லேவியராகமம் 11

Leviticus 11
அத்தியாயம் 11

அனுமதிக்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட உணவுகள்

யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “நீங்கள் இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் சாப்பிடத்தக்க உயிரினங்கள் எவைகள் என்றால்: எபி 9:10லேவி 11:11மத் 15:111 தீமோ 4:4-6அப் 10:12-14தானி 1:8உபா 14:3-21எசேக் 4:14 மிருகங்களில் விரிகுளம்புள்ளதாக இருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிற அனைத்தையும் நீங்கள் சாப்பிடலாம். 2 கொரி 6:17நீதி 2:101 தீமோ 4:15அப் 17:11உபா 16:3-8உபா 6:6-7நீதி 9:6சங் 1:1-2 ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாக இருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாததால், அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும். குழிமுயலானது அசைபோடுகிறதாக இருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும். நீதி 30:26சங் 104:182 தீமோ 3:5யோபு 36:14மத் 7:26பிலி 3:18-19ரோம 2:18-24தீத் 1:16 முயலானது அசைபோடுகிறதாக இருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும். உபா 14:7 பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாக இருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும். உபா 14:8ஏசா 65:4ஏசா 66:17ஏசா 66:3லூக் 15:15லூக் 8:33மத் 7:62 பேது 2:18-22 இவைகளின் மாம்சத்தைச் சாப்பிடவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. கொலோ 2:16எபி 9:10ஓசி 9:3ஏசா 52:11லேவி 5:21 கொரி 8:82 கொரி 6:17அப் 10:10-15 தண்ணீரிலிருக்கிறவைகளில் நீங்கள் சாப்பிடத்தக்கது எதுவென்றால்: கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் சாப்பிடலாம். 1 யோவா 5:2-5அப் 20:21உபா 14:9-10கலா 5:6யாக் 2:18 ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக. லேவி 7:18நீதி 29:27உபா 14:3நீதி 13:20சங் 139:21-22வெளி 21:8 அவைகள் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக; அவைகளின் மாம்சத்தை சாப்பிடாமலிருந்து, அவைகளின் உடல்களை அருவருப்பீர்களாக. தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக. “பறவைகளில் நீங்கள் சாப்பிடாமல் அருவருக்க வேண்டியவைகள் எவைகள் என்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும், உபா 14:12-20ஆப 1:8ஓசி 8:1எரே 4:13எரே 4:22எரே 48:40யோபு 28:7யோபு 38:41 பருந்தும், சகலவித வல்லூறும், சகலவித காகங்களும், லூக் 12:241 இராஜா 17:41 இராஜா 17:6ஆதி 8:7நீதி 30:17 தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும், 1 தெச 5:5-7உபா 14:15-18எபே 2:2-3எபே 4:18-19எபே 5:7-11ஏசா 13:21-22ஏசா 34:11-15யோவா 3:19-21 ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும், நாரையும், கூழக்கடாவும், குருகும், கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வௌவாலும் ஆகிய இவைகளே. “பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற ஊரும்பிராணிகள் அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக. 1 யோவா 2:15-172இராஜா 17:28-412 தீமோ 4:10உபா 14:19யூதா 1:10யூதா 1:19லேவி 11:23லேவி 11:27 ஆகிலும், பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற அனைத்திலும், நீங்கள் சாப்பிடத்தக்கது எதுவென்றால்: தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே, வெட்டுக்கிளி வகையாக இருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிவகையாக இருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிவகையாக இருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிவகையாக இருக்கிறதையும் நீங்கள் சாப்பிடலாம். மத் 3:4மாற் 1:6யாத் 10:4-5எபி 12:12-13எபி 5:11ஏசா 35:3ரோம 14:1ரோம 15:1 பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற மற்ற அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக. “அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். 1 கொரி 15:331 யோவா 1:72 கொரி 6:17கொலோ 2:16-17கொலோ 2:20எபே 2:1-3எபே 5:11எபி 9:26 அவைகளின் உடலைச் சுமந்தவன் எவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். லேவி 11:40லேவி 14:8லேவி 15:5எண் 31:24லேவி 16:28எண் 19:101 யோவா 1:71 பேது 3:21

அசுத்தமான மிருகங்கள்

விரிநகங்கள் உள்ளவைகளாக இருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் அனைத்தும் உங்களுக்கு அசுத்தமாக இருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான். நான்கு கால்களால் நடக்கிற சகல உயிரினங்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற அனைத்தும் உங்களுக்கு அசுத்தமாக இருப்பதாக; அவைகளின் உடலைத்தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். லேவி 11:23லேவி 11:20 அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. லேவி 11:24-25 “தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையென்றால்: பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும், லேவி 11:41-422 தீமோ 3:2-5கொலோ 3:5எபே 4:14ஆகா 2:6எபி 13:5ஏசா 66:17யோவா 6:26 உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே. சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். லேவி 11:24-25லேவி 11:8 அவைகளில் செத்தது, எதன்மேல் விழுந்தாலும் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், உடையானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் மாலைவரைத் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும். லேவி 15:12தீத் 3:5லேவி 6:28தீத் 2:14 அவைகளில் ஒன்று மண்பாண்டத்திற்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை அனைத்தும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும். லேவி 15:12லேவி 6:282 கொரி 5:1-8எரே 48:38லேவி 11:35லேவி 14:45பிலி 3:21 சாப்பிடத்தக்க உணவுபதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப்பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டுப்படும். நீதி 15:8நீதி 21:27நீதி 21:4நீதி 28:8தீத் 1:15 அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுமோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. 2 கொரி 5:1-7லேவி 11:33லேவி 15:12லேவி 6:28 ஆனாலும், நீரூற்றும், மிகுந்த தண்ணீர் உண்டாகிய கிணறும், சுத்தமாக இருக்கும்; அவைகளிலுள்ள உடலைத் தொடுகிறவனோ தீட்டுப்படுவான். யோவா 4:14சகரி 13:1 மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது. 1 கொரி 15:371 யோவா 3:91 யோவா 5:181 பேது 1:23 அந்த உடலில் ஏதாவதொன்று தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. “உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத்தொடுகிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். லேவி 11:24லேவி 11:28லேவி 11:31லேவி 11:40லேவி 15:5லேவி 15:7எண் 19:11எண் 19:16 அதின் மாம்சத்தைச் சாப்பிட்டவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துக்கொண்டுபோனவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். எசேக் 44:31லேவி 22:8உபா 14:21யாத் 22:31எசேக் 4:141 கொரி 10:211 கொரி 6:111 யோவா 1:7 “தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக; அவை சாப்பிடப்படக்கூடாது. லேவி 11:29லேவி 11:20லேவி 11:23 தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நான்கு கால்களால் நடமாடுகிறவைகளையும் அநேகம் கால்களுள்ளவைகளையும் சாப்பிடாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள். 2 கொரி 11:132 கொரி 11:3ஆதி 3:14-15ஏசா 65:25யோவா 8:44மத் 23:23மத் 3:7மீகா 7:17 ஊருகிற எந்தப் பிராணிகளாலும் உங்களை அருவருப்பாக்கிக் கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள். லேவி 20:25லேவி 11:41-42 நான் உங்கள் தேவனாகிய யெகோவா, நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராக இருப்பீர்களாக. யாத் 20:21 பேது 1:15-16லேவி 19:2லேவி 20:71 தெச 4:7லேவி 20:261 பேது 2:9லேவி 21:8 நான் உங்கள் தேவனாக இருப்பதற்கு உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த யெகோவா, நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராக இருப்பீர்களாக. லேவி 11:44யாத் 20:2யாத் 6:71 பேது 1:161 தெச 4:7சங் 105:43-45ஓசி 11:1லேவி 25:38 சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், சாப்பிடத்தக்க உயிரினங்களுக்கும் சாப்பிடத்தகாத உயிரினங்களுக்கும் வித்தியாசம் உண்டாக்குவதற்காக, எசேக் 43:12லேவி 14:54லேவி 15:32லேவி 7:37 மிருகத்திற்கும், பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல உயிரினங்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் உரிய விதிமுறைகள் இதுவே என்று சொல்லுங்கள் என்றார். லேவி 10:10எசேக் 44:23ரோம 14:13-23மல்கி 3:18ரோம 14:2-3