நீதிமொழிகள் 6

Proverbs 6

மூடத்தனத்தைக் குறித்து எச்சரிக்கை

என் மகனே, நீ அயலானுடைய கடனுக்காக உத்திரவாதம் கொடுத்திருந்தால், நீதி 17:18நீதி 22:26நீதி 11:15நீதி 20:16ஆதி 43:9ஆதி 44:32-33எபி 7:22யோபு 17:3

நீ அறியாதவனுக்கு பதிலாக வாக்குக்கொடுத்திருந்தால்,

நீ சொன்ன வார்த்தையினால் நீ பிடிபட்டாய், நீதி 18:7நீதி 12:13

உன் வாயின் வார்த்தையினாலே நீ அகப்பட்டாய்.

என் மகனே, நீ உன் அயலாரின் கைகளில் விழுந்துவிட்டபடியினால், யாக் 4:102 சாமு 24:14சங் 31:82 நாளாக 12:52 நாளாக 36:12யாத் 10:3

நீ உன்னை விடுவித்துக்கொள்ள

நீ போய் உன்னைத் தாழ்த்தி,

உன் அயலான் களைப்படையும் வரை வேண்டிக்கொள்.

அதுவரை உன் கண்களுக்கு நித்திரையையும், சங் 132:4நீதி 6:10-11மாற் 13:35-36பிரச 9:10மத் 24:17-18

உன் கண் இமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடாதே.

வேட்டைக்காரனின் கையில் அகப்பட்ட மானைப்போல, சங் 91:3சங் 124:7நீதி 1:17சங் 11:1

வேடனின் கையில் அகப்பட்ட பறவையைப்போல முயன்று நீ தப்பியோடு.

சோம்பேறியே, நீ எறும்பிடம் போய், நீதி 20:4நீதி 18:9நீதி 13:4நீதி 6:9எபி 6:12மத் 25:26நீதி 30:25ரோம 12:11

அதின் வழிகளைக் கவனித்து ஞானியாகு!

அதற்குத் தளபதியோ, மேற்பார்வையாளனோ, யோபு 38:39நீதி 30:27யோபு 39:26-30யோபு 41:4-34

அதிகாரியோ இல்லை.

அப்படியிருந்தும் அது கோடைகாலத்தில் தனக்குத் தேவையான உணவை ஆயத்தப்படுத்துகிறது, நீதி 10:51 தீமோ 6:19நீதி 30:25

அறுவடைக்காலத்தில் தன் உணவை அது சேகரிக்கிறது.

சோம்பேறியே, நீ எவ்வளவு நேரத்திற்கு படுத்திருப்பாய்? நீதி 24:33-34சங் 94:8எபே 5:14எரே 4:141 தெச 5:2-7நீதி 1:22ரோம 13:11யோவா 1:6

நீ உன் தூக்கத்தைவிட்டு எப்போது எழுந்திருப்பாய்?

கொஞ்சம் நித்திரை செய்வேன், கொஞ்சம் தூங்குவேன், நீதி 24:33-34நீதி 6:6நீதி 23:33-34

கொஞ்சம் என் கைகளை மடித்து ஓய்வெடுப்பேன் என்பாயானால்,

வறுமை கொள்ளைக்காரனைப்போல் உன்மேல் வரும்; நீதி 13:4நீதி 10:4நீதி 20:4நீதி 24:34

பற்றாக்குறை ஆயுதம் தாங்கிய முரடனைப்போல உன்னைத் தாக்கும்.

வீணனும் கயவனுமானவன், மத் 12:341 தீமோ 5:13நீதி 16:27நீதி 4:24சங் 52:2-4சங் 59:7அப் 20:30நீதி 17:4

வஞ்சக வார்த்தைகளைப் பேசித்திரிகிறான்.

அவன் தன் கண்களை வஞ்சனையில் சிமிட்டி, சங் 35:19யோபு 15:12நீதி 10:10நீதி 5:6

தன் கால்களால் செய்தியைத் தெரிவித்து,

தனது விரல்களால் சைகை காட்டுகிறான்.

அவன் தன் இருதயத்திலுள்ள வஞ்சனையினால் தீமையான சூழ்ச்சி செய்கிறான்; மீகா 2:1ரோம 16:17ஓசி 8:7நீதி 6:18-19நீதி 2:14நீதி 26:17-22சங் 36:4எசேக் 11:2

அவன் எப்பொழுதும் பிரிவினையைத் தூண்டிவிடுகிறான்.

அதினால் ஒரு கணப்பொழுதில் பேராபத்து அவனைச் சூழ்ந்துகொள்ளும்; 2 நாளாக 36:16எரே 19:111 தெச 5:3ஏசா 30:13-14நீதி 1:27சங் 73:18-20நீதி 29:1சங் 50:22

மீளமுடியாதபடி திடீரென அழிந்துபோவான்.

யெகோவா வெறுக்கிற ஆறு காரியங்கள் உண்டு, சங் 11:5நீதி 8:13நீதி 11:20உபா 25:16நீதி 17:15நீதி 3:32நீதி 11:1உபா 24:4

இல்லை, ஏழு காரியங்கள் அவருக்கு அருவருப்பானது:

கர்வமுள்ள கண்கள், சங் 120:2-3நீதி 12:22ஏசா 1:15சங் 101:5சங் 5:6உபா 27:25ஏசா 3:9நீதி 21:4

பொய்பேசும் நாவு,

குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தும் கைகள்,

கொடுமையான சூழ்ச்சிகளைத் திட்டமிடும் இருதயம், ஆதி 6:5நீதி 1:16எரே 4:14சங் 36:4ரோம 3:15ஏசா 59:7சகரி 8:17மீகா 2:1

தீமைசெய்ய விரையும் கால்கள்,

பொய்ச்சாட்சி, நீதி 19:5நீதி 6:14யாக் 3:18நீதி 19:9சங் 27:12உபா 19:16-20யாக் 3:14-16நீதி 25:18

சகோதரர்களுக்குள்ளே பிரிவினையைத் தூண்டிவிடும் நபர்.

விபசாரத்தைக் குறித்து எச்சரிக்கை

என் மகனே, உன் தகப்பனின் கட்டளைகளைக் கைக்கொள், எபே 6:1உபா 27:16நீதி 7:1-4நீதி 1:8-9நீதி 23:22உபா 21:18நீதி 30:11

உன் தாயின் போதனையை விட்டுவிடாதே.

அவற்றை எப்பொழுதும் உன் இருதயத்தில் வைத்துக்கொள்; நீதி 3:3நீதி 7:3-42 கொரி 3:3உபா 6:8யாத் 13:16நீதி 4:6நீதி 4:21

அவற்றை உன் கழுத்தில் கட்டிக்கொள்.

நீ நடக்கும்போது அவை உனக்கு வழிகாட்டும்; சங் 119:11நீதி 3:23-24நீதி 2:11சங் 119:24சங் 119:97சங் 43:3சங் 119:148சங் 119:54

நீ தூங்கும்போது, அவை உன்னைக் கண்காணிக்கும்;

நீ விழித்தெழும்பும்போது, அவை உன்னோடு பேசும்.

ஏனெனில் இந்த கட்டளைகள் ஒரு விளக்கு, சங் 119:1052 பேது 1:19சங் 19:8நீதி 15:31நீதி 4:13நீதி 4:4எரே 21:8நீதி 15:24

இந்த போதனை ஒரு வெளிச்சம்,

நற்கட்டுப்பாடும் கண்டித்தலும்

வாழ்வுக்கு வழி.

இவை ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும், பிரச 7:26நீதி 2:16நீதி 5:3நீதி 7:5

விபசாரியின் இனிய வார்த்தைகளிலிருந்தும் உன்னை விலக்கிக் காக்கும்.

நீ உன் இருதயத்தில் அவளுடைய அழகின்மேல் இச்சை கொள்ளாதே; யாக் 1:14-15மத் 5:282இராஜா 9:302 சாமு 11:2-5ஏசா 3:16உன்னத 4:9

அவள் கண்கள் உன்னைக் கவருவதற்கு இடங்கொடாதே.

ஏனெனில் விபசாரி, ஒரு துண்டு அப்பத்தைத் தேடி அலையும் நிலைக்கு உன்னைக்கொண்டு வருவாள்; லூக் 15:30நீதி 29:31 சாமு 2:36ஆதி 39:14எசேக் 13:18எசேக் 13:8லூக் 15:13-15நீதி 29:8

பிறரின் மனைவி உன் உயிரையே சூறையாடுவாள்.

ஒருவன் தன் உடைகள் எரியாமல் யோபு 31:9-12ஓசி 7:4-7யாக் 3:5

தன் மடியில் நெருப்பை அள்ளி எடுக்கமுடியுமோ?

அல்லது தனது பாதங்கள் எரியாதபடி,

ஒருவனால் நெருப்புத்தழலில் நடக்க முடியுமோ?

அவ்வாறே இன்னொருவனின் மனைவியுடன் உறவுகொள்பவனும் இருக்கிறான்; 1 கொரி 7:12 சாமு 12:9-10எசேக் 22:11லேவி 20:10மல்கி 3:52 சாமு 11:3-42 சாமு 16:21ஆதி 12:18-19

அவளைத் தொடுபவன் எவனும் தண்டனை பெறாமல் தப்பமாட்டான்.

ஒரு திருடன் தான் பசியாய் இருக்கும்போது, யோபு 38:39

தன் பசியைத் தீர்ப்பதற்குத் திருடுவதை மனிதர் பெரும் குறையாகக் கருதுவதில்லை.

ஆனாலும் அவன் பிடிக்கப்பட்டால், அதை ஏழுமடங்காகக் கொடுத்தேத் தீரவேண்டும்; லூக் 19:82 சாமு 12:6யாத் 22:1-4யோபு 20:18மத் 18:25

அதற்கு அவன் வீட்டிலுள்ள செல்வங்களையெல்லாம் அவன் கொடுக்க நேரிடும்.

ஆனால் விபசாரம் செய்பவனோ சுத்த முட்டாள்; நீதி 7:7எபி 13:4நீதி 7:22-23ரோம 1:22-24பிரச 7:25-26நீதி 2:18-19யாத் 20:14ஆதி 39:9-10

அப்படிச் செய்பவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான்.

அடிபட்ட காயமும் அவமானமும் அவனுடைய பங்கு; நீதி 5:9-111 இராஜா 15:5ஆதி 49:4நியாயாதி 16:19-21மத் 1:6நெகே 13:26சங் 38:1-8சங் 51:1

அவனுடைய வெட்கம் ஒருபோதும் நீங்காது.

ஏனெனில் பொறாமை கணவனின் மூர்க்கத்தைத் தூண்டும்; எண் 5:14நீதி 27:4உன்னத 8:61 கொரி 10:22நியாயாதி 19:29-30எண் 25:11

பழிவாங்கும் நாளில் அவன் இரக்கம் காட்டமாட்டான்.

அவன் எவ்வித இழப்பீட்டையும் ஏற்றுக்கொள்ளமாட்டான்; 2இராஜா 5:1ஏசா 2:9மல்கி 2:9நீதி 4:3நீதி 7:13நீதி 8:25

எவ்வளவு பெரிய இலஞ்சமானாலும், அவன் அதை வாங்க மறுப்பான்.