சமாரியா நாட்டுப் பெண்
யோவானைவிட இயேசு அநேகம்பேரைச் சீடர்களாக்கி ஞானஸ்நானம் கொடுக்கிறார் என்று பரிசேயர்கள் கேள்விப்பட்டதை இயேசு அறிந்தபோது, யோவா 3:26யோவா 3:222 கொரி 4:51 கொரி 15:471 கொரி 2:8அப் 10:36யாக் 2:1லூக் 1:76 யூதேயாவைவிட்டு மறுபடியும் கலிலேயாவிற்குப் போனார். 1 கொரி 1:13-17அப் 10:48 இயேசு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை, அவருடைய சீடர்கள் கொடுத்தார்கள். மத் 10:23யோவா 10:40யோவா 11:54யோவா 3:22யோவா 1:43யோவா 2:11யோவா 3:32மாற் 3:7 அப்பொழுது அவர் சமாரியா நாட்டின்வழியாகப் போகவேண்டியதாக இருந்தபடியால், லூக் 17:11லூக் 9:51-52லூக் 2:49மத் 10:5-6 யாக்கோபு தன் மகனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்திற்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார். யோசு 24:32ஆதி 33:19ஆதி 48:22யோவா 4:12 அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பயணத்தின் களைப்பினால் ஏறக்குறைய நண்பகல் நேரத்தில் சற்று ஓய்வெடுக்க அந்தக் கிணற்றின் அருகே உட்கார்ந்திருந்தார். எபி 4:15எபி 2:17மத் 8:24மத் 27:45மத் 4:22 கொரி 8:9யோவா 11:9லூக் 2:7 அவருடைய சீடர்கள் உணவு வாங்குவதற்கு ஊருக்குள்ளே சென்றிருந்தார்கள். மத் 10:421 இராஜா 17:10யோவா 19:282 சாமு 23:15-17ஆதி 24:43யோவா 4:10 அப்பொழுது சமாரியா தேசத்தாளாகிய ஒரு பெண் தண்ணீர் எடுக்க வந்தாள். இயேசு அவளைப் பார்த்து: தாகத்திற்குத் தா என்றார். யோவா 6:5-7லூக் 9:13யோவா 4:39யோவா 4:5 யூதர்கள் சமாரியருடனே எந்தத் தொடர்பும் வைக்காதவர்களானபடியால், சமாரிய பெண் அவரைப் பார்த்து: நீர் யூதனாக இருக்க, சமாரிய பெண்ணாகிய என்னிடத்தில், தாகத்திற்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். அப் 10:282இராஜா 17:24-41யோவா 8:48மத் 10:5லூக் 17:16-19அப் 1:8யோவா 4:27லூக் 10:33 இயேசு அவளுக்கு மறுமொழியாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்திற்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். யோவா 4:14வெளி 7:17யோவா 7:37-39ஏசா 44:3வெளி 21:6யோவா 3:16சங் 36:8-9எரே 2:13 அதற்கு அந்த பெண்: ஆண்டவரே, எடுத்துக்கொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாக இருக்கிறதே, பின்னே எங்கே இருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் கிடைக்கும். 1 கொரி 2:14யோவா 3:4 இந்தக் கிணற்றை எங்களுக்குக் கொடுத்த நம்முடைய முற்பிதாவாகிய யாக்கோபைவிட நீர் பெரியவரோ? அவரும் அவருடைய பிள்ளைகளும், அவருடைய மிருகஜீவன்களும் இதிலே குடித்தது என்றாள். யோவா 8:53மத் 12:42எபி 3:3ஏசா 53:2-3யோவா 4:6 இயேசு அவளுக்கு மறுமொழியாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகம் உண்டாகும். யோவா 6:27ஏசா 65:13-14லூக் 16:24யோவா 6:49 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார். யோவா 7:38-39யோவா 6:35ஏசா 49:10வெளி 7:16எபே 1:13-14யோவா 11:26யோவா 6:581 யோவா 5:20 அந்த பெண் அவரைப் பார்த்து: ஆண்டவரே, எனக்குத் தாகம் உண்டாகாமலும், நான் இங்கே தண்ணீர் எடுக்க வராமலும் இருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள். யோவா 6:34சங் 4:6ரோம 8:5யாக் 4:3யோவா 17:2-3யோவா 6:26ரோம 6:231 யோவா 5:20 இயேசு அவளைப் பார்த்து: நீ போய், உன் கணவனை இங்கே அழைத்துக்கொண்டுவா என்றார். எபி 4:13யோவா 21:17வெளி 2:23யோவா 2:24-25யோவா 1:42யோவா 1:47-48யோவா 4:18 அதற்கு அந்த பெண்: எனக்குப் கணவன் இல்லை என்றாள். இயேசு அவளைப் பார்த்து: எனக்குப் கணவன் இல்லை என்று நீ சொன்னது சரிதான். எப்படியென்றால், ஐந்து கணவர்கள் உனக்கு இருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு கணவன் இல்லை, இதை உள்ளபடி சொன்னாய் என்றார். 1 கொரி 7:10-11எரே 3:20ரோம 7:3மாற் 10:12எசேக் 16:32ஆதி 20:3ஆதி 34:2ஆதி 34:31 அப்பொழுது அந்த பெண் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று பார்க்கிறேன். யோவா 6:14லூக் 7:39யோவா 9:17லூக் 7:16யோவா 7:40மத் 21:111 கொரி 14:24-252இராஜா 5:26 எங்களுடைய முற்பிதாக்கள் இந்த மலையிலே ஆராதித்துவந்தார்கள்; நீங்கள் எருசலேமில்தான் ஆராதிக்கவேண்டும் என்கிறீர்களே என்றாள். உபா 12:5-11ஆதி 33:18-202 நாளாக 7:12உபா 11:29உபா 27:12ஆதி 12:6-71 நாளாக 21:261 நாளாக 22:1 அதற்கு இயேசு: பெண்ணே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவை ஆராதிக்கும்காலம் வருகிறது. 1 தீமோ 2:8எபே 2:18மல்கி 1:11யோவா 4:23மத் 18:20எபே 3:14எசேக் 14:3யோவா 16:2 நீங்கள் அறியாததை ஆராதிக்கிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதை ஆராதிக்கிறோம்; ஏனென்றால், இரட்சிப்பு யூதர்கள்வழியாக வருகிறது. அப் 17:23ஏசா 2:3ரோம 9:4-5லூக் 24:47அப் 17:30சங் 147:19ரோம 3:1-2செப்ப 3:16-17 உண்மையாக ஆராதிக்கிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கும்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் ஆராதிக்கிறவர்கள் இப்படிப்பட்டவர்களாக இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். பிலி 3:3மத் 15:7-9யோவா 5:25கலா 4:6ரோம 8:26யூதா 1:20-21ஏசா 29:13எபே 6:18 தேவன் ஆவியாக இருக்கிறார், அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் அவரை ஆராதிக்க வேண்டும் என்றார். 2 கொரி 3:17மத் 15:8-9பிலி 3:3சங் 51:17ஏசா 57:151 சாமு 16:71 தீமோ 1:17சங் 66:18 அந்த பெண் அவரைப் பார்த்து: கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். யோவா 1:49தானி 9:24-26யோவா 4:29யோவா 4:42மத் 1:16யோவா 1:41-42உபா 18:15-18யோவா 4:39 அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார். யோவா 8:24மாற் 14:61-62யோவா 9:35-37ரோம 10:20-21லூக் 13:30மத் 26:63-64மத் 16:20மத் 20:15
சீடர்கள் இயேசுவோடு இணைதல்
அந்தநேரத்தில் அவருடைய சீடர்கள் வந்து, அவர் பெண்ணுடனே பேசுகிறதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். ஆனாலும் என்ன வேண்டும் என்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீர் என்றாவது, ஒருவனும் கேட்கவில்லை. லூக் 7:39யோவா 4:8-9 அப்பொழுது அந்த பெண், தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேப்போய், மக்களைப் பார்த்து: யோவா 4:7லூக் 24:33மத் 28:8லூக் 24:9மாற் 16:8-10 நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனிதன் எனக்குச் சொன்னார்; அவரை வந்துபாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள். வெளி 22:171 கொரி 14:24-25யோவா 1:41-49யோவா 4:25யோவா 4:17-18யோவா 7:26யோவா 7:31மத் 12:23 அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள். அப் 10:33அப் 13:42அப் 8:5-8ஏசா 60:8லூக் 17:16-18மத் 11:20-24மத் 12:40-42மத் 2:1-3 இப்படி நடக்கும்போது சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, சாப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆதி 24:33யோவா 1:38அப் 16:30-34மத் 23:7 அதற்கு அவர்: நான் சாப்பிடுவதற்கு நீங்கள் அறியாத ஒரு உணவு எனக்கு இருக்கிறது என்றார். யோபு 23:12சங் 119:103யோவா 4:34நீதி 18:20எரே 15:16சங் 63:5நீதி 14:10சங் 25:14 அப்பொழுது சீடர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்கு உணவுகொண்டுவந்திருப்பானோ என்றார்கள். லூக் 9:45மத் 16:6-11 இயேசு அவர்களைப் பார்த்து: நான் என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படிசெய்து அவருடைய செயல்களை முடிப்பதே என்னுடைய உணவாக இருக்கிறது. யோவா 6:38யோவா 5:30யோபு 23:12யோவா 17:4யோவா 19:30யோவா 4:32மத் 26:39யோவா 5:36 அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றது என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது என்று உங்களுடைய கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக் 10:2-3மத் 9:37-38யோவா 4:30 விதைக்கிறவனும், அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் சம்பளத்தை வாங்கி, நித்தியஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். யாக் 5:19-201 கொரி 3:5-9ரோம 1:132 தீமோ 4:7-8நீதி 11:30தானி 12:3ரோம 6:221 கொரி 9:19-23 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற உண்மையான வழக்கச்சொல் இதினாலே வெளிப்படுகிறது. மீகா 6:15யோபு 31:8நியாயாதி 6:3லூக் 19:21 நீங்கள் பாடுபட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பாடுபட்டார்கள், அவர்கள் பாடுபட்டத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார். யோவா 1:72 நாளாக 36:15அப் 10:42-431 பேது 1:11-12அப் 10:37-38அப் 8:14-17அப் 4:4அப் 5:14
சமாரியர்கள் அவரை விசுவாசித்தல்
நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த பெண்ணின் வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசம் உள்ளவர்களானார்கள். யோவா 4:29யோவா 10:41-42யோவா 4:5யோவா 11:45யோவா 4:42 சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டு நாட்கள் அங்கே தங்கினார். வெளி 3:20லூக் 24:292 கொரி 6:1-2அப் 16:15ஆதி 32:26லூக் 19:5-10லூக் 8:38எரே 14:8 அப்பொழுது அவருடைய உபதேசத்தின் மூலம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து, 1 கொரி 2:4-5அப் 1:8அப் 8:12அப் 8:25மத் 7:28-29யோவா 6:63அப் 15:3ஆதி 49:10 அந்த பெண்ணைப் பார்த்து: உன் வார்த்தையினாலே இல்லை, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் உண்மையாகவே கிறிஸ்துவாகிய உலக இரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். 1 யோவா 4:141 யோவா 5:201 தீமோ 4:10யோவா 1:292 கொரி 5:19அப் 4:12யோவா 3:14-18யோவா 6:68-69
அதிகாரியின் மகனைச் சுகமாக்குதல்
இரண்டு நாட்களுக்குப்பின்பு அவர் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாவிற்குப் போனார். யோவா 4:40மத் 15:21-24மத் 4:13மாற் 7:27-28ரோம 15:8யோவா 1:42யோவா 4:46 ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே மரியாதை இல்லை என்று இயேசு தாமே சொல்லியிருந்தார். மத் 13:57லூக் 4:24மாற் 6:4 அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள்; அவர்களும் பண்டிகைக்குச் சென்றிருந்தார்கள். யோவா 2:23யோவா 2:13-16உபா 16:16யோவா 3:2லூக் 9:53லூக் 2:42-44லூக் 8:40மத் 4:23-24 பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சைரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் அதிகாரிகளில் ஒருவனுடைய மகன் வியாதியாக இருந்தான். யோவா 2:1-11சங் 50:15ஓசி 5:15லூக் 7:2லூக் 8:42மத் 15:22மத் 9:18யோவா 21:2 இயேசு யூதேயாவிலிருந்து, கலிலேயாவிற்கு வந்தார் என்று அந்த மனிதன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப்போய், தன் மகன் மரணவேதனையில் இருக்கிறதினால், அவனைக் குணமாக்குவதற்கு வரவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான். அப் 9:38யோவா 11:21யோவா 11:32யோவா 4:3லூக் 7:6-8லூக் 8:41மாற் 10:47மாற் 2:1-3 அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: நீங்கள் அடையாளங்களையும், அற்புதங்களையும் பார்க்காவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார். யோவா 20:291 கொரி 1:22எபி 2:4தானி 4:2யோவா 12:37அப் 2:22லூக் 16:31ரோம 15:19 அதற்கு ராஜாவின் அதிகாரி: ஆண்டவரே, என் பிள்ளை இறப்பதற்குமுன்னே வரவேண்டும் என்றான். மாற் 5:23மாற் 5:35-36சங் 40:17சங் 88:10-12 இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் மகன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனிதன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப்போனான். மத் 8:13மாற் 7:29-30ரோம 4:20-21லூக் 17:14அப் 14:9-10எபி 11:19யோவா 11:40மாற் 9:23-24 அவன் போகும்போது, அவனுடைய வேலைக்காரர்கள் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய மகன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள். 1 இராஜா 17:23யோவா 4:50யோவா 4:53 அப்பொழுது: எத்தனை மணிக்கு அவனுக்கு சுகம் உண்டானது என்று அவர்களிடத்தில் விசாரித்தான் அவர்கள்: நேற்று பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் அவனை விட்டது என்றார்கள். உன் மகன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்னதும் அதே நேரம் என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் குடும்பத்தார் அனைவரும் விசுவாசித்தார்கள். சங் 107:20லூக் 19:9அப் 11:14அப் 16:34அப் 18:8மத் 8:13சங் 33:9அப் 16:15 இயேசு யூதேயாவில் இருந்து கலிலேயாவிற்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த இரண்டாவது அற்புதம். யோவா 2:1-11யோவா 4:45