உபாகமம் 32

Deuteronomy 32

வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன். ஏசா 1:2உபா 4:26எரே 22:29சங் 49:1உபா 30:19உபா 31:28எரே 6:19சங் 50:4

பூமியே என் வாயின் வார்த்தைகளைக் கேள்.

என் போதனை மழைபோலப் பெய்யட்டும். ஏசா 55:10-11சங் 72:6மீகா 5:7யோபு 29:22-23ஓசி 14:51 கொரி 3:6-82 சாமு 23:4எபி 6:7

என் வார்த்தைகள் பனிபோல் இறங்கட்டும்,

அவை பசும்புல்மேல் மழைத்தூறல் போலவும்,

இளஞ்செடிகளின் மேல் பெருமழைபோலவும் பெய்யட்டும்.

நான் யெகோவாவின் பெயரை அறிவிப்பேன். எரே 10:6சங் 150:2உபா 5:24எபே 1:191 நாளாக 29:11உபா 3:24யாத் 33:19யாத் 6:3

எங்கள் இறைவனின் மகத்துவத்தைத் துதியுங்கள்!

அவரே கற்பாறை, அவருடைய செயல்கள் முழு நிறைவானவை. சங் 18:30-31சங் 92:15ஏசா 26:42 சாமு 22:31-32சங் 18:2தானி 4:37வெளி 15:3-4உபா 32:30-31

அவரது வழிகளெல்லாம் நீதியானவை.

அவர் உண்மையுள்ள இறைவன். அவர் அநியாயம் செய்வதில்லை.

அவர் நேர்மையும், நீதியுமானவர்.

இஸ்ரயேலரோ அவர்முன் இழிவானவற்றைச் செய்தார்கள். பிலி 2:15ஏசா 1:4உபா 31:29மத் 17:17லூக் 9:41ஓசி 9:9மத் 16:4சங் 78:8

அதனால் அவருடைய பிள்ளைகளாய் இராமல்,

கபடமும் வஞ்சகமும் உள்ள சந்ததியாய் மாறி வெட்கத்திற்குள்ளானார்கள்.

மூடரும், ஞானம் அற்றவர்களுமான மக்களே! ஏசா 63:161 யோவா 3:1ஏசா 44:2ஏசா 64:8சங் 74:21 கொரி 6:202 பேது 2:1அப் 20:28

நீங்கள் யெகோவாவுக்கு நன்றிக்கடன் செய்வது இவ்விதம் தானோ?

உங்களைப் படைத்த தகப்பன் அவரல்லவா?

உங்களைப் படைத்து உருவாக்கியவர் அவரல்லவா?

பழைய நாட்களை நினைவுகூருங்கள்; சங் 78:3-4யோபு 8:8-10சங் 44:1ஏசா 46:9சங் 77:5-6உபா 4:32யாத் 13:14ஏசா 63:11

கடந்துபோன தலைமுறைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்.

உங்கள் தகப்பனிடம் கேளுங்கள் அவர் உங்களுக்குச் சொல்வார்,

உங்கள் சபைத்தலைவர்களிடம் கேளுங்கள், அவர்கள் உங்களுக்கு விளங்கப்படுத்துவார்கள்.

மகா உன்னதமானவர் நாடுகளுக்கு உரிமைச்சொத்தைப் பங்கிட்டபோது, அப் 17:26ஆதி 11:8-9தானி 4:17ஆதி 10:25ஆதி 15:18-21சங் 115:16ஆதி 10:15சங் 91:1

எல்லா மனுக்குலத்தையும் பிரித்தபோது,

இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கையின்படியே,

மக்கள் கூட்டங்களின் எல்லைகளைத் திட்டமிட்டார்.

யெகோவாவின் மக்களே அவரின் பங்கு, எரே 10:161 பேது 2:9-101 இராஜா 8:511 இராஜா 8:53யாத் 19:5-6எரே 51:19உபா 26:18-19ஏசா 43:21

யாக்கோபே அவருடைய உரிமைச்சொத்து.

அவர் அவர்களைப் பாலைவன நாட்டிலே கண்டெடுத்தார்; உபா 8:15-16சங் 17:8சகரி 2:8ஓசி 13:5எரே 2:6நெகே 9:19-21சங் 32:7-10நீதி 7:2

அதுவோ வறண்டதும், நரி ஊளையிடும் பாழ்நிலமுமாய் இருந்தது.

அவர் அவர்களைப் பாதுகாத்துப் பராமரித்தார்.

அவர் அவர்களைத் தமது கண்மணிபோல் காத்தருளினார்.

கழுகு தன் கூட்டைக் கலைத்து, யாத் 19:4ஏசா 46:4ஏசா 63:9ஏசா 40:31ஏசா 31:5எபி 11:3வெளி 12:4

தன் குஞ்சுகளுக்கு மேலாக அசைவாடி,

தன் சிறகுகளை விரித்து அவைகளை ஏந்திக்கொண்டு,

தன் செட்டைகளின்மேல் சுமந்து செல்வதுபோல,

யெகோவா ஒருவரே அவர்களை வழிநடத்தினர், ஏசா 46:4சங் 78:52-53ஏசா 44:7-8உபா 1:31ஏசா 43:11-12ஏசா 63:9-13சங் 136:16சங் 78:14

அவர்களுடன் வேறு அந்நிய தெய்வம் இருக்கவில்லை.

அவர் அவர்களை நிலத்தின் மேடுகளில் ஏறி நடக்கச் செய்தார். ஏசா 58:14யோபு 29:6சங் 81:16உபா 33:26உபா 33:29எசேக் 36:2ஏசா 48:21எசேக் 21:17

வயலின் பலன்களினால் அவர்களுக்கு உணவு கொடுத்தார்.

கற்பாறையில் இருந்து எடுத்த தேனினாலும்,

வைரப்பாறையிலிருந்து வழியும் எண்ணெயினாலும் அவர்களுக்கு ஊட்டமளித்தார்.

பசுக்களின் தயிர், ஆடுகளின் பால், ஆதி 49:11சங் 81:16சங் 147:142 சாமு 17:29ஆமோ 4:1எசேக் 39:18ஆதி 18:8ஏசா 7:15

கொழுத்த செம்மறியாட்டுக் குட்டிகள்,

வெள்ளாடுகள், பாசானில் தெரிந்தெடுத்த செம்மறியாட்டுக் கடாக்கள்,

சிறந்த கோதுமைத்தானியம் ஆகியவற்றாலும் ஊட்டமளித்தார்.

நுரைக்கும் இரத்தம் போன்ற திராட்சைப்பழத்தின் ரசத்தையும் குடித்தார்கள்.

யெஷூரன் 1 கொழுப்பு மிகுந்து அடங்காதவன் ஆனான். உபா 31:20ஓசி 13:6உபா 33:51 சாமு 2:29அப் 28:27சங் 89:26எரே 5:28உபா 31:16

அவர்கள் வயிறாரத்தின்று, கொழுத்து, பருத்து, கொழுப்பு அதிகமுடையவர்களானார்கள்.

அப்பொழுது அவர்கள் தங்களைப் படைத்த இறைவனையே கைவிட்டு,

தங்கள் இரட்சிப்பின் கற்பாறையையும் புறக்கணித்தார்கள்.

இஸ்ரயேலர் அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி யெகோவாவுக்கு எரிச்சல்மூட்டி, சங் 78:581 கொரி 10:221 இராஜா 14:222இராஜா 23:13உபா 5:9உபா 7:25லேவி 18:27நாகூ 1:1-2

தங்கள் அருவருப்பான விக்கிரகங்களால் அவருக்குக் கோபம் உண்டாக்கினார்கள்.

அவர்கள் பேய்களுக்குப் பலி செலுத்தினார்கள். அவை இறைவன் அல்ல. உபா 28:64நியாயாதி 5:8லேவி 17:71 தீமோ 4:1உபா 32:21ஏசா 44:8சங் 106:37-381 கொரி 10:19-20

அவர்கள் முன்பு அறிந்திராத தெய்வங்களே அவை.

சமீபத்தில் தோன்றியதும்,

உங்கள் முற்பிதாக்கள் பயப்படாததுமான தெய்வங்கள்.

உங்களை உருவாக்கிய கற்பாறையைக் கைவிட்டு விட்டீர்கள். ஏசா 17:10எரே 2:32உபா 32:4சங் 106:21உபா 32:15உபா 6:12உபா 8:11உபா 8:14

உங்களைப் பெற்றெடுத்த இறைவனையும் மறந்துபோனீர்கள்.

யெகோவா இதைக்கண்டு தனது மகன்களும், சங் 106:40ஏசா 1:2நியாயாதி 2:14சங் 5:4ஆமோ 3:2-3எரே 11:15எரே 44:21-23புலம் 2:6

மகள்களுமான அவர்களோடு கோபம் கொண்டதனால் அவர்களைப் புறக்கணித்து சொன்னதாவது:

“அவர்களுக்கு என் முகத்தை மறைப்பேன்; உபா 31:17-18உபா 32:5லூக் 7:31-32மத் 17:172 நாளாக 20:20உபா 31:29ஓசி 9:12ஏசா 30:9

அவர்களின் முடிவு எப்படியாகும் என பார்ப்பேன்.

மேலும் அவர், அவர்கள் கொடுமையில் ஊறிய தலைமுறையினர்,

நம்பிக்கை துரோகம் செய்யும் பிள்ளைகள்.

தெய்வம் அல்லாதவற்றால் எனக்கு எரிச்சல்மூட்டி, ரோம 10:19ரோம 9:25ரோம 11:11-141 இராஜா 16:261 இராஜா 16:13சங் 78:58உபா 32:16யோனா 2:8

பயனற்ற விக்கிரகங்களினால் கோபத்தை மூட்டினார்கள்.

நான் மக்களென மதிக்கப்படாதவர்களால் அவர்களுக்கு எரிச்சல் மூட்டுவேன்,

பகுத்தறிவு இல்லாத தேசத்தால், நான் அவர்களுக்குக் கோபமூட்டுவேன்.

எனது கோபத்தினால் நெருப்பு மூட்டப்பட்டிருக்கிறது, புலம் 4:11எரே 15:14ஏசா 24:19-20எரே 17:4யோபு 9:5-6மீகா 1:4எண் 16:35சங் 86:13

அது பாதாளத்தின்கீழ் முனைவரையும் எரிகிறது.

அது பூமியையும், அதன் விளைச்சலையும் எரிக்கும்,

மலைகளின் அஸ்திபாரங்களையும் கொலித்திவிடும்.

“நான் அவர்கள்மேல் பேரழிவுகளைக் குவிப்பேன்; எசேக் 5:16சங் 7:12-13ஏசா 24:17-18உபா 28:15எசேக் 14:21ஏசா 26:15புலம் 3:13லேவி 26:24

அவர்கள்மேல் என் அம்புகளை கணக்கின்றி எய்வேன்.

நான் அவர்களுக்கு எதிராக வாட்டும் பஞ்சத்தை அனுப்புவேன்; லேவி 26:22எசேக் 5:17ஆமோ 5:18-19ஆமோ 9:3உபா 28:22உபா 28:53எசேக் 14:15எசேக் 14:21

விழுங்கும் கொள்ளைநோய்களையும், சாகடிக்கும் வாதைகளையும் அனுப்புவேன்.

கூரிய பற்களையுடைய காட்டு மிருகங்களையும்,

புழுதியில் ஊரும் விஷப்பாம்புகளையும் அனுப்புவேன்.

வீதிகளிலே, வாளானது அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்கும்; எசேக் 7:15புலம் 1:202 நாளாக 36:172 கொரி 7:5ஏசா 30:16எரே 9:21புலம் 4:4லேவி 26:36-37

அவர்களுடைய வீடுகளில் பயங்கரம் ஆளுகை செய்யும்.

இளைஞரும், இளம்பெண்களும் அழிவார்கள்;

குழந்தைகளும் நரைத்துப்போன கிழவர்களும் அழிவார்கள்.

நான் அவர்களைச் சிதறடிப்பேன்; உபா 28:64ஏசா 63:16உபா 28:25உபா 28:37உபா 4:27லேவி 26:33லேவி 26:38சங் 34:16

மனுக்குலத்தில் இருந்து அவர்களைப்பற்றிய ஞாபகத்தையும் அற்றுப்போகப்பண்ணுவேன்.

‘எங்கள் கைகளே வெற்றிகொண்டன, எண் 14:15-161 சாமு 12:22யாத் 32:12யோசு 7:9சங் 140:8சகரி 1:14-15தானி 4:30-37எசேக் 20:13-14

யெகோவா இவற்றைச் செய்யவில்லை’ என்று,

தப்பான எண்ணங்கொண்டு அவர்களுடைய பகைவன்,

ஏளனம் செய்வான் என்றே தயங்கினேன்.”

இஸ்ரயேல் ஒரு உணர்வற்ற நாடு, எரே 4:22ஓசி 4:6ஏசா 27:11யோபு 28:28நீதி 1:7உபா 32:6சங் 81:121 கொரி 3:19

நிதானிக்கும் ஆற்றல் அவர்களிடமில்லை.

அவர்கள் ஞானமுள்ளவர்களாயிருந்து, இதை விளங்கிக்கொண்டு, சங் 81:13உபா 5:29ஓசி 14:9லூக் 19:41-42லூக் 12:20சங் 107:43ஏசா 10:3ஏசா 47:7

தங்களது முடிவை நிதானித்தறிந்தால் நலமாயிருக்கும்.

அவர்களில் ஆயிரம்பேரை ஒருவன் துரத்துவதெப்படி? லேவி 26:8யோசு 23:10ஏசா 30:17சங் 31:8சங் 44:12நியாயாதி 7:22-231 சாமு 14:15-172 நாளாக 24:24

பத்தாயிரம்பேரை இருவர் ஒடவைப்பது எப்படி?

அவர்களுடைய கற்பாறையான யெகோவா அவர்களை விற்றுப்போடாவிட்டால்,

அல்லது யெகோவா அவர்களைக் கைவிடாவிட்டால் இது எப்படி நடக்கும்?

நமது பகைவர் ஒத்துக்கொள்வதுபோல், 1 சாமு 4:8யாத் 14:251 சாமு 2:2தானி 2:47எரே 40:3தானி 3:29தானி 6:26-27எஸ்றா 1:3

அவர்களுடைய கல் நம்முடைய கற்பாறையானவரைப் போன்றது அல்ல.

பகைவர்களின் திராட்சைக்கொடி சோதோமின் திராட்சைக் கொடியிலிருந்து உண்டானது. உபா 29:18எசேக் 16:45-51ஏசா 1:10ஏசா 5:4எரே 2:21எபி 12:15புலம் 4:6மத் 11:24

கொமோராவின் வயல்களிலிருந்து வந்தது.

அவர்களின் திராட்சைப் பழங்கள் நஞ்சு நிறைந்தவை.

அவர்களுடைய திராட்சைக் குலைகள் கசப்பு நிறைந்தவை.

அவர்களின் திராட்சை இரசம் பாம்புகளின் விஷமாயிருக்கிறது. சங் 58:4ரோம 3:13எரே 8:14யோபு 20:14-16சங் 140:3

அது நாகபாம்பின் கொடிய நஞ்சாயிருக்கிறது.

“யெகோவா சொல்கிறதாவது: இதை நான் சேர்த்துவைத்து, ஓசி 13:12யோபு 14:17எரே 2:22ரோம 2:51 கொரி 4:5வெளி 20:12-13

என் களஞ்சியங்களில் முத்திரையிடவில்லையோ?

பழிவாங்குதல் எனக்குரியது; நானே பதில் செய்வேன். ரோம 12:19எபி 10:30நாகூ 1:22 பேது 2:3சங் 73:17-192 பேது 3:8-10உபா 32:43எரே 23:12

ஏற்றகாலத்தில் அவர்களின் கால்கள் சறுக்கும்.

அவர்களுடைய பேரழிவின் நாள் நெருங்கிற்று.

அவர்களின் பேரழிவு அவர்கள்மேல் விரைந்துவருகிறது” என்றார்.

யெகோவா தமது மக்களை நியாயந்தீர்ப்பார். சங் 135:142இராஜா 14:26சங் 106:451 இராஜா 14:10உபா 30:1-3நியாயாதி 2:18எரே 31:20யோவே 2:14

அவர் தன் பணியாட்கள்மேல் கருணைகாட்டுவார்.

அவர்களின் பெலன் அற்றுப்போவதையும் அவர்களில் அடிமையோ,

சுயாதீனரோ ஒருவனும் தப்பாமல் இருப்பதையும் காணும்போது அவர் இரக்கம் காட்டுவார்.

ஆனாலும் அவர், “இப்பொழுது அவர்களுடைய தெய்வங்கள் எங்கே? எரே 2:28நியாயாதி 10:142இராஜா 3:13

அவர்கள் அடைக்கலம் புகுந்த கல் எங்கே?

அவர்களுடைய பலிகளின் கொழுபைத்தின்ற தெய்வங்கள் எங்கே? எசேக் 16:18-19நியாயாதி 10:14லேவி 21:21சங் 50:13ஓசி 2:8செப்ப 2:11

பானகாணிக்கைகளின் திராட்சை இரசத்தைக் குடித்த தெய்வங்கள் எங்கே?

அவை உங்களுக்கு உதவிசெய்ய எழுந்திருக்கட்டும்.

அவை உங்களுக்கு அடைக்கலம் கொடுக்கட்டும்” என்பார்.

“இப்பொழுது பாருங்கள், நான், நானே அவர்! 1 சாமு 2:6ஓசி 6:1யோபு 5:18ஏசா 45:5ஏசா 45:22ஏசா 43:13ஏசா 46:4ஏசா 45:18

என்னைவிட வேறு தெய்வமில்லை.

நானே கொல்கிறேன்; நானே உயிர்ப்பிக்கிறேன்.

நானே காயப்படுத்தினேன், நானே குணப்படுத்துவேன்.

என் கையிலிருந்து விடுவிக்க ஒருவராலும் முடியாது.”

நான் என் கைகளை வானத்திற்கு உயர்த்தி அறிவிக்கிறதாவது: ஆதி 14:22எபி 6:17-18எரே 4:2வெளி 10:5-6எண் 14:28-30யாத் 6:8

“நான் என்றென்றும் வாழ்வது நிச்சயம்போல,

பளபளக்கும் என் வாளை நான் கூராக்கி, ஏசா 66:16ஏசா 34:5-6யாத் 20:5ஏசா 27:1சங் 7:122 தீமோ 3:4உபா 32:35உபா 5:9

நீதி வழங்கும்படி என் கை அதைப் பற்றிக்கொள்ளும்போது,

என் எதிரிகளிடம் பழிவாங்குவேன்;

என்னை வெறுத்தவர்களுக்குப் பதில் செய்வேன்.

செத்தும், சிறைப்பட்டும் போனவர்களின் இரத்தத்தினால் உபா 32:23எரே 46:10எசேக் 38:21-22எரே 30:14புலம் 2:5எசேக் 35:6-8எரே 16:10எரே 46:14

நான் என் அம்புகளை வெறிகொள்ளச் செய்வேன்.

எனது வாளோ அவர்களின் சதையைத் தின்னும்;

அது பகைவரின் தலைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தும் என்பதும் நிச்சயம்.”

நாடுகளே, அவருடைய மக்களோடு சேர்ந்து களிகூருங்கள். வெளி 19:2ரோம 12:19சங் 85:1வெளி 6:10உபா 32:35யோபு 13:24ரோம 15:9-132இராஜா 9:7

அவர் தன் பணியாட்களின் இரத்தத்துக்காகப் பழிவாங்குவார்.

அவர் தமது பகைவரைப் பழிவாங்கி, தமது நாட்டுக்காகவும்,

மக்களுக்காகவும் பாவநிவிர்த்திசெய்வார்.

பின்பு மோசே நூனின் மகனான யோசுவாவுடன் வந்து, இந்தப் பாட்டின் சொற்களையெல்லாம் மக்கள் கேட்கும்படி பேசினான். எண் 13:16எண் 13:8உபா 31:22உபா 31:30 மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரயேலர் எல்லாருக்கும் சொல்லி முடித்தபின்பு, அவன் அவர்களிடம், “நான் இன்று பயபக்தியுடன் உங்களுக்கு அறிவித்த இந்த வார்த்தைகளை உங்கள் இருதயத்தில் பதித்துக்கொள்ளுங்கள். இந்த சட்டத்தின் வார்த்தைகளுக்கெல்லாம் கவனமாய் கீழ்ப்படியும்படி உங்கள் பிள்ளைகளுக்கும் கட்டளையிடுங்கள். 1 நாளாக 22:19எசேக் 40:4உபா 11:18நீதி 3:1-4உபா 4:9உபா 6:6-7எபி 2:1லூக் 9:44 அவை உங்களுக்குக் கொடுக்கப்படும் வீண் வார்த்தைகள் அல்ல. அவையே உங்களுக்கு உயிர்கொடுக்கும். நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டில் இந்த வார்த்தைகளினால் நீடித்து வாழ்வீர்கள்” என்றான். லேவி 18:5நீதி 4:222 பேது 1:161 பேது 3:10-12நீதி 3:22உபா 30:19-20நீதி 3:1-2நீதி 3:18

மோசேயின் மரணம் முன்னறிவிக்கப்படுதல்

அதே நாளில் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, எண் 27:12-13 “நீ எரிகோவுக்கு எதிரேயுள்ள மோவாப் நாட்டிலே இருக்கும் அபாரீம் மலைத்தொடரில் ஏறி நேபோ மலைக்குப்போ. அங்கிருந்து இஸ்ரயேலருக்கு நான் உரிமைச்சொத்தாகக் கொடுக்கும் கானான் நாட்டைப் பார். எண் 27:122 கொரி 5:1உபா 34:1-5ஏசா 33:17எண் 33:47-48 நீ ஏறும் அந்த மலையிலேயே இறப்பாய். உன் சகோதரன் ஆரோன் ஓர் என்னும் மலையில் இறந்து தன் முன்னோருடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது போல், நீயும் உன் முன்னோருடன் சேர்த்துக்கொள்ளப்படுவாய். ஆதி 25:8எண் 20:24-29எண் 33:38தானி 12:13ஆதி 15:15ஆதி 25:17ஆதி 49:33 சீன் பாலைவனத்தில் மேரிபா காதேஷ் தண்ணீர் அருகே இஸ்ரயேலர் முன்னிலையில் நீங்கள் இருவரும் எனக்கு நம்பிக்கையற்றவர்களாய் இருந்தீர்கள். இஸ்ரயேலர் மத்தியிலே நீ எனது பரிசுத்தத்தையும் பேணிக்காத்துக்கொள்ளவில்லை. இதனாலேயே உனக்கு இப்படி நடக்கும். எண் 27:14எண் 20:11-141 இராஜா 13:21-26உபா 3:23-27எண் 20:24லேவி 10:31 பேது 4:17ஏசா 8:13 ஆகையால் நீ தூரத்திலிருந்து மட்டுமே அந்த நாட்டைப் பார்ப்பாய். இஸ்ரயேல் மக்களுக்கு நான் கொடுக்கும் நாட்டிற்குள் நீ போகமாட்டாய்” என்றார். உபா 34:1-4உபா 1:37உபா 3:27உபா 32:49எபி 11:13எபி 11:39எண் 27:12