கலாத்தியர் 5

Galatians 5
அத்தியாயம் 5

விருத்தசேதனம்

ஆனபடியால், நீங்கள் மீண்டும் அடிமைத்தனத்தின் நுகத்திற்குக் கீழாகாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுதந்திர நிலைமையிலே நிலைத்திருங்கள். 2 கொரி 3:17கலா 5:131 பேது 2:16ரோம 6:14யோவா 8:32-36ரோம 8:2கலா 4:9எபி 10:23 இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இருக்காது, என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். கலா 5:6அப் 15:1கலா 2:3-5ரோம 9:31-32அப் 16:3-4கலா 5:11கலா 5:3-4எபி 4:2 மேலும், விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற எந்த மனிதனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாக இருக்கிறான் என்று மீண்டும் அப்படிப்பட்டவனுக்கு உறுதியாக அறிவிக்கிறேன். கலா 3:10ரோம 2:25யாக் 2:10-11உபா 27:26உபா 31:21உபா 8:19எபே 4:17மத் 23:18 நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையிலிருந்து விழுந்தீர்கள். 2 பேது 2:20-22ரோம 9:31-32கலா 2:21எபி 12:15ரோம 11:6ரோம 3:20ரோம 4:4-5கலா 5:2 நாங்களோ நீதிகிடைக்கும் என்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். சங் 130:51 தெச 1:10சங் 62:5ரோம 8:23-252 தீமோ 4:8ஆதி 49:18பிலி 3:9தீத் 2:13 கிறிஸ்து இயேசுவிடம் விருத்தசேதனமும், விருத்தசேதனம் இல்லாததும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் செய்கைகளைச் செய்கிற விசுவாசமே உதவும். கலா 6:151 கொரி 7:191 தெச 1:3யாக் 2:14-261 யோவா 3:14-20மத் 25:31-401 பேது 1:82 கொரி 5:14 நீங்கள் நன்றாக ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்? 1 கொரி 9:24கலா 3:1எபி 12:1மத் 13:211 பேது 1:222 கொரி 10:5எபி 5:9ரோம 10:16 இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானது இல்லை. கலா 1:6ரோம 8:28 புளிப்பான கொஞ்சம் மாவு பிசைந்த மாவு அனைத்தையும் உப்பப்பண்ணும். 1 கொரி 15:33மாற் 8:151 கொரி 5:6-7லூக் 12:1லூக் 13:21மத் 16:6-122 தீமோ 2:17மத் 23:33 நீங்கள் வேறுவிதமாகச் சிந்திக்கமாட்டீர்கள் என்று நான் கர்த்தருக்குள் உங்களைக்குறித்து நம்பிக்கையாக இருக்கிறேன்; உங்களைக் குழப்புகிறவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் தனக்குரிய தண்டனையை அடைவான். கலா 5:12பிலி 3:152 கொரி 2:3கலா 1:71 கொரி 5:51 யோவா 2:18-261 தீமோ 1:202 கொரி 10:2 சகோதரர்களே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாக இருந்தால், இதுவரைக்கும் எதற்காகத் துன்பப்படுகிறேன்? அப்படியென்றால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே. 1 கொரி 1:23கலா 6:12கலா 4:291 கொரி 1:181 கொரி 15:301 பேது 2:8-9அப் 21:21கலா 2:3 உங்களைக் குழப்புகிறவர்கள் உங்களிடமிருந்து துண்டித்துக்கொண்டால் நலமாக இருக்கும். கலா 5:101 கொரி 5:13யாத் 12:15யாத் 30:33கலா 2:4ஆதி 17:14யோசு 7:25லேவி 22:3 சகோதரர்களே, நீங்கள் சுதந்திரமாக இருப்பதற்காக அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுதந்திரத்தை நீங்கள் சரீரத்திற்கேதுவாக அநுசரிக்காமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் பணிவிடை செய்யுங்கள். 1 பேது 2:161 கொரி 9:191 கொரி 8:9ரோம 15:1-2கலா 5:14எபே 5:21ரோம 6:18-22கலா 6:2 உன்னை நீ நேசிக்கிறதுபோல மற்றவனையும் நேசிப்பாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். மத் 7:12லேவி 19:18கலா 6:2மாற் 12:31ரோம 13:8-10யோவா 13:34மத் 22:39-40லேவி 19:34 நீங்கள் ஒருவரையொருவர் கடித்து விழுங்குவீர்கள் என்றால் அழிவீர்கள், அப்படி ஒருவரால் ஒருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள். 1 கொரி 3:3யாக் 3:14கலா 5:262 கொரி 11:202 கொரி 12:201 கொரி 6:6-8ஏசா 11:13ஏசா 9:20-21

ஆவியானவராலே ஜீவன்

பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், ஆவியானவருக்கு ஏற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது சரீர இச்சையை நிறைவேற்றாமல் இருப்பீர்கள். கலா 5:24-25ரோம 8:12-14கலா 6:8கலா 5:19-21கொலோ 3:5-10ரோம 8:4-51 யோவா 2:15-161 பேது 2:11 சரீர இச்சை ஆவியானவருக்கு எதிராக செயல்படுகிறது. ஆவியானவர் சரீர இச்சைக்கு எதிராக செயல்படுகிறார்; நீங்கள் செய்யவேண்டியவைகளைச் செய்யாதபடி, இவைகள் ஒன்றுக்கொன்று எதிராக இருக்கிறது. ரோம 8:13ரோம 8:5-8யோவா 3:6மத் 26:41சங் 119:20சங் 51:10-12பிரச 7:20சங் 119:32 ஆவியானவரால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்கள் இல்லை. ரோம 6:14-15ரோம 8:14நீதி 8:20கலா 5:25எசேக் 36:27கலா 4:5-6கலா 5:16யோவா 16:13 சரீரத்தின் செய்கைகள் வெளியரங்கமாக இருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 1 கொரி 6:9-10கொலோ 3:5-8மத் 15:18-191 பேது 4:2-4வெளி 21:8எபே 5:3-6கலா 6:81 கொரி 3:3 விக்கிரக ஆராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், 1 கொரி 11:19வெளி 21:8தீத் 3:102 கொரி 11:19அப் 8:9-111 நாளாக 10:13-14உபா 18:10அப் 16:16-19 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைப் பெற்றுக்கொள்வதில்லை என்று முன்னமே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். 1 கொரி 6:9-10ரோம 13:13ரோம 8:13எபே 5:5-61 கொரி 5:11எபே 5:18கொலோ 3:6வெளி 21:27

ஆவியானவரின் கனிகள்

ஆவியானவரின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், கொலோ 3:12-171 கொரி 13:4-7யோவா 15:5யாக் 3:17-18யோவா 15:2எபே 5:9சங் 1:3யோவா 15:16 சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு எதிரான பிரமாணம் ஒன்றும் இல்லை. 1 தீமோ 1:9அப் 24:25தீத் 2:2தீத் 1:81 கொரி 9:25 கிறிஸ்துவினுடையவர்கள் தங்களுடைய சரீரத்தையும் அதின் ஆசைகளையும் இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். ரோம 6:6ரோம 13:14ரோம 8:13கலா 5:16-18ரோம 8:91 பேது 2:11கலா 6:141 கொரி 3:23 நாம் ஆவியானவராலே பிழைத்திருந்தால், அவருக்கேற்றபடி நடப்போம். கலா 5:16ரோம 8:4-5யோவா 6:63ரோம 8:22 கொரி 3:61 பேது 4:6ரோம 8:101 கொரி 15:45 வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருப்போம். யாக் 3:14-16பிலி 2:1-3யாக் 4:161 கொரி 3:7கலா 5:15லூக் 14:101 பேது 5:5