விவாகரத்தைக்குறித்து இயேசுவின் போதனை
இயேசு அந்த இடத்திலிருந்து, யோர்தான் நதிக்கு அக்கரையில் உள்ள தேசத்தின்வழியாக யூதேயாவின் எல்லைகளில் வந்தார். மக்கள் மீண்டும் அவரிடம் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மீண்டும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார். யோவா 10:40மத் 4:23மாற் 4:2மாற் 6:34எரே 32:33யோவா 11:7மாற் 2:13மாற் 6:6 அப்பொழுது பரிசேயர்கள், அவரைச் சோதிக்கவேண்டும் என்று, அவரிடம் வந்து: கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது நியாயமா? என்று கேட்டார்கள். 1 கொரி 7:10-11யோவா 8:6லூக் 11:53-54மத் 23:131 கொரி 10:9யோவா 11:47யோவா 11:57யோவா 7:32 அவர் மறுமொழியாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார். கலா 4:21ஏசா 8:20யோவா 5:39லூக் 10:25 அதற்கு அவர்கள் விவாகரத்திற்குரிய விடுதலைப்பத்திரத்தை எழுதிக்கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனுமதி கொடுத்திருக்கிறார் என்றார்கள். உபா 24:1-4மத் 5:31-32மத் 19:7ஏசா 50:1எரே 3:1மத் 1:19 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுடைய இருதயக் கடினத்தினாலே இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான். மத் 19:8அப் 7:51நெகே 9:16-17எபி 3:7-10நெகே 9:26உபா 31:27உபா 9:6 ஆனாலும், ஆரம்பத்திலே மனிதர்களைப் படைத்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். ஆதி 1:27ஆதி 5:2ஆதி 1:1ஆதி 2:20-232 பேது 3:4மல்கி 2:14-16மாற் 13:19 இதனால் கணவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்; ஆதி 2:24மத் 19:5-6எபே 5:31 அவர்கள் இருவர்களும் ஒரே மாம்சமாக இருப்பார்கள்; இவ்விதமாக அவர்கள் இருவர்களாக இல்லாமல் ஒரே மாம்சமாக இருக்கிறார்கள். எபே 5:28ஆதி 2:241 கொரி 6:16 எனவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார். ரோம 7:1-31 நாளாக 7:10-13 பின்பு வீட்டில் இருக்கும்போது அவருடைய சீடர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மீண்டும் அவரிடம் விசாரித்தார்கள். மாற் 9:33மாற் 4:10மாற் 9:28 அப்பொழுது அவர்: யாராவது தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறவனாக இருப்பான். 1 கொரி 7:10-11மத் 19:9மத் 5:31-32ரோம 7:31 கொரி 7:4லூக் 16:18எபி 13:4 மனைவியும் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு, வேறொருவனை திருமணம்செய்தால், விபசாரம் செய்கிறவளாக இருப்பாள் என்றார். 1 கொரி 7:111 கொரி 7:13
சிறுகுழந்தைகளும் இயேசுவும்
அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடுவதற்காக அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள். மத் 19:13-15லூக் 18:15-17உபா 31:12-13யாத் 10:9-11யோவே 2:16மாற் 10:48மாற் 9:38 இயேசு அதைப் பார்த்து கோபப்பட்டு: சிறு பிள்ளைகள் என்னிடம் வருகிறதற்கு இடம்கொடுங்கள்; அவர்களைத் தடைப்பண்ணவேண்டாம்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. மத் 19:14மத் 18:4மத் 18:10சங் 131:1-21 பேது 2:2லூக் 18:15-162 தீமோ 3:151 கொரி 14:20 யாராவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவன் அதில் பிரவேசிப்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, மத் 18:3லூக் 18:17யோவா 3:3-6 அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கரங்களை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். ஏசா 40:11மாற் 9:36உபா 28:3ஆதி 48:14-16யோவா 21:15-17லூக் 2:28-34லூக் 24:50-51
நித்தியஜீவனை சுதந்தரிப்பது எப்படி?
பின்பு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். மத் 19:16-30லூக் 18:18-30ரோம 2:7யோவா 6:27-28லூக் 10:25ரோம 10:2-4அப் 16:30அப் 2:37 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வது எதினால்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லை. லூக் 18:19மத் 19:171 யோவா 4:16ரோம 3:121 சாமு 2:21 யோவா 4:8யாக் 1:17சங் 119:68 விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, திருடாதே, பொய்ச்சாட்சி சொல்லாதே, ஏமாற்றாதே, உன் தகப்பனையும், தாயையும் கனம்பண்ணு என்கிற கட்டளைகளைப்பற்றி தெரிந்திருக்கிறாயே என்றார். யாத் 20:12-17ரோம 13:9யாக் 2:11லூக் 18:20மத் 19:17-191 கொரி 6:7-91 தெச 4:6உபா 5:16-24 அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறிய வயதிலிருந்து கடைபிடித்து வருகிறேன் என்றான். 2 தீமோ 3:5எசேக் 33:31-32பிலி 3:6லூக் 18:11-12மத் 19:20ரோம 7:9லூக் 10:29மல்கி 3:8 இயேசு அவனைப் பார்த்து, அவனிடம் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளை எல்லாவற்றையும் விற்று, ஏழைகளுக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார். மத் 6:19-21வெளி 2:41 தீமோ 6:17-19லூக் 18:22லூக் 10:421 பேது 1:4-5அப் 2:45யாக் 2:10 அவனுக்கு அதிக சொத்துக்கள் இருந்ததால், இந்த வார்த்தையைக் கேட்டு, சோர்ந்து, துக்கத்தோடு போய்விட்டான். 1 யோவா 2:15-161 தீமோ 6:9-10லூக் 12:15எபே 5:52 தீமோ 4:10எசேக் 33:31மத் 13:22மத் 19:22 அப்பொழுது இயேசு சுற்றிலும்பார்த்து, தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்றார். 1 கொரி 1:26யாக் 2:5லூக் 18:242 பேது 1:11யோவா 3:5மத் 19:23-26மாற் 3:5யாக் 4:4 சீடர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, செல்வத்தின்மேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது! யாக் 5:1-3நீதி 11:281 தீமோ 6:17சங் 52:7வெளி 3:17நீதி 18:11லூக் 12:16-21லூக் 16:14 செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார். மத் 19:24-25லூக் 18:25மத் 23:24எரே 13:23மத் 7:3-5 அவர்கள் அதிகமாக ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படமுடியும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். அப் 16:31ரோம 10:9-132 கொரி 11:23மாற் 6:51மாற் 7:37லூக் 13:23லூக் 18:26 இயேசு அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாது, தேவனால் இது முடியும்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார். எரே 32:27மத் 19:26யோபு 42:2எரே 32:17ஆதி 18:13-14லூக் 1:37லூக் 18:27எண் 11:21-23 அப்பொழுது பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றிவந்தோமே, என்று சொல்லத்தொடங்கினான். மத் 19:27-30லூக் 14:33லூக் 18:28-30மாற் 1:16-20பிலி 3:7-9மத் 4:22மத் 4:20 அதற்கு இயேசு மறுமொழியாக: எனக்காகவும், நற்செய்திப் பணிக்காகவும், வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, குழந்தைகளையாவது, நிலங்களையாவது விட்டு வந்தவன் எவனும், 1 கொரி 9:23மத் 5:10-11எபி 11:24-26மாற் 8:35வெளி 2:3ஆதி 12:1-3மத் 10:18லூக் 22:28-30 இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். பிலி 3:8லூக் 18:302 கொரி 6:10யாக் 1:12நீதி 3:9-10மத் 5:11-121 தீமோ 6:6மல்கி 3:10 ஆனாலும் முந்தினவர்கள் அநேகர் பிந்தினவர்களாகவும், பிந்தினவர்கள் அநேகர் முந்தினவர்களாகவும் இருப்பார்கள் என்றார். மத் 19:30லூக் 13:30மத் 20:16ரோம 9:30-33லூக் 18:11-14அப் 13:46-48மத் 21:31மத் 8:11-12
இயேசு தன்னுடைய மரணத்தை முன்னறிவித்தல்
பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்பொழுது, இயேசு அவர்களுக்கு முன்பே நடந்துபோனார்; அவர்கள் ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னால் பயத்தோடு போனார்கள். அப்பொழுது அவர் பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, தமக்கு நடக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மீண்டும் சொல்லத்தொடங்கினார்: மத் 20:17-19லூக் 18:31-34லூக் 9:51மாற் 4:34யோவா 11:16யோவா 11:8லூக் 10:23மத் 11:25 இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனிதகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபண்டிதரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரணதண்டனைக்குள்ளாகத் தீர்த்து, யூதரல்லாதோர்களிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். மத் 20:17-19மத் 27:2அப் 13:27அப் 3:13-14மத் 16:21மாற் 8:31யாக் 5:6யோவா 18:28 அவர்கள் அவரைப் பரிகாசம்பண்ணி, அவரை சாட்டையினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார். மத் 16:21மத் 26:67மாற் 14:65லூக் 22:63-65லூக் 23:11லூக் 23:35-39மாற் 15:17-20மாற் 15:29-31
செபெதேயுவின் குமாரர்களின் வேண்டுதல்
அப்பொழுது செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் அவரிடம் வந்து: போதகரே, நாங்கள் எதைக்கேட்டாலும் அதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்கள். மத் 20:20-282 சாமு 14:4-111 இராஜா 2:161 இராஜா 2:20மாற் 1:19-20மாற் 14:33மாற் 5:37மாற் 9:2 அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார். 1 இராஜா 3:5-15யோவா 15:7மாற் 10:51 அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள். மத் 19:28லூக் 24:26மாற் 16:19சங் 110:11 இராஜா 22:191 பேது 1:11மத் 25:31மாற் 8:38 இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்பது என்ன என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் முடியுமா என்றார். லூக் 12:50மத் 20:21-22யாக் 4:3யோவா 18:11சங் 75:81 இராஜா 2:22ஏசா 51:22லூக் 22:42 அதற்கு அவர்கள்: முடியும் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். அப் 12:2வெளி 1:9யோவா 17:14கொலோ 1:24யோவா 13:37யோவா 15:20மத் 10:25மாற் 14:31 ஆனாலும் என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி யாருக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களைத்தவிர, மற்றவர்களுக்கு அதை அருளுவது என் காரியமல்ல என்றார். மத் 20:23யோவா 17:24மத் 25:34எபி 11:16யோவா 17:2 மற்ற பத்துப்பேரும் அதைக்கேட்டு, யாக்கோபின்மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள். மத் 20:24பிலி 2:3நீதி 13:10ரோம 12:10யாக் 4:5லூக் 22:24மாற் 9:33-36 அப்பொழுது, இயேசு அவர்களை அருகில் வரச்சொல்லி: யூதரல்லாதவர்களுக்கு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் அவர்களை ஆணவத்தோடு ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 1 பேது 5:3லூக் 22:25மத் 20:25 உங்களுக்குள்ளே அப்படி இருக்கக்கூடாது; உங்களில் யாராவது பெரியவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாக இருக்கவேண்டும். மத் 23:8-12லூக் 14:11மாற் 9:35மத் 20:26-27லூக் 9:481 பேது 5:5-6கலா 5:131 கொரி 9:19-23 உங்களில் யாராவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் எல்லோருக்கும் ஊழியக்காரனாக இருக்கவேண்டும். அப்படியே, மனிதகுமாரனும் மற்றவர்களிடம் ஊழியம் பெற வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். மத் 20:28பிலி 2:5-82 கொரி 8:9தீத் 2:14யோவா 13:14யோவா 10:15எபி 5:8லூக் 22:26-27
பர்திமேயு என்ற குருடனுக்குப் பார்வையளித்தல்
பின்பு அவர்கள் எரிகோவிற்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீடர்களும் மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் பார்வையற்ற மகனாகிய பர்திமேயு, வழியருகில் உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். லூக் 18:35மத் 20:29-34யோவா 9:8லூக் 16:22அப் 3:2-3லூக் 16:20 அவன் நசரேயனாகிய இயேசு வருகிறார் என்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று சத்தமிட்டு கூப்பிடத் தொடங்கினான். மாற் 1:24மத் 9:27மத் 15:22வெளி 22:16அப் 13:22-23லூக் 18:36-37மத் 26:71அப் 6:14 அவனை அமைதியாக இருக்கச்சொல்லி மக்கள் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்பைவிட அதிகமாக சத்தமிட்டு கூப்பிட்டான். எரே 29:13மாற் 7:26-29ஆதி 32:24-28எபி 5:7லூக் 11:5-10லூக் 18:1-8லூக் 18:39மத் 15:23-28 இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தப் பார்வையற்றவனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள். லூக் 18:40மத் 20:32-34யோவா 11:28சங் 145:8சங் 86:15எபி 2:17எபி 4:15 உடனே அவன் தன் மேலாடையை கழற்றிவிட்டு, எழுந்து, இயேசுவிடம் வந்தான். பிலி 3:7-9எபி 12:1 இயேசு அவனைப் பார்த்து: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறாய் என்றார். அதற்கு அந்தப் பார்வையற்றவன்: ஆண்டவரே, நான் பார்வைபெறவேண்டும் என்றான். லூக் 18:41-43மாற் 10:362 நாளாக 1:7மத் 7:7பிலி 4:6மத் 6:8மத் 23:7யோவா 20:16 இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வைபெற்று, வழியிலே இயேசுவைப் பின்பற்றி அவர்பின்னே சென்றான். மத் 9:22அப் 26:18லூக் 7:50மாற் 5:34மாற் 8:25ஏசா 42:16-18யோவா 9:32லூக் 8:2-3