லூக்கா 18

Luke 18
அத்தியாயம் 18

விதவையும் நியாயாதிபதியும்

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார். கொலோ 4:2ரோம 12:121 தெச 5:17பிலி 4:6எபே 6:18சங் 55:16-17எரே 29:12லூக் 21:36 ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனிதர்களை மதிக்காதவனுமாக இருந்தான். லூக் 18:4நீதி 29:7சங் 8:1-4எசேக் 22:6-8எரே 22:16-172 நாளாக 19:3-9யோபு 29:7-17மீகா 3:1-3 அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள். ஏசா 1:17எரே 5:28யோபு 22:9உபா 27:19யோபு 29:13லூக் 18:7-8ரோம 13:3-42 சாமு 14:5-24 வெகுநாட்கள்வரை அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனிதர்களை மதிக்காமலும் இருந்தும், எபி 4:12-13லூக் 12:17லூக் 16:3 இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னைத் தொந்தரவுசெய்யாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார். லூக் 11:8லூக் 18:39நியாயாதி 16:16மாற் 10:47-482 சாமு 13:24-27மத் 15:23 பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள். லூக் 7:13 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் காரியத்தில் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? 2 பேது 3:9எபி 10:35-371 தீமோ 5:5லூக் 11:132 தெச 1:6எரே 20:11-13லூக் 2:37வெளி 6:10 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனாலும் மனிதகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார். எபி 10:23-262 பேது 3:8-9மத் 24:9-13சங் 46:5லூக் 17:26-301 தெச 5:1-32 பேது 2:3சங் 143:7-9

பரிசேயர்களும் வரி வசூலிப்பவர்களும்

அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாக எண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். லூக் 16:15நீதி 30:12ஏசா 65:5ரோம 10:3ரோம 14:10ரோம 9:31-32யோவா 7:47-49லூக் 7:39 இரண்டு மனிதர்கள் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்திற்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன். மத் 21:31-321 இராஜா 8:302இராஜா 20:5அப் 3:12இராஜா 20:8அப் 23:6-8அப் 26:5லூக் 1:9-10 பரிசேயன் நின்று: தேவனே! நான் கொள்ளைக்காரர்கள், அநியாயக்காரர்கள், விபசாரக்காரர்கள் ஆகிய மற்ற மனிதர்களைப்போலவும், இந்த வரி வசூலிப்பவனைப்போலவும் இராததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். மத் 6:5வெளி 3:17ஏசா 65:5எரே 2:35மாற் 11:25யாக் 2:9-121 கொரி 15:9-101 கொரி 4:7-8 வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் பத்தில் ஒரு பங்கு காணிக்கை செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். லூக் 11:42மத் 23:23-24லூக் 17:10மத் 9:141 தீமோ 4:8லேவி 27:30-33மல்கி 3:8மத் 15:7-9 வரி வசூலிப்பவன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாக இரும் என்றான். 1 யோவா 1:8-10எஸ்றா 9:61 தீமோ 1:15சங் 41:4எபி 8:12லூக் 7:6-7எபி 4:16லூக் 23:48 அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாகத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனென்றால், தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். லூக் 14:11லூக் 16:15யாக் 4:10மத் 23:12நீதி 29:23யாக் 4:6லூக் 1:52சங் 138:6

இயேசுகிறிஸ்துவும் சிறுகுழந்தைகளும்

பின்பு குழந்தைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீடர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள். மத் 19:13-15மாற் 10:13-161 சாமு 1:24லூக் 9:49-50லூக் 9:54 இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. மத் 18:3-41 கொரி 14:201 கொரி 7:14உபா 31:121 பேது 2:2அப் 2:39ஆதி 21:4உபா 29:11 எவனாவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத் 18:3மாற் 10:15சங் 131:1-21 பேது 1:14

செல்வந்தனாகிய தலைவன்

அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். மாற் 10:17-31அப் 16:30மத் 19:16-30அப் 2:37எசேக் 33:31லூக் 10:25-28யோவா 13:13-15லூக் 6:46 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே. யாக் 1:17யோபு 15:14-16எபி 7:261 தீமோ 3:16யோபு 14:4யோபு 25:4லூக் 1:35லூக் 11:13 விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கட்டளைகளை நீ தெரிந்திருக்கிறாயே என்றார். யாத் 20:12-17உபா 5:16-21மத் 19:17-19ரோம 13:9கொலோ 3:20எபே 6:2கலா 3:10-13ஏசா 8:20 அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான். பிலி 3:6லூக் 18:11-12மத் 19:20-21மாற் 10:20-21லூக் 15:29லூக் 15:7ரோம 10:2-3 இயேசு அதைக்கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்கு செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். லூக் 12:331 தீமோ 6:18-19மத் 19:21மத் 6:19-20லூக் 10:42லூக் 16:9லூக் 9:23சங் 27:4 அவன் அதிக செல்வந்தனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான். எசேக் 33:311 யோவா 2:15யோபு 31:24-25லூக் 21:34மத் 19:22மாற் 10:22கொலோ 3:5எபே 5:5 அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாக இருக்கிறது. நீதி 11:28யாக் 2:5-7மாற் 10:23-27நீதி 30:91 தீமோ 6:9-102 கொரி 7:9-10மத் 19:23-25சங் 10:3 செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார். மத் 23:24 அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். லூக் 13:23 அதற்கு அவர்: மனிதர்களால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார். எரே 32:17லூக் 1:37மத் 19:26யோபு 42:2ஆதி 18:14எபே 1:19-20தானி 4:35எபே 2:4-10 அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான். மாற் 10:28பிலி 3:7லூக் 5:11மத் 19:27மத் 4:19-22மத் 9:9 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரர்களையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும், மாற் 10:29-31மத் 10:37-39லூக் 14:26-28மத் 19:28-30உபா 33:9 இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். யோபு 42:10எபி 13:5-6வெளி 2:17லூக் 12:31-32மத் 12:321 தீமோ 4:81 தீமோ 6:6சங் 119:103

இயேசு தன் மரணத்தை முன்னறிவித்தல்

பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனிதகுமாரனைக்குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும். மத் 20:17-19ஏசா 53:1-12மாற் 10:32-34சங் 22:1-31லூக் 24:44-46மத் 16:21லூக் 9:22லூக் 9:51 எப்படியென்றால், அவர் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரிகாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார். லூக் 23:11ஏசா 50:6ஏசா 53:3அப் 3:13மாற் 14:65ஏசா 52:14மத் 16:21மத் 26:67 அவரை சாட்டையினால் அடித்து, கொலைசெய்வார்கள்; மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார். லூக் 24:71 கொரி 15:3-4லூக் 24:21மத் 16:21மத் 27:63 இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாக இருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. லூக் 9:45மாற் 9:32யோவா 12:16யோவா 16:1-19லூக் 2:50லூக் 24:25லூக் 24:45யோவா 10:6

குருடன் பார்வையடைதல்

பின்பு இயேசு எரிகோவிற்கு சமீபமாக வந்தபோது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். மத் 20:29-34யோவா 9:8லூக் 16:20-21மாற் 10:46-521 சாமு 2:8அப் 3:2லூக் 19:1 மக்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான். மத் 21:10-11லூக் 15:26 நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான். மத் 2:23யோவா 1:45யோவா 19:192 கொரி 6:2அப் 2:22அப் 4:10யோவா 12:35-36லூக் 2:51 முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: இயேசுவே தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாகக் கூப்பிட்டான். மத் 9:27லூக் 18:39மத் 15:22ஏசா 9:6-7மத் 21:9ரோம 1:3எரே 23:5மத் 12:23 இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார். ஆதி 32:26-28சங் 141:1லூக் 11:8-10லூக் 18:15மத் 26:40-442 கொரி 12:8எரே 29:12-13லூக் 11:52 அவன் அருகில் வந்தபோது, இயேசு அவனை நோக்கி: மத் 20:31-34மாற் 10:48-52 நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். 1 இராஜா 3:5-15மத் 20:21-22பிலி 4:6ரோம 8:25 இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். லூக் 8:48லூக் 17:19மத் 8:3மத் 9:22லூக் 7:50சங் 107:20சங் 33:9மத் 15:28 உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்னேசென்றான். மக்களெல்லோரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள். சங் 146:82 தெச 1:10-12அப் 11:18அப் 26:18அப் 4:21கலா 1:24ஏசா 29:18-19ஏசா 35:5