யோபு 24

Job 24
அத்தியாயம் 24

சர்வவல்லமையுள்ள தேவனுக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, அப் 1:7பிரச 3:172 பேது 3:7-8பிரச 8:6-7மத் 24:38சங் 36:10சங் 73:16-191 தீமோ 4:1

அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன?

சிலர் எல்லைக்குறிப்புகளை மாற்றி, உபா 19:14உபா 27:17நீதி 23:10நீதி 22:28ஓசி 5:10யோபு 1:15யோபு 1:17யோபு 5:5

மந்தைகளைப் பலாத்காரமாகக் கொண்டுபோய் தங்கள் மந்தையில் சேர்க்கிறார்கள்.

தாய்தகப்பன் இல்லாதவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டுபோய், உபா 24:61 சாமு 12:3உபா 24:10-13உபா 24:17-21யோபு 22:6-9யோபு 31:16-17

விதவையின் மாட்டை ஈடாக எடுத்துக்கொள்ளுகிறார்கள்.

தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் எல்லோரும் ஒளித்துக்கொள்ளுமளவுக்கு, நீதி 28:28யோபு 24:14ஆமோ 2:7எசேக் 22:29ஆமோ 8:4-6எசேக் 18:12எசேக் 18:18ஏசா 10:2

எளிமையானவர்களை வழியை விட்டு விலக்குகிறார்கள்.

இதோ, அவர்கள் காட்டுக்கழுதைகளைப்போல இரைதேட அதிகாலமே தங்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்; யோபு 39:5-7யோபு 5:5மீகா 2:1சங் 104:23அப் 23:12ஆதி 16:12ஆதி 27:40ஓசி 7:6

வனாந்திரப் பகுதிதான் அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் ஆகாரம் கொடுக்கவேண்டும்.

துன்மார்க்கருடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுவடைசெய்து, மீகா 6:15உபா 28:33உபா 28:51நியாயாதி 6:3-6

அவனுடைய திராட்சைத்தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள்.

குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால், யாத் 22:26-27யோபு 22:6உபா 24:11-13அப் 9:31ஆதி 31:40ஏசா 58:7யோபு 24:10யோபு 31:19-20

உடையில்லாமல் இரவுதங்கி,

மலைகளிலிருந்துவரும் மழையில் நனைந்து, ஒதுங்க இடமில்லாததினால் கன்மலையிலே ஒதுங்கிக்கொள்ளுகிறார்கள். புலம் 4:5எபி 11:38உன்னத 5:2

அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப்பறித்து, நெகே 5:52இராஜா 4:1

தரித்திரன் போர்த்துக்கொண்டிருக்கிறதை அடகு வாங்குகிறார்கள்.

அவனை உடையில்லாமல் நடக்கவும், ஆமோ 2:7-8ஆமோ 5:11-12உபா 24:19

பட்டினியாக அரிக்கட்டுகளைச் சுமக்கவும்,

தங்கள் மதில்களுக்குள்ளே செக்காட்டவும், யாக் 5:4எரே 22:13உபா 25:4

தாகமுள்ளவர்களாக ஆலையாட்டவும் செய்கிறார்கள்.

ஊரில் மனிதர் தவிக்கிறார்கள், பிரச 4:1பிரச 8:11-12மல்கி 2:17மல்கி 3:15சங் 50:21ரோம 2:4-52 பேது 3:15யாத் 1:13-14

குற்றுயிராய்க்கிடக்கிறவர்களின் ஆத்துமா கூப்பிடுகிறது;

என்றாலும், தேவன் அவர்கள் விண்ணப்பத்தைக் கவனிக்கிறதில்லை.

அவர்கள் வெளிச்சத்திற்கு விரோதமாக நடக்கிறவர்களின் கூட்டத்தார்; யோவா 3:19-20நீதி 4:19யூதா 1:62 தெச 2:10-121 யோவா 2:192 பேது 2:20-22யோவா 9:39-41யாக் 4:17

அவர்கள் அவருடைய வழிகளை அறியாமலும்,

அவருடைய பாதைகளில் தங்காமலும் இருக்கிறார்கள்.

கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து, 1 தெச 5:2மீகா 2:1-2சங் 10:8-10வெளி 3:32 சாமு 11:14-17எபே 5:7-11லூக் 12:39

ஏழையையும் தேவையுள்ளவனைக் கொன்று,

இரவுநேரத்திலே திருடனைப்போல் திரிகிறான்.

விபசாரனுடைய கண் மாலை மயங்குகிற நேரத்திற்குக் காத்திருந்து: சங் 10:11நீதி 7:9-10எசேக் 8:12எசேக் 9:9நீதி 6:32-35சங் 94:72 சாமு 11:4-132 சாமு 12:12

என்னை ஒருவரும் பார்க்கமாட்டார்கள் என்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான்.

அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இரவிலே கன்னமிடுகிறார்கள்; யோவா 3:20எபே 5:11-13யாத் 22:2-3எசேக் 12:12எசேக் 12:5-7யோபு 24:13யோபு 38:12-13மத் 24:43

அவர்கள் வெளிச்சத்தை அறியமாட்டார்கள்.

விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது; யோபு 3:52 கொரி 5:10-11எரே 2:26சங் 73:18-19வெளி 6:16-17

அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்துடன் பழகியிருக்கிறான்.

நீரோட்டத்தைப்போல வேகமாகப் போவான்; உபா 28:16-20ஏசா 23:10யோபு 22:16யோபு 9:26மல்கி 2:2நீதி 3:33சங் 58:7சங் 69:22

தேசத்தில் அவனுடைய பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால்,

அவனுடைய திராட்சைத்தோட்டங்களின் வழியை இனிக்காண்பதில்லை.

வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; சங் 49:14யோபு 21:13லூக் 16:22நீதி 14:32பிரச 9:4-6லூக் 12:20சங் 68:2யோபு 21:23

அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும்.

அவனைப் பெற்ற கர்ப்பம் அவனை மறக்கும்; நீதி 10:7தானி 4:14யோபு 18:16-17பிரச 8:10ஏசா 26:14யோபு 14:7-10யோபு 17:14யோபு 19:26

புழு திருப்தியாக அவனைத் தின்னும்;

அவன் அதன்பின்பு நினைக்கப்படுவதில்லை;

அக்கிரமமானது பட்டமரத்தைப்போல முறிந்துவிழும்.

பிள்ளைபெறாத மலடியின் செல்வத்தை அழித்துவிட்டு, 1 சாமு 1:6-7யோபு 22:9யோபு 29:13யோபு 24:3யோபு 31:16-18

விதவைக்கு நன்மை செய்யாமல்போகிறான்.

தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பலமாக்குகிறான்; தானி 6:4-9எஸ்த 3:8-10யோவா 19:12-16வெளி 16:13-14வெளி 17:2

அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் உயிரைப்பற்றி நிச்சயமில்லை.

தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், நீதி 15:31 தெச 5:3வெளி 2:23ஆமோ 8:7ஆமோ 9:2பிரச 5:8பிரச 8:11ஆப 1:13

அதின்மேல் உறுதியாக நம்பிக்கை வைக்கிறான்;

ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது.

அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து, சங் 37:10யாக் 1:11யாக் 5:1-3சங் 37:35-36சங் 92:7ஏசா 17:5-6யோபு 14:21யோபு 20:5

பார்க்காமற்போய், தாழ்த்தப்பட்டு,

மற்ற எல்லோரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்;

கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள்.

அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி, யோபு 9:24யோபு 11:2-3யோபு 27:4யோபு 6:28யோபு 15:2

என் வார்த்தைகளைப் பொய்யாக்கக்கூடியவன் யார்” என்றான்.