சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.
“என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்” என்று சங் 124:1ஓசி 11:1எரே 2:2யாத் 1:12-14சங் 120:1சங் 122:1சங் 126:1சங் 127:1
இஸ்ரயேலர் சொல்லட்டும்;
“என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள், 2 கொரி 4:8-9மத் 16:18சங் 34:19வெளி 12:8-9யோவா 16:33சங் 118:13சங் 125:1சங் 42:1
ஆனாலும் அவர்களால் என்மேல் வெற்றிகொள்ள முடியவில்லை.
உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, ஏசா 51:23சங் 141:7
தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.
ஆனாலும் யெகோவா நீதியுள்ளவர்; சங் 119:137புலம் 3:22தானி 9:7நெகே 9:33சங் 124:6-7எஸ்றா 9:15சங் 140:5-11புலம் 1:18
அவர் கொடியவர்களின் கட்டுகளை அறுத்து, என்னை விடுதலையாக்கினார்.”
சீயோனை வெறுக்கிற அனைவரும் ஏசா 37:35சங் 71:13எஸ்த 6:13ஏசா 10:12ஏசா 37:22சங் 83:4-11சகரி 12:31 கொரி 16:22
வெட்கப்பட்டுத் திரும்பிப் போகட்டும்.
அவர்கள் வீட்டுக்கூரையில் முளைக்கும் புல்லைப்போல் ஆகட்டும்; சங் 37:22இராஜா 19:26ஏசா 37:27எரே 17:5-6மத் 13:6சங் 92:7
அது வளரும் முன்பு வாடிப்போகுமே.
அறுவடை செய்கிறவன் அவற்றால் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது; கலா 6:8ஏசா 17:10-11சங் 126:6ஓசி 8:7
அவற்றைச் சேர்க்கிறவனும் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது.
வழிப்போக்கர்கள் அவர்களிடம், ரூத் 2:4சங் 118:26
“யெகோவாவின் ஆசீர்வாதம் உங்கள்மேல் இருக்கட்டும்;
யெகோவாவின் பெயரினால் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்”
என்றும் சொல்லாதிருக்கட்டும்.