சங்கீதங்கள் 101

Psalms 101
சங்கீதம் 101

தாவீதின் சங்கீதம்.

யெகோவாவே, நான் உமது அன்பையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்; சங் 89:1சங் 145:7சங் 71:22-23சங் 51:14வெளி 19:1-3சங் 103:6-8சங் 136:10-22சங் 97:8

உமக்கே நான் துதி பாடுவேன்.

நான் குற்றமற்ற வாழ்க்கையை வாழ கவனமாயிருப்பேன்; சங் 119:1061 இராஜா 9:41 தீமோ 3:4-51 இராஜா 11:4சங் 119:115சங் 40:17உபா 6:7எரே 23:5-6

நீர் எப்பொழுது என்னிடத்தில் வருவீர்?

நான் குற்றமற்ற இருதயத்துடன்

என் வீட்டின் விவகாரங்களை நடத்துவேன்.

தீங்கான செயல்களை சங் 119:37யோபு 31:1யாக் 1:13-152 சாமு 11:2-3நீதி 6:25மத் 5:28சங் 40:4யாத் 20:17

நான் என் கண்முன் வைக்கமாட்டேன்.

உண்மையற்ற மனிதரின் செயல்களை நான் வெறுக்கிறேன்;

அவைகள் என்னைப் பற்றிக்கொள்ளாது.

வஞ்சக இருதயமுடைய மனிதரை என்னைவிட்டுத் தூரமாய் விலக்கிவைப்பேன்; நீதி 11:202 கொரி 6:14-162 தீமோ 2:19மத் 7:23நீதி 22:24நீதி 8:13நீதி 9:6சங் 119:115

நான் தீமையோடு எவ்வித தொடர்பும் வைக்கமாட்டேன்.

தன் அயலாரை இரகசியமாய் அவதூறு செய்கிற மனிதரை சங் 15:3சங் 18:271 கொரி 5:11லூக் 18:14ஒபதி 1:3-4நீதி 20:19நீதி 30:13சங் 50:20

நான் தண்டிப்பேன்;

கர்வமான கண்களையும் பெருமையான இருதயத்தையும் கொண்ட மனிதரை

நான் சகிக்கமாட்டேன்.

நாட்டில் உண்மையுள்ளவர்களாய் இருப்போர்மீது என் கண்கள் இருக்கும், சங் 119:63லூக் 12:43-44வெளி 21:3யோவா 12:26சங் 119:1-3ரோம 13:1-4யோவா 17:24மத் 24:45

அவர்கள் என்னோடு வாழ்வார்கள்;

குற்றமற்றவனாய் நடப்பவர்களே

எனக்கு ஊழியம் செய்வார்கள்.

வஞ்சனை செய்யும் யாரும் அப் 5:1-102 சாமு 4:10-12நீதி 29:12அப் 1:16-20சங் 52:22இராஜா 5:26-27அப் 1:25

என் வீட்டில் வாழமாட்டார்கள்;

பொய்ப் பேசுபவர் யாரும்

என் சமுகத்தில் நிற்கவுமாட்டார்கள்.

நான் நாட்டிலுள்ள கொடியவர்கள் எல்லோரையும் சங் 75:10எரே 21:12நீதி 16:12சங் 48:8நீதி 20:26நீதி 20:8சங் 46:4வெளி 22:14-15

காலைதோறும் தண்டிப்பேன்;

தீங்குசெய்யும் ஒவ்வொருவரையும்

யெகோவாவினுடைய நகரத்திலிருந்து அகற்றிவிடுவேன்.