சணல் கச்சை
யெகோவா என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல் கச்சையை வாங்கி, அதை உன் இடுப்பில் கட்டிக்கொள்; அதில் தண்ணீர் படவிடாதே என்றார். எபி 1:1எரே 13:11எசேக் 4:1-5எரே 19:1எரே 27:2 நான் யெகோவாவுடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் இடுப்பில் கட்டிக்கொண்டேன். எசேக் 2:8ஏசா 20:2யோவா 15:14நீதி 3:5ஓசி 1:2-3யோவா 13:6-7 இரண்டாம்முறை யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எரே 13:8 நீ வாங்கினதும் உன் இடுப்பில் இருக்கிறதுமான கச்சையை எடுத்துக்கொண்டு எழுந்து, ஐப்பிராத்து நதிவரை போய், அதை அங்கே ஒரு கன்மலை வெடிப்பில் ஒளித்துவை என்றார். எரே 51:63-64மீகா 4:10சங் 137:1 நான் போய், யெகோவா எனக்குக் கட்டளையிட்டபடியே அதை ஐப்பிராத்து நதியின் ஓரத்தில் ஒளித்து வைத்தேன். யாத் 40:16யாத் 39:42-432 தீமோ 2:3அப் 26:19-20எபி 11:17-19எபி 11:8யோவா 2:5-8மத் 22:2-6 அநேக நாட்கள் சென்றபின்பு யெகோவா என்னை நோக்கி: நீ எழுந்து ஐப்பிராத்து நதிக்குப்போய் அங்கே ஒளித்துவைக்க நான் உனக்குக் கட்டளையிட்ட கச்சையை அவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுவா என்றார். அப்பொழுது நான் ஐப்பிராத்து நதிக்குப்போய், கச்சையை ஒளித்துவைத்த இடத்தில் தோண்டி அதை எடுத்தேன்; ஆனால், இதோ, அந்தக் கச்சை கெட்டு ஒன்றுக்கும் உதவாமல் போனது. ஏசா 64:6ரோம 3:12எசேக் 15:3-5எரே 13:10எரே 24:1-8லூக் 14:34-35பிலே 1:11சகரி 3:3-4 அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகச்செய்வேன். லேவி 26:19ஏசா 2:10-17ஏசா 23:9எரே 13:15-17நீதி 16:18செப்ப 3:111 பேது 5:5எசேக் 16:50 என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோம் என்று மறுத்து, தங்கள் இருதயத்தின் கடினத்தின்படி நடந்து, அந்நிய தெய்வங்களை வணங்கி அவர்களைப் பணிந்துகொள்ளவும் அவர்களைப் பின்பற்றுகிற இந்தப் பொல்லாத மக்கள் ஒன்றுக்கும் உதவாமற்போன இந்தக் கச்சையைப் போலாவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 16:12எரே 9:142 நாளாக 36:15-16எண் 14:11அப் 7:51எபே 4:17-19எரே 11:7-8எரே 13:7 கச்சையானது மனிதனுடைய இடுப்பில் இணைக்கப்பட்டு இருக்கிறதுபோல, நான் இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரையும் யூதாவின் குடும்பத்தார் அனைவரையும், எனக்கு மக்களாகவும், கீர்த்தியாகவும், துதியாகவும், மகிமையாகவும் இணைத்துக்கொண்டேன்; ஆனாலும் அவர்கள் கேட்காமற்போனார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். யாத் 19:5-6ஏசா 43:21எரே 33:9சங் 81:111 பேது 2:9உபா 26:18உபா 32:10-15உபா 4:7
எல்லா பாத்திரங்களும் திராட்சைரசத்தினால் நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறார் என்ற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: எல்லா பாத்திரங்களும் திராட்சைரசத்தினால் நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள். எசேக் 24:19 அப்பொழுது நீ அவர்களை நோக்கி: இதோ, இந்தத் தேசத்தின் குடிகளெல்லோரையும், தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கிற ராஜாக்களையும், ஆசாரியர்களையும், தீர்க்கதரிசிகளையும், எருசலேமின் குடிமக்கள் எல்லோரையும் நான் வெறியினால் நிரப்பி, ஏசா 51:17ஏசா 63:6சங் 60:3சங் 75:8ஆப 2:16ஏசா 49:26எரே 25:27எரே 51:7 தகப்பன்களும் பிள்ளைகளுமாகிய அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை, இரங்குவதுமில்லையென்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார். உபா 29:20சங் 2:9ஏசா 27:11ஏசா 9:20-21எரே 19:9-11எரே 21:7எரே 6:211 சாமு 14:16
சிறையிருப்பின் எச்சரிக்கை
நீங்கள் காதுகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாக இராதேயுங்கள்; யெகோவா விளம்பினார். ஏசா 28:14-22வெளி 2:29அப் 4:19-20ஆமோ 7:15ஏசா 42:23யாக் 4:10எரே 26:15யோவே 1:2 அவர் அந்தகாரத்தை வரச்செய்வதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் தடுமாறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்திற்குக் காத்திருக்கும்போது, அவர் அதை இருளும் காரிருளுமாக மாறச்செய்வதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு மகிமையைச் செலுத்துங்கள். ஏசா 59:9ஏசா 8:22ஏசா 60:2நீதி 4:19ஏசா 5:30யோசு 7:19ஆமோ 8:9-101 சாமு 6:5 நீங்கள் இதைக் கேளாமற்போனால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, யெகோவாவுடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும். மல்கி 2:2எரே 14:17எரே 9:1லூக் 19:41-42சங் 80:1ரோம 9:2-41 சாமு 15:35எசேக் 34:31 நீங்கள் ராஜாவையும் ராஜாத்தியையும் நோக்கி: கீழேவந்து உட்காருங்கள்; உங்கள் தலையின் அலங்காரமாகிய உங்கள் மகிமையின் கிரீடம் விழுந்ததென்று சொல்லுங்கள். எரே 22:262இராஜா 24:122இராஜா 24:152 நாளாக 33:122 நாளாக 33:19ஏசா 47:11 பேது 5:62 நாளாக 33:23 தெற்கிலுள்ள பட்டணங்கள் 1 அடைக்கப்பட்டன; அவைகளைத் திறப்பார் இல்லை; யூதா அனைத்தும் குடியில்லாமல்போகும்; அது எளிதாகச் சிறைப்பட்டுப்போகும். எரே 52:272இராஜா 25:21உபா 28:52எரே 39:9எரே 52:30உபா 28:15உபா 28:64-68எசேக் 20:46-47 உங்கள் கண்களை ஏறெடுத்து, வடக்கிலிருந்து வருகிறவர்களைப் பாருங்கள்; உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும், உன் மகிமையான ஆட்டுக்கிடையும் எங்கே? எரே 6:22ஆப 1:6எரே 1:14எரே 23:2அப் 20:26-29எரே 10:22எரே 13:17ஏசா 56:9-12 அவர் உன்னை விசாரிக்கும்போது என்ன சொல்லுவாய்? அவர்கள் உன்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும், தலைவருமாயிருக்க, நீ அவர்களைப் பழக்கப்படுத்தினாயே; கர்ப்பவதிக்குப் பிரசவவேதனை உண்டாகும்போது உண்டாகும் வேதனைகளைப்போல் வேதனைகள் உன்னைப் பிடிப்பதில்லையோ? ஏசா 13:8எரே 4:31ஏசா 10:3ஏசா 39:2-4எரே 38:22எரே 5:311 தெச 5:32இராஜா 16:7 இவைகள் எனக்கு சம்பவித்தது ஏனென்று நீ உன் இருதயத்தில் சொல்வாய் என்றால், உன் மிகுதியான அக்கிரமத்தினால் உன் ஆடையின் ஓரங்கள் விலக்கப்பட்டு, உன் பாதங்கள் பலவந்தஞ்செய்யப்படுகின்றன. நாகூ 3:5எரே 16:10-11எரே 5:19உபா 7:17ஓசி 2:10எரே 13:26எரே 9:2-9புலம் 1:8 எத்தியோப்பியன் தன் தோலையும் சிறுத்தை தன் புள்ளிகளையும் மாற்றமுடிமோ? மாற்றமுடியுமானால், தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மை செய்யமுடியும். எரே 2:22எரே 9:5மத் 19:24-28எரே 17:9எரே 2:30எரே 5:3ஏசா 1:5எரே 6:29-30 ஆதலால் வனாந்திரக் காற்றால் பறக்கடிக்கப்படும் துரும்பைப்போல அவர்களைச் சிதறடிப்பேன். சங் 1:4லேவி 26:33எசேக் 5:12எசேக் 5:2ஓசி 13:3உபா 28:64உபா 32:26உபா 4:27 நீ என்னை மறந்து, பொய்யை நம்பினதினால், இது உன்னுடைய தீர்மானமும், என்னால் உனக்கு அளக்கப்படும் உன்னுடைய பங்குமாயிருக்கும் என்று யெகோவா சொல்லுகிறார். யோபு 20:29சங் 9:17எரே 2:32மத் 24:51சங் 11:6ஏசா 28:15எரே 2:13எரே 7:4-8 உன் மானம் காணப்பட நான் உன் ஆடையின் ஓரங்களை உன் முகம்வரை எடுத்துப்போடுவேன். ஓசி 2:10புலம் 1:8எசேக் 16:37எசேக் 23:29எரே 13:22 உன் விபசாரங்களையும், உன் கனைப்புகளையும், வெளியில் மேடுகளின்மேல் நீ செய்த வேசித்தனத்தின் முறைகேடுகளாகிய உன் அருவருப்புகளையும் நான் கண்டேன்; எருசலேமே, உனக்கு ஐயோ, நீ சுத்தமாக்கப்படமாட்டாயா? இது இன்னும் எத்தனை காலம் வரைக்கும் நடக்கும் என்கிறார். எசேக் 24:13எசேக் 6:13ஓசி 8:5ஏசா 65:72 கொரி 12:212 கொரி 7:1எசேக் 36:37ஓசி 4:2