பிலேமோன் 1

Philemon 1
அத்தியாயம் 1

கிறிஸ்து இயேசுவுக்காக சிறைச்சாலையில் கட்டப்பட்டவனாக இருக்கிற பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன்வேலையாளுமாக இருக்கிற பிலேமோனுக்கும், கொலோ 1:1எபே 3:1பிலே 1:9பிலி 2:251 கொரி 3:91 தெச 3:22 கொரி 1:12 தீமோ 1:8 பிரியமுள்ள அப்பியாளுக்கும், எங்களுடைய உடன் போர்வீரனாகிய அர்க்கிப்புவிற்கும், உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபை விசுவாசிகளுக்கும் எழுதுகிறதாவது: பிலி 2:25கொலோ 4:17ரோம 16:5கொலோ 4:151 கொரி 16:192 தீமோ 2:3-4 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. ரோம 1:7எபே 1:22 கொரி 13:14

நன்றி கூறுதலும், ஜெபமும்

கர்த்தராகிய இயேசுவிடம் உள்ள உம்முடைய விசுவாசத்தையும், எல்லாப் பரிசுத்தவான்களிடமும் உள்ள உம்முடைய அன்பையும் நான் கேள்விப்பட்டு, ரோம 1:8எபே 1:16கொலோ 1:3பிலி 1:31 தெச 1:22 தெச 1:32 தீமோ 1:3 என் ஜெபங்களில் உம்மை நினைத்து, எப்பொழுதும் என் தேவனுக்கு நன்றி செலுத்தி, கொலோ 1:4எபே 1:151 கொரி 16:11 யோவா 5:1-2சங் 16:31 யோவா 3:23கலா 5:6பிலே 1:7 கிறிஸ்துவில் நமக்குள் உள்ள எல்லா நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் ஐக்கியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல் செய்கிறேன். 2 பேது 1:8பிலி 1:9-11கொலோ 1:91 பேது 1:5-8மத் 5:161 பேது 2:122 கொரி 9:12-14யாக் 2:14 சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே உற்சாகமானதினால், உம்முடைய அன்பினாலே அதிக சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறேன். 2 கொரி 7:131 தெச 3:92 கொரி 7:41 தெச 2:193 யோவா 1:3-6பிலே 1:202 யோவா 1:42 தீமோ 1:16

ஒநேசிமுக்காக பவுலின் மன்றாடல்

ஆகவே, பவுலாகிய நான் முதிர்வயதானவனாகவும், இயேசுகிறிஸ்துவுக்காக இப்பொழுது சிறைச்சாலையில் கட்டப்பட்டவனாகவும் இருக்கிறதினால், 1 தெச 2:62 கொரி 10:82 கொரி 3:121 தெச 2:22 கொரி 10:1-22 கொரி 11:21எபே 5:4 நீர் செய்யவேண்டியதை உமக்குக் கட்டளையிடுவதற்குக் கிறிஸ்துவிற்குள் நான் துணிவுள்ளவனாக இருந்தாலும், அப்படிச் செய்யாமல், அன்பினாலே மன்றாடுகிறேன். 2 கொரி 5:20எபே 4:1ரோம 12:1எபே 3:1பிலே 1:1-251 பேது 2:112 கொரி 6:1எபி 13:19 என்னவென்றால், சிறைச்சாலையில் கட்டப்பட்டிருக்கும்போது நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன். கொலோ 4:91 கொரி 4:151 தீமோ 1:2கலா 4:19தீத் 1:42 சாமு 19:37-382 சாமு 18:52 சாமு 9:1-7 முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவனாக இருந்தான், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமாக இருக்கிறான். 2 தீமோ 4:11யோபு 30:1-21 பேது 2:10லூக் 15:32லூக் 17:10மத் 25:30ரோம 3:12லூக் 15:24 அவனை நான் உம்மிடம் அனுப்புகிறேன்; என் இருதயம்போல் இருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும். மத் 6:14-15எபே 4:32லூக் 15:20மாற் 11:25எரே 31:20மத் 18:21-352 சாமு 16:11உபா 13:6 நற்செய்திக்காகக் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியம் செய்வதற்காக உமக்குப் பதிலாக அவனை என்னோடு வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தேன். எபே 3:1பிலி 1:71 கொரி 16:17எபே 4:1பிலே 1:1பிலி 2:30 ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் இல்லை, மனப்பூர்வமாகச் செய்வதற்காக, நான் உம்முடைய சம்மதம் இல்லாமல் ஒன்றும் செய்வதற்கு எனக்கு மனமில்லை. 2 கொரி 9:71 நாளாக 29:171 பேது 5:2-31 கொரி 9:172 கொரி 8:122 கொரி 9:5பிலே 1:8-92 கொரி 1:24 அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாக இருப்பதற்காகவும், இனிமேல் அவன் அடிமையானவனாக இல்லை, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவும் இருப்பதற்காகவும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனான். ஆதி 50:20ஆதி 45:5-8ஏசா 20:6அப் 4:28சங் 76:10 அவன் எனக்குப் பிரியமான சகோதரனென்றால், உமக்கு சரீரத்தின்படியும் கர்த்தருக்குள்ளும் எவ்வளவு பிரியமுள்ளவனாக இருக்கவேண்டும்! கொலோ 3:22மத் 23:81 கொரி 7:221 தீமோ 6:2எபே 6:5-71 பேது 1:22-23அப் 9:17கலா 4:28-29 ஆகவே, நீர் என்னை உம்முடைய உடன்ஊழியனாக ஏற்றுக்கொள்வதுபோல அவனையும் ஏற்றுக்கொள்ளும். 2 கொரி 8:23மத் 10:40பிலே 1:12மத் 18:5அப் 16:15எபே 3:6எபி 3:1யாக் 2:5 அவன் உமக்கு ஏதாவது அநியாயம் செய்ததும், உம்மிடம் கடன்பட்டதுமிருந்தால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும். ஏசா 53:4-7 பவுலாகிய நான் இதை என் சொந்தக் கரத்தினாலே எழுதுகிறேன், நான் அதைத் திரும்பச்செலுத்துவேன். நீர் உன்னைநீயே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டும் என்று நான் உமக்குச் சொல்லவேண்டியது இல்லையே. கலா 6:111 கொரி 16:21-22கலா 5:21 கொரி 4:151 கொரி 9:1-2யாக் 5:19-201 தீமோ 1:22 கொரி 3:2 ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜனம் உண்டாகட்டும்; கிறிஸ்துவிற்குள் என் இருதயத்தை ஆறுதல் செய்யும். பிலே 1:73 யோவா 1:4எபி 13:17பிலே 1:121 யோவா 3:171 தெச 2:19-201 தெச 3:7-92 கொரி 2:2 நான் சொல்லுகிறதைவிட அதிகமாகச் செய்வீர் என்று அறிந்து, இதற்கு நீர் சம்மதிப்பீர் என்கிற உறுதியோடு, உமக்கு எழுதியிருக்கிறேன். 2 தெச 3:42 கொரி 2:32 கொரி 7:162 கொரி 8:22கலா 5:10 மேலும், உங்களுடைய ஜெபங்களினாலே நான் உங்களிடம் அனுப்பப்படுவேன் என்று நம்பியிருக்கிறதினால், நான் தங்குவதற்காக ஒரு அறையை எனக்காக ஆயத்தம்பண்ணும். 2 கொரி 1:11பிலி 2:242 யோவா 1:12அப் 28:23யாக் 5:16பிலி 1:193 யோவா 1:14எபி 13:19 கிறிஸ்து இயேசுவுக்காக என்னோடு சிறைக்காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும், கொலோ 1:7கொலோ 4:12ரோம 16:7கொலோ 4:10 என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 2 தீமோ 4:10-11கொலோ 4:10கொலோ 4:14அப் 12:12அப் 15:37-39அப் 19:29அப் 12:25அப் 27:2 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களுடைய ஆவியோடு இருப்பதாக. ஆமென். 2 தீமோ 4:22கலா 6:18ரோம 16:20ரோம 16:23