சங்கீதங்கள் 110

Psalms 110
சங்கீதம் 110

தாவீதின் சங்கீதம்.

யெகோவா, என் ஆண்டவரிடம் சொன்னதாவது: எபி 10:12-131 கொரி 15:25லூக் 20:42-43எபி 1:13மாற் 12:35-37எபி 1:3எபே 1:20-22எபி 12:2

“நான் உமது பகைவரை

உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை

நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.”

யெகோவா உமது வல்லமையான செங்கோலை சீயோனிலிருந்து விரிவுபடுத்துவார்; 2 கொரி 10:4-5எரே 48:17மத் 28:18-20சங் 2:8-9சங் 45:5-6சங் 72:81 கொரி 1:23-241 பேது 1:12

“நீர் உமது பகைவரின் மத்தியில் ஆளுகை செய்வீர்!”

உமது மக்கள் உமது யுத்தத்தின் நாளில், நியாயாதி 5:2எபி 13:21தீத் 2:141 தெச 4:7எபே 1:4வெளி 7:92 கொரி 13:42 கொரி 8:1-3

தாங்களாகவே முன்வருவார்கள்;

அதிகாலையின் கருப்பையிலிருந்து வரும் பனியைப்போல்

உமது வாலிபர்கள்

பரிசுத்த அணிவகுப்புடன் வருவார்கள்.

“மெல்கிசேதேக்கின் முறைமையின்படி, எபி 7:17எபி 5:6எபி 7:21ஆதி 14:18எபி 6:20எபி 7:11எபி 7:28எண் 23:19

நீர் என்றென்றைக்கும் ஆசாரியராகவே இருக்கிறீர்” 1

என்று யெகோவா ஆணையிட்டிருக்கிறார்;

அவர் தமது மனதை மாற்றமாட்டார்.

யெகோவா உமது வலதுபக்கத்தில் இருக்கிறார்; ரோம 2:5சங் 16:8வெளி 17:12-14வெளி 6:15-17சங் 68:14அப் 2:34-36அப் 7:55-56மாற் 16:19

அவர் தமது கோபத்தின் நாளில் அரசர்களை தண்டிப்பார்.

அவர் பிற நாடுகளை நியாயந்தீர்ப்பார்; சங் 68:21ஏசா 2:4யோவா 5:22மீகா 4:3வெளி 19:11ஏசா 42:4வெளி 14:201 சாமு 2:10

இறந்தவர்களைக் குவித்துப் பூமி முழுவதிலும் உள்ள ஆளுநர்களை தண்டிப்பார்.

வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் தண்ணீர் குடிப்பார்; சங் 27:6எபி 2:9-10நியாயாதி 7:5-6மத் 26:421 பேது 1:11யோவா 18:11பிலி 2:7-11ஏசா 53:11-12

ஆகையால் அவர் தமது தலைநிமிர்ந்து நிற்பார்.