மத்தேயு 14

Matthew 14
அத்தியாயம் 14

யோவான்ஸ்நானனின் தலை வெட்டப்படுதல்

அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் புகழைக் கேள்விப்பட்டு, லூக் 3:1அப் 4:27லூக் 23:15லூக் 9:7-9மாற் 6:14-29மாற் 8:15லூக் 23:7-12அப் 12:1 தன் வேலைக்காரர்களைப் பார்த்து: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தான்; ஆகவே, இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான். யோவா 10:41மத் 16:14மாற் 8:28மத் 11:11 ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டி சிறைச்சாலையில் வைத்திருந்தான். மாற் 6:17லூக் 3:19-20மத் 4:12லூக் 13:1மத் 11:2மாற் 6:19மாற் 6:22யோவா 3:23-24 ஏனென்றால்: நீர் அவளை உன் மனைவியாக வைத்துக்கொள்வது நியாயமில்லை என்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான். லேவி 20:21லேவி 18:16மாற் 6:181 இராஜா 21:192 நாளாக 26:18-192 சாமு 12:7உபா 25:5-6ஏசா 8:20 ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், மக்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான். மத் 11:9மத் 21:26மத் 21:32அப் 4:21அப் 5:26லூக் 20:6மாற் 11:30-32மாற் 14:1-2 அப்படியிருக்க, ஏரோதின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் மகள் அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள். மாற் 6:21-23ஆதி 40:20ஓசி 1:5-6எஸ்த 1:2-12மத் 22:24மாற் 6:17தானி 5:1-4எஸ்த 2:18 அதினிமித்தம் ஏரோது: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். எஸ்த 5:6எஸ்த 5:3எஸ்த 7:2 அவள் தன் தாயினால் சொல்லப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தட்டிலே வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள். மாற் 6:24நீதி 29:101 இராஜா 18:131 இராஜா 18:41 இராஜா 19:22 நாளாக 22:2-32இராஜா 11:1நீதி 1:16 ராஜா துக்கமடைந்தான். ஆனாலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக்கட்டளையிட்டு, யோவா 19:12-161 சாமு 14:241 சாமு 14:281 சாமு 14:39-451 சாமு 25:221 சாமு 25:32-341 சாமு 28:102இராஜா 6:31-33 ஆள் அனுப்பி, சிறைச்சாலையிலே யோவானின் தலையை வெட்டச்செய்தான். லூக் 9:9மத் 17:12வெளி 11:72 நாளாக 36:16எரே 2:30மத் 21:35-36மத் 22:3-6மத் 23:34-36 அவனுடைய தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள். வெளி 16:6எசேக் 16:3-4எசேக் 19:2-3எசேக் 35:6ஆதி 49:7எரே 22:17நீதி 27:4நீதி 29:10 அவனுடைய சீடர்கள் வந்து சரீரத்தை எடுத்து அடக்கம்செய்து, பின்புபோய் அந்தச் செய்தியை இயேசுவிற்கு அறிவித்தார்கள். அப் 8:2மத் 27:58-61

இயேசு ஐந்தாயிரம்பேரைப் போஷித்தல்

இயேசு அதைக்கேட்டு, அந்த இடத்தைவிட்டு, படகில் ஏறி, வனாந்திரமான ஒரு இடத்திற்குத் தனியே போனார். மக்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாக அவரிடத்திற்குப் போனார்கள். லூக் 9:10-17மத் 14:1-2யோவா 6:1-15மத் 12:15மாற் 6:30-44மத் 10:23மத் 15:32-38 இயேசு வந்து, திரளான மக்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியுள்ளவர்களைச் சுகமாக்கினார். எபி 4:15எபி 2:17மத் 9:36யோவா 11:33-35மத் 15:32-39எபி 5:2லூக் 19:41லூக் 7:13 மாலைநேரமானபோது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்திரமான இடம், நேரமுமானது; மக்கள் கிராமங்களுக்குப்போய்த் தங்களுக்கு உணவு பதார்த்தங்களை வாங்கும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். மத் 15:23மாற் 8:3லூக் 9:12மாற் 6:35-36 இயேசு அவர்களைப் பார்த்து: அவர்கள் போகவேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார். 2இராஜா 4:42-442 கொரி 8:2-3பிரச 11:2யோவா 13:29நீதி 11:24யோபு 31:16-17லூக் 3:112 கொரி 9:7-8 அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள். யோவா 6:5-9லூக் 9:13மத் 15:33-34மாற் 6:37-38மத் 16:9மாற் 8:4-5சங் 78:19-20எண் 11:21-23 அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். அப்பொழுது, அவர் மக்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். 1 சாமு 9:13மாற் 8:6-71 தீமோ 4:4-5லூக் 24:30அப் 27:35மாற் 6:411 கொரி 11:24மத் 15:35-36 எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைகள்நிறைய எடுத்தார்கள். யாத் 16:12மத் 16:8-101 இராஜா 17:12-16யாத் 16:8மாற் 6:42-442இராஜா 4:1-72இராஜா 4:43-44யோவா 6:11-14 பெண்களும் பிள்ளைகளும்தவிர, சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள். பிலி 4:192 கொரி 9:8-11அப் 4:4அப் 4:34யோவா 6:10

இயேசு கடலின்மீது நடத்தல்

இயேசு மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். மாற் 6:45-51யோவா 6:15-21மத் 15:39மத் 13:36 அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, தனித்து ஜெபம்செய்ய ஒரு மலையின்மேல் ஏறி, மாலைநேரமானபோது அங்கே தனிமையாக இருந்தார். லூக் 6:12மாற் 6:46யோவா 6:15-17மத் 26:36அப் 6:4மத் 6:6லூக் 9:28 அதற்குள்ளாகப் படகு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் தள்ளாடியது. மாற் 6:48யோவா 6:18மத் 8:24ஏசா 54:11 அதிகாலையிலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். யோபு 9:8யோவா 6:19மாற் 6:48மத் 24:43சங் 93:3-4லூக் 12:38சங் 104:3வெளி 10:2 அவர் கடலின்மேல் நடக்கிறதை சீடர்கள் கண்டு, கலக்கமடைந்து, பிசாசு என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். வெளி 1:17லூக் 1:11-12மாற் 6:49-50தானி 10:6-121 சாமு 28:12-14அப் 12:15யோபு 4:14-16லூக் 24:37 உடனே இயேசு அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார். யோவா 16:33அப் 23:11ஏசா 41:10வெளி 1:17-18ஏசா 41:4யோவா 14:1-3ஏசா 51:12யோவா 6:20 பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே! நீரேயானால் நான் தண்ணீரின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். யோவா 6:68ரோம 12:3மத் 26:33-35யோவா 13:36-38மத் 19:27லூக் 22:31-34லூக் 22:49-50மாற் 14:31 அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படகைவிட்டு இறங்கி, இயேசுவினிடத்தில் போகத் தண்ணீரின்மேல் நடந்தான். பிலி 4:13மாற் 9:23அப் 3:16லூக் 17:6மாற் 11:22-23மத் 21:21ரோம 4:19மத் 17:20 காற்று பலமாக இருக்கிறதைக் கண்டு, பயந்து, மூழ்கும்போது: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். புலம் 3:54-572 தீமோ 4:16-17மாற் 14:38மத் 8:24-25யோனா 2:2-7லூக் 22:54-61சங் 69:1-2சங் 107:27-30 உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: விசுவாசக் குறைவுள்ளவனே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். யாக் 1:6-8சங் 138:7ஆதி 22:14லூக் 22:31-32மத் 17:20மத் 8:26மாற் 5:41ஏசா 63:12 அவர்கள் படகில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. சங் 107:29-30மாற் 4:41யோவா 6:21மாற் 6:51 அப்பொழுது, படகில் உள்ளவர்கள் வந்து: உண்மையாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள். யோவா 11:27சங் 2:7ரோம 1:4யோவா 1:49மாற் 1:1யோவா 6:69மத் 16:16மத் 28:17 பின்பு, அவர்கள் கடலைக்கடந்து, கெனேசரேத்து நாட்டிற்கு வந்தார்கள். மாற் 6:53-56லூக் 5:1யோவா 6:24-25 அந்த இடத்து மனிதர்கள் அவரை யார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, வியாதியுள்ளவர்கள் எல்லோரையும் அவரிடத்தில் கொண்டுவந்து, மத் 4:24-25மாற் 1:28-34மாற் 2:1-12மாற் 3:8-10மாற் 6:55 அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட எல்லோரும் குணமானார்கள். லூக் 6:19அப் 19:11-12அப் 3:16யாத் 28:33-43மத் 9:20-21மாற் 3:10அப் 4:14-16அப் 4:9-10