வெளிப்படுத்தின விசேஷம் 8

Revelation 8
அத்தியாயம் 8

ஏழாம் முத்திரையும், பொற்கலசமும்

அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரம் வரை அமைதி உண்டானது. சகரி 2:13ஆப 2:20வெளி 6:1சங் 62:1யோபு 4:16சங் 37:7வெளி 5:1வெளி 6:12 பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையும் பார்த்தேன்; அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது. லூக் 1:19வெளி 11:15ஆமோ 3:6-8மத் 18:10வெளி 8:62 நாளாக 29:25-28வெளி 15:1வெளி 16:1 வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் எல்லாப் பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடு அதிகமான தூபவர்க்கம் செலுத்தும்படி அவனுக்குக் கொடுக்கப்பட்டது. வெளி 5:8சங் 141:2வெளி 8:4லூக் 1:10மல்கி 1:11வெளி 9:132 நாளாக 26:16-20யாத் 37:25-26 அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையில் இருந்து தேவனுக்குமுன்பாக எழும்பியது. சங் 141:2லூக் 1:10வெளி 8:3யாத் 30:1வெளி 15:8 பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமி அதிர்ச்சியும் உண்டானது. வெளி 11:19வெளி 4:5அப் 16:26ஏசா 29:62 சாமு 22:7-9எசேக் 10:2-7லேவி 16:12மத் 27:52-54

எக்காளங்கள்

அப்பொழுது, ஏழு எக்காளங்களை வைத்திருந்த ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள். வெளி 8:2 முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தம் கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றில் ஒரு பங்கு வெந்துபோனது, பசும்புல்லெல்லாம் எரிந்துபோனது. எசேக் 38:22வெளி 9:4வெளி 9:18ஏசா 28:2வெளி 9:15யாத் 9:23-25சங் 105:32சகரி 13:8-9 இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோல ஒன்று கடலிலே போடப்பட்டது. அதனால் கடலில் மூன்றில் ஒரு பங்கு இரத்தமாக மாறியது. எரே 51:25யாத் 7:17-21மாற் 11:23வெளி 8:7ஆமோ 7:4வெளி 11:6வெளி 16:3-21எசேக் 14:9 கடலில் இருந்த உயிருள்ள படைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு மரித்துப்போனது; கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கு சேதமானது. ஏசா 2:16வெளி 16:3வெளி 8:7சங் 48:7வெளி 8:10வெளி 8:12சகரி 13:8யாத் 7:21 மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றில் ஒருபங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது. வெளி 16:4ஏசா 14:12வெளி 9:1வெளி 6:13வெளி 12:4வெளி 14:72இராஜா 2:19-22யாத் 7:20-21 அந்த நட்சத்திரத்திற்கு எட்டி என்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு எட்டியைப்போலக் கசப்பானது; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனிதர்களில் அநேகர் மரித்தார்கள். எரே 23:15எரே 9:15உபா 29:18நீதி 5:4ஆமோ 5:7ஆமோ 6:12புலம் 3:19யாத் 15:23 நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றில் ஒருபங்கும், சந்திரனில் மூன்றில் ஒருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றில் ஒருபங்கும் சேதமானது, அவைகளில் மூன்றில் ஒரு பங்கு இருள் அடைந்தது; பகலிலும் மூன்றில் ஒரு பங்கு பிரகாசம் இல்லாமல்போனது, இரவிலும் அப்படியே ஆனது. யோவே 2:31ஏசா 13:10யோவே 2:102 தெச 2:9-12மத் 24:29வெளி 6:12வெளி 8:7-12சகரி 13:8-9 பின்பு, ஒரு கழுகு வானத்தின் நடுவிலே பறந்து வருவதைப் பார்த்தேன்; அவன் அதிக சத்தமாக: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதர்களுடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ (ஆபத்துவரும்) என்று சொல்வதைக்கேட்டேன். வெளி 11:14வெளி 9:12எசேக் 2:10எபி 1:14வெளி 14:6வெளி 19:17வெளி 9:1சங் 103:20