பகுதி i
தீயவர்களின் அறிவுரையின்படி நடவாமல், சங் 26:4-5நீதி 4:14-15நீதி 13:20சங் 119:1-2எரே 15:17மத் 7:13-14லூக் 11:28சங் 1:6
பாவிகளின் வழியில் நில்லாமல்,
பரிகாசக்காரருடன் உட்காராமல்,
யெகோவாவினுடைய சட்டத்திலே மனமகிழ்ச்சியாயிருந்து,
இரவும் பகலும் அவருடைய வேதத்தை தியானிக்கிறவர் ஆசீர்வதிக்கபட்டவர்.
அப்படிப்பட்டவர் நீரோடைகளின் அருகே நாட்டப்பட்டு, எரே 17:8எசேக் 47:12சங் 92:14யோவா 15:6எசேக் 19:10ஆதி 39:23யோசு 1:7-8எசேக் 17:8
பருவகாலத்தில் தன் பழங்களைக் கொடுத்து,
இலை உதிராதிருக்கும் மரத்தைப்போல இருக்கிறார்.
அவர் செய்வதெல்லாம் செழிக்கும்.
தீயவர்களோ அப்படியல்ல, யோபு 21:18மத் 3:12சங் 35:5ஏசா 17:13ஓசி 13:3ஏசா 29:5
அவர்கள் காற்றினால் அடித்துச் செல்லப்படும்
பதரைப்போல் இருக்கிறார்கள்.
ஆகையால் நியாயத்தீர்ப்பின்போது தீயவர் தப்புவதில்லை, சங் 5:5மத் 25:46மல்கி 3:18மத் 25:41லூக் 21:36மத் 25:32மத் 13:49யூதா 1:15
பாவிகளுக்கு நீதிமான்களின் கூட்டத்தில் இடமுமில்லை.
ஏனெனில் நீதிமான்களின் வழியை யெகோவா கண்காணிக்கிறார்; 2 தீமோ 2:19யோவா 10:14நீதி 15:9நாகூ 1:7சங் 37:18-24யோவா 10:27நீதி 14:12சங் 146:9
தீயவர்களின் வழியோ அழிவுக்குக் கொண்டுசெல்லும்.