இந்த உலக முடிவின் அடையாளங்கள்
இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்படுகையில், அவருடைய சீடர்களில் ஒருவன் அவரிடம், “போதகரே! பாரும். இவை எவ்வளவு பெரிய கற்கள்! இவை எவ்வளவு மாபெரும் கட்டிடங்கள்!” என்றான். மத் 24:1-51எசேக் 11:22-23எசேக் 10:19எசேக் 10:4எசேக் 7:20-22எசேக் 8:6மல்கி 3:1-2லூக் 21:5-36
அதற்கு இயேசு அவர்களிடம், “ஆம்; நீங்கள் இந்தப் பெரும் கட்டிடங்கள் எல்லாவற்றையும் காண்கிறீர்கள் அல்லவா? ஆனால் இங்கே, ஒரு கல்லின்மேல் இன்னொரு கல் இராதபடி, ஒவ்வொரு கல்லும் இடிக்கப்படும்” என்றார். லூக் 21:6மத் 24:21 இராஜா 9:7-8எரே 26:18மீகா 3:122 நாளாக 7:20-21லூக் 19:41-44அப் 6:14
பின்பு, ஆலயத்திற்கு எதிரேயுள்ள ஒலிவமலையில் இயேசு உட்கார்ந்திருக்கையில், பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் தனிமையாக அவரிடத்தில் வந்து, மத் 21:1மாற் 4:34யோவா 1:40-41மத் 13:10மத் 13:36மத் 17:1மத் 24:3மாற் 1:16-19 “இந்தக் காரியங்கள் எப்பொழுது நிகழும்? இவையெல்லாம் நிறைவேறப்போகிறது என்பதற்கு எது முன் அடையாளமாக இருக்கும்? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள். அப் 1:6-7மத் 24:3தானி 12:6யோவா 21:21-22தானி 12:8லூக் 21:7
அதற்கு இயேசு அவர்களிடம்: “உங்களை யாரும் ஏமாற்றாதபடி விழிப்பாயிருங்கள். கொலோ 2:8எபே 5:6எரே 29:81 கொரி 15:331 யோவா 4:12 தெச 2:3லூக் 21:8மத் 24:4-5 பலர் என்னுடைய பெயரால் வருவார்கள். ‘நான்தான் அவர்,’ என்று சொல்லி, பலரை ஏமாற்றுவார்கள். மாற் 13:221 யோவா 4:1யோவா 5:43அப் 5:36-39எரே 14:14எரே 23:21-25யோவா 8:24மத் 24:11 நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களைப்பற்றிய செய்திகளையும் கேள்விப்படும்போது, பதற்றப்பட வேண்டாம். இவை நிகழ வேண்டியவையே. ஆனால் முடிவு வர, இன்னும் காலம் இருக்கிறது. லூக் 21:9-11யோவா 14:27மத் 24:6-7சங் 112:7சங் 27:3அப் 17:32 சாமு 14:14ஏசா 8:12 நாட்டிற்கு விரோதமாய் நாடு எழும்பும், அரசிற்கெதிராய் அரசு எழும்பும். பல இடங்களில் பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும் ஏற்படும். இவை எல்லாம் பிரசவ வேதனையின் ஆரம்பமே. மத் 24:8சங் 48:61 தெச 5:3ஆகா 2:22ஏசா 37:3அப் 11:28ஏசா 19:2எரே 13:21
“அப்பொழுது, நீங்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். நீங்கள் நீதிமன்றங்களில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள். நீங்கள் ஜெப ஆலயங்களில் சவுக்கினால் அடிக்கப்படுவீர்கள். நீங்கள் என் நிமித்தம் ஆளுநர்களுக்கும், அரசர்களுக்கும் முன்பாக என் சாட்சிகளாய் நிற்பீர்கள். மத் 10:17-18யோவா 16:21 கொரி 4:9-13மாற் 13:5பிலி 1:292 கொரி 11:23-272 தெச 1:5அப் 12:1-3 மேலும், எல்லா நாடுகளுக்கும் முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும். மத் 24:14கொலோ 1:23கொலோ 1:6மாற் 16:15வெளி 14:6ரோம 10:18மத் 28:18-19ரோம 1:8 நீங்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காகக் கொண்டுவரப்படும் போதெல்லாம், என்ன பேசவேண்டும் என்று முன்னதாகவே கவலைப்படாதிருங்கள். அந்த வேளையிலே, உங்கள் மனதில் என்ன கொடுக்கப்படுகின்றதோ, அதைச் சொல்லுங்கள். ஏனெனில் பேசுவது நீங்கள் அல்ல, உங்கள் மூலமாய் பரிசுத்த ஆவியானவரே பேசுகிறார். லூக் 21:14-15லூக் 12:11-12மத் 10:19-21அப் 6:101 கொரி 2:131 பேது 1:122 சாமு 23:2ஏசா 50:4
“சகோதரன் தன் சகோதரனைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். தகப்பன் தனது பிள்ளையைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். பிள்ளைகள் அவர்கள் பெற்றோருக்கு எதிராக எழும்பி, அவர்களைக் கொலைசெய்வார்கள். மத் 10:21லூக் 12:52-53எசேக் 38:21லூக் 21:16மத் 24:10மீகா 7:4-6 என் நிமித்தமாக எல்லோரும் உங்களை வெறுப்பார்கள். ஆனால் முடிவுவரை பொறுமையாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான். யோவா 15:18-19மத் 10:22லூக் 6:22மத் 24:13கலா 6:9ரோம 2:7யோவா 15:21மத் 5:11-12
“ ‘பாழாக்குகிற அருவருப்பு’ தனக்குரியதல்லாத இடத்தில் நிற்பதை நீங்கள் காணும்போது, 1 வாசிக்கிறவன் விளங்கிக்கொள்ளட்டும். அப்பொழுது யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். தானி 12:11தானி 9:27தானி 11:31மத் 24:15-28லூக் 21:20-241 கொரி 14:20அப் 8:30-31தானி 8:13 வீட்டின் கூரைமேல் இருக்கிற எவனும் கீழே இறங்கவோ, எதையாவது எடுத்துக்கொள்ளும்படி வீட்டிற்குள் போகாதிருக்கட்டும். எபி 11:7லூக் 17:31-33பிலி 3:7-8அப் 27:18-19அப் 27:38ஆதி 19:15-17ஆதி 19:22ஆதி 19:26 வயலில் இருக்கிறவன், தனது மேலுடையை எடுத்துக்கொள்ளும்படி, திரும்பிப் போகாதிருக்கட்டும். அந்நாட்களில் கர்ப்பவதிகளின் நிலைமையும், பால் கொடுக்கும் தாய்மாரின் நிலைமையும் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்! புலம் 4:10லூக் 23:29உபா 28:56-57ஓசி 13:16ஓசி 9:14புலம் 2:19-20புலம் 4:3-4லூக் 21:23 இந்தத் துன்பம் குளிர்காலத்தில் நேரிடாதபடி ஜெபம் பண்ணுங்கள். ஏனெனில், இறைவன் உலகத்தைப் படைத்ததிலிருந்து இன்றுவரை ஏற்பட்டிருக்காத பெருந்துன்பத்தின் நாட்களாக அவை இருக்கும். பின் ஒருபோதும் அப்படிப்பட்ட துன்பம் ஏற்படப் போவதுமில்லை. தானி 12:1யோவே 2:2மத் 24:21தானி 9:26தானி 9:12புலம் 1:12லூக் 21:22-24மாற் 10:6
“கர்த்தர் அந்த நாட்களைக் குறைக்காவிட்டால், ஒருவரும் தப்பமாட்டார்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டு தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நிமித்தம், கர்த்தர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார். மத் 24:22ஏசா 65:8-9சகரி 13:8-9ரோம 11:28-32ஏசா 1:9ஏசா 6:13ரோம 11:23-24ரோம 11:5-7 அக்காலத்தில் யாராவது உங்களைப் பார்த்து, ‘இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார்!’ அல்லது ‘அதோ, அங்கே இருக்கிறார்!’ என்று சொன்னால், அதை நம்பவேண்டாம். லூக் 21:8மத் 24:23-25மத் 24:5உபா 13:1-3லூக் 17:23-24யோவா 5:43 ஏனெனில் பொய் கிறிஸ்துக்களும், பொய் தீர்க்கதரிசிகளும் தோன்றுவார்கள். இயலுமானால், இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் ஏமாற்றும்படி அவர்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். மத் 24:242 தெச 2:8-14மாற் 13:61 யோவா 2:26மத் 7:15யோவா 10:27-281 யோவா 2:19யோவா 4:48 எனவே, நீங்கள் கவனமாய் இருங்கள்; அக்காலம் வருமுன்பே, நான் உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறேன். 2 பேது 3:17ஏசா 44:7-8யோவா 14:29லூக் 21:8மாற் 13:5யோவா 16:1-4லூக் 21:34மத் 7:15
“அந்நாட்களில் உண்டாகும் துன்பத்தைத் தொடர்ந்து, ஏசா 13:10அப் 2:19-20மத் 24:29-31வெளி 6:12-142 பேது 3:10ஆமோ 5:20யோவே 2:30-31யோவே 3:15
“ ‘சூரியன் இருள் அடையும்,
சந்திரன் தனது வெளிச்சத்தைக் கொடாதிருக்கும்;
வானத்தின் நட்சத்திரங்கள் விழும், ஏசா 34:4வெளி 6:13
வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படும்.’ 2
“அவ்வேளையில் மானிடமகனாகிய நான் மிகுந்த வல்லமையுடனும் மகிமையுடனும் மேகங்களில் வருவதை மனிதர் காண்பார்கள். வெளி 1:7மத் 16:27மத் 24:30மாற் 14:62மத் 25:31தானி 7:9-14மாற் 8:381 தெச 4:16 நான் என் தூதர்களை அனுப்பி, என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை சேர்த்துக்கொள்வேன்; பூமியின் கடைசி எல்லை தொடங்கி, வானங்களின் கடைசி எல்லைவரை நான்கு திசைகளிலிருந்தும் அவர்களைக் கூட்டிச்சேர்ப்பேன். சகரி 2:6மத் 24:31உபா 30:42 தெச 2:1வெளி 7:1-3லூக் 16:22மத் 13:41மாற் 13:20
“இப்பொழுது அத்திமரத்தின் உவமையிலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அதில் சிறு கிளைகள் தோன்றி இலைகள் வரும்போது, கோடைகாலம் நெருங்குகிறது என்று அறிகிறீர்கள். லூக் 21:29-31மத் 24:32-33 அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது, முடிவுகாலம் நெருங்கி வாசலருகே வந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுங்கள். 1 பேது 4:17-18யாக் 5:9எசேக் 12:25-28எபி 10:25-37எசேக் 7:10-12 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்தக் காரியங்களெல்லாம் நடந்துமுடியும் வரைக்கும், நிச்சயமாகவே இந்தத் தலைமுறை ஒழிந்துபோகாது. மத் 24:34லூக் 21:32மத் 16:28மத் 23:36மாற் 9:1 வானமும், பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்துபோகாது. ஏசா 40:8ஏசா 51:6மத் 24:35லூக் 21:33மத் 5:18சங் 102:25-27எபி 1:10-12எண் 23:19
நாளும் நேரமும் அறியப்படாதவை
“அந்த நாளையோ, அந்த நேரத்தையோ ஒருவனும் அறியமாட்டான். ஏன், பரலோகத்திலிருக்கிற தூதர்களுக்கும் மானிடமகனாகிய எனக்கும் தெரியாது; ஆனால் பிதா மட்டுமே அதை அறிவார். மத் 24:36-42அப் 1:7மத் 25:13வெளி 3:31 தெச 5:1-2மாற் 13:26-27மத் 25:62 பேது 3:10 நீங்கள் கவனமாயிருங்கள்! விழிப்பாயிருங்கள்! அந்நேரம் எப்பொழுது வரும் என்று உங்களுக்குத் தெரியாதே. லூக் 12:40ரோம 13:11-12எபே 6:18வெளி 16:151 பேது 4:71 பேது 5:8லூக் 21:34-36மத் 25:13 இதுவோ, ஒருவன் தன் வேலைக்காரர் பொறுப்பில், தன் வீட்டை ஒப்படைத்துவிட்டுப் போவதைப்போல் இருக்கிறது. அவன் ஒவ்வொருவருக்கும், அவனவன் வேலையைப் பொறுப்பாய்க் கொடுத்துவிட்டு, வாசலில் இருப்பவனைக் காவல் காக்கும்படி சொல்லிப் போகிறான். யோவா 10:3மத் 25:14-30லூக் 12:36-40மத் 24:45-471 கொரி 15:58எசேக் 3:17-21எசேக் 33:2-9அப் 20:29-31
“ஆகையால் விழிப்பாயிருங்கள், ஏனெனில் வீட்டுச் சொந்தக்காரன் எப்பொழுது திரும்பிவருவான் என்று உங்களுக்குத் தெரியாதே. அவன் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும்போதோ, அல்லது அதிகாலையிலோ, எப்போது வருவான் என்று யாருக்குத் தெரியும். மத் 24:42மாற் 13:33மத் 24:44மாற் 14:30மாற் 6:48 அவன் திடீரென வந்தால், உங்களை நித்திரை செய்கிறவர்களாய் அவன் காணக்கூடாது. 1 தெச 5:6-7ரோம 13:11-14லூக் 21:34மத் 24:48-51மாற் 14:40மத் 25:5ஏசா 56:10மாற் 14:37 நான் உங்களுக்குச் சொல்கிறதை எல்லோருக்குமே சொல்கிறேன்: ‘விழிப்பாயிருங்கள்’ ” என்றார். லூக் 12:41-46மாற் 13:33மாற் 13:35