ஆதியாகமம் 19

Genesis 19
அத்தியாயம் 19

சோதோம் கொமோரா அழிக்கப்படுதல்

அந்த இரண்டு தூதர்களும் சாயங்காலத்தில் சோதோமுக்கு வந்தார்கள். லோத்து சோதோமின் வாசலில் உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைவரைக்கும் குனிந்து: ஆதி 18:1-5ஆதி 18:22எபி 13:2யோபு 31:32 “ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டிற்கு நீங்கள் வந்து, உங்கள் கால்களைக் கழுவி, இரவில்தங்கி, காலையில் எழுந்து புறப்பட்டுப் போகலாம்” என்றான். அதற்கு அவர்கள்: “அப்படியல்ல, இரவில் வீதியிலே தங்குவோம்” என்றார்கள். ஆதி 18:4லூக் 24:28-29அப் 16:15எபி 13:2நியாயாதி 19:17-21 அவன் அவர்களை மிகவும் வருந்திக்கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவனுடைய வீட்டிற்குச் சென்றார்கள். அவன் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துசெய்தான், அவர்கள் சாப்பிட்டார்கள். ஆதி 18:6-81 சாமு 28:24நியாயாதி 6:191 கொரி 5:8யாத் 12:39எபி 13:22 கொரி 5:142இராஜா 4:8 அவர்கள் படுக்கும்முன்னே, சோதோம் பட்டணத்து மனிதர்களாகிய வாலிபர்கள்முதல் முதியவர்கள்வரையுள்ள மக்கள் அனைவரும் நான்கு திசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு, ஆதி 13:13நீதி 4:16யாத் 23:2ஆதி 18:20யாத் 16:2எரே 5:1-6எரே 5:31மத் 27:20-25 லோத்தைக் கூப்பிட்டு: “இந்த இரவில் உன்னிடம் வந்த மனிதர்கள் எங்கே? நாங்கள் அவர்களுடன் உறவுகொள்ள அவர்களை எங்களிடம் வெளியே கொண்டுவா” என்றார்கள். நியாயாதி 19:22ஏசா 3:9யூதா 1:7லேவி 18:22ரோம 1:26-271 கொரி 6:91 தீமோ 1:10எசேக் 16:51 அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடம் போய்: நியாயாதி 19:23 “சகோதரர்களே, இந்த அக்கிரமத்தைச் செய்யவேண்டாம். 1 கொரி 6:9-111 சாமு 30:23-24அப் 17:26உபா 23:17ஆதி 19:4நியாயாதி 19:23யூதா 1:7லேவி 18:22 இதோ, கன்னிகைகளான இரண்டு மகள்கள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்களுடைய இஷ்டப்படி செய்யுங்கள்; இந்த மனிதர்கள் என்னுடைய கூரையின் நிழலிலே வந்ததால், இவர்களுக்கு மட்டும் ஒன்றும் செய்யவேண்டாம்” என்றான். நியாயாதி 19:24ஆதி 19:31-38ஆதி 18:5ஆதி 42:37ஏசா 58:7நியாயாதி 9:15மாற் 9:6ரோம 3:8 அதற்கு அவர்கள்: “அப்பாலே போ; பரதேசியாக வந்த இவனா நியாயம் பேசுவது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைவிட உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம்” என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்க நெருங்கினார்கள். யாத் 2:142 பேது 2:7-8ஆதி 13:12அப் 7:26-28தானி 3:19-22பிரச 9:3எரே 6:15மத் 7:6 அப்பொழுது அந்த மனிதர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத் தங்கள் பக்கம் வீட்டிற்குள் இழுத்துக்கொண்டு, கதவைப்பூட்டி, தெருவாசலிலிருந்த சிறியோர்களும் பெரியோர்களுமாகிய மனிதர்களுக்குப் பார்வையற்றுப்போகச் செய்தார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள். 2இராஜா 6:18அப் 13:11உபா 28:28-29எரே 2:36பிரச 10:15ஏசா 57:10 பின்பு அந்த மனிதர்கள் லோத்தை நோக்கி: “இந்த இடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? உன்னுடைய மகன்களாவது, மகள்களாவது, மருமகன்களாவது பட்டணத்தில் உனக்குரியவர்கள் யாராவது இருந்தால், அவர்களை இந்த இடத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ. ஆதி 7:12 பேது 2:7வெளி 18:42 பேது 2:9ஆதி 19:17யோசு 6:22-23எண் 16:26ஆதி 19:14 நாங்கள் இந்த இடத்தை அழிக்கப்போகிறோம்; இவர்களுக்கு எதிரான கூக்குரல் யெகோவாவுடைய சமூகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் யெகோவா எங்களை அனுப்பினார்” என்றார்கள். ஆதி 18:20அப் 12:23யூதா 1:7மத் 13:49-50வெளி 16:1-12யாக் 5:4மத் 13:41-42ரோம 3:8-9 அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் மகள்களைத் திருமணம் செய்யப்போகிற தன் மருமகன்களோடு பேசி: “நீங்கள் எழுந்து இந்த இடத்தைவிட்டுப் புறப்படுங்கள்; யெகோவா இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார்” என்றான்; அவனுடைய மருமகன்களின் பார்வைக்கு அவன் கேலிசெய்வதைப் போலிருந்தது. எண் 16:21எரே 51:6எண் 16:26எண் 16:452 நாளாக 30:10வெளி 18:4-82 நாளாக 36:16எசேக் 20:49 விடியற்காலமானபோது அந்தத் தூதர்கள் லோத்தை நோக்கி: “பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாமலிருக்க எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டுபோ” என்று சொல்லி, அவனை அவசரப்படுத்தினார்கள். எண் 16:24-27வெளி 18:42 கொரி 6:2ஆதி 19:22லூக் 13:24-25நீதி 6:4-5ஆதி 19:17எபி 3:7-8 அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, யெகோவா அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்த மனிதர்கள் அவனுடைய கையையும், அவனுடைய மனைவியின் கையையும், அவனுடைய இரண்டு மகள்களின் கையையும் பிடித்து, அவர்களைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள். ரோம 9:15-16தீத் 3:51 நாளாக 16:342 கொரி 1:32 பேது 2:9உபா 4:31எபே 2:4-5யாத் 34:6 அவர்களை வெளியே கொண்டுபோய்விட்டபின்பு, அவர்: “உன் உயிர் தப்ப ஓடிப்போ, திரும்பிப் பார்க்காதே; இந்தச் சமபூமியில் எங்கும் நிற்காதே; நீ அழியாமலிருக்க மலைக்கு ஓடிப்போ” என்றார். மத் 24:16-18லூக் 9:62பிலி 3:13-14ஆதி 19:26ஆதி 19:22லூக் 17:31-32மத் 3:7எரே 48:6 அதற்கு லோத்து: “அப்படியல்ல ஆண்டவரே, 2இராஜா 5:11-12அப் 10:14அப் 9:13ஆதி 32:26ஏசா 45:11யோவா 13:6-8 உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபை கிடைத்ததே; என்னுடைய உயிரைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக தெரியச்செய்தீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் இறந்துபோவேன். 1 இராஜா 9:91 சாமு 27:11 தீமோ 1:14-16உபா 31:17ஆதி 12:13மத் 8:25-26சங் 103:1-22சங் 106:1-48 அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அங்கு ஓடிப்போக அது அருகில் இருக்கிறது, சிறியதாகவும் இருக்கிறது; என் உயிர்பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே” என்றான். சங் 119:175நீதி 3:5-7ஆமோ 3:6ஆதி 12:13ஆதி 19:30ஏசா 55:3 அதற்கு அவர்: “நீ கேட்டுக்கொண்ட ஊரை நான் கவிழ்த்துப்போடாதபடி, இந்த விஷயத்திலும் உனக்கு தயவுசெய்தேன். சங் 145:19யோபு 42:8-9சங் 102:17சங் 34:15ஆதி 12:2ஆதி 18:24ஆதி 4:7எபி 2:17 விரைவாக அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேரும்வரை நான் ஒன்றும் செய்யமுடியாது” என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் 1 எனப்பட்டது. ஆதி 13:10ஆதி 14:2உபா 9:14யாத் 32:10ஆதி 32:25-28மாற் 6:5சங் 91:1-102 தீமோ 2:13

சோதோம் கொமோரா அழிக்கப்பட்டது

லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது. அப்பொழுது யெகோவா சோதோமின் மேலும் கொமோராவின்மேலும், யெகோவாவாலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் பொழியச்செய்து, உபா 29:23ஏசா 13:192 பேது 2:6ஆமோ 4:11யூதா 1:7எரே 50:40எசேக் 16:49-50ஓசி 11:8 அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் அனைத்து மக்களையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார். சங் 107:34ஆதி 14:3ஆதி 13:10 அவனுடைய மனைவியோ திரும்பிப்பார்த்து, உப்புத்தூண் ஆனாள். லூக் 17:31-32ஆதி 19:17எபி 10:38நீதி 14:14எண் 16:38 விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து தான் யெகோவாவுக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய், ஆப 2:1சங் 5:3எசேக் 16:49-50ஆதி 18:22-33எபி 2:1 சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை, சூளையின் புகையைப்போல எழும்பினது. வெளி 18:9வெளி 9:2யூதா 1:7வெளி 18:18வெளி 21:82 பேது 2:7சங் 107:34வெளி 14:10-11 தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடும்போது, லோத்தை அந்த அழிவிலிருந்து தப்பிச்செல்லும்படி அனுப்பிவிட்டார். ஆதி 8:1உபா 9:5ஆதி 18:23-33சங் 25:72 பேது 2:7ஓசி 11:8சங் 105:42சங் 106:4

லோத்துவும் அவனுடைய மகள்களும்

பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடுகூட அவனுடைய இரண்டு மகள்களும் மலையிலே தங்கினார்கள்; அங்கே அவனும் அவனுடைய இரண்டு மகள்களும் ஒரு குகையிலே குடியிருந்தார்கள். ஆதி 19:17ஆதி 19:19உபா 34:3ஆதி 13:10ஆதி 14:22ஆதி 49:4ஏசா 15:5யாக் 1:8 அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: “நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடு இணைய பூமியிலே ஒரு மனிதனும் இல்லை. உபா 25:5ஆதி 16:2ஆதி 16:4ஆதி 4:1ஆதி 6:4ஏசா 4:1ஆதி 19:28ஆதி 38:14-30 நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாக, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடு உறவுகொள்வோம் வா” என்றாள். லேவி 18:6-7ஆதி 11:3ஆதி 9:21ஆப 2:15-16மாற் 12:19நீதி 23:31-33 அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடு உறவுகொண்டாள்: அவள் உறவுகொண்டதையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். ஆப 2:15-16லேவி 18:6-7நீதி 20:1நீதி 23:29-35 மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: “நேற்று ராத்திரி நான் தகப்பனோடு உறவுகொண்டேன்; இன்று இரவும் மதுவைக் குடிக்கக்கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீயும் போய் அவரோடு உறவுகொள்” என்றாள். ஏசா 3:9எரே 3:3எரே 5:3எரே 6:15எரே 8:12 அப்படியே அன்று இரவிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடு உறவுகொண்டாள்; அவள் உறவுகொண்டதையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். 1 கொரி 10:11-121 பேது 4:7பிரச 7:26லூக் 21:34நீதி 24:16சங் 8:4 இந்த விதமாக லோத்தின் மகள்கள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள். ஆப 2:151 சாமு 15:33ஆதி 19:8நியாயாதி 1:7லேவி 18:6-7மத் 7:2 மூத்தவள் ஒரு மகனைப்பெற்று, அவனுக்கு மோவாப் என்று பெயரிட்டாள்; அவன் இந்த நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன். உபா 2:92இராஜா 3:1-272 சாமு 8:1-18உபா 2:19உபா 23:3நியாயாதி 3:1-31எண் 21:29எண் 22:1-41 இளையவளும் ஒரு மகனைப்பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பெயரிட்டாள்; அவன் இந்த நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் வம்சத்தாருக்குத் தகப்பன். உபா 2:191 சாமு 11:1-152 சாமு 10:1-19உபா 2:9உபா 23:3ஏசா 11:14நியாயாதி 10:6நெகே 13:1-3