தீர்ப்பு அளித்தல்
“தீர்ப்புச் செய்யாதிருங்கள், நீங்களும் தீர்க்கப்படாதிருப்பீர்கள். லூக் 6:37ரோம 2:1-2யாக் 4:11-12லூக் 6:41ரோம 14:10-13மத் 7:51 கொரி 4:3-5ரோம 14:3-4 நீங்கள் மற்றவர்களுக்கு அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். யாக் 2:13மாற் 4:24லூக் 6:38ஒபதி 1:15சங் 18:25-26வெளி 18:62 கொரி 9:62 தெச 1:6-7
“நீ உனது கண்ணிலுள்ள உத்திரத்தைக் கவனிக்காமல், உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பைப் பார்ப்பது ஏன்? யோவா 8:7-9கலா 6:1லூக் 6:41-422 சாமு 12:5-6லூக் 18:11சங் 50:16-212 நாளாக 28:9-10 உன் கண்ணில் உத்திரம் இருக்கையில், நீ உனது சகோதரனிடம், ‘நான் உனது கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடுகிறேன்,’ என எப்படிச் சொல்லலாம்? வேஷக்காரனே, முதலில் உன் கண்ணிலுள்ள உத்திரத்தை எடுத்துப்போடு; அப்பொழுது உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடத்தக்கதாக நீ தெளிவாகப் பார்க்கக்கூடும். லூக் 6:42சங் 51:9-13மத் 23:13-28லூக் 13:15லூக் 4:23மத் 22:18லூக் 12:56அப் 19:15
“பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்கவேண்டாம்; உங்கள் முத்துக்களைப் பன்றிகளுக்கு முன் வீச வேண்டாம். அப்படிச் செய்தால், அவை முத்துக்களை மிதித்துவிட்டு, திரும்பி உங்களையும் பீறிப்போடும். நீதி 9:7-8நீதி 23:9மத் 10:14-15நீதி 26:11மத் 15:26அப் 13:45-47பிலி 3:2எபி 10:29
கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்
“கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது கதவு உங்களுக்குத் திறக்கப்படும். மத் 21:221 யோவா 3:22யோவா 15:7மாற் 11:24சங் 145:18-19எரே 33:3மத் 6:33எரே 29:12-13 ஏனெனில், கேட்கிற ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்கிறார்கள்; தேடுகிறவர்கள் கண்டடைகிறார்கள்; தட்டுகிறவர்களுக்குக் கதவு திறக்கப்படுகிறது. சங் 81:10சங் 81:16லூக் 23:42-43மத் 15:22-28அப் 9:112 நாளாக 33:19யோவா 3:8-10யோவா 2:2
“அப்பத்தைக் கேட்கும் தன் மகனுக்கு, உங்களில் யார் கல்லைக் கொடுப்பான்? லூக் 11:11-13 அல்லது மீனைக் கேட்கும் மகனுக்கு யார் பாம்பைக் கொடுப்பான்? தீயவர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியிருக்க, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் கேட்பவர்களுக்கு, நல்ல அன்பளிப்புகளைக் கொடுப்பது அதிக நிச்சயம்! லூக் 11:11-13யாக் 1:17ரோம 8:32சங் 84:11ஏசா 49:15யோவா 3:16சங் 86:15எபே 2:1-5 ஆகவே, மற்றவர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் ஆகும். லூக் 6:31ரோம 13:8-10கலா 5:13-14லேவி 19:18மாற் 12:29-34மத் 22:39-40மீகா 6:8சகரி 8:16-17
இடுக்கமான வாசலும் அகன்ற வாசலும்
“இடுக்கமான வாசல் வழியாக உள்ளே செல்லுங்கள். ஏனெனில் அழிவுக்கு செல்லும் வாசல் அகலமானது, வழியும் விரிவானது. பலர் அதன் வழியாகவே உள்ளே செல்லுகிறார்கள். லூக் 13:24-25நீதி 16:25யோவா 14:6யோவா 10:9ஏசா 55:7நீதி 9:6கலா 5:24எசேக் 18:27-32 ஆனால் இடுக்கமான வாசலும், குறுகலான வழியுமே வாழ்வுக்கு வழிநடத்துகின்றன. ஒரு சிலர் மட்டுமே அதைக் கண்டுபிடிக்கிறார்கள். லூக் 13:23-30மத் 22:14மத் 16:24-25ரோம 12:2ஏசா 35:8மாற் 8:34நீதி 8:20அப் 14:22
மரமும் அதன் கனியும்
“பொய் தீர்க்கதரிசிகளைக்குறித்து விழிப்பாயிருங்கள். அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடம் வருவார்கள். ஆனால் உள்ளத்திலோ அவர்கள் கடித்துக் குதறுகிற ஓநாய்கள். 1 யோவா 4:12 பேது 2:1-3மத் 24:11அப் 20:29-31மாற் 13:22-23உபா 13:1-3கொலோ 2:82 கொரி 11:13-15 அவர்களது கனியினால் நீங்கள் அவர்கள் யாரென்று அடையாளம் கண்டுகொள்வீர்கள். மக்கள் முட்புதர்களில் இருந்து திராட்சைப் பழங்களையும், முட்செடிகளிலிருந்து அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? லூக் 6:43-45யாக் 3:12மத் 12:33மத் 7:202 பேது 2:10-18யூதா 1:10-19 இல்லையே, அதேபோல், ஒவ்வொரு நல்ல மரமும் நல்ல கனியைக் கொடுக்கும். கெட்ட மரமோ, கெட்ட கனியையே கொடுக்கும். மத் 12:33-35கலா 5:22-24எபே 5:9சங் 1:3கொலோ 1:10சங் 92:13-14எரே 17:8லூக் 13:6-9 நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது, கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுப்பதில்லை. கலா 5:171 யோவா 3:9-10 நல்ல கனிகொடாத ஒவ்வொரு மரமும், வெட்டி வீழ்த்தப்பட்டு நெருப்பில் வீசப்படும். மத் 3:10எபி 6:8யோவா 15:2-6லூக் 3:9யூதா 1:12லூக் 13:6-9ஏசா 27:11ஏசா 5:5-7 இவ்வாறு, அதனதன் கனியினால் மரங்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள். மத் 7:16அப் 5:38
உண்மையான மற்றும் கள்ள சீடர்கள்
“என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று, சொல்லுகிற எல்லோரும், பரலோக அரசிற்குள் செல்வதில்லை. மாறாக பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்கள் மட்டுமே அதின் உள்ளே செல்வார்கள். ரோம 2:13லூக் 6:46யாக் 1:22லூக் 11:28தீத் 1:16எபி 4:6மத் 25:11-12யோவா 6:40 அந்நாளில் அநேகர் என்னிடம், ‘ஆண்டவரே, ஆண்டவரே, நாங்கள் உமது பெயரில் இறைவாக்கு உரைக்கவில்லையா? உமது பெயரில் பிசாசுகளைத் துரத்தவில்லையா? உமது பெயரில் பல அற்புதங்களைச் செய்யவில்லையா?’ என்று சொல்வார்கள். லூக் 13:25-271 கொரி 13:1-2மல்கி 3:17-18அப் 19:13-15எபி 6:4-62 தீமோ 1:122 தீமோ 4:8யோவா 11:51 அப்பொழுது நான் அவர்களிடம், ‘அக்கிரம செய்கைக்காரர்களே! நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை, என்னைவிட்டு அகன்றுபோங்கள்’ என்று வெளிப்படையாகச் சொல்வேன். மத் 25:41சங் 6:8லூக் 13:25லூக் 13:27மத் 25:12யோவா 10:14யோவா 10:27-30வெளி 22:15
இருவகை வீடுகள்
“எனவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செய்கிற ஒவ்வொருவனும், கற்பாறையின்மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ளவனைப் போலிருப்பான். லூக் 6:47-49யோவா 13:17லூக் 11:281 கொரி 3:10-11யாக் 2:17-261 யோவா 2:3சங் 111:101 யோவா 3:22-24 மழை பெய்தது, வெள்ளம் மேலெழுந்தது, காற்று வீசி வீட்டைத் தாக்கியது; அப்படி இருந்தும், வீடு விழவில்லை. ஏனெனில் அதன் அஸ்திபாரம் கற்பாறையின்மேல் போடப்பட்டிருந்தது. யாக் 1:12சங் 125:1-21 பேது 1:7கொலோ 2:71 பேது 1:51 கொரி 3:13-15அப் 14:22சங் 92:13-15 ஆனால், எனது இவ்வார்த்தைகளைக் கேட்டும், அதன்படி செயல்படாத ஒவ்வொருவனும், மணலின்மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியில்லாதவன் போலிருப்பான். எரே 8:9லூக் 6:49யாக் 2:20நீதி 14:11 சாமு 2:30 மழை பெய்தது, வெள்ளம் மேலெழுந்தது, காற்று வீசி வீட்டைத் தாக்கியது, அந்த வீடோ பலத்த சேதத்துடன் இடிந்து விழுந்தது.” 1 கொரி 3:13மத் 13:19-222 பேது 2:20-22எபி 10:26-31மத் 12:43-45எசேக் 13:10-16
இவற்றை இயேசு சொல்லி முடித்தபோது, மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள். லூக் 4:32மாற் 1:22யோவா 7:46மாற் 6:2லூக் 4:22யோவா 7:15மத் 13:53-54மத் 22:33 ஏனெனில் அவர் மோசேயின் சட்ட ஆசிரியர்களைப்போல் போதிக்காமல், அதிகாரமுள்ளவராய் அவர்களுக்கு போதித்தார். எபி 4:12-13ஏசா 50:4லூக் 20:8உபா 18:18-19லூக் 20:46-47அப் 3:22-23அப் 6:10பிரச 8:4