நீதிமொழிகள் 23

Proverbs 23
அத்தியாயம் 23

உணவைக்குறித்த எச்சரிக்கை

நீ ஒரு அதிபதியோடு சாப்பிடுவதற்கு உட்கார்ந்தால், ஆதி 43:32-34யூதா 1:12

உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாகக் கவனித்துப்பார்.

நீ சாப்பாட்டு பிரியனாக இருந்தால், உன்னுடைய தொண்டையிலே கத்தியை வை. பிலி 3:19மத் 18:8-91 கொரி 9:27

அவனுடைய ருசியுள்ள உணவுகள்மீது ஆசைப்படாதே; நீதி 23:6லூக் 21:34சங் 141:4தானி 1:8எபே 4:22

அவைகள் வஞ்சக உணவாக இருக்கலாம்.

செல்வந்தனாகவேண்டுமென்று முயற்சிக்காதே; எபி 13:5நீதி 28:201 தீமோ 6:8-10மத் 6:19நீதி 3:5யோவா 6:27நீதி 15:27ரோம 12:16

சுயபுத்தியைச் சாராதே.

இல்லாமற்போகும் பொருள்மேல் உன்னுடைய கண்களை ஏன் பறக்கவிடவேண்டும்? நீதி 27:241 யோவா 2:161 தீமோ 6:17யாக் 5:1-2மத் 6:19சங் 119:36-37பிரச 12:8ஆதி 42:36

அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டாக்கிக்கொண்டு,

வானில் பறந்துபோகும்.

பொறாமைக்காரனுடைய உணவை சாப்பிடாதே; நீதி 23:3சங் 141:4தானி 1:8-10உபா 15:9மத் 20:15உபா 28:56நீதி 22:9நீதி 28:22

அவனுடைய ருசியுள்ள உணவுகளில் ஆசைப்படாதே.

அவனுடைய இருதயத்தின் நினைவு எப்படியோ, சங் 12:2சங் 55:21நியாயாதி 16:15மத் 9:3-4லூக் 11:37-54லூக் 7:39தானி 11:27நீதி 19:22

அப்படியே அவனும் இருக்கிறான்;

சாப்பிடும், குடியும் என்று அவன் உன்னோடு சொன்னாலும்,

அவனுடைய இருதயம் உன்னோடு இருக்காது.

நீ சாப்பிட்ட உணவை வாந்தியெடுத்து,

உன்னுடைய இனிய சொற்களை இழந்துபோவாய்.

மூடனுடைய காதுகள் கேட்கப் பேசாதே; நீதி 9:7-8மத் 7:6நீதி 26:4-5நீதி 1:71 கொரி 1:21-24அப் 13:45-46அப் 28:25-28ஏசா 36:21

அவன் உன்னுடைய வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை செய்வான்.

பழைய எல்லைக்கல்லை மாற்றாதே; நீதி 22:28சகரி 7:10உபா 27:17யாக் 1:27எரே 22:3உபா 19:14யோபு 24:2-3எரே 7:5

திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.

அவர்களுடைய மீட்பர் வல்லவர்; நீதி 22:23யோபு 19:25உபா 27:19யாத் 22:22-24சங் 12:5எரே 51:36எரே 50:33-34

அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.

உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், நீதி 5:1-2நீதி 2:2-6யாக் 1:21-25நீதி 23:19எசேக் 33:31மத் 13:52நீதி 22:17

உன் காதுகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.

பிள்ளையை தண்டிக்காமல் விடாதே; நீதி 13:24நீதி 19:18நீதி 29:15நீதி 29:17

அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகமாட்டான்.

நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் 1 கொரி 11:321 கொரி 5:5நீதி 22:15

பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.

என் மகனே, உன்னுடைய இருதயம் ஞானமுள்ளதாக இருந்தால், நீதி 23:24-252 யோவா 1:43 யோவா 1:3-4நீதி 29:3செப்ப 3:171 யோவா 2:11 தெச 3:8-9யோவா 15:11

என்னிலே என்னுடைய இருதயம் மகிழும்.

உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், நீதி 8:6எபே 5:4கொலோ 4:4எபே 4:29யாக் 3:2

என்னுடைய உள்மனம் மகிழும்.

உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீதி 28:142 கொரி 7:1நீதி 15:161 பேது 1:17அப் 9:31பிரச 5:7சங் 37:1-3நீதி 3:31

நீ நாள்தோறும் யெகோவாவைப் பற்றும் பயத்தோடு இரு.

நிச்சயமாகவே முடிவு உண்டு; எபி 10:35எரே 29:11சங் 9:18பிலி 1:20நீதி 24:14நீதி 24:20ரோம 6:21-22சங் 37:37

உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது. என் மகனே, நீ கேட்டு ஞானமடைந்து, நீதி 23:26நீதி 23:12நீதி 4:10-23நீதி 6:6நீதி 9:6

உன்னுடைய இருதயத்தை நல்வழியிலே நடத்து.

மதுபானப்பிரியர்களோடும், எபே 5:18லூக் 21:34ஏசா 5:22ரோம 13:131 பேது 4:3-4ஏசா 22:13ஏசா 5:11லூக் 15:13

இறைச்சி அதிகமாக சாப்பிடுகிறவர்களோடும் சேராதே.

குடியனும், சாப்பாட்டுப்பிரியனும் தரித்திரராவார்கள்; நீதி 21:17பிலி 3:19நீதி 19:151 கொரி 5:11உபா 21:20கலா 5:21நீதி 6:9-111 கொரி 6:10

தூக்கம் கிழிந்த துணிகளை அணிவிக்கும்.

உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; நீதி 30:17நீதி 1:8யோவா 19:26-27எபே 6:1-2நீதி 6:20உபா 27:16உபா 21:18-21லேவி 19:3

உன்னுடைய தாய் வயதானவளாகும்போது அவளை புறக்கணிக்காதே.

சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; நீதி 18:15மத் 13:44சங் 119:72நீதி 16:16எபி 11:26ஏசா 55:1பிலி 3:7-8நீதி 10:1

அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.

நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; நீதி 10:1நீதி 15:20நீதி 23:15-16நீதி 29:3பிலே 1:20பிலே 1:91 இராஜா 2:1-31 இராஜா 2:9

ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.

உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; நீதி 17:25லூக் 1:58லூக் 11:27-281 நாளாக 4:9-10லூக் 1:40-47லூக் 1:31-33

உன்னைப் பெற்றவள் மகிழுவாள். என் மகனே, உன்னுடைய இருதயத்தை எனக்குக் கொடு; சங் 119:2சங் 119:9-11உபா 6:5மத் 10:37-38நீதி 4:25-27நீதி 3:1நீதி 4:232 கொரி 5:14-15

உன் கண்கள் என்னுடைய வழிகளைப் பார்ப்பதாக.

ஒழுங்கீனமானவள் ஆழமான படுகுழி; நீதி 22:14

அந்நியனுடைய மனைவி இடுக்கமான கிணறு.

அவள் கொள்ளைக்காரனைப்போல் ஒளிந்திருந்து, பிரச 7:261 கொரி 10:8ஓசி 4:11நீதி 7:12நீதி 22:14வெளி 17:1-2எரே 3:2நீதி 2:16-19

மனிதர்களுக்குள்ளே பாவிகளைப் பெருகச்செய்கிறாள்.

ஐயோ, யாருக்கு வேதனை? எபே 5:181 சாமு 25:36-372 சாமு 13:28ஏசா 28:7-8ஏசா 5:11ஏசா 5:22லூக் 12:45-46நீதி 23:21

யாருக்குத் துக்கம்?

யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்?

யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தம்கலங்கின கண்கள்?

மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி வாழ்பவர்களுக்கும், எபே 5:18ஏசா 5:11நீதி 20:1ஆமோ 6:6நீதி 9:2சங் 75:8ஆதி 9:21

கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்கும்தானே.

மதுபானம் இரத்த நிறமாக இருந்து, 1 யோவா 2:16சங் 119:372 சாமு 11:2மாற் 9:47நீதி 6:25யோபு 33:1மத் 5:28-30

பாத்திரத்தில் பளபளப்பாகத் தோன்றும்போது,

நீ அதைப் பார்க்காதே; அது மெதுவாக இறங்கும்.

முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், ஏசா 28:3ஏசா 28:7-8லூக் 16:25-26ஆமோ 5:19ஆமோ 9:3பிரச 10:8யாத் 7:12யாத் 7:5-6

விரியனைப்போல் தீண்டும்.

உன் கண்கள் ஒழுங்கீனமான பெண்களை நோக்கும்; யூதா 1:12-13ஓசி 7:5நீதி 2:12நீதி 31:5தானி 5:4ஆதி 19:32-38சங் 69:12

உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.

நீ நடுக்கடலிலே தூங்குகிறவனைப்போலவும், 1 தெச 5:2-71 இராஜா 16:91 சாமு 30:16-172 சாமு 13:28லூக் 17:27-29லூக் 21:34மத் 24:381 சாமு 25:33-38

பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலவும் இருப்பாய்.

என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; எரே 5:3ஏசா 56:121 கொரி 15:32-342 பேது 2:22ஏசா 22:13நீதி 26:11நீதி 27:22உபா 29:19

என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை;

நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.