யோபு 12

Job 12
அத்தியாயம் 12

யோபுவின் வார்த்தைகள்

யோபு மறுமொழியாக:

“ஆம், நீங்களே ஞானமுள்ள மக்கள்; ஏசா 5:211 கொரி 4:101 கொரி 6:5யோபு 11:12யோபு 11:2யோபு 11:6யோபு 15:2யோபு 17:10

உங்களுடனே ஞானம் சாகும்.

உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; யோபு 13:2-52 கொரி 11:21-23நீதி 26:42 கொரி 11:5யோபு 26:2-3யோபு 6:6-7

உங்களைவிட நான் தாழ்ந்தவன் அல்ல;

இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?

என் நண்பர்களால் நான் நிந்திக்கப்பட்டு, யோபு 30:1யோபு 17:6யோபு 21:3சங் 91:15எரே 33:3யோபு 16:10யோபு 17:2சங் 22:7-8

தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; அவர் எனக்குத் திரும்ப பதில் அருளுவார்;

உத்தமனாகிய நீதிமான் கேலிசெய்யப்படுகிறான்.

ஆபத்திற்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; மத் 25:8நீதி 13:9சங் 17:5ஆமோ 6:1-6உபா 32:35எரே 13:16யோபு 16:4யோபு 18:5

கால் தடுமாறினவர்களுக்கு இது சம்பவிக்கும்.

திருடர்களுடைய கூடாரங்களில் செல்வமுண்டு; யோபு 9:24சங் 73:11-12யோபு 21:7-15சங் 17:14சங் 37:1சங் 37:35எரே 5:27யோபு 22:18

தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்கு பாதுகாப்புண்டு;

அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.

இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், ஏசா 1:3எரே 8:7நீதி 6:6யோபு 21:29-30

அவைகள் உனக்குப் போதிக்கும் ஆகாயத்துப் பறவைகளைக் கேள்,

அவைகள் உனக்கு அறிவிக்கும்.

அல்லது பூமியை விசாரித்துக் கேள்,

அது உனக்குப் போதிக்கும்;

சமுத்திரத்தின் மீன்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.

யெகோவாவுடைய கரம் இதைச் செய்ததென்று இவைகள் எல்லாவற்றினாலும் அறியாதவன் யார்? ஏசா 41:20எரே 27:5-6ரோம 11:361 சாமு 2:7அப் 19:35தானி 9:17தானி 5:18உபா 8:17-18

எல்லா உயிரினங்களின் உயிரும், அப் 17:28யோபு 33:4அப் 17:25யோபு 27:3எண் 16:22தானி 5:23சங் 146:3-4யோவா 3:6

மாம்சமான எல்லா மனிதரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.

வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல, யோபு 34:3எபி 5:141 பேது 2:3யோபு 6:30பிலி 1:101 கொரி 10:15

காதானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?

முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே. யோபு 32:7யோபு 15:10யோபு 8:8

அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாக இருக்கும்? யோபு 36:5யோபு 9:4நீதி 2:6-7யாக் 1:5யோபு 28:20-28தானி 2:20எபே 1:11நீதி 8:14

அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.

இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; ஏசா 22:22வெளி 3:7யோபு 11:10மல்கி 1:41 சாமு 17:461 சாமு 26:8எரே 51:58யோபு 16:11

அவர் மனிதனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.

இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோகும்; 1 இராஜா 17:1ஆமோ 5:81 இராஜா 8:35-36ஆதி 6:13ஆதி 6:17ஆதி 7:11யாக் 5:17-18எரே 14:22

அவர் அவைகளை வரவிட்டால், பூமியைத் தலைகீழாக மாற்றும்.

அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; 1 இராஜா 22:22-23எசேக் 14:9யோபு 12:13யோபு 13:9யோபு 13:7மத் 6:13

மோசம் போகிறவனும் மோசம் போக்குகிறவனும்,

அவர் கையின் கீழிருக்கிறார்கள்.

அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, ஏசா 29:141 கொரி 1:19-202 சாமு 17:232 சாமு 15:312 சாமு 17:14ஏசா 19:12-14யோபு 3:14யோபு 9:24

நியாயாதிபதிகளின் புத்தியை மயக்குகிறார்.

அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து, தானி 2:21சங் 116:162 நாளாக 33:11-14எரே 52:31-34வெளி 19:16

அவர்கள் இடுப்புகளில் துணியைக்கட்டுகிறார்.

அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக் கொண்டுபோய், ஏசா 37:36-38ஏசா 45:11 சாமு 17:45-46யோபு 24:22யோபு 34:28யோபு 35:9யோசு 10:24யோசு 10:42

பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.

அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வார்த்தையை அகற்றி, யோபு 32:9யோபு 17:4யோபு 12:24ஏசா 3:1-3யோபு 39:17நீதி 10:21நீதி 12:19நீதி 12:22

முதிர்வயதுள்ளவர்களின் ஆலோசனையைத் தள்ளிப்போடுகிறார்.

அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரச்செய்கிறார்; சங் 107:401 இராஜா 21:23-242இராஜா 9:262இராஜா 9:34-37அப் 12:23தானி 2:21-22தானி 4:32-33எபே 6:10

பலவான்களின் வார்க்கச்சையைத் தளர்ந்துபோகச் செய்கிறார்.

அவர் மறைவிடத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, தானி 2:221 கொரி 4:51 கொரி 2:10யோபு 3:5லூக் 1:79ஆமோ 5:8மத் 10:26யோபு 28:20-23

மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார்.

அவர் தேசங்களைப் பெருகவும் அழியவும் செய்கிறார்; ஏசா 9:3ஏசா 26:15ஏசா 60:22சங் 107:38யாத் 1:20யாத் 1:7ஏசா 27:6ஏசா 51:2

அவர் தேசங்களைப் பரவவும் குறுகவும் செய்கிறார்.

அவர் பூமியிலுள்ள தேசத்தின் அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, சங் 107:40யோபு 12:20ஓசி 7:11தானி 4:16தானி 4:33ஏசா 19:1ஏசா 6:9-10யோபு 17:4

அவர்களை வழியில்லாத வனாந்திரத்திலே அலையச்செய்கிறார்.

அவர்கள் வெளிச்சமில்லாத இருளிலே தடவித்திரிகிறார்கள்; யோபு 5:14சங் 107:27ஏசா 24:20ஏசா 19:141 யோவா 2:11உபா 28:29ஆதி 19:11ஏசா 59:10

வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறி அலையவைக்கிறார்.