யெகோவா கூறுவது இதுவே: ஆமோ 3:6ஓசி 13:15எரே 4:11-122இராஜா 19:7அப் 9:4எசேக் 19:12ஏசா 13:3-5எரே 49:36
“பாருங்கள், நான் பாபிலோனுக்கும்,
லேப் காமாய் 1 மக்களுக்கும் எதிராக அழிக்கும் காற்றை 2 அனுப்புவேன்.
பாபிலோனியரைப் புடைத்து அவர்களின் நாட்டை பாழாக்குவதற்காக, எரே 15:7மத் 3:12ஏசா 41:16எசேக் 5:12எரே 50:14-15எரே 50:29எரே 50:32எரே 51:27-28
நான் அந்நியரை பாபிலோனுக்கு அனுப்புவேன்.
அவர்கள் அவளுடைய பேரழிவின் நாளிலே,
எல்லாப் பக்கங்களிலும் அவளை எதிர்ப்பார்கள்.
வில்வீரன் வில்லை நாணேற்றாமலும், எரே 50:14எரே 46:4எரே 50:21உபா 32:25ஏசா 13:10-18யாக் 2:13எரே 50:27எரே 50:29-30
தன் போர்க்கவசத்தை அணிந்துகொள்ளாமலும் இருக்கட்டும்.
அவளுடைய வாலிபரைத் தப்பவிடவேண்டாம்.
அவளின் படைவீரரை முழுவதுமாக அழித்துவிடுங்கள்.
அவர்கள் பாபிலோன் வீதிகளில் படுகாயமடைந்து, எரே 49:26ஏசா 13:15எரே 50:30ஏசா 14:19எரே 50:37
கொல்லப்பட்டு விழுவார்கள்.
ஏனெனில் இஸ்ரயேலும், ரோம 11:1-2ஓசி 4:1சகரி 12:6சகரி 12:81 சாமு 12:22ஆமோ 9:8-9எசேக் 22:24-31எசேக் 8:17
யூதாவும் இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவாவினால் கைவிடப்படவில்லை.
அவர்களுடைய நாடு இஸ்ரயேலின் பரிசுத்தருக்கு முன்பாகக்
குற்றங்களால் நிறைந்திருந்தபோதிலும்,
அவர் அவர்களைக் கைவிடவில்லை.
“பாபிலோனிலிருந்து தப்பி ஓடுங்கள்; எரே 50:8எரே 25:14எரே 50:15எரே 50:28எரே 51:45எண் 16:261 தீமோ 5:22ஏசா 48:20
உயிர் தப்பி ஓடுங்கள்.
அவளுடைய பாவத்தின் நிமித்தம் நீங்களும் அழிக்கப்படாதிருங்கள்.
யெகோவா பழிவாங்கும் வேளை வந்துவிட்டது.
அவளுக்குத் தகுந்த தண்டனையை அவர் கொடுப்பார்.
பாபிலோன் யெகோவாவினுடைய கையில் ஒரு தங்கக் கிண்ணமாயிருந்தாள். வெளி 14:8வெளி 17:4வெளி 17:2வெளி 18:3தானி 2:32தானி 2:38தானி 3:1-7ஆப 2:15-16
அவள் பூமி முழுவதையும் வெறிக்கப் பண்ணினாள்.
நாடுகள் அவளின் திராட்சை மதுவைக் குடித்து,
அதனால் இப்பொழுது மதிமயங்கிப் போனார்கள்.
பாபிலோன் திடீரென விழுந்து உடைந்து போவாள். ஏசா 21:9எரே 46:11வெளி 14:8எரே 48:20எரே 50:2வெளி 18:2தானி 5:24தானி 5:31
அவளுக்காகப் புலம்புங்கள்.
அவளுடைய நோவை ஆற்ற தைலம் கொண்டுவாருங்கள்.
ஒருவேளை அவள் குணமாகக்கூடும்.
“ ‘நாங்கள் பாபிலோனைக் குணமாக்கியிருக்கலாம். எரே 50:16ஏசா 13:14வெளி 18:5எரே 46:16தானி 4:20-22எஸ்றா 9:62 நாளாக 28:9ஏசா 47:15
ஆனால் அவள் குணமடையமாட்டாள்;
அவளைவிட்டு நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் சொந்த நாட்டுக்குப் போவோம்,
அவளின் நியாயத்தீர்ப்பு ஆகாயம்வரை எட்டி,
மேகங்களைப்போல் உயர எழும்புகிறது.’
“ ‘யெகோவா எங்கள் நியாயத்தை மெய்ப்பித்துக் காட்டியுள்ளார். எரே 50:28ஏசா 51:11சங் 37:6ஏசா 40:2ஏசா 52:9-10எரே 31:6-9மீகா 7:9-10சங் 102:19-21
வாருங்கள், எங்கள் இறைவனாகிய யெகோவா செய்ததை
சீயோனில் அறிவிப்போம்.’
“அம்புகளைக் கூர்மையாக்குங்கள். எரே 46:4எரே 50:45எரே 46:9எரே 50:91 நாளாக 5:261 இராஜா 11:141 இராஜா 11:232 நாளாக 36:22
கேடயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
யெகோவா மேதிய அரசர்களைத் தூண்டி எழுப்பியிருக்கிறார்.
பாபிலோனை அழிப்பதே அவருடைய நோக்கம்.
யெகோவா பழிவாங்குவார்.
அவர் தமது ஆலயத்தைத் தூய்மைக்கேடாக்கினபடியால் பழிவாங்குவார்.
பார்வோனின் மதில்களுக்கெதிராகப் போர்க்கொடி உயர்த்துங்கள். ஏசா 13:2எரே 51:11எரே 51:29நாகூ 2:1ஏசா 8:9-10எரே 46:3-5எரே 50:2எரே 51:27
காவலை மேலும் பலப்படுத்துங்கள்.
காவலரை நிறுத்துங்கள்.
மறைந்திருந்து தாக்குபவர்களை ஆயத்தப்படுத்துங்கள்.
யெகோவா தமது நோக்கத்தையும்,
பாபிலோன் மக்களுக்கு எதிரான தமது தீர்ப்பையும் நிறைவேற்றுவார்.
திரளான தண்ணீர்களின்மேல் வாசம்செய்கிறவளே! வெளி 17:1ஏசா 45:3வெளி 17:15ஆதி 6:13எரே 51:361 பேது 4:72 பேது 2:3ஆமோ 8:2
திரவியச் செல்வங்களை உடையவளே!
உனது முடிவும்,
நீ அழிக்கப்படும் வேளையும் வந்துவிட்டன.
சேனைகளின் யெகோவா தம்மேல் ஆணையிட்டுக் கூறியிருப்பதாவது: ஆமோ 6:8எரே 49:13எரே 50:15யோவே 2:25எபி 6:13நியாயாதி 6:5எரே 46:23எரே 51:27
நிச்சயமாக வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப்போல் மனிதர்களால் உன்னை நிரப்புவேன்.
உன்னை அவர்கள் வென்று, ஆர்ப்பரிப்பார்கள்.
“அவர் தமது வல்லமையினால் பூமியைப் படைத்து, எரே 10:12-16வெளி 4:11எரே 32:17அப் 14:15கொலோ 1:16-17ரோம 1:20யோபு 9:8நீதி 3:19
தமது ஞானத்தினால் உலகத்தை படைத்து,
தமது அறிவாற்றலினால் வானங்களை விரித்தார்.
அவர் முழங்கும்போது திரளான தண்ணீர் வானத்தில் உண்டாகிறது. சங் 135:7யோனா 1:4சங் 18:13எரே 10:12-13ஆமோ 9:7யாத் 10:13யாத் 10:19யாத் 14:21
அவர் பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பச் செய்கிறார்.
அவர் மழையுடன் மின்னலை அனுப்பி தமது களஞ்சியங்களிலிருந்து
காற்றை வெளியே கொண்டுவருகிறார்.
“ஒவ்வொரு மனிதனும் உணர்வற்றவனும், அறிவற்றவனுமாயிருக்கிறான். ஆப 2:18-19எரே 10:14ஏசா 44:18-20சங் 14:21 கொரி 1:19-21எரே 50:2ரோம 1:20-23சங் 115:5
ஒவ்வொரு கொல்லனும் தன் விக்கிரகங்களால் வெட்கமடைகிறான்.
ஏனெனில் அவனுடைய உருவச்சிலைகள் போலியானவை.
அவைகளில் சுவாசமில்லை.
அவைகள் பயனற்றவையாகவும், கேலிக்குரிய பொருட்களாகவும் இருக்கின்றன. அப் 14:15யாத் 12:12ஏசா 19:1ஏசா 46:1எரே 10:15எரே 10:8எரே 18:15எரே 43:12-13
அவைகளுக்குரிய தண்டனை வரும்போது அவை அழிந்துபோகும்.
யாக்கோபின் பங்காயிருப்பவர் இவைகளைப் போன்றவர் அல்ல; எரே 10:16சங் 73:261 பேது 2:9சங் 33:12யாத் 19:5-6ஏசா 47:4உபா 32:9எரே 12:7-10
ஏனெனில், அவரே எல்லாவற்றையும் படைத்தவர்.
தமது உரிமைச்சொத்தான கோத்திரத்தையும் அவரே படைத்தார்.
சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர்.
“பாபிலோனே! நீயே எனக்குத் தண்டாயுதமும், ஏசா 41:15-16மீகா 4:13ஏசா 37:26சகரி 9:13-14ஏசா 14:5-6எரே 27:5-7ஏசா 10:5எரே 25:9
போர் ஆயுதமுமாயிருக்கிறாய்.
நான் உன்னைக்கொண்டு நாடுகளை அழிக்கிறேன்.
உன்னைக்கொண்டே அரசுகளையும் அழிப்பேன்.
நான் உன்னைக்கொண்டு குதிரையையும், குதிரைவீரனையும் அழிக்கிறேன். யாத் 15:1சகரி 10:5ஆகா 2:22மீகா 5:10நாகூ 2:13சகரி 12:4சங் 46:9வெளி 19:18
உன்னைக்கொண்டே தேரையும், அதன் தேரோட்டியையும் அழிக்கிறேன்.
நான் உன்னைக்கொண்டே ஆணையும், பெண்ணையும் அழிக்கிறேன். 2 நாளாக 36:17ஏசா 13:181 சாமு 15:3எசேக் 9:6உபா 32:25ஏசா 13:16எரே 6:11புலம் 2:11
உன்னைக்கொண்டே முதியவனையும், இளைஞனையும் அழிக்கிறேன்.
உன்னைக்கொண்டே வாலிபனையும், இளம்பெண்ணையும் அழிக்கிறேன்.
நான் உன்னைக்கொண்டே மேய்ப்பனையும், மந்தையையும் அழிக்கிறேன். எரே 51:57
உன்னைக்கொண்டே உழவனையும், எருதுகளையும் அழிக்கிறேன்.
உன்னைக்கொண்டே ஆளுநர்களையும், அலுவலர்களையும் அழிக்கிறேன்.
“பாபிலோனையும் பாபிலோனில் வாழும் எல்லோரையும், சீயோனில் அவர்கள் செய்த எல்லாக் குற்றங்களுக்காக, நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவே அவர்களுக்குப் பதில் செய்வேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். எரே 50:15ஏசா 63:1-4வெளி 18:241 தெச 2:15-16ஏசா 47:6-9ஏசா 51:22-23ஏசா 61:2ஏசா 66:6
அழிக்கும் மலையே! முழு பூமியையும் அழிக்கும் மலையே! வெளி 8:8சகரி 4:7எரே 50:31ஏசா 13:2எரே 51:53எரே 51:58தானி 4:30ஆதி 11:4
நான் உனக்கு விரோதமாகவே இருக்கிறேன்
என்று யெகோவா அறிவிக்கிறார்.
என் கரத்தை உனக்கு விரோதமாய் நீட்டி,
கற்பாறை வெடிப்புகளிலிருந்து உன்னை உருட்டிவிடுவேன்;
நான் உன்னை ஒரு எரிந்து முடிந்த மலையாக ஆக்குவேன்.
மூலைக் கல்லுக்காக பாறாங்கல்லோ, ஏசா 13:19-22எரே 50:12-13எரே 51:43வெளி 18:20-24ஏசா 14:23ஏசா 34:8-17எரே 50:40-41எரே 51:29
அஸ்திபாரத்துக்காக வேறெந்தக் கல்லோ உன்னிலிருந்து எடுக்கப்படமாட்டாது.
நீ என்றென்றைக்கும் பாழாகவே கிடப்பாய் என்று யெகோவா அறிவிக்கிறார்.
போர்க் கொடியை உயர்த்துங்கள். ஆதி 10:31 நாளாக 1:6ஆதி 8:4எரே 25:14எரே 50:2எரே 51:12ஏசா 13:2-5ஏசா 18:3
நாடுகளின் நடுவே எக்காளங்களை ஊதுங்கள்.
நாடுகளை பாபிலோனுக்கு விரோதமாகப் போருக்கு ஆயத்தப்படுத்துங்கள்.
அரராத், மின்னி, அஸ்கெனாஸ் ஆகிய
அரசுகளை அவளுக்கு விரோதமாய் அழைப்பியுங்கள்.
அவளுக்கு விரோதமாக ஒரு தளபதியையும் நியமியுங்கள்.
வெட்டுக்கிளிகளின் கூட்டம்போல் குதிரைகளை அனுப்புங்கள்.
நாடுகளை அவளுக்கு விரோதமாகப் போருக்கு ஆயத்தப்படுத்துங்கள். எரே 51:11எரே 25:251 நாளாக 1:5தானி 5:28-30தானி 6:8தானி 8:20தானி 8:3-4தானி 9:1
மேதியா நாட்டின் அரசர்களையும்,
ஆளுநர்களையும், அதிகாரிகளையும்,
அவர்களுடைய ஆட்சியின் கீழிருக்கும் எல்லா நாடுகளையும்
அவளுக்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்.
நாடானது நடுங்கித் துடிக்கிறது. எரே 51:11-12எரே 51:43எரே 8:16ஆமோ 8:8ஏசா 13:19-20எரே 10:10எரே 50:13எரே 50:45
ஏனெனில் யெகோவாவின் நோக்கங்கள் பாபிலோனுக்கெதிராய் நிலைநிற்கின்றன.
ஒருவரும் அங்கு குடியிருக்க முடியாதபடி,
பாபிலோன் பாழாக்கப்படும்
பாபிலோனின் இராணுவவீரர் போரிடுவதை நிறுத்திவிட்டு, நாகூ 3:13எரே 50:36-37ஏசா 13:7-8ஏசா 19:16புலம் 2:9ஏசா 45:1-2சங் 76:5ஆமோ 1:5
அரண்களுக்குள்ளேயே தங்கியிருக்கிறார்கள்.
அவர்களின் பெலன் குன்றிப் போயிற்று.
அவர்கள் பெண்களைப் போலாகிவிட்டார்கள்.
அவளின் குடியிருப்புகள் எரிக்கப்பட்டன.
கதவுகளின் தாழ்ப்பாள்களும் உடைக்கப்பட்டன.
பட்டணம் முழுவதும் கைப்பற்றப்பட்டுவிட்டதை, 2 நாளாக 30:62 சாமு 18:19-311 சாமு 4:12-18தானி 5:2-5தானி 5:30எஸ்த 3:13-15எஸ்த 8:10எஸ்த 8:14
பாபிலோன் அரசனுக்கு அறிவிப்பதற்காக,
தூதுவனுக்குப் பின் தூதுவனும்,
அஞ்சற்காரனுக்குப் பின் அஞ்சற்காரனும் தொடர்ந்து செல்கிறார்கள்.
ஆற்றின் துறைமுகங்களும் பிடிக்கப்பட்டன. ஏசா 44:27எரே 50:37-38எரே 51:30
புதர்களுக்கும் நெருப்பு வைக்கப்பட்டன.
போர்வீரரும் திகிலடைந்தார்கள்.
இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: ஏசா 21:10ஓசி 6:11யோவே 3:13ஏசா 41:15-16மீகா 4:13வெளி 14:15-20ஆமோ 1:3ஆப 3:12
பாபிலோன் மகள் சூடடிக்கும் காலத்தில்
மிதிக்கப்படும் களத்துக்கு ஒப்பாயிருக்கிறாள்.
அவளை அறுவடை செய்யும் காலம் விரைவில் வரும்.
பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் எங்களை விழுங்கிப்போட்டான். எரே 50:17எரே 51:44ஏசா 24:1-3யோபு 20:15மத் 23:13ஆமோ 8:4எசேக் 36:3புலம் 1:1
எங்களை அவன் குழப்பத்திற்குள்ளாக்கி,
எங்களை வெறுமையான ஜாடியாக்கி விட்டான்.
இராட்சத பாம்பைப்போல எங்களை விழுங்கி,
எங்கள் சுவையான உணவுகளால் தன் வயிற்றை
நிரப்பிக்கொண்டு எங்களை வெளியே துரத்திவிட்டான்.
“எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் செய்யப்பட்ட கொடுமை எரே 50:29வெளி 18:20ஏசா 26:20-21யாக் 2:13நியாயாதி 9:20நியாயாதி 9:24நியாயாதி 9:56-57மத் 7:2
பாபிலோன்மீது சுமரட்டும்”
என்று சீயோனில் குடியிருப்பவர்கள் கூறுகிறார்கள்.
“எங்கள் இரத்தப்பழி பாபிலோனில் குடியிருப்பவர்கள்மேல் சுமரட்டும்”
என்று எருசலேம் கூறுகிறாள்.
ஆகையால் யெகோவா கூறுவது இதுவே: எரே 50:38ரோம 12:19சங் 140:12உபா 32:35உபா 32:43எபி 10:30-31ஏசா 44:27ஆப 2:8-17
“பார், நான் உனக்காக வழக்காடிப்
பழிவாங்குவேன்.
அவளின் கடலை வற்றச்செய்து,
ஊற்றுகளையும் வறண்டு போகப்பண்ணுவேன்.
பாபிலோன் இடிபாடுகளின் குவியலாகி, வெளி 18:2எரே 18:16எரே 25:9எரே 51:25-26வெளி 18:21-232 நாளாக 29:8ஏசா 13:19-22ஏசா 14:23
நரிகளின் உறைவிடமாகும்.
அது பயங்கரத்திற்கும், நிந்தைக்கும் உரிய பொருளும்,
ஒருவரும் குடியிராத இடமுமாகும்.
அவளுடைய குடிமக்கள் யாவரும் இளம் சிங்கங்களைப்போல் கர்ஜிக்கிறார்கள்; எரே 2:15ஏசா 35:9நியாயாதி 16:20யோபு 4:10-11நாகூ 2:11-13சங் 34:10சங் 58:6சகரி 11:3
சிங்கக் குட்டிகளைப்போலச் சத்தமிடுவார்கள்.
ஆயினும் அவர்கள் கொதித்தெழுந்தவர்களாய் இருக்கும்வேளையில், எரே 51:57எரே 25:27ஏசா 22:12-14நாகூ 1:10நாகூ 3:11தானி 5:1-4தானி 5:30ஏசா 21:4-5
நான் அவர்களுக்கு வித்தியாசமான ஒரு விருந்தை ஆயத்தம்பண்ணி,
அவர்களை வெறிக்கப் பண்ணுவேன்.
அதனால் அவர்கள் உரத்த சத்தமிட்டுச் சிரிப்பார்கள்.
அதன்பின் அவர்கள் என்றுமே எழும்பாதபடி நித்திரையடைவார்கள்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“வெட்டுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டுக்குட்டிகளைப்போலவும், எரே 50:27எசேக் 39:18ஏசா 34:6சங் 37:20சங் 44:22
செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும்,
வெள்ளாடுகளைப்போலவும் அவர்களைக் கொண்டுபோவேன்.
“சேசாக்கு 3 எப்படிக் கைப்பற்றப்பட்டது? எரே 25:26ஏசா 13:19எரே 49:252 நாளாக 7:21தானி 2:38தானி 4:22தானி 4:30தானி 5:1-5
முழு பூமியினுடைய பெருமை எப்படிப் பிடிபட்டது?
நாடுகளுக்குள் பாபிலோன்
எவ்வளவு பயங்கரமாயிருக்கப் போகிறது.
பாபிலோனுக்கு மேலாக கடல் புரண்டு எழும்பும். ஏசா 8:7-8தானி 9:26எசேக் 27:26-34எரே 51:55லூக் 21:25சங் 18:16சங் 18:4சங் 42:7
அதன் கொந்தளிக்கும் அலைகள் அதை மூடும்.
அதன் பட்டணங்கள் பாழாகி, ஏசா 13:20எரே 2:6எரே 51:29எசேக் 29:10-11எரே 50:12எரே 50:39-40எரே 51:37
வறண்டு பாலைவனமாகும்.
அங்கு ஒருவரும் குடியிருக்கமாட்டார்கள்.
அதின் வழியாக ஒருவனும் பயணம் செய்யவுமாட்டான்.
நான் பாபிலோனில் இருக்கிற பேல் தெய்வத்தைத் தண்டிப்பேன். எரே 51:34எரே 51:58ஏசா 2:2எரே 50:22 நாளாக 36:7தானி 1:2தானி 3:2-3தானி 3:29
அவன் விழுங்கியதைத் துப்பும்படி செய்வேன்.
பிறநாடுகள் இனிமேல் அவன் பின்னால் அணி அணியாகப் போகமாட்டார்கள்.
பாபிலோனின் மதிலும் விழுந்துவிடும்.
“என் மக்களே! அவளிடத்திலிருந்து வெளியேறுங்கள். ஏசா 48:20எரே 51:6வெளி 18:42 கொரி 6:17அப் 2:40ஆதி 19:12-16எரே 50:8எண் 16:26
உங்கள் உயிர் தப்ப ஓடுங்கள்.
யெகோவாவின் கடுங்கோபத்திலிருந்து விலகி ஓடுங்கள்.
நாட்டில் வதந்திகள் பரவும்போது நீங்கள் கலங்கவோ, பயப்படவோ வேண்டாம். 2இராஜா 19:7ஏசா 13:3-5ஏசா 19:2ஏசா 21:2-31 சாமு 14:16-202 நாளாக 20:23நியாயாதி 7:22லூக் 21:28
இந்த வருடத்தில் ஒரு வதந்தியும்,
மற்ற வருடத்தில் இன்னொரு வதந்தியும் வரும்.
நாட்டில் வன்செயல் பற்றிய வதந்திகளும்,
ஆள்பவனுக்கு விரோதமாக ஆள்பவன் எழும்புகிறான் என்ற வதந்திகளும் வரும்.
ஆகையால் நான் பாபிலோனின் விக்கிரங்களை தண்டிக்கும் எரே 50:2ஏசா 46:1-2எரே 51:52ஏசா 21:9எரே 11:22எரே 13:21எரே 23:34எரே 25:12
காலம் நிச்சயமாய் வரும்.
அவளுடைய முழு நாடும் அவமானப்படும்.
அங்கு கொலைசெய்யப்படும் யாவரும் அவளின் நடுவிலேயே விழுந்து கிடப்பார்கள்.
அப்பொழுது வானமும், பூமியும் அவைகளிலுள்ள யாவும் ஏசா 44:23வெளி 18:20எரே 50:3ஏசா 48:20ஏசா 49:13எரே 50:41எரே 50:9எரே 51:10-11
பாபிலோனைப் பார்த்து மகிழ்வுடன் ஆர்ப்பரிக்கும்.
ஏனெனில், அழிக்கிறவர்கள் வடக்கிலிருந்து வந்து,
அவளைத் தாக்குவார்கள்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“பாபிலோனின் நிமித்தம் பூமியெங்கும் எரே 50:29எரே 51:24சங் 137:8-9யாக் 2:13நியாயாதி 1:7எரே 50:11எரே 50:17-18எரே 50:33-34
வெட்டப்பட்டவர்கள் விழுந்ததுபோல்,
இஸ்ரயேலில் வெட்டப்பட்டவர்களின் நிமித்தம் பாபிலோனும் விழவேண்டும்.
வாளுக்குத் தப்பியவர்களே! எரே 44:28சங் 122:6தானி 9:2-3எஸ்றா 1:3-5ஏசா 51:11ஏசா 52:11-12எரே 51:45வெளி 18:4
நீங்கள் தாமதியாதீர்கள்;
புறப்படுங்கள்; நீங்கள் தூரதேசத்திலிருந்து யெகோவாவை நினைவுகூருங்கள்.
எருசலேமையும் நினைத்துக்கொள்ளுங்கள்.”
“நிந்திக்கப்பட்டதால் நாங்கள் புலம் 1:10சங் 44:13-16சங் 74:3-7சங் 79:4தானி 11:31தானி 8:11-14தானி 9:26-27எசேக் 24:21
அவமானத்துக்குள்ளானோம்.
வெட்கம் எங்கள் முகங்களை மூடுகிறது.
ஏனெனில், அந்நியர்கள்
யெகோவாவின் ஆலயத்தின் பரிசுத்த இடத்திற்குள் புகுந்து விட்டார்கள்.”
“ஆனாலும் நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். எரே 51:47எரே 50:38தானி 5:30-31எசேக் 30:24ஏசா 13:15-16
“அப்பொழுது நான் பாபிலோனுடைய விக்கிரகங்களை தண்டிப்பேன்.
பாபிலோன் நாடு முழுவதிலும்
காயப்பட்டோர் கதறுவார்கள்.
பாபிலோன், ஆகாயம்வரை எட்டினாலும், ஆதி 11:4எரே 49:16எரே 51:25ஒபதி 1:3-4சங் 139:8-10ஆமோ 9:4தானி 4:30எசேக் 31:9-11
உயர்ந்த தன் கோட்டைகளைப் பலப்படுத்தினாலும்,
நான் அவளுக்கு விரோதமாக அழிக்கிறவர்களை அனுப்புவேன்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“பாபிலோனிலிருந்து ஒரு அழுகையின் சத்தம் வருகிறது. எரே 50:22எரே 48:3-5எரே 50:46ஏசா 13:6-9ஏசா 15:5எரே 50:27எரே 50:43வெளி 18:17-19
அது பாபிலோனியரின் நாட்டிலிருந்து
வரும் பேரழிவின் கூக்குரல்.
யெகோவா பாபிலோனை அழிப்பார்; எரே 25:10எசேக் 26:3ஏசா 15:1ஏசா 17:13ஏசா 24:8-11ஏசா 47:5எரே 50:10-15எரே 51:38-39
அதன் பலத்த அமளியை அடக்குவார்.
எதிரிகள் அலையலையாய் வெள்ளம்போல கொந்தளித்து எழும்புவார்கள்.
அவர்களின் குரல்களின் இரைச்சல் எதிரொலிக்கும்.
பாபிலோனுக்கு விரோதமாக அழிக்கிறவன் ஒருவன் வருவான்; எரே 51:6ஆப 2:8எரே 51:48சங் 46:9சங் 94:1-2வெளி 19:2உபா 32:35ஏசா 59:18
அவளுடைய போர்வீரர் பிடிக்கப்படுவார்கள்.
அவர்களுடைய வில்லுகளும் முறிக்கப்படும்.
ஏனெனில் யெகோவா பழிவாங்கும் இறைவன்;
அவர் முழுமையாகப் பதில் செய்வார்.
நான் அவளுடைய அலுவலர்களையும், ஞானிகளையும், ஆளுநர்களையும், எரே 46:18எரே 25:27எரே 48:15எரே 51:39சங் 76:5-6தானி 5:1-4தானி 5:30-31ஆப 2:15-17
அதிகாரிகளையும், போர்வீரர்களையும் வெறிக்கப் பண்ணுவேன்.
அவர்கள் விழித்தெழாமல் என்றென்றைக்கும் நித்திரையாயிருப்பார்கள்”
என்று சேனைகளின் யெகோவா என்ற பெயருடைய அரசர் கூறுகிறார்.
சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: ஆப 2:13எரே 50:15எரே 51:44எரே 51:64ஏசா 45:1-2ஏசா 65:23எரே 51:30எரே 51:9
“பாபிலோனின் அகன்ற மதில் தரைமட்டமாக்கப்படும்.
அவளது உயர்ந்த வாசல்கள் தீக்கிரையாகும்.
மக்கள் வீணாகவே பிரயாசப்படுகிறார்கள்.
நாடுகளின் உழைப்பும் நெருப்புக்கு எரிபொருளாகிறது.”
மாசெயாவின் பேரனும் நேரியாவின் மகனுமான உயர் அதிகாரி செராயாவுக்கு இறைவாக்கினன் எரேமியா கொடுத்த செய்தி இதுவே: இது யூதாவின் அரசன் சிதேக்கியாவின் ஆட்சியின் நான்காம் வருடத்தில் செராயா, சிதேக்கியாவிடம் பாபிலோனுக்குப் போனபோது கொடுக்கப்பட்டது. எரே 32:12எரே 36:4எரே 28:1எரே 45:1எரே 52:1 எரேமியா பாபிலோனுக்கு வரவிருக்கும் எல்லாப் பேரழிவுகளைக் குறித்தும் ஒரு புத்தக சுருளில் எழுதினான். இவை எல்லாம் பாபிலோனைக் குறித்து ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்டவை. ஆப 2:2-3ஏசா 30:8எரே 30:2-3எரே 36:32தானி 12:4ஏசா 8:1-4எரே 36:2-4வெளி 1:11 எரேமியா செராயாவிடம், “நீ பாபிலோனுக்குப் போய்ச் சேரும்போது, இதிலுள்ள எல்லா வார்த்தைகளையும் பலத்த சத்தமாக வாசிக்கக் கவனமாயிரு என்று சொன்னான். மாற் 13:11 தெச 4:181 தெச 5:27கொலோ 4:16எரே 29:1-2மத் 24:1வெளி 1:3 அதன்பின், ‘ஆ! யெகோவாவே, மனிதனோ மிருகமோ இந்த இடத்தில் வாழாதபடி இதை அழிப்பேன் என்றும், இது என்றென்றும் பாழாய்க்கிடக்கும் என்றும் சொல்லியிருக்கிறீரே!’ என்று சொல். எரே 50:13எரே 50:3எசேக் 35:9ஏசா 13:19-22ஏசா 14:22-23எரே 50:39-40வெளி 18:20-23எரே 25:12 நீ இந்தப் புத்தகத்தை வாசித்து முடிந்தவுடனே, இதில் ஒரு கல்லைக் கட்டி யூப்ரட்டீஸ் ஆற்றுக்குள் எறிந்துவிடு. வெளி 18:21எரே 19:10-11 அதன்பின், ‘நான் பாபிலோன்மேல் கொண்டுவர இருக்கும் பேரழிவினால் பாபிலோன் மீண்டும் மேலெழாதவாறு அமிழ்ந்துபோகும்; அவளுடைய மக்களும் மடிந்துபோவார்கள்’ என்று கூறு” என்றான். எரே 51:58யோபு 31:40நாகூ 1:8-9சங் 72:20வெளி 18:21ஆப 2:13எரே 25:27எரே 51:42
எரேமியாவின் வார்த்தைகள் இத்துடன் முடிவடைகின்றன.