யோபு 21

Job 21
அத்தியாயம் 21

யோபுவின் வார்த்தைகள்

யோபு மறுமொழியாக:

“என் வசனத்தைக் கவனமாகக் கேளுங்கள்; எபி 2:1ஏசா 55:2நியாயாதி 9:7யோபு 13:3-4யோபு 15:11யோபு 16:2யோபு 18:2யோபு 33:1

இது நீங்கள் என்னை ஆறுதல் செய்வதுபோல இருக்கும்.

நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்; யோபு 16:10யோபு 17:2யோபு 16:20யோபு 12:4-5யோபு 13:13யோபு 13:9யோபு 33:31-33

நான் பேசினபின்பு கேலிசெய்யுங்கள்.

நான் மனிதனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்? சங் 102:1சங் 142:2-3சங் 42:111 சாமு 1:162இராஜா 6:26-27யாத் 6:9யோபு 10:1-2யோபு 6:11

அப்படியானாலும் என் ஆவி வேதனைப்படாதிருக்குமா?

என்னைக் கவனித்துப்பாருங்கள், நியாயாதி 18:19யோபு 29:9யோபு 40:4நீதி 30:32ஆமோ 5:13யோபு 17:8யோபு 19:20-21யோபு 2:12

அப்பொழுது நீங்கள் ஆச்சரியப்பட்டு,

உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள்.

இதை நான் நினைக்கும்போது கலங்குகிறேன்; ஆப 3:16புலம் 3:19-20சங் 119:120சங் 77:3சங் 88:15

நடுக்கம் என் சரீரத்தைப் பிடிக்கும்.

துன்மார்க்கர் முதிர்வயதுவரை உயிருடனிருந்து, சங் 73:3-12யோபு 12:6எரே 12:1-3சங் 37:35ஆப 1:13சங் 17:10தானி 4:17ஆப 1:15-16

ஏன் வல்லவராகவேண்டும்?

அவர்களுடன் அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும், நீதி 17:6யோபு 18:19யோபு 20:10யோபு 20:28யோபு 5:3-4சங் 17:14

அவர்கள் பிள்ளைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாகவும் திடப்படுகிறார்கள்.

அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரமாக இருக்கும்; யோபு 9:34சங் 73:5ஏசா 57:19-21யோபு 15:21யோபு 18:11சங் 73:19

தேவனுடைய தண்டனை அவர்கள்மேல் வருகிறதில்லை.

அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது; யாத் 23:26உபா 28:11உபா 7:13-14பிரச 9:1-2லூக் 12:16-21லூக் 16:19சங் 144:13-14

அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது.

அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியே போகவிடுகிறார்கள்; சங் 107:41சங் 127:3-5

அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள்.

அவர்கள் தம்புரையும் சுரமண்டலத்தையும் எடுத்துப் பாடி, ஆமோ 6:4-6ஆதி 4:21ஏசா 5:12ஆதி 31:27ஏசா 22:13

கின்னரத்தின் ஓசைக்குச் சந்தோஷப்படுகிறார்கள்.

அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி, யோபு 36:11லூக் 12:19-20லூக் 17:28-29மத் 24:38-39சங் 73:4

ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். 1

அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், யோபு 22:17ரோம 8:72 தெச 2:10-12சங் 10:42 தீமோ 4:3-4யோவா 15:23-24யோவா 3:19-20நீதி 1:29

உம்முடைய வழிகளை அறிய விரும்பவில்லை;

சர்வவல்லமையுள்ள தேவனை நாம் ஆராதிக்க அவர் யார்? யாத் 5:2யோபு 34:9மல்கி 1:13-14ஏசா 30:11நீதி 30:9சங் 12:4ஓசி 13:6ஏசா 45:19

அவரை நோக்கி ஜெபம் செய்வதினால் நமக்கு பலன் என்ன என்கிறார்கள்.

ஆனாலும் அவர்கள் வாழ்வு அவர்கள் கையிலிருக்காது; யோபு 22:18சங் 1:1ஆதி 49:6நீதி 1:10சங் 49:6-7சங் 52:5-7பிரச 8:8யோபு 1:21

துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.

எத்தனை வேகமாக துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோகும்; யோபு 18:5-6நீதி 13:9நீதி 20:20யோபு 18:18லூக் 12:46மத் 25:8நீதி 24:20சங் 32:10

அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கும்போது,

அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும்.

அவர்கள் காற்றின் திசையிலிருக்கிற துரும்பைப்போலவும், சங் 1:4சங் 83:13யோபு 13:25சங் 35:5ஏசா 17:13ஏசா 29:5எரே 13:24யாத் 15:7

பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள்.

தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவனுடைய பிள்ளைகளுக்கு வைத்து வைக்கிறார்; யாத் 20:5எசேக் 18:19-20எசேக் 18:2ஏசா 14:21ஏசா 53:4-6எரே 31:292 கொரி 5:212 தீமோ 4:14

அவன் உணர்வடையும்விதத்தில் அதை அவனுக்குப் பலிக்கச் செய்கிறார்.

அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், ஏசா 51:17சங் 75:8வெளி 14:10எரே 25:15-16எரே 51:7யோபு 27:19லூக் 16:23சங் 60:3

சர்வவல்லமையுள்ள தேவனை கடுங்கோபத்தை குடிப்பான்.

அவனுடைய மாதங்களின் தொகை குறைக்கப்படும்போது, யோபு 14:5பிரச 2:18-19யோபு 14:21லூக் 16:27-28சங் 102:24சங் 55:23

அவனுக்குப் பிறகு அவனுடைய வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன?

உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்? ரோம 11:341 கொரி 2:16ஏசா 40:13-141 கொரி 6:32 பேது 2:4பிரச 5:8ஏசா 40:22-23ஏசா 45:9

ஒருவன் நிர்வாகத்துடனும் சுகத்துடனும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய் இறக்கிறான். யோபு 20:22-23லூக் 12:19-21சங் 49:17சங் 73:4-5

அவனுடைய உடல் கொழுப்பால் நிறைந்திருக்கிறது, நீதி 3:8யோபு 15:27சங் 17:10

அவனுடைய எலும்புகளில் ஊன் உறுதியாயிருக்கிறது.

வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்துடன் சாப்பிடாமல், எசேக் 4:16-17யோபு 7:111 இராஜா 17:122 சாமு 17:8பிரச 6:2எசேக் 12:18ஏசா 38:15-17யோபு 10:1

மனவேதனையுடன் இறக்கிறான்.

இருவரும் சமமாக மண்ணிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்; பிரச 9:2ஏசா 14:11யோபு 20:11யோபு 3:18-19யோபு 17:14யோபு 19:26யோபு 24:20சங் 49:14

புழுக்கள் அவர்களை மூடும்.

இதோ, நான் உங்கள் நினைவுகளையும், லூக் 5:22சங் 119:861 பேது 2:19யோபு 15:20-35யோபு 20:29யோபு 20:5யோபு 32:3யோபு 4:8-11

நீங்கள் என்னைப்பற்றி அநியாயமாகக் கொண்டிருக்கும் ஆலோசனைகளையும் அறிவேன்.

பிரபுவின் வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே? யோபு 20:7யோபு 8:22ஆப 2:9-11யோபு 1:3யோபு 31:37எண் 16:26-34சங் 37:36சங் 52:5-6

என்று சொல்லுகிறீர்கள்.

வழியிலே நடந்து போகிறவர்களை நீங்கள் கேட்கவில்லையா, சங் 129:8

அவர்கள் சொல்லும் குறிப்புகளை நீங்கள் அறியவில்லையா?

துன்மார்க்கன் ஆபத்து நாளுக்காக வைக்கப்படுகிறான்; நீதி 16:42 பேது 2:9-172 பேது 3:7யோபு 20:28ரோம 2:5யூதா 1:13நாகூ 1:2நீதி 11:4

அவனுடைய கோபாக்கினையின் நாளுக்காக கொண்டுவரப்படுகிறான்.

அவனுடைய வழியை அவனுடைய முகத்திற்கு முன்பாக எடுத்துக் காட்டுகிறவன் யார்? உபா 7:10கலா 2:11ரோம 12:191 இராஜா 21:19-242 சாமு 12:7-12அப் 24:25ஏசா 59:13யாக் 2:13

அவனுடைய செய்கைக்குத் தக்க பலனை அவனுக்கு ஈடுகட்டுகிறவன் யார்?

அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; லூக் 16:22எசேக் 32:21-32சங் 49:14

அவனுடைய கல்லறை காக்கப்பட்டிருக்கும்.

பள்ளத்தாக்கின் புழுதி மண்கள் அவனுக்கு இன்பமாயிருக்கும்; எபி 9:27யோபு 24:24யோபு 30:23பிரச 1:4பிரச 12:7பிரச 8:8ஆதி 3:19யோபு 17:16

அவனுக்கு முன்னாக அனேக மக்கள் போனதுபோல,

அவனுக்குப் பின்னாக ஒவ்வொருவரும் அவ்விடத்திற்குச் செல்லுவார்கள்.

நீங்கள் வீணாக எனக்கு ஆறுதலை சொல்லுகிறது என்ன? யோபு 16:2யோபு 13:4யோபு 32:3யோபு 42:7

உங்கள் மறுமொழிகளில் முழுவதும் பொய் இருக்கிறது” என்றான்.