தெசலோனிக்கே பட்டணத்தில் பவுல் பிரசங்கித்தல்
அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்கு வந்தார்கள்; அங்கே யூதர்களுக்கு ஒரு ஜெப ஆலயம் இருந்தது. 1 தெச 1:1பிலி 4:162 தெச 1:1அப் 20:42 தீமோ 4:10அப் 17:11அப் 17:13அப் 27:2 பவுல் தன் வழக்கத்தின்படியே அங்குபோய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களோடு பேசி, அப் 18:4அப் 9:20அப் 13:5அப் 14:1அப் 17:10அப் 17:17ஏசா 1:18லூக் 4:16 கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டுமென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் வேதவாக்கியங்களிலிருந்து காண்பித்தான். அப் 18:28அப் 9:22லூக் 24:321 கொரி 15:3-41 தெச 1:5-6அப் 3:18கலா 3:1லூக் 24:46 அவர்களில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கர்களில் அநேகரும், கனம்பெற்ற பெண்களில் அநேகரும் விசுவாசித்து, பவுல் சீலாவிடம் சேர்ந்துகொண்டார்கள். அப் 17:12அப் 13:43அப் 14:42 கொரி 8:5அப் 13:50அப் 15:22அப் 28:242 கொரி 6:17-18 விசுவாசிக்காத யூதர்கள் வைராக்கியத்தோடு பொல்லாத மனிதர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு, பட்டணத்தில் கலவரம் உண்டாக்கி, யாசோனுடைய வீட்டைச் சுற்றிவளைத்து, அவர்களைப் பட்டணத்து மக்களிடம் இழுத்துக்கொண்டுவரப் பார்த்தார்கள். அப் 17:13கலா 5:261 தெச 2:14-16அப் 14:2அப் 17:7கலா 5:21ரோம 16:211 கொரி 3:3 அவர்கள் அங்கு இல்லாததால், யாசோனையும் சில சகோதரர்களையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுவந்து: உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள். அப் 24:5அப் 16:19-21அப் 28:22லூக் 23:5அப் 21:28-311 இராஜா 18:17-18அப் 18:12-13அப் 22:22-23 இவர்களை யாசோன் தன் வீட்டில் சேர்த்துக்கொண்டான். இவர்கள் எல்லோரும் இயேசு என்னும் வேறு ஒருவனை ராஜா என்று சொல்லி, பேரரசனுடைய கட்டளைகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று சத்தமிட்டு, லூக் 23:2அப் 16:21யோவா 19:121 பேது 2:15அப் 25:8-11தானி 3:12தானி 6:13எஸ்றா 4:12-15 இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களையும் பட்டணத்து அதிகாரிகளையும் கலங்கப்பண்ணினார்கள். யோவா 11:48மத் 2:3 பின்பு அவர்கள் யாசோனிடத்திலும் மற்றவர்களிடத்திலும் ஜாமீன் வாங்கிக்கொண்டு, அவர்களை விட்டுவிட்டார்கள். அப் 17:5
பெரோயா பட்டணத்தில் பவுல்
அன்று இரவிலே சகோதரர்கள் பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்திற்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சென்று, யூதர்களுடைய ஜெப ஆலயத்திற்குப் போனார்கள். 1 தெச 2:2அப் 17:13-14அப் 17:2அப் 20:4அப் 9:251 சாமு 19:12-171 சாமு 20:42அப் 14:6-7 அந்தப் பட்டணத்து மக்கள் வசனத்தை ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டு, விஷயங்கள் இப்படியிருக்கிறதா என்று தினமும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைவிட நற்பண்பு உடையவர்களாக இருந்தார்கள். ஏசா 34:16நீதி 2:1-5யோவா 5:391 தெச 2:131 பேது 1:10-12மத் 13:232 பேது 1:19-21நீதி 9:9 அதனால் அவர்களில் அநேகரும், கிரேக்கர்களில் கனம்பெற்ற அநேக ஆண்களும் பெண்களும் விசுவாசித்தார்கள். எபே 5:14அப் 13:50அப் 14:11 கொரி 1:26அப் 17:2-4அப் 13:46யாக் 1:10யாக் 1:21 பெரோயாவிலும் தேவவசனம் பவுலினால் அறிவிக்கப்படுகிறது என்று தெசலோனிக்கேயரான யூதர்களுக்கு தெரிந்தபோது, அங்கேயும் வந்து, மக்களைத் தூண்டிவிட்டார்கள். 1 தெச 2:14-16அப் 14:2அப் 17:5அப் 21:27அப் 6:12மத் 23:13நீதி 28:251 இராஜா 21:25 உடனே சகோதரர்கள் பவுலைக் கடல்வழியாக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயுவும் அங்கே தங்கியிருந்தார்கள். அப் 17:10மத் 10:23அப் 16:1அப் 9:25அப் 9:301 தீமோ 1:3அப் 15:22அப் 19:22 பவுலைக் கூட்டிச்சென்றவர்கள் அவனை அத்தேனே பட்டணம்வரைக்கும் கூட்டிக்கொண்டுபோனார்கள். அங்கே பவுல், சீலாவையும் தீமோத்தேயுவையும் சீக்கிரமாக என்னிடம் வரச் சொல்லுங்கள் என்று அவர்களுக்குச் சொல்லி அனுப்பினான். 1 தெச 3:1அப் 18:5அப் 18:12 தீமோ 4:10-11தீத் 3:122 தீமோ 4:20-21அப் 15:3அப் 17:16
அத்தேனே பட்டணத்தில் பவுல்
அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும்போது, அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைப் பார்த்து, தன் மனதில் அதிக வைராக்கியம் கொண்டு, சங் 119:1582 பேது 2:7யாத் 32:19-20சங் 119:136எரே 20:9யோபு 32:18-20மீகா 3:8மாற் 3:5 ஜெப ஆலயத்தில் யூதர்களோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தையில் பார்ப்பவர்களோடும் தினமும் பேசிக்கொண்டிருந்தான். அப் 13:16அப் 14:1-4அப் 17:2-4அப் 9:20லூக் 12:3மத் 5:1-2மாற் 16:15நீதி 1:20-22 அப்பொழுது எப்பிக்கூரர்களும் ஸ்தோயிக்கர்களுமான ஞானிகளில் சிலர் அவனோடுகூட வாக்குவாதம்பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனைப்போல இருக்கிறான் என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் அவர்களுக்குப் போதித்ததினால் அப்படிச் சொன்னார்கள். 1 கொரி 1:20-211 கொரி 3:181 கொரி 4:10அப் 4:2கொலோ 2:8லூக் 11:531 கொரி 15:3-4அப் 17:31-32 அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு கூட்டிக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற இந்த புதிய உபதேசம் என்ன என்று நாங்கள் தெரிந்துகொள்ளலாமா? மாற் 1:27அப் 17:22அப் 24:24அப் 25:221 யோவா 2:7-8அப் 17:20அப் 26:1யோவா 13:34 நீ சொன்ன அநேக வினோதமான காரியங்களை எங்களுடைய காதுகளில் கேட்டோம்; அதின் விளக்கம் என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம் என்றார்கள். 1 கொரி 1:231 கொரி 2:14ஓசி 8:121 கொரி 1:181 பேது 4:4அப் 10:17அப் 2:12எபி 5:11 அந்த அத்தேனே பட்டணத்து மக்கள், அங்கே தங்குகிற வெளிமக்கள் எல்லோரும், வினோதமான காரியங்களைச் சொல்லுவதிலும் கேட்பதிலுமே தங்களுடைய நேரத்தைச் செலவழித்தார்கள். 2 தீமோ 2:16-17கொலோ 4:5எபே 5:161 தீமோ 5:132 தெச 3:11-12 அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனே பட்டணத்தாரே, எல்லாக் காரியத்திலும் உங்களை அதிக பக்தியுள்ளவர்களாகப் பார்க்கிறேன். அப் 25:19அப் 17:16அப் 19:35எரே 10:2-3எரே 50:38 எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்களுடைய ஆராதனைகளை கவனித்துப் பார்த்தபொழுது, “அறியப்படாத தேவனுக்கு” என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைப் பார்த்தேன்; நீங்கள் அறியாமல் ஆராதனை செய்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். கலா 4:8-9யோவா 4:22யோவா 17:3யோவா 17:25அப் 17:301 கொரி 1:211 தீமோ 1:172 தெச 2:4 உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறபடியால், கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை. 1 இராஜா 8:27உபா 10:14அப் 7:48ஏசா 66:12 நாளாக 6:18மத் 11:25சங் 115:162 நாளாக 2:6 எல்லோருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் எல்லாவற்றையும் கொடுக்கிற ஆண்டவர், தமக்கு ஏதாவது தேவையென்றால், மனிதர்கள் கைகளினால் பெற்றுக்கொள்வதில்லை. சங் 50:8-13ஆதி 2:7ஏசா 42:5அப் 17:28யோபு 33:4ரோம 11:35யோபு 22:2யோபு 35:6-7 மனித இனமான எல்லா மக்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே உண்டாக்கி, பூமியெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருக்கும் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; உபா 32:7-8ஆதி 3:20மல்கி 2:10ரோம 5:12-191 கொரி 15:221 கொரி 15:47யோபு 12:23யோபு 14:5 கர்த்தராகிய அவரை மக்கள் தடவியாவது தேடிக் கண்டுபிடிக்கும்படி அப்படிச் செய்தார்; அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகில் உள்ளார். எரே 23:23-24உபா 4:7அப் 14:17ரோம 1:20அப் 15:17சங் 19:1-6ரோம 2:4சங் 139:1-13 ஏனென்றால், அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்களுடைய புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய வம்சத்தார் என்று சொல்லியிருக்கிறார்கள். யோபு 12:10கொலோ 1:17எபி 1:3சங் 36:9லூக் 20:38யோவா 11:25யோவா 5:26சங் 66:9 நாம் தேவனுடைய வம்சமாக இருப்பதினால், மனிதனுடைய யோசனையினாலும் சித்திரவேலையினாலும் உருவாக்கின தங்கம், வெள்ளி, கல் ஆகியவற்றிக்கு தெய்வம் ஒப்பாவார் என்று நாம் நினைக்கக்கூடாது. ஏசா 40:25யாத் 20:4ஏசா 46:5-6சங் 115:4-8ஆப 2:19-20எரே 10:4-10ரோம 1:20-23சங் 106:20 மக்களின் அறியாமையின் நாட்களை தேவன் பார்க்காதவர்போல இருந்தார்; இப்பொழுது மனம் மாறவேண்டும் என்று எல்லா மனிதர்களுக்கும் கட்டளையிடுகிறார். அப் 14:16தீத் 2:11-12லூக் 24:47ரோம 3:25அப் 26:17-20எபே 4:17-321 பேது 4:31 பேது 1:14-15 ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அந்த நாளிலே அவர் தாம் நியமித்த மனிதனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாக நியாயந்தீர்ப்பார்; அந்த மனிதனை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லோருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான். 2 பேது 3:7மத் 25:31-46ரோம 2:162 கொரி 5:10சங் 9:8சங் 98:91 கொரி 4:51 கொரி 15:3-8 மரித்தவர்களின் உயிர்த்தெழுதலைக்குறித்து பவுல் சொல்வதை அவர்கள் கேட்டபோது, சிலர் கேலிசெய்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை வேறொரு நாளில் கேட்போம் என்றார்கள். அப் 17:18அப் 26:81 கொரி 4:102 கொரி 6:2அப் 2:13அப் 24:25அப் 25:192 நாளாக 36:16 எனவே, பவுல் அவர்களைவிட்டுப் போய்விட்டான். சிலர் பவுலோடு சேர்ந்துகொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பெயருள்ள ஒரு பெண்ணும், வேறு சிலரும் இருந்தார்கள். அப் 17:19ரோம 11:5-6அப் 13:48அப் 17:4அப் 17:22ஏசா 55:10-11யோவா 19:38-42யோவா 7:48-52