ஆறு முத்திரைகள்
ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னைப் பார்த்து: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போல சத்தமாகச் சொல்வதைக்கேட்டேன். வெளி 5:1வெளி 6:5வெளி 6:7வெளி 4:5-7வெளி 5:5-7வெளி 11:19வெளி 14:2வெளி 19:6 நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். சகரி 6:3-8சகரி 1:8சங் 45:3-5வெளி 19:11-12வெளி 3:21வெளி 14:142 கொரி 10:3-5ஏசா 25:8 அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லக்கேட்டேன். வெளி 4:7வெளி 6:1 அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்வதற்காகச் சமாதானத்தை பூமியிலிருந்து எடுத்துப்போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய வாளும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. சகரி 6:2மத் 10:34வெளி 13:10வெளி 17:6சகரி 1:8தானி 5:19எசேக் 30:24-25யோவா 19:11 அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்வதைக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். சகரி 6:2எசேக் 4:16சகரி 6:6வெளி 6:1லேவி 26:26வெளி 4:6-7வெளி 5:5வெளி 5:9 அப்பொழுது, ஒரு வெள்ளிக்காசுக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு வெள்ளிக்காசுக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சைரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். வெளி 9:4வெளி 4:6சங் 76:10வெளி 7:3 அவர் நான்காம் முத்திரையை உடைத்தபோது, நான்காம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன். வெளி 4:7வெளி 6:3வெளி 6:1வெளி 6:5 நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவனுக்குப் பின்னே சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், மரணத்தினாலும், பூமியின் கொடிய மிருகங்களினாலும், பூமியில் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்களைக் கொலைசெய்ய அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. ஓசி 13:14எரே 15:2-3வெளி 1:18எசேக் 14:13-21சகரி 6:3எசேக் 5:12எரே 16:4வெளி 20:13-14 அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினாலும் தாங்கள் கொடுத்த சாட்சியினாலும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழேப் பார்த்தேன். வெளி 20:4யோவா 16:2வெளி 1:9வெளி 12:11-17வெளி 11:3-7வெளி 2:132 தீமோ 1:8வெளி 16:7 அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமும் உள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடம் எங்களுடைய இரத்தத்தைக்குறித்து எவ்வளவு காலங்கள் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று அதிக சத்தமாகக் கேட்டார்கள். வெளி 19:2சங் 9:12வெளி 11:182 தெச 1:6-8லூக் 18:7-8வெளி 16:5-7ரோம 12:19லூக் 21:22 அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்களுடைய உடன்பணியாளர்களும் தங்களுடைய சகோதரர்களுமானவர்களின் எண்ணிக்கை நிறைவாகும்வரை இன்னும் கொஞ்சக்காலம் காத்திருக்கவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. வெளி 14:13வெளி 7:9வெளி 3:4-5வெளி 7:14எபி 11:40ஏசா 26:20-21தானி 12:13யோவா 16:2 அவர் ஆறாம் முத்திரையை உடைப்பதைப் பார்த்தேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கருப்புக் கம்பளியைப்போலக் கருத்துப்போனது; சந்திரன் இரத்தம்போல ஆனது. மத் 24:29யோவே 2:10அப் 2:19-20மாற் 13:24-25யோவே 2:30-31யோவே 3:15ஆமோ 8:9ஏசா 13:9-10 அத்திமரம் பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. ஏசா 34:4மத் 24:29வெளி 9:1வெளி 8:10-12தானி 8:10எசேக் 32:7ஏசா 7:2லூக் 21:25 வானமும் சுருட்டப்பட்ட புத்தகம்போல விலகிப்போனது; மலைகள் தீவுகள் எல்லாம் தங்களுடைய இடங்களைவிட்டு விலகிச்சென்றன. ஏசா 34:4வெளி 16:202 பேது 3:10எபி 1:11-13சங் 102:26ஏசா 54:10எரே 4:23-26நாகூ 1:5 பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், படைத்தளபதிகளும், பலவான்களும், அடிமைகள், சுதந்திரமானவர்கள் எல்லோரும், குகைகளிலும் மலைகளின் பாறைகளிலும் ஒளிந்துகொண்டு, ஏசா 2:19ஏசா 2:21ஏசா 24:21-22ஏசா 2:10சங் 2:10-12வெளி 19:13-211 சாமு 13:6எபி 11:38 மலைகளையும் பாறைகளையும் பார்த்து: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; லூக் 23:30ஓசி 10:8வெளி 4:2வெளி 20:112 தெச 1:7-9மத் 26:64சங் 110:5-6சங் 14:5 அவருடைய கோபத்தின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைத்து நிற்கமுடியும் என்றார்கள். மல்கி 3:2சங் 76:7யோவே 2:11யோவே 2:31எரே 30:7வெளி 16:14ஏசா 13:6-22ரோம 2:5