சீடர்களை ஊழியத்திற்கு அனுப்புதல்
அவர் தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் வரவழைத்து, எல்லாப் பிசாசுகளைத் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, யோவா 14:12லூக் 10:19மத் 16:19அப் 4:30மாற் 16:17-18மாற் 6:7-13அப் 1:8மத் 10:1-5 தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், நோயாளிகளை குணமாக்கவும் அவர்களை அனுப்பினார். மத் 10:7-8லூக் 10:9மத் 3:2லூக் 9:11மத் 13:19மத் 24:14மாற் 6:12லூக் 10:11 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: பயணத்தின்போது தடியையோ பையையோ அப்பத்தையோ பணத்தையோ எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு உடைகளைக் கொண்டுபோகவும் வேண்டாம் என்றார். லூக் 22:35சங் 37:3லூக் 10:4-12மத் 10:9-142 தீமோ 2:4லூக் 12:22லூக் 3:11மாற் 6:8-11 எந்த வீட்டிற்கு சென்றாலும், அங்கிருந்து புறப்படும்வரை அங்கே தங்கியிருங்கள். மத் 10:11மாற் 6:10லூக் 10:5-8அப் 16:15 உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாததற்கு சாட்சியாக உங்களுடைய கால்களில் படிந்துள்ள தூசியை உதறிப்போடுங்கள் என்றார். அப் 13:51அப் 18:6மத் 10:14-15மாற் 6:11லூக் 10:16லூக் 10:10-12லூக் 9:53-56லூக் 9:48 புறப்பட்டுப்போய், கிராமம் கிராமமாகச் சென்று நற்செய்தியைப் பிரசங்கித்து, நோயாளிகளைக் குணமாக்கினார்கள். அப் 4:30அப் 5:15மாற் 16:20மாற் 6:12-13லூக் 9:1-2 அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்ட எல்லாவற்றையும் கேள்விப்பட்டதுமட்டுமல்லாமல்; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தான் என்றும், மத் 14:1-12மாற் 6:14-28யோபு 18:11-12லூக் 3:1லூக் 9:19சங் 73:19ஏசா 22:5மீகா 7:4 சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து: யோவா 1:21லூக் 9:19மத் 17:10மாற் 6:15மாற் 8:28 யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்க விரும்பினான். லூக் 23:8லூக் 13:31-32
ஐந்தாயிரம்பேரை போஷித்தல்
அப்போஸ்தலர்கள் திரும்பிவந்து, தாங்கள் செய்த எல்லாவற்றையும் அவருக்கு விளக்கிச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனிமையாக இருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தின் வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார். மத் 11:21எபி 13:17மத் 14:13-21யோவா 1:44யோவா 6:5-13லூக் 10:17லூக் 9:10-17மாற் 2:7 மக்கள் அதை அறிந்து, அவர் பின்னால் போனார்கள்; அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய இராஜ்யத்தைக்குறித்து அவர்களோடு பேசி, சுகமடையவேண்டும் என்றிருந்தவர்களைச் சுகப்படுத்தினார். 2 தீமோ 4:2அப் 28:31எபி 4:16ஏசா 61:1யோவா 4:34யோவா 6:37லூக் 1:53லூக் 5:31 மாலைநேரத்தில், பன்னிரண்டுபேரும், அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்திரமாக இருப்பதினால், மக்கள், சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும்போய்த் தங்குவதற்கும், உணவுப்பொருள்களை வாங்கிக்கொள்வதற்கும் அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். ஓசி 13:5யோவா 6:1யோவா 6:5-15மத் 15:23மாற் 6:35-44எசேக் 34:25மத் 14:15-21மத் 15:32 இயேசு, அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்கு உணவைக் கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்கள்மட்டுமே இருக்கிறது, இந்த மக்கள் எல்லோருக்கும் உணவு கொடுக்கவேண்டுமானால், நாங்கள்போய் வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்றார்கள். நீதி 11:24-252இராஜா 4:42-43யோவா 6:5-9மாற் 6:37-38மத் 14:16-17எண் 11:21-23 அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படிச் சொல்லுங்கள் என்று தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார். 1 கொரி 14:40மாற் 6:39-40மாற் 8:6 அவர்கள் அப்படியே எல்லோரையும் உட்காரும்படிச் செய்தார்கள். அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, மக்களுக்கு பகிர்ந்துகொடுக்கும்படி சீடர்களிடத்தில் கொடுத்தார். மத் 14:191 தீமோ 4:4-5லூக் 24:30மத் 15:36அப் 27:35யோவா 6:11யோவா 6:23லூக் 22:19 எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான உணவுப்பொருட்கள் பன்னிரண்டு கூடைகள்நிறைய எடுக்கப்பட்டது. 2இராஜா 4:44யோவா 6:11-13மத் 14:20-21மத் 15:37-38மத் 16:9-10மாற் 6:42-44மாற் 8:19-20மாற் 8:8-9
பேதுருவின் விசுவாச அறிக்கை
பின்பு அவர் தமது சீடர்களோடு தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போது, அவர்களை நோக்கி: மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். மத் 16:13-16மாற் 8:27-30லூக் 11:1மத் 26:36லூக் 22:39-41 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். யோவா 1:21லூக் 9:7-8மல்கி 4:5மத் 14:2மாற் 6:15யோவா 1:25யோவா 7:40யோவா 9:17 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான். மத் 16:15-17யோவா 1:49யோவா 20:31யோவா 4:29யோவா 4:42யோவா 6:68-69யோவா 7:41அப் 17:3 அப்பொழுது அவர், நீங்கள் இதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று உறுதியாகக் கட்டளையிட்டார். மத் 16:20மத் 17:9மாற் 8:30-31 மேலும் மனிதகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபண்டிதர்களாலும் ஆகாதவன் என்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார். ஏசா 53:1-12லூக் 24:7லூக் 18:31-34லூக் 9:441 பேது 1:11அப் 4:25-28மாற் 10:33-34மாற் 9:31 பின்பு அவர் எல்லோரையும் நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால் அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும். மத் 10:38-39லூக் 14:26-27ரோம 8:13யோவா 12:25-26மாற் 8:34-38கொலோ 3:5தீத் 2:122 தீமோ 3:12 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; எனக்காகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். லூக் 17:33யோவா 12:25அப் 20:23-24வெளி 2:10வெளி 12:11எபி 11:35 மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தானே கெடுத்து நஷ்டப்படுத்திக்கொண்டால் அவனுக்கு லாபம் என்ன? மத் 16:26மாற் 8:36லூக் 12:19-21சங் 49:6-8லூக் 4:5-72 பேது 2:15-171 கொரி 9:27அப் 1:25 என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனிதகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார். மத் 10:32-332 தீமோ 2:12லூக் 12:8-9ரோம 1:16மத் 16:27மாற் 8:38வெளி 21:8மத் 25:31 இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணும் முன்னே, மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று நிச்சயமாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத் 16:28மாற் 9:1யோவா 21:22-23லூக் 2:26எபி 2:9யோவா 8:51-52லூக் 22:18மாற் 14:25
இயேசு மருரூபமாகுதல்
இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குப்பின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார். லூக் 6:12மத் 17:1-13மத் 26:37-39மாற் 14:33-36மாற் 9:2-13சங் 109:4எபி 5:7லூக் 8:51 அவர் ஜெபம்பண்ணும்போது அவருடைய முகத்தின் ரூபம் மாறியது, அவருடைய ஆடை வெண்மையாகப் பிரகாசித்தது. மத் 17:2மாற் 9:2-32 பேது 1:16-18யாத் 34:29-35ஏசா 33:17ஏசா 53:2பிலி 3:7-8வெளி 20:11 அன்றியும் மோசே எலியா ஆகிய இரண்டுபேரும் மகிமையோடு காணப்பட்டு, அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள், 2 கொரி 3:7-11எபி 3:3-6யோவா 1:17லூக் 1:17லூக் 24:27லூக் 24:44லூக் 9:19மத் 17:3-4 அவர்கள் எருசலேமில் நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். பிலி 3:211 பேது 1:11-121 பேது 5:102 பேது 1:15கொலோ 3:4யோவா 1:29லூக் 13:32-34லூக் 9:22 பேதுருவும் அவனோடிருந்தவர்களும் தூக்கமயக்கமாக இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடு நின்ற அவ்விரண்டு பேரையும் கண்டார்கள். தானி 8:18யோவா 1:14தானி 10:9மத் 26:40-43யாத் 33:18-23ஏசா 60:1-3ஏசா 60:19யோவா 17:24 அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து போகும்போது, பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது என்னவென்று தெரியாமல் சொன்னான். மாற் 9:5-6மாற் 10:382 கொரி 4:6யோவா 14:8லூக் 5:5சங் 27:4சங் 4:6-7சங் 63:2-5 இப்படி அவன் பேசும்போது, ஒரு மேகம் வந்து அவர்களை மூடினது; எனவே அவருடைய சீடர்கள் பயந்தார்கள். யாத் 40:34-38மத் 17:5-7யாத் 14:19-20ஏசா 19:1நியாயாதி 13:22நியாயாதி 6:22மாற் 9:7-8சங் 18:9-11 அப்பொழுது: இவர் நான் தெரிந்துகொண்ட என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. லூக் 3:22அப் 3:22-23மத் 3:17உபா 18:18-19எபி 3:15எபி 5:9ஏசா 42:1யோவா 3:35-36 அந்தச் சத்தம் உண்டானபோது இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் ஒருவருக்கும் சொல்லாமல் இருந்தார்கள். மத் 17:9மாற் 9:9-10பிரச 3:7மாற் 9:6
அசுத்தஆவி பிடித்திருந்தவன் சுகம்பெறுதல்
மறுநாளில் அவர்கள் மலையிலிருந்து இறங்கினபோது, மக்கள்கூட்டம் அவரை சந்திக்க அவரிடம் வந்தார்கள். மத் 17:14-20மாற் 9:14-29 அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனுக்கு உதவி செய்யவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாக இருக்கிறான். யோவா 4:47சகரி 12:10லூக் 7:12லூக் 8:41-42மத் 15:22ஆதி 44:20 சில நேரங்களில், ஒரு அசுத்தஆவி அவனை அலைக்கழிப்பதினால், அவன் அலறி வாயில் நுரைதள்ளுகிறான். அது அவனைக் காயப்படுத்தி, அதிக போராட்டத்திற்குப்பின்பு அவனைவிட்டு நீங்குகிறது. மாற் 9:20லூக் 4:35லூக் 8:29மாற் 5:4-5மாற் 9:261 பேது 5:8யோவா 8:44வெளி 9:11 அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களை வேண்டிக்கொண்டேன், அவர்களால் முடியவில்லை என்றான். லூக் 9:1அப் 19:13-162இராஜா 4:31லூக் 10:17-19மத் 17:20 இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடான வம்சமே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார். உபா 32:5யோவா 14:9யோவா 20:27மத் 16:4மத் 17:17மாற் 9:19ரோம 2:42இராஜா 5:8 அவன் அருகில் வரும்போது, பிசாசு அவனைக் கீழேத் தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார். 2இராஜா 4:36லூக் 7:15லூக் 9:39மாற் 9:20மாற் 9:26-27வெளி 12:121 இராஜா 17:23அப் 9:41 அப்பொழுது எல்லோரும் தேவனுடைய மகத்துவத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு செய்த எல்லாவற்றையும்குறித்து அனைவரும் ஆச்சரியப்படும்போது அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: லூக் 9:43-45லூக் 5:26அப் 3:10-13லூக் 8:25மத் 17:22மாற் 9:30-322 பேது 1:16லூக் 4:36 நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாகக் கேளுங்கள்; மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார். அப் 2:23லூக் 9:22எபி 2:1லூக் 2:19மாற் 9:311 தெச 3:3-42 சாமு 24:14எபி 12:2-5 அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை புரிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்கு மறைபொருளாக இருந்தது; அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் அவர்கள் பயந்தார்கள். லூக் 18:34லூக் 2:50யோவா 12:16மாற் 9:322 கொரி 3:14-16யோவா 16:17-18மாற் 9:10யோவா 12:34
யார் பெரியவனாக இருப்பான்?
பின்பு தங்களுக்குள் யார் பெரியவனாக இருப்பான் என்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டானது. மத் 18:1-5மத் 20:20-22மாற் 9:33-373 யோவா 1:9பிலி 2:3கலா 5:20-21கலா 5:25-26லூக் 14:7-11 இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தம் அருகில் நிறுத்தி, யோவா 16:30லூக் 5:22சங் 139:231 கொரி 14:20எபி 4:13யோவா 2:25மத் 19:13-15மத் 9:4 அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்கள் எல்லோருக்குள்ளும் எவன் சிறியவனாக இருக்கிறானோ அவனே பெரியவனாக இருப்பான் என்றார். 1 பேது 5:6லூக் 14:11மாற் 9:37யோவா 13:20லூக் 10:16லூக் 22:26மத் 10:40-42மத் 23:11-12 அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களோடுகூட உம்மைப் பின்பற்றாததினால், அவனைத் தடுத்தோம் என்றான். மாற் 9:38-40எண் 11:27-29மாற் 10:13-14அப் 4:18-19அப் 5:281 தெச 2:16லூக் 5:53 யோவா 1:9-10 அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாக இல்லாதவன் நமது பட்சத்தில் இருக்கிறான் என்றார். லூக் 11:23மத் 12:30பிலி 1:15-181 கொரி 12:3லூக் 16:13நீதி 3:5-6மாற் 9:41மத் 17:26
இயேசுவின் கடிந்துகொள்ளுதல்
பின்பு, அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் நெருங்கி வந்தபோது, அவர் எருசலேமுக்குப் போகப்பார்த்து, ஏசா 50:5-9லூக் 18:31லூக் 13:22மாற் 16:191 தீமோ 3:16அப் 1:2அப் 1:9அப் 20:22-24 தமக்கு முன்னாகத் தூதுவர்களை அனுப்பினார். அவர்கள்போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள். மத் 10:52இராஜா 17:24-33லூக் 10:1யோவா 8:48லூக் 10:33லூக் 17:16எஸ்றா 4:1-5லூக் 7:27 அவர் எருசலேமுக்குப்போக விரும்பினபடியால் அந்த கிராமத்து மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. யோவா 4:9யோவா 4:40-42லூக் 9:48 அவருடைய சீடர்களாகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்கு விருப்பமா? என்று கேட்டார்கள். 2இராஜா 1:10-14யாக் 1:19-20யாக் 3:14-18அப் 4:29-302இராஜா 10:312 சாமு 21:22இராஜா 10:16வெளி 13:3 அவர் திரும்பிப்பார்த்து: அவர்களைக் கடிந்துகொண்டு, 1 பேது 3:9யோபு 2:10யோபு 26:4மத் 16:23வெளி 3:19எரே 17:9யோபு 31:29-31மத் 26:51 மனிதகுமாரன் மனிதர்களுடைய ஜீவனை அழிப்பதற்காக அல்ல, இரட்சிப்பதற்காகவே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்திற்குப் போனார்கள். மத் 20:28யோவா 3:17ரோம 12:21யோவா 10:10லூக் 19:101 பேது 2:21-23மத் 18:101 தீமோ 1:15
இயேசுவைப் பின்பற்றுவதின் முக்கியத்துவம்
அவர்கள் வழியிலே போகும்போது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் நான் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். மத் 8:19-22யோவா 13:37லூக் 9:57-60யாத் 19:8லூக் 9:51 அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனிதகுமாரனுக்கோ தலை சாய்க்கவும் இடமில்லை என்றார். மத் 8:20லூக் 14:26-332 கொரி 8:9லூக் 18:22-23யாக் 2:5யோவா 6:60-66சங் 84:3யோசு 24:19-22 வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண என்னை அனுப்பவேண்டும் என்றான். மத் 16:241 இராஜா 19:20மத் 6:33மத் 8:21-22ஆகா 1:2மத் 4:19-22மத் 9:9 அதற்கு இயேசு: மரித்தோர் தங்களுடைய மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணு என்றார். 2 தீமோ 2:3-41 தீமோ 5:6யோவா 21:15-172 தீமோ 4:22 தீமோ 4:5லூக் 15:32வெளி 3:11 கொரி 9:16 பின்பு வேறு ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முதலில் நான் போய் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு வரும்படி என்னை அனுமதிக்கவேண்டும் என்றான். லூக் 14:261 இராஜா 19:20லூக் 14:18-20மத் 10:37-38உபா 33:9பிரச 9:10 அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துவிட்டு பின்னோக்கிப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்திற்குத் தகுதியுள்ளவன் இல்லை என்றார். பிலி 3:13எபி 10:382 பேது 2:20-22லூக் 17:31-32யாக் 1:6-8சங் 78:8-92 தீமோ 4:10அப் 15:37-38