசேக் 18:25யோபு 36:5பிரச 7:20எரே 18:6யோபு 1:22யோபு 26:14யோபு 32:17யோபு 34:10-12
மனிதனைவிட தேவன் பெரியவராயிருக்கிறார்.
அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையும் குறித்துக் யோபு 40:2ஏசா 45:9தானி 4:35ரோம 11:341 கொரி 10:22அப் 1:7அப் 5:39அப் 9:4-5
பதில் 1சொல்லவில்லையென்று நீர் அவருடன் ஏன் வழக்காடுகிறீர்?
தேவன் ஒரு முறை சொல்லியிருக்கிற காரியத்தை நீதி 1:242 நாளாக 33:10சங் 62:11யோபு 33:29லூக் 24:25யோவா 3:19ஏசா 6:9மத் 13:14
இரண்டாம் முறை பார்த்து மாற்றுகிறவரல்லவே.
ஆழ்ந்த தூக்கம் மனிதர்மேல் இறங்கி, எண் 12:6யோபு 4:13ஆதி 20:3ஆதி 31:24தானி 4:5தானி 8:18எரே 23:28ஆதி 15:12
அவர்கள் படுக்கையின்மேல் படுத்திருக்கும்போது,
அவர் இரவு நேரத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனிதருடைய காதுகளுக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, யோபு 36:10யோபு 36:15சங் 40:6ஏசா 50:5அப் 16:14ஏசா 6:10லூக் 24:452 சாமு 7:27
அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே பயமுறுத்தி,
மனிதன் தன்னுடைய செயலைவிட்டு நீங்கவும், ஏசா 2:11யாக் 4:102 நாளாக 32:252 கொரி 12:7ஆதி 20:6யோபு 17:11மத் 27:19அப் 9:2-6
மனிதருடைய பெருமை அடங்கவும் செய்கிறார்.
இவ்விதமாக அவனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கும், யோபு 33:28யோபு 33:302 பேது 3:9ரோம 2:4யோபு 15:22யோபு 33:22யோபு 33:242 பேது 3:15
அவன் உயிரைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார்.
அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், யோபு 30:17யோபு 5:17-181 கொரி 11:32சங் 119:71சங் 94:122 நாளாக 16:102 நாளாக 16:12உபா 8:5
தன் எல்லா எலும்புகளிலும் கடுமையான வியாதியினாலும் தண்டிக்கப்படுகிறான்.
அவன் உயிர் அப்பத்தையும், யோபு 3:24சங் 107:17-18ஆமோ 5:11ஆதி 3:6எரே 3:19
அவனுடைய ஆத்துமா ருசிகரமான ஆகாரத்தையும் வெறுக்கும்.
அவனுடைய உடல் காணப்படாமல் அழிந்து, யோபு 19:20யோபு 13:28யோபு 7:5நீதி 5:11யோபு 14:20யோபு 14:22யோபு 16:8சங் 102:3-5
மூடப்பட்டிருந்த அவனுடைய எலும்புகள் வெளிப்படுகிறது.
அவனுடைய ஆத்துமா பாதாளத்திற்கும், அவனுடைய உயிர் மரணத்திற்கும் நெருங்குகிறது. 2 சாமு 24:16யோபு 33:281 கொரி 10:101 சாமு 2:6அப் 12:23யாத் 12:23ஏசா 38:10யோபு 15:21
ஆயிரத்தில் ஒருவராகிய பரிந்துபேசுகிற தேவ தூதனானவர் மனிதனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிப்பதற்கு, மல்கி 3:12 கொரி 5:20பிரச 7:28ஆகா 1:13மல்கி 2:7தானி 9:14எசேக் 18:25-28எபி 12:5-12
அவனுக்கு சாதகமாக இருந்தாரென்றால்,
அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காமல் இருக்க: சங் 49:7-81 பேது 1:18-19யோபு 33:18மத் 20:281 தீமோ 2:6யாத் 33:19ஓசி 14:4யோபு 22:21
நீர் அவனைக் காப்பாற்றும்;
மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்.
அப்பொழுது அவனுடைய உடல் வாலிபத்தில் இருந்ததைவிட ஆரோக்கியமடையும்; சங் 103:52இராஜா 5:14யோசு 14:10-11உபா 34:7யோபு 42:16ஓசி 2:15
தன் இளவயது நாட்களுக்குத் திரும்புவான்.
அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் செய்யும்போது, சங் 50:15சங் 30:5அப் 2:28அப் 9:11ஏசா 30:19எபி 11:26எரே 33:3யூதா 1:24
அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்துடன் பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி,
அந்த மனிதனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்.
அவன் மனிதரை நோக்கிப் பார்த்து: ரோம 6:212 சாமு 12:13சங் 14:21 யோவா 1:8-10எரே 31:18-19மத் 16:26ரோம 7:222 நாளாக 16:9
நான் பாவம் செய்து செம்மையானதைப் புரட்டினேன்,
அது எனக்குப் பலன் கொடுக்கவில்லை.
என் ஆத்துமா படுகுழியில் இறங்காமல் இருக்க, யோபு 33:24யோபு 3:16யோபு 3:9யோபு 33:22ஏசா 38:17-18ஏசா 9:2யோவா 11:9யோபு 17:16
அவர் அதை காப்பாற்றுவார்
ஆகையால் என் உயிர் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான்.
இதோ, தேவன் மனிதனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், 1 கொரி 12:6எபே 1:11பிலி 2:132 கொரி 5:5எபி 13:212இராஜா 6:10கொலோ 1:29யோபு 33:14-17
அவனை உயிருள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பதற்கும்,
அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார். சங் 56:13ஏசா 38:17யோபு 33:28சங் 40:1-2அப் 26:18ஏசா 2:5யோவா 8:12யோபு 33:24
யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; யோபு 18:2யோபு 13:6யோபு 21:2யோபு 32:11
நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும்.
சொல்லவேண்டிய நியாயங்கள் இருந்ததென்றால், யோபு 15:4-5யோபு 21:27யோபு 22:5-9யோபு 27:5
எனக்குப் பதில் கொடும்;
நீர் பேசும், உம்மை நீதிமானாக நிரூபிக்க எனக்கு ஆசையுண்டு.
ஒன்றும் இல்லாதிருந்ததென்றால் நீர் என் சொல்லைக் கேளும், சங் 34:11யோபு 33:3நீதி 4:1-2நீதி 5:1-2நீதி 8:5சங் 49:3
மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தைப் போதிப்பேன்” என்றான்.