சங்கீதங்கள் 131

Psalms 131
சங்கீதம் 131

தாவீதின் ஆரோகண பாடல்.

யெகோவாவே, என்னுடைய இருதயம் பெருமைகொள்வதில்லை, ரோம 12:16சங் 139:6யோபு 42:3எரே 45:5மத் 11:29சங் 101:51 தெச 2:6-7சங் 122:1

என்னுடைய கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல;

பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை.

தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என்னுடைய ஆத்துமாவை அடக்கி அமரச்செய்தேன்; 1 கொரி 14:20மாற் 10:15புலம் 3:26சங் 42:11சங் 43:5மத் 18:3-4யோவா 14:1-2ஏசா 30:15

என்னுடைய ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.

இதுமுதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் யெகோவாவை நம்பியிருப்பதாக. சங் 130:7ஏசா 26:4சங் 146:5எரே 17:7-8சங் 115:18சங் 115:9-11