உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன் சங் 32:7சங் 27:5சங் 36:7சங் 17:81 யோவா 4:15-16சங் 31:20ஏசா 25:4சங் 61:3-4
சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
நான் யெகோவாவை நோக்கி: சங் 18:2ஏசா 26:3-4நீதி 18:10ஏசா 12:2சங் 142:5சங் 62:5-8சங் 46:1சங் 71:3
நீர் என்னுடைய அடைக்கலம்,
என்னுடைய கோட்டை, என் தேவன்,
நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், சங் 124:7சங் 141:9யோபு 5:10-22நீதி 7:23நீதி 6:52 தீமோ 2:26பிரச 9:121 தீமோ 6:9
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்.
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; சங் 61:4சங் 57:1சங் 17:8உபா 32:11ஏசா 43:1-2சங் 35:2மத் 23:37ஆதி 15:1
அவர் இறக்கைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்;
அவருடைய சத்தியம் உனக்கு பெரிய கவசமும், கேடகமுமாகும்.
இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்பிற்கும், ஏசா 43:2யோபு 5:19-27நீதி 3:23-25சங் 3:5-6எபி 13:6சங் 112:7சங் 27:1-3நீதி 28:1
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், சங் 121:5-6எண் 16:48மத் 24:6-7யாத் 12:29-302இராஜா 19:351 கொரி 10:3-102 சாமு 24:15
மத்தியானத்தில் பாழாக்கும் வியாதிகளுக்கும் பயப்படாமல் இருப்பாய்.
உன்னுடைய பக்கத்தில் ஆயிரம்பேரும், யாத் 12:12-13ஆதி 7:23சங் 32:6எண் 14:37-38யோசு 14:10
உன்னுடைய வலதுபுறத்தில் பத்தாயிரம்பேரும் விழுந்தாலும்,
அது உன்னை அணுகாது.
உன் கண்களால்மட்டும் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கர்களுக்கு வரும் பலனைக் காண்பாய். சங் 37:34நீதி 3:25-26சங் 92:11மல்கி 1:5சங் 58:10-11ஏசா 3:11எபி 2:2
எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான தேவனாகிய யெகோவாவை சங் 71:3சங் 90:1சங் 91:1-2சங் 142:4-5சங் 146:5-6
உனக்கு அடைக்கலமாகக் கொண்டாய்.
ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, நீதி 12:21சங் 121:7உபா 7:15ரோம 8:25யோபு 5:24
வாதை உன்னுடைய கூடாரத்தை அணுகாது.
உன்னுடைய வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, லூக் 4:10-11சங் 34:7எபி 1:14நீதி 3:6மத் 4:6சங் 71:3ஏசா 31:12இராஜா 6:16-17
உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
உன்னுடைய பாதம் கல்லில் இடறாதபடிக்கு சங் 37:24நீதி 3:23லூக் 4:11ஏசா 63:9மத் 4:6ஏசா 46:3யோபு 5:23
அவர்கள் உன்னைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்.
சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, லூக் 10:19தானி 6:22மாற் 16:181 சாமு 17:37நியாயாதி 14:5-6ரோம 16:202 தீமோ 4:17அப் 28:3-6
பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.
அவன் என்னிடத்தில் வாஞ்சையாக இருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; சங் 9:10யோவா 14:23யாக் 1:12யோவா 16:27ரோம 8:28யாக் 2:5பிலி 2:9-11கலா 4:9
என்னுடைய பெயரை அவன் அறிந்திருக்கிறபடியால்
அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், எரே 33:3ஏசா 65:24சங் 50:15சங் 138:7யோவா 12:261 சாமு 2:30சங் 10:17ஏசா 41:10
நான் அவனுக்கு மறுஉத்திரவு அருளிச்செய்வேன்;
ஆபத்தில் நானே அவனோடு இருந்து, அவனைத் தப்புவித்து,
அவனைக் கனப்படுத்துவேன்.
நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, நீதி 3:2நீதி 3:16சங் 21:4சங் 50:23ஏசா 65:20-22உபா 6:2யோபு 5:26லூக் 2:30
என்னுடைய இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.