பக்கவாதக்காரன் குணமடைதல்
அப்பொழுது, அவர் படகில் ஏறி, இக்கரையில் உள்ள தம்முடைய பட்டணத்திற்கு வந்தார். மத் 4:13லூக் 8:37மத் 7:6மத் 8:18மாற் 5:21வெளி 22:11மத் 8:23 அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்கவாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். மாற் 2:1-12லூக் 5:18-26எரே 31:33-34மத் 9:22லூக் 7:47-50சங் 32:1-2கொலோ 1:12-14யாக் 2:18 அப்பொழுது, வேதபண்டிதர்களில் சிலர்: இவன் தேவனை அவமதித்துப் பேசுகிறான் என்று தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள். மத் 26:65லேவி 24:16லூக் 5:21யோவா 10:33-36லூக் 7:39-40மாற் 14:64மாற் 2:6-7அப் 6:11-13 இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன? லூக் 6:8மத் 12:25வெளி 2:23யோவா 16:30லூக் 11:17லூக் 9:46-47சங் 139:2சங் 44:21 உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது? யோவா 5:8-14மாற் 2:9-12அப் 3:16லூக் 5:23-25அப் 14:8-11அப் 3:6-11ஏசா 35:5-6அப் 9:34 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்றார். ஏசா 43:25மத் 9:52 கொரி 2:102 கொரி 5:20யோவா 20:21-23யோவா 5:21-23அப் 5:31அப் 7:59-60 உடனே அவன் எழுந்து, தன் வீட்டிற்குப்போனான். மக்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள். லூக் 7:16மத் 15:31அப் 4:21லூக் 17:15லூக் 23:47மாற் 2:12யோவா 15:8லூக் 5:25-26
மத்தேயுவின் அழைப்பு
இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, வரிவசூல் மையத்தில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனிதனைக் கண்டு: எனக்குப் பின்னே வா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான். லூக் 5:27-38மாற் 2:14-221 இராஜா 19:19-21லூக் 19:2-10மாற் 3:18அப் 1:13கலா 1:16மத் 21:31-32 பின்பு அவர் வீட்டிலே உணவுப் பந்தியிருக்கும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள். லூக் 5:29-321 தீமோ 1:13-16மாற் 2:15-17யோவா 9:31மத் 5:46-47 பரிசேயர்கள் அதைக் கண்டு, அவருடைய சீடர்களைப் பார்த்து: உங்களுடைய போதகர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உணவு சாப்பிடுகிறது ஏன் என்று கேட்டார்கள். மத் 11:19லூக் 5:30லூக் 15:1-2மாற் 2:161 கொரி 5:9-11கலா 2:15எபி 5:2ஏசா 65:5 இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. லூக் 5:31வெளி 3:17-18எரே 33:6லூக் 9:11மாற் 2:17சங் 147:3எரே 17:14ஓசி 14:4 பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். மாற் 2:17லூக் 19:10ஓசி 6:6லூக் 5:32மத் 12:71 தீமோ 1:13-16நீதி 21:32 பேது 3:9
உபவாசத்தைக்குறித்த கேள்விகள்
அப்பொழுது, யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து: நாங்களும் பரிசேயர்களும் அநேகமுறை உபவாசிக்கிறோமே; உம்முடைய சீடர்கள் உபவாசிக்காமல் இருக்கிறது ஏன் என்று கேட்டார்கள். லூக் 5:33-39மாற் 2:18-22மத் 6:16மத் 11:18-19யோவா 3:25லூக் 18:9-12நீதி 20:6யோவா 4:1 அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள். வெளி 19:9யோவா 3:29வெளி 21:2அப் 13:1-3அப் 14:23யோவா 16:20-22மத் 25:1-10சங் 45:14-15 ஒருவனும் புதிய துணியை பழைய ஆடையோடு இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடு இணைத்த பழைய ஆடையை அது அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும். 1 கொரி 3:1-2யோவா 16:12சங் 125:31 கொரி 13:13ஏசா 40:11ஆதி 33:14 புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றிவைக்கிறதும் இல்லை; ஊற்றிவைத்தால், தோல் பைகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றிவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார். யோபு 32:19யோசு 9:4சங் 119:83
மரித்த சிறுபெண்ணும், வியாதியுள்ள பெண்ணும்
அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, தலைவன் ஒருவன் வந்து அவரை வணங்கி: என் மகள் இப்பொழுதுதான் இறந்துபோனாள்; ஆனாலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான். லூக் 8:41-56மாற் 5:22-43மத் 8:22இராஜா 5:11லூக் 13:14யோவா 11:21-22யோவா 11:32யோவா 4:47-49 இயேசு எழுந்து, தம்முடைய சீடர்களோடுகூட அவன் பின்னே போனார். அப் 10:38கலா 6:9-10யோவா 4:34மத் 8:7 அப்பொழுது, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே கஷ்டப்படும் ஒரு பெண்: லூக் 8:43-56மாற் 6:56மத் 14:36மாற் 5:25-43உபா 22:12அப் 5:15லேவி 15:25-33மத் 23:5 நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள். மாற் 5:26-33லூக் 8:45-47அப் 19:12 இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்தநேரத்திலேயே அந்தப் பெண் சுகமானாள். லூக் 7:50மத் 15:28மத் 9:2லூக் 17:19லூக் 18:42லூக் 8:48மாற் 10:52மாற் 5:34 இயேசுவானவர் அந்தத் தலைவனுடைய வீட்டிற்கு வந்து, சங்கு ஊதுகிறவர்களையும், ஒப்பாரி வைக்கிற மக்களையும் கண்டு: 2 நாளாக 35:25மாற் 5:35-40லூக் 8:49-51மத் 9:18-19எரே 9:17-20மத் 11:17அப் 9:39லூக் 7:32 விலகுங்கள், இந்த சிறுபெண் இறக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து ஏளனம் செய்தார்கள். அப் 20:10யோவா 11:11-131 இராஜா 17:18-24அப் 9:40ஏசா 49:7ஏசா 53:3யோவா 11:4மத் 27:39-43 மக்கள் வெளியே அனுப்பப்பட்டப்பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள். மாற் 9:272இராஜா 4:32-36லூக் 8:54மாற் 1:31மாற் 5:41அப் 9:40-41மாற் 8:23 இந்தச் செய்தி அந்த நாடெங்கும் பிரசித்தமானது. மத் 4:24மத் 14:1-2மாற் 1:45அப் 26:26மாற் 6:14
குருடர்களும், ஊமையனும் சுகமடைதல்
இயேசு அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, இரண்டு குருடர்கள் அவருக்குப் பின்னேசென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். மத் 15:22மத் 20:30-31மாற் 10:46-48லூக் 18:38-39மத் 11:5மத் 17:15மத் 22:41-45யோவா 7:42 அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: இதைச்செய்ய எனக்கு வல்லமை உண்டு என்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம் ஆண்டவரே! என்றார்கள். மாற் 9:23-24மத் 13:58மத் 8:2மத் 9:22யோவா 11:26யோவா 11:40மத் 8:14யோவா 4:48-50 அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்களுடைய விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். மத் 15:28மாற் 10:52மத் 9:22மத் 8:13மத் 20:34மத் 8:6-7யோவா 9:6-7 உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். லூக் 5:14மத் 8:4லூக் 8:56மத் 12:16மத் 17:9மாற் 5:43சங் 146:8ஏசா 35:5 அவர்களோ புறப்பட்டு, அந்த நாடெங்கும் அவருடைய புகழைப் பிரசித்தப்படுத்தினார்கள். மாற் 7:36மத் 9:26மாற் 1:44-45 அவர்கள் புறப்பட்டுப்போகும்போது, பிசாசு பிடித்த ஊமையான ஒரு மனிதனை அவரிடம் கொண்டுவந்தார்கள். மத் 4:24லூக் 11:14மத் 12:22-24மாற் 9:17-27 பிசாசு துரத்தப்பட்டப்பின்பு ஊமையன் பேசினான். மக்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருபோதும் காணப்படவில்லை என்றார்கள். ஏசா 35:6யாத் 4:11-12மாற் 7:32-372இராஜா 5:8எரே 32:20லூக் 11:14லூக் 7:9மத் 15:30-31 பரிசேயர்களோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். லூக் 11:15மாற் 3:22மத் 12:23-24யோவா 3:20
வேலையாட்களோ குறைவு
பின்பு, இயேசு எல்லாப் பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி, அவர்களைச் சுகமாக்கினார். அப் 10:38மத் 4:23-24லூக் 4:43-44மாற் 6:56மத் 11:5அப் 2:22லூக் 13:22மத் 11:1 அவர் திரளான மக்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல சோர்ந்துபோனவர்களும் திக்கற்றவர்களுமாக இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, எண் 27:17மாற் 6:34எரே 50:6எசேக் 34:3-6மத் 14:14சகரி 10:22 நாளாக 18:16மத் 10:6 தம்முடைய சீடர்களைப் பார்த்து: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; லூக் 10:2மாற் 16:151 கொரி 3:9யோவா 4:35-36மத் 28:192 கொரி 6:1லூக் 24:471 தெச 5:12-13 ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார். லூக் 10:1-2எரே 3:152 தெச 3:1அப் 13:2யோவா 20:211 கொரி 12:28அப் 8:4சங் 68:11