உன்னதப்பாட்டு 4

Song 4

காதலன்

என் அன்பே, நீ எவ்வளவு அழகானவள்! உன்னத 1:15உன்னத 6:5உன்னத 6:7மீகா 7:14உன்னத 2:14உன்னத 4:9-10உன்னத 7:52 கொரி 3:18

ஆ, நீ எவ்வளவு அழகானவள்;

முகத்திரையின் பின்னாலுள்ள உன் கண்கள் புறாக்கண்கள்;

உனது தலைமுடி கீலேயாத் மலைச்சரிவில் இருந்து இறங்கிவரும்

வெள்ளாட்டு மந்தையைப் போன்றது.

உன் பற்கள் முடி கத்தரிக்கப்பட்டு, உன்னத 6:61 தெச 2:132 பேது 1:5-8கொலோ 1:4-6உபா 7:13-14யாத் 23:26எரே 15:16யோவா 15:7

குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிற செம்மறியாட்டு மந்தையைப்போல் இருக்கின்றன.

அவை ஒவ்வொன்றும் இரட்டைக்குட்டி ஈன்றவை,

அவற்றில் எதுவும் மலடாய் அல்ல.

உன் உதடுகள் செம்பட்டு நாடா போன்றவை; உன்னத 6:7யோசு 2:18உன்னத 5:162 கொரி 5:18-21கொலோ 3:16-17கொலோ 4:6எபே 4:29எசேக் 16:63

உன் வாய் அழகானது.

உனது முகத்திரையின் பின்னால் உள்ள உன் கன்னங்கள்

பிளந்த மாதுளம் பழத்திற்கு ஒப்பானவை.

உன் கழுத்து தாவீதின் கோபுரம்போல் இருக்கிறது, உன்னத 7:41 பேது 1:5எபே 4:15-16எசேக் 27:10-11நெகே 3:192 நாளாக 12:9-112 சாமு 22:51கொலோ 2:19

அடுக்கடுக்காய் ஆயிரக்கணக்கான கேடயங்கள் தொங்குகின்றன;

அவைகளெல்லாம்

போர் வீரர்களுடைய ஆயுதங்களே.

உனது மார்பகங்கள் இரண்டு மான்குட்டிகள் போன்றவை, உன்னத 2:16உன்னத 6:3உன்னத 7:31 பேது 2:2நீதி 5:19உன்னத 8:10ஏசா 66:10-12உன்னத 1:13

அவை லில்லிகள் நடுவில் மேயும்

வெளிமானின் இரட்டைக்குட்டிகள் போன்றவை.

பொழுது சாய்வதற்குள், உன்னத 2:17உன்னத 4:14லூக் 1:781 யோவா 2:82 பேது 1:19உபா 12:5-6யாத் 20:24யாத் 30:23-26

நிழல் மறைவதற்குள்,

நான் வெள்ளைப்போள மலைக்கும்,

சாம்பிராணிக் குன்றுக்கும் விரைந்து செல்வேன்.

என் அன்பே, நீ முற்றிலும் அழகானவள்; உன்னத 1:15உன்னத 4:1கொலோ 1:22எபே 5:25-27யூதா 1:24சங் 45:112 பேது 3:14சங் 45:13

உன்னில் குறைபாடு எதுவும் இல்லை.

லெபனோனில் இருந்து என்னுடன் வா, என் மணமகளே, உபா 3:9உன்னத 2:131 நாளாக 5:23சங் 45:10ஏசா 62:51 இராஜா 4:33கொலோ 3:1-2உபா 3:25

லெபனோனில் இருந்து என்னுடன் வா.

அமனா மலைச் சிகரத்திலிருந்தும்,

சேனீர் மற்றும் எர்மோன் மலை உச்சியிலிருந்தும்,

சிங்கக் குகைகளிலிருந்தும்,

சிறுத்தைப் புலிகள் தங்கும் இடமான மலைகளிலிருந்தும் இறங்கி வா.

என் சகோதரியே, என் மணமகளே, நீ என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்; நீதி 5:19-20உன்னத 4:12உன்னத 5:1-22 கொரி 11:2ஓசி 2:19-20உன்னத 7:10உன்னத 7:5-6எசேக் 16:8

உன் கண்களின் ஒரு பார்வையினாலே,

உன் கழுத்து மாலையின் ஒரு மணியினாலே

என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்.

என் சகோதரியே, என் மணமகளே, உன் அன்பு எவ்வளவு இனிமையானது! உன்னத 1:2-4கலா 5:22உன்னத 7:6பிலி 4:18உன்னத 1:12உன்னத 3:6உன்னத 5:52 கொரி 1:21-22

உன் அன்பு திராட்சை இரசத்திலும் இன்பமானது;

உனது வாசனைத் தைலத்தின் நறுமணம்

எல்லாவகை வாசனைத் தைலத்தைப் பார்க்கிலும் சிறந்தது!

என் மணமகளே, உன் உதடுகள் தேன்கூட்டைப்போல் இனிமையைப் பொழிகின்றன; உன்னத 5:1ஆதி 27:27ஓசி 14:6-7உன்னத 5:13உன்னத 7:9எபி 13:15ஓசி 14:2ஏசா 7:15

உன் நாவின்கீழே பாலும் தேனும் இருக்கின்றன.

உன் உடைகளின் நறுமணம்

லெபனோனின் நறுமணம்போல் இருக்கின்றது.

என் சகோதரியே, என் மணமகளே, நீ சுற்றி அடைக்கப்பட்ட தோட்டம், நீதி 5:15-18வெளி 21:271 கொரி 6:13ஏசா 61:10-111 கொரி 6:19-201 கொரி 7:34வெளி 7:32 கொரி 1:22

நீ பூட்டப்பட்ட நீரூற்று, முத்திரையிடப்பட்ட கிணறு.

மாதுளைத் தோட்டத்தைப்போல தளிர்த்துள்ளாய்; உன்னத 1:14பிரச 2:5உன்னத 6:11உன்னத 1:12ஏசா 60:21ஏசா 61:11யோவா 12:3யோவா 15:1-3

அங்கே சிறந்த கனிகளுண்டு,

மருதோன்றிச் செடிகளும் நளதச்செடிகளும் உண்டு.

அங்கே நளதம், குங்குமம், யாத் 30:23உன்னத 4:6உன்னத 3:6உன்னத 6:2எசேக் 27:19நீதி 7:17உன்னத 1:121 இராஜா 10:10

வசம்பு, இலவங்கம்,

எல்லாவித நறுமண மரங்களும்,

வெள்ளைப்போளமும் சந்தனமும்,

எல்லாச் சிறந்த நறுமணச்செடிகளும் நிறைந்துள்ளது.

நீ தோட்டத்திலுள்ள நீரூற்று, யோவா 4:10யோவா 4:14யோவா 7:38எரே 2:13பிரச 2:6எரே 17:13எரே 18:13-14சங் 36:8-9

ஜீவத்தண்ணீரின் கிணறு,

லெபனோனிலிருந்து ஓடிவரும் நீரோடை.

காதலி

வாடைக்காற்றே எழும்பு, உன்னத 6:2உன்னத 5:11 பேது 2:5அப் 2:1-2எசேக் 37:9உன்னத 4:13-14உன்னத 7:12-131 தெச 2:12-13

தென்றல் காற்றே வா!

வாசனை நிரம்பிப் பரவும்படி

என் தோட்டத்தில் வீசு.

என் காதலர் தமது தோட்டத்திற்குள் வந்து

அதின் சிறந்த பழங்களைச் சுவைக்கட்டும்.